#திமுக உடன்பிறப்புகள் எவரேனும் என்னை #follow செய்து நான் அவர்களை follow செய்ய தவறி இருந்தால் தெரிவிக்கவும். பின்தொடருகிறேன்.
ஒன்றுபடுவோம்; வென்று காட்டுவோம்.
#ஒன்றிணையுங்கள்_திமுக_நட்புகளே.
ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. (https://t.co/wNsCbD5mP6)
ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்
🚨 தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?
🚨 மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?
🚨 நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?
🚨 அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?
🚨 தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?
🚨 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?
இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.
த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!
ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும்.
அரசை விமர்சிப்பது குற்றமாகாது. அவதூறு வழக்கில் கைது செய்யக் கூடாது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், ரூ.2 கோடிக்கு முறைகேடாக விற்றது தொடர்பான செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கேள்வி எழுப்பிய இளைஞர் வினோத் சூர்யா மீது அறநிலையத்துறை அமைச்சர் திரு. S. ரமேஷ் அவர்களுக்கு எதிராய் அவதூறு பரப்பினார் என பொய் வழக்கு பதிந்து கைது செய்திருந்தது தவெக அரசு. இந்த வழக்கில் இன்று இளைஞர் வினோத் சூர்யாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜாமீன் வழங்க கூடாது என அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையும், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதையும் மாண்பமை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
மேலும் மாண்பமை நீதியரசர் தனது உத்தரவில் “பத்திரிகைத் துறையானது ஜனநாயகத்தின் 4-வது தூணாகத் திகழ்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19(1)(a)-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்து சுதந்திர உரிமையின் அடிப்படையிலேயே செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும். வெறுமனே அரசையோ அல்லது அமைச்சர்களையோ விமர்சிப்பது மட்டுமே அரசுக்கு எதிராகவும் அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செய்யப்பட்ட குற்றமாகாது என தெளிவாகக் குறிப்பிட்டது தவெக அரசின் ஜனநாயக விரோத போக்கினை கண்டிப்பதாக அமைந்துள்ளது.
மேலும் வினோத் சூர்யாவின் பதிவு சமூக மோதலை தூண்டுவதாக உள்ளது என காவல்துறையால் பதியப்பட்ட பிரிவுகள் பொருந்தாது எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது காவல்துறையால் நேரடியாகக் கைது செய்ய முடியாத குற்றமாகும் என குறிப்பிட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது மூலம் அரசை விமர்சிப்பவர்களை எல்லாம் ஆணவப் போக்கோடு கைது செய்யும் தவெக அரசிற்கு குட்டு வைத்துள்ளது நீதிமன்றம்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் செயலாளர் திரு. சீனிவாசன் அவர்களின் சகோதரர் திரு. விஸ்வநாதன் அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததையடுத்து, கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர், திரு.வி.க. நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அன்னாரது உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
நவீன தமிழ்நாட்டின் சிற்பி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இன்று
#Kalaignar
My heartfelt congratulations to Tamil Nadu's Raja Muthupandi on winning the silver medal in the Men's 65kg Weightlifting event at #CWG2026.
His remarkable achievement adds another proud chapter to India's medal tally and reflects the exceptional sporting talent emerging from Tamil Nadu.
May Raja Muthupandi's inspiring success motivate many more young athletes to pursue excellence and bring greater glory to our nation.
காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சட்டமன்ற கழக கொறடா எ.வ.வேலு அறிவிப்பு
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 28-07-2026 செவ்வாய் கிழமை மாலை 5.00 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
அதுபோது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பொருள் : நிதிநிலை அறிக்கை
அண்ணா அறிவாலயம்
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
புகழ்பெற்ற தொழிலதிபர், கல்வியாளர் மற்றும் காந்தியவாதியுமான அருட்செல்வர் டாக்டர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் மகளும் – சன்மார்க்க சபையின் தலைவரும் - கல்வித் தந்தையுமான டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களின் துணைவியாருமான திருமதி கருணாம்பாள் வானவராயர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
அவரை இழந்து வாடும் கல்வித் தந்தை டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களுக்கும் - அவரது குடும்பத்தார்க்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத் தலைவர் அவர்கள் மேற்கண்ட இரங்கல் செய்தி வெளியிட்டதோடு, கல்வித் தந்தை டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!
நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.!
கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!
பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை மாண்புமிகு @CMOTamilNadu கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
“கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை: தமிழ்நாடு முதலமைச்சர் தனது முடிவை மறுபரிசீலனை செய்திட வேண்டும்”
- கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அறிக்கை
காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட நாம் எடுத்த முயற்சிகளின் வரலாறு மிக நீண்டது. 1960-களில் தொடங்கி 1990 வரை பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்காததால்தான் அது கைவிடப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் ஆட்சிக்காலத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன்பிறகும் தமிழ்நாட்டுக்கான தண்ணீரை வழங்குவதில் அநீதி இழைத்து வந்தது கர்நாடக மாநில அரசு.
கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனை சொல்லப்பட்டபோதெல்லாம், அதனை உறுதியாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிராகரித்தது. ஏனென்றால், பேசுவது ஒன்றும் செய்வது ஒன்றுமாகவே கர்நாடக மாநில அரசு செயல்படும். உரிமையை நிலைநாட்டுவதாக இல்லாமல் பிரச்சினையை இழுப்பதாகவே அப்பேச்சுவார்த்தைகள் அமையும்.
அதிலும் குறிப்பாக, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலுமாக நிராகரிப்பதாகும். எனவே, இதுகுறித்து கர்நாடக அரசுடன் எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்துவதால் பயனில்லை என்பதே நமது நிலைப்பாடாகும்.
மேகதாது குறித்து பேசுவதற்காக, கர்நாடக முதல்வர் திரு. எடியூரப்பா அவர்கள் அழைப்பு விடுத்தபோது, முதலமைச்சராக இருந்த நான், “அந்தப் பேச்சுக்கே இடமில்லை” என மறுத்தேன். அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த அண்ணன் துரைமுருகன் அவர்களும், “பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” எனத் திட்டவட்டமாக அறிவித்தார். முற்றிலும் தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் உழவர் பெருமக்களுக்கும் விரோதமானது அந்தத் திட்டம். அதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்பதே ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணம்.
இந்நிலையில், கர்நாடகம் சென்று அம்மாநில முதலமைச்சர் அவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என வேளாண்துறை அமைச்சரே தெரிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கர்நாடக அரசிடம், தமிழ்நாடு பணிந்து போகும் நிலையாகும்.
மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்றும், அதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கிவிட்டது என்றும், யார் எதிர்த்தாலும் கட்டியே தீருவோம் என்றும் கர்நாடக மாநில அரசு வெளிப்படையாக, தொடர்ச்சியாகச் சொல்லும் போது, அவர்களிடம் பேசி என்ன ஆகப் போகிறது? அவர்களது பிடிவாதக் குணத்தை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறோமா?
காவிரி நீர் திறக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே ஒரு “ஸ்கீம்” உருவாக்கப்பட்டு, எந்தெந்த மாதம் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்து வெளியிடப்பட்டு விட்டது. அதைச் செயல்படுத்தக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்குச் செல்வது என்பது தமிழ்நாடு அரசின் 30 ஆண்டுகாலச் சட்டப் போராட்டத்தைச் சிதைப்பதாக அமைந்துவிடும். பேச்சுவார்த்தைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகம் செல்வது, தமிழ்நாட்டின் நிலையைக் குறைப்பதாகவும் அமைந்துவிடும்.
ஏற்கெனவே உள்ள சட்டப்பூர்வ உரிமையைச் சிதைக்க “பேச்சுவார்த்தை” எனக் கர்நாடகம் தற்போது விரித்திருக்கும் சதிவலையில் வலியச் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் சிக்குவது ஏன்? தமிழ்நாட்டின் உரிமையைத் தாரைவார்க்கும் விதமாக முதலமைச்சர் செய்யும் இந்தச் செயலைப் பார்த்துக் காவிரி டெல்டா விவசாயிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தை ஆள்வது காங்கிரஸ் கட்சி அரசாகும். தமிழ்நாடு அரசிலும் காங்கிரஸ் கட்சி பங்கு வகிக்கிறது. எனவே கண்துடைப்புக்காக இதுபோன்ற பேச்சுவார்த்தை நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. 'நாங்கள் நேரிலேயே போய்ப் பேச்சுவார்த்தை நடத்தினோமே' என்று கணக்குக் காட்டுவதற்கு வேண்டுமானால் இது பயன்படலாமே தவிர, வேறு எந்தப் பயனும் ஏற்படப் போவது இல்லை.
காவிரி நீர் உரிமைப் பங்கீட்டுப் போராட்டம் நீண்ட நெடியது. தமிழ்நாட்டின் காவிரி உரிமை சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்ட ஒன்று. காவிரி நீர் உரிமையின் ஆழ அகலங்களைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தரக் கர்நாடகம் மறுத்தால், அது நீதிமன்ற அவமதிப்பு; சட்ட மீறல்! மேகதாது அணை கட்ட முயற்சிப்பது உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பை மீறுவது. காவிரி போன்ற தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையையும் - விவசாயச் சங்கங்களின் கருத்துகளையும் பெற்ற பின்பே செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவிரி உரிமை தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்குக் கர்நாடகம் செல்லும் தவறான முயற்சியை மாண்புமிகு முதலமைச்சர் கைவிட வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் சார்பாகவும் - தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.
போலி கெளரவம், பிடிவாதம் இந்த இரண்டும் ஒரு அரசுக்கு இருக்கக் கூடாத குணங்கள், ஆனால் அது மட்டும் தான் இவர்களிடம் இருக்கிறது!
- திரு. @tiruchisiva எம்.பி அவர்கள்
திமுக மாநிலங்களவை குழுத் தலைவர்
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
சேலம் உருக்காலையை நவீனமயமாக்கல் பற்றி கழக பொருளாளர், மக்களவை உறுப்பினர் திரு. டி. ஆர். பாலு அவர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் திரு பூபதி ராஜு சீனிவாச வர்மா அவர்கள் அளித்த பதில்.
சேலம் உருக்காலையின் உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்கும் நவீனமயமாக்குவதற்கும் அரசு மற்றும் இந்திய இரும்பு மற்றும் எஃகு ஆணையம் (SAIL) திட்டமிட்டுள்ளதா, ஆம் எனில், முன்மொழியப்பட்ட முதலீடுகள் உட்பட அதுகுறித்த விவரங்கள் என்ன; மற்றும் துருப்பிடிக்காத இரும்பு (Stainless Steel) ஏற்றுமதியை ஊக்குவிக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளின் விவரங்கள் என்ன?
பதில் : இந்திய இரும்பு மற்றும் எஃகு ஆணையத்தின் (SAIL) ஒரு அங்கமான சேலம் உருக்காலை (SSP), ஆண்டுக்கு 1.8 லட்சம் டன் எஃகு உருக்கும் திறனையும், 3.6 லட்சம் டன் எஃகு உருட்டும் (rolling) திறனையும் கொண்டுள்ளது. சேலம் உருக்காலையில் தற்போதுள்ள உற்பத்தித் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
உற்பத்தித் திறன் பயன்பாட்டை மேம்படுத்துதல், செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல், மூலப்பொருள் மற்றும் மின்சார நுகர்வைக் குறைத்தல், மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட துருப்பிடிக்காத எஃகு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து தயாரிப்பு கலவையை முறைப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாட்டுத் திறன் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல நடவடிக்கைகளை SAIL மேற்கொண்டுள்ளது. துருப்பிடிக்காத எஃகின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விற்பனையை ஊக்குவிப்பதற்காக SAIL தனது சந்தைப்படுத்தல் உத்தியை சீரமைத்து வருகிறது.
The DMK strongly condemns the police lathi-charge on the youth of this Nation guided by Cockroach janata Party who attempted to march towards Parliament.
The youth of the Cockroach Janata Party have been staging a continuous peaceful protest at Jantar Mantar in New Delhi for the past month, demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan, holding him accountable for the irregularities in several examinations, including NEET. With the Monsoon Session of Parliament commencing today, the protesters attempted to march towards Parliament. In response, the authorities unleashed repression, with the police carrying out a brutal and indiscriminate lathi-charge.
Those who were peacefully exercising their democratic right to protest have been subjected to an abuse of state power. Voices raised against injustice and in defence of rights can never be silenced through repression.
The Union Government is attempting to suppress what has become a major youth-led movement in the national capital through the use of tear gas, internet shutdowns, and the closure of metro stations.
May the students' struggle for education and justice prevail!
May the NEET examination, which continues to claim the lives and future of students, be abolished once and for all!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில்,
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை அமைக்கத் முயலும் கர்நாடக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களின் நெறிப்படுத்துதலின்படி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளின் அடையாளமாகப் பச்சைத் துண்டு அணிந்து நாடாளுமன்றப் பணிகளில் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும், அவை ஒத்திவைக்கப்பட்ட வேளையில் நாடாளுமன்ற வளாகத்திலும் தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை மீட்டெடுக்கவும், மேகதாது திட்டத்திற்கு எதிராகத் தீவிர முழக்கங்களை எழுப்பினர்.
உழவர்களின் துயரங்களைப் போக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்க முற்படுவோருக்கு எதிராகச் சமரசமின்றிச் குரல் கொடுக்கவும் தி.மு.க. எப்பொழுதும் உறுதுணையாய் நிற்கும்.
தன