ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் வேணும்னு நினைக்காத யாருமே இருக்க முடியாது. ஆனா அது எல்லாருக்கும் அமையிறதும் கிடையாது. ஏன்னா வாழ்க்கையே ஒரு #delulu தான்.
#பிடித்த_சினிமா
സർവം മായ
அதிகாரத்துக்கு எதிரான
கலகக் குரல்கள் எப்போதும் அடக்கு முறைகளை எதிர்கொண்டே வந்திருக்கிறது. மேலும் வெகுசனங்களின் மீது இனம், மொழி, மதம், தேசம் இன்னும் பிற காரணங்களின் பொருட்டு திணிக்கப்படும் ஆதிக்க மனோபாவ செயல்கள் சமரசமின்றி தீர்க்கமாய் எதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். #பிடித்த_சினிமா
'பணம் இருந்தா தான் மகிழ்ச்சியா இருக்கணும்னு இல்ல'ன்னு சொல்றவங்க பெரும்பாலும் பணம் வச்சிருக்கவங்களா தான் இருப்பாங்க.. ஆனா ஒன்னுமில்லாதவங்களுக்கு
பணம் தான் ரொம்ப பெரிய தைரியமும் மகிழ்ச்சியும்.
இதாங்க வாழ்க்கை.
வாழ்க்கை ரொம்ப சின்னது.
அந்த வாழ்க்கையில எல்லா தருணங்களையும் நாம
ஒண்ணு விடாம பயன்படுத்திக்கணும்.
நம்ம மனசை சந்தோசமா வச்சிக்க ஏதாவது ஒன்னு பண்ணிக்கிட்டே இருக்கணும். அது மட்டும் தான் இந்த மொத்த உலகத்திலே இருக்கிற எல்லாருக்குமே தெரியணும்.
#Fall#பிடித்த_சினிமா
புலம் பெயர்தல் வாழ்வின் நெடுகிலும் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது
வேரறுந்து நிற்கதியானவர்களின் துயர் ஒரு நிழலாய் அவர்களையே பின் தொடர்கிறது
உண்மையில் இவ்வாழ்க்கையில் இருந்து புலம் பெயர்ந்து சென்று விட முடிந்தால் அது ஆகப்பெரும் ஆறுதலாய் முடியும்.
'All We Imagine as Light'
எங்கே போயிருந்தாய் என யாரேனும் கேட்கக்கூடும்..
களைப்படைந்திருந்த மனதை
ஆசுவாசப்படுத்திக் கொள்ள மௌனமாய் இருப்பதை தவிர
வேறென்ன செய்துவிட முடியும்.
மேலும் என் அன்பிற்குரிய அனைவருக்கும் சொல்லிக்கொள்ள சொற்கள்
இல்லாமல் இருந்தது.
அவ்ளோதா..
❤️உன்னிடம் நான் உணர்ந்ததை
அந்தக் கடலிடம் உரைத்திருப்பேனெனில்,
தன் கரைகளையும்
கிளிஞ்சல்களையும்
ஆழக்கிடக்கும் அயிலைகளையும்
கடந்து என் புறம் பற்றி வந்திருக்கும்...❤️
- நிசார் கப்பானி
ஒருமுறை நீங்கள்
காதலித்துவிட்டால்
மீண்டும் மீண்டும்
காதலிக்கவே தோன்றும்
அதனால்
விளையாட்டாய் கூட
காதலித்து விடாதீர்கள்
மேலும் காதல் ஒரு
விளையாட்டும் அல்ல..!
சிலர் மீதுள்ள அன்பின் காரணமாய் மரியாதையின் நிமித்தமாய் நான் அவர்களை விமர்சிப்பதில்லை
மௌனமாய் இருப்பது
என் பொறுமையின் விளைவுதானேயன்றி
அவர்கள் சொல்வதை அப்படியே நான் ஏற்றுக்கொண்டு விட்டேன்
என்கிற அர்த்தத்தில் சேராது.
யாரையெல்லாம் நம்புவது
என்று ஒரு பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தேன்
யாரையெல்லாம் நம்பக்கூடாது
என்றும் ஒரு பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தேன்
இரண்டு பட்டியலிலும் உன் பெயர் விடுபட்டு விட்டது
இப்போது நான் யாரை நம்புவது
உன்னையா ? என்னையா ?