திரையில் சிறைப்பட்டோம்!
-சுபவீ
சிறைகளைப் பற்றி
இதற்கு முன்பும்
பல திரைகள் பேசி இருக்கின்றன!
இப்போது மீண்டும் திரையில் ஒரு சிறை வந்திருக்கிறது!
படத்தின் இறுதியில் பாத்திரங்கள் விடுதலை ஆகிவிடுகின்றன!
ஆனால் பார்த்தவர்கள் சிறைப் படுகின்றனர்!
சிறை கொடியதுதான் .....
ஆனால் வெளியில் இருக்கும்
மத வெறியும்
மது வெறியும்
அதனினும் கொடியவை என்பதை இந்தத் திரைப்படம் எவ்வளவு நுட்பமாகச் சொல்கிறது!
கதாநாயகன் பெயர்
அப்துல் ரவூப்! காரணத்தோடு தான் அது வைக்கப்பட்டிருக்கிறது!
எரியும் ஈழத்தைக் காப்பதற்காக எரிந்து போன
இன உணர்வுத் தீப்பந்தம் அவன் என்பதையும்
ஒரு காட்சி உரத்துச் சொல்கிறது!
இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதி என்னும்
பாசிசச் சிந்தனையை
இன்னொரு காட்சி இடுப்பொடித்துப் போடுகிறது!
இது இயக்குனரின் முதல் படமென்று
இனியும் சொல்லாதீர்கள் ....
எவனும் நம்பமாட்டான்!
கதையின் அழகை, நடிப்பின் திறனை,
ஒளிப்பட நேர்த்தியை
இசையின் இனிமையை.... ஒவ்வொன்றாய்ப் பாராட்ட
இன்னொரு திரைப்படம் எடுக்க வேண்டி வரும்!
சந்தை இரைச்சலிலே சங்கீதம் கேட்காது! நல்ல படங்கள் நாட்டில் ஓடாது என்று சொல்வார்கள்.
பொருளாதார அடிப்படையிலும் இப்படம் பெற்றிருக்கும் வெற்றியைப் பார்த்தால், இனிமேல் நல்ல படங்கள் மட்டும்தான் ஓடும்போல் தெரிகிறது!
Crowd funded
Independent film.
கோவேறு கழுதை.
A strong step forward for independent cinema
Writer and Director @PeRanjith@TamilAr19223544
Lead Actor - @yuga_kv
ட்ரெய்லர் வெளியாகி விட்டது. இனி வரும் காலங்களில் இன்டிபென்டன்ட் படங்கள் அதிகமாக வெளிவர இந்தப் படம் ஒரு தூண்டுதலாக இருக்கும்.
https://t.co/TORNwZdMYX
Happy to Present the Short Film #SattendruMaarumVaanilai 🎥 Prepare to Experience the Journey of Camera Man📸/Artist 😉
Watch ▶️ https://t.co/VsLgkLZ4Vf
Congratulations to the Entire Team Great Efforts Lead to Even Greater Results 👏
D50 Raayan first single Adangaadha Asuran https://t.co/6oZBv4Emdd From the day @arrahman sir made this song , I have waited a year to share this with you all. FINALLY ♥️Here it is. In theatres June 13th onwards @sunpictures
மூ(வ)டர் கூடம்
#moodarkoodam#acting
Credit goes to @NaveenFilmmaker
Hats off to Your Writing Naveen Sir... Till the date Moodar Koodam is unique one📽️
LINK : https://t.co/IE8H9eMele
#Animal படத்தில் உள்ள பெண்ணடிமைக் காட்சிகளைப் பற்றி பலர் விமர்சித்து இருந்தனர். ஆனால், பலரும் கவனிக்கத் தவறிய இன்னொரு பிரச்சினை படம் முழுக்க விரவி உள்ள இந்துத்துவம்/இசுலாமிய வெறுப்பு.
நாயகனின் நிறுவனத்தின் பெயர் இந்து மதக் குறியீடான சுவஸ்திக். கிட்டத்தட்ட நாசிப் படை போலவே நாயகன் சூளுரைக்கிறார். நாயகனின் பங்காளியான வில்லன் தேவையே இல்லாமல் இசுலாமிய சமயத்தைத் தழுவியவராக வருகிறார். அதற்கான ஒரே காரணமாக இசுலாமியர்கள் பல பெண்களைத் திருமணம் செய்யலாம் என்பதாகக் காட்டப்படுகிறது. இந்து நாயகன் மனைவி மீது காதலாக உருகி ஊற்ற, இந்து மனைவிகள் பத்தினித் தெய்வங்களாகக் காட்டப்பட, இசுலாமிய வில்லனின் மனைவிகளாக வருபவர்கள் புகை பிடிப்பவர்கள், காம வெறி பிடித்தவர்கள், வசதிக்குத் திருமணம் செய்து கொண்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.
இந்து சாமியார் கோ மூத்திரம் கொடுத்தால் கேள்வி இல்லாமல் குடிப்பவர், சர்ச் பாதரிடம் மட்டும் பகுத்தறிவு, தன்மானம் எல்லாம் பேசுகிறார்.
வன்முறை, பாலுணர்வைத் தூண்டி வசூல் அறுவடை செய்தது போலவே, இந்துத்துவ வடக்கர்களின் இசுலாமிய வெறுப்பணர்வைத் தூண்டி விட்டு கல்லா கட்டியிருக்கும் மிகவும் ஆபத்தான படம் தான் #Animal.
எளியோரின் பிள்ளைகள் இருவேளை உணவு உண்பதையும் ஏற்கமனமில்லா எத்திப் பிழைக்கும் கும்பல்.
உடல் உள்ளம் யாவும்
சனாதன நஞ்சில்
ஊறிக் கொழுத்த
சாதிஆதிக்கத் திமிர்.
கடைநிலையில் உழலுவோர் கடைத்தேறக் கூடாதென காலமெல்லாம் சதிசெய்த கழிசடைகளின் கழிவுப்புத்தி.
இது திமுக அரசின் திட்டத்துக்கு எதிரான
காழ்ப்பு மட்டுமல்ல; எளியோருக்கு எதிரான வன்மம்.
இவர்களைக் கண்டிப்பது மட்டுமல்ல; சட்டப்படி தண்டிக்கவும் வேண்டும்.
@mkstalin@dinamalarweb@CMOTamilnadu
திரெளபதிகளுக்கு சேலை கொடுப்பதைவிட, துச்சாதனன்களின் மனதில் படிந்திருக்கும் வக்கிரங்களை வெறிகளை அகற்றியிருக்க வேண்டியதே கண்ணபரமாத்மாக்களின் முதல் வேலையாக இருந்திருக்க வேண்டும். நாம் பாரம்பரியம் கலாச்சாரம் என்று புளுகுவதெல்லாம் ஹிப்பகிரசிதான்.