Big News! முன்னாள் அதிமுக வீட்டு வசதி துறை அமைச்சர் மற்றும் இந்நாள் திமுக எம்எல்ஏ வைத்தியலிங்கம் ரூபாய் 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கு - கூடுதல் விசாரணை செய்ய சென்னை நடுவர் நீதிமன்றம் ஆணை!
2015 -16 காலகட்டத்தில் முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் 1400 அடுக்குமாடி வீடுகள் கட்ட திட்ட அனுமதிக்காக ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் என்னும் நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து இருந்தது.
ஸ்ரீராம் குழுவின் பாரத் கோல் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனம் மூலமாக வைத்தியலிங்கம் மகன் நிறுவனம் முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 27.9 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது.
அறப்போர் புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 2024 இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஆனால் வைத்திலிங்கம் ஜனவரி 2026 இல் திமுகவில் இணைந்த உடன் திமுக வாஷிங் மெஷின் வேலை செய்து இந்த வழக்கை பிப்ரவரி 2026 இல் லஞ்ச ஒழிப்புத்துறை மூடுவதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. புகார் தாரரான அறப்போர் இயக்கத்திடம் இதுகுறித்து தெரிவிக்கவும் இல்லை.
ஜூன் மாதம் வழக்கு மூடப்பட்ட தகவல் பத்திரிகைகள் மூலம் அறிந்தவுடன் உடனடியாக அறப்போர் இயக்கமும் இந்த வழக்கை மூடுவதை எதிர்த்து சென்னை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். லஞ்ச ஒழிப்புத்துறையும் கூடுதல் விசாரணை செய்ய வேண்டி இருக்கிறது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
வாதங்களை கேட்ட பிறகு நீதிபதி தற்பொழுது கூடுதல் விசாரணைக்கு மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்து ஆணையிட்டுள்ளார். மேலும் ஒரு அறப்போர் புகார் வழக்கு காப்பாற்றப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் போன்றவர்கள் லஞ்சம் வாங்கியதற்கு தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த நேரத்தில் கூடுதல் விசாரணை செய்வோம் என்று கூறிய தமிழக வெற்றிக்கழக அரசின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். மேலும் கடந்த அரசு இந்த வழக்கை மூடியதை வெளியுலகத்திற்கு கொண்டுவந்த பத்திரிக்கையாளர் சித்தார்த் பிரபாகர் அவர்களுக்கும் அறப்போர் இயக்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
அறப்போர் தொடரும்!
@TataMotors@TataMotors_Cars My TATA Curvv EV (TN06AH4833) is still not delivered. My vehicle has been in the workshop since May 6, and I still have no confirmed delivery date. Every day, I am given a new and unacceptable reason for the delay.@Tataev
My #TATA_Curvv EV has been at your authorized service center since May 6. Today is July 11—over 66 days with no delivery. Daily promises, no updates, poor communication, and no resolution. Please intervene immediately, or I’ll be forced to pursue legal remedies.
@TataMotors
Party Fund இல் சிறந்தவர் C.விஜயபாஸ்கர்
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா??
அதிமுக ஆட்சியில் குட்கா முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் குட்கா விற்க அனுமதி கொடுத்தாக புகாருக்கு உள்ளான அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அன்றைய டிஜிபி ராஜேந்திரன்.
இவர்கள் மீது அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்பொழுது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல். 🤦♂️🤦♂️
Party Fund என்றால் என்ன?
அது எத்தனை வகைப்படும்?
இதில் ஆதாயம் அடைபவர்கள் யார்?
இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு?
வெளிநடப்பு செய்யாமல் பொறுமையாக கேளுங்கள்.
முன்னாள் அமைச்சர் EV வேலு மீது லஞ்ச ஒழிப்பு துறையால் பதியப்பட்ட FIR . அறப்போர் புகாரில் தவெக அரசின் முதல் FIR இது. வரவேற்போம் ! அறப்போர் புகாரில் என்ன சொல்லப்பட்டது ? திரட்டிய ஆதாரங்கள் என்ன ? அடுத்து செய்யவேண்டியது என்ன ?
Brigade's Environmental clearance for their project within Ramsar site has been cancelled.
It must be understood that Brigade's project was well within the Ramsar site. Let us make it clear that Brigade's construction site is not in zone of influence. It is right within the Ramsar site where construction cannot be allowed as per Wetland Conservation and Management rules 2017 under Environment Act. Brigade played fraud in its application by misrepresenting and concealing key facts. The officials/ politicians of different Departments colluded to provide the EC and CMDA construction approval fraudulently to them. Better sense prevailed and their approval has been cancelled now!
Thanks to all those who raised your voice and supported us in this struggle. Lets save and preserve Ramsar land to preserve our ecology as well as prevent flooding in Perumbakkam and Pallikaranai.
Big News: Environmental Clearance cancelled for Rs 2000 Crore Brigade Morgan Heights given within Pallikaranai Ramsar Marsh
Brigade Heights - சுற்றுச்சூழல் அனுமதி ரத்து!
பாதுகாக்கப்பட்ட பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க அறப்போர் இயக்கத்துடன் துணையாக நின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. சமூக வலைத்தளங்கள் மூலம் நீங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி. உங்கள் வருங்கால தலைமுறைக்கு சென்னையின் மிகப்பெரிய இயற்கை சொத்தை நீங்கள் பாதுகாத்து ஒப்படைத்துள்ளீர்கள். தொடர்ந்து கண்காணிப்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் பிரிகேட் மார்கன் ரியல் எஸ்டேட் திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி ரத்து!
பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சுற்றுசூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது. அறப்போர் இயக்கம் இதை வரவேற்கிறது. இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து ராம்சார் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்த நம் அனைவருக்கும் கிடைத்த முக்கியமான வெற்றி இது.
மேலும் இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அறப்போர் இயக்கம் இன்றைய தினம் மின்சாரம், ஊழல் தடுப்பு மற்றும் சட்ட அமைச்சர் திரு R . நிர்மல் குமார் அவர்களை சந்தித்து அறப்போர் இயக்கம் இதுவரை லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ள 40 புகார்களின் விவரங்களை அளித்துளோம். ஏற்கனவே இதை தபாலில் 11/06/2026 அன்று அமைச்சருக்கு அனுப்பி உள்ளோம். இன்று நேரில் சந்தித்து புகார்கள் குறித்து விவரித்தோம். இதில் கடந்த காலங்களில் 9 புகார்கள் மீது மட்டுமே FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக திமுக ஆட்சிகளில் நடந்த நிலக்கரி மற்றும் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கிய ஊழல், ரேஷன் ஊழல், கே பி பார்க் கட்டுமான ஊழல், பத்திரப்பதிவு துறை ஊழல்கள், அரசு நிலம் அபகரிப்பு ஊழல்கள், உயர்கல்வித்துறை ஊழல்கள், உள்ளாட்சி துறை ஊழல்கள், மாநில நெடுஞ்சாலை துறை ஊழல்கள் போன்ற 30 க்கும் மேற்பட்ட ஊழல்கள் மீது உடனடியாக FIR பதிவு செய்து துரிதமாக விசாரணை செய்ய கோரி உள்ளோம். ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவது முக்கியம். இதுவே பொறுப்புடைமையையும் மற்றவர்கள் ஊழல் செய்யாமல் தடுப்பதற்கும், ஊழலை ஒழிக்கவும் உதவும்.
அமைச்சர் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
கட்சி உத்தரவை மீறி பேனர் வைப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவீர்களா?
சாலைகளில் பேனர் வைப்பது ஆபத்தானது என்று இதனால் தான் சொல்கிறோம். அது சட்டப்படியும் தவறு என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். நீதிமன்றமும் பல முறை பேனர் வைப்பதற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்துவிட்டது.
ஆனால் அதிமுக - திமுக ஆட்சிகளில் நடத்திய அதே நாடகத்தை தான் TVK ஆட்சியிலும் அரங்கேற்றி வருகிறார்கள். தலைமையில் இருந்து பேனர் வைக்க கூடாது என்று ஒரு அறிக்கையை பெயரளவுக்கு வெளியிட்டு விட்டு ஊர் முழுவதும் பேனர் வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது இவர்களுக்கு ஒரு வழக்கமாகிவிட்டது.
சட்டத்தை மீறி பேனர் வைத்து பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறீர்களே உங்களுக்கு அறிவு இருக்கா என்றும் கேட்டு விட்டோம். பேனர் வைக்கும் சுயநல சமூக விரோதிகளே என்றும் சொல்லி விட்டோம். ஆனால் இந்த கொலைகார விளம்பர பிரியர்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட உரைப்பது இல்லை.
சாலைகளில் பேனர் வைக்கும் TVK சுயநலவாதிகளே... அறிக்கை அளித்து ஊரை ஏமாற்றும் TVK பொதுச் செயலாளர் அவர்களே... இது எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காக்கும் முதல்வர் அவர்களே...
என்று தணியும் இந்த கொலை வெறி பேனர் தாகம்..!!
@BussyAnand@TVKPartyHQ@TVKVijayHQ
CMDA must cancel the permission given to 2000 Crore real estate project of Brigade in Ramsar Land!
Its extremely important for the Government to protect the Pallikaranai Ramsar Marsh Forest. We have made a submission at the international level that we wont alter the ecology of the Ramsar land from the designated date which is 08th April 2022. Yet Brigade applied for EC and CMDA Planning permission starting from July 2022 and got the permission in January 2025 in violation of international convention and Wetland Conservation rules 2017 (under Environment Act of India). DMK Government carried out major fraud for this approval which has been well documented by Arappor.
Will the new Government cancel the permission? Arappor has submitted representation to CM. Will action be taken against Sekar Babu and other officials for the fraud and Corruption? Chief Minister of Tamil Nadu CMDA Chennai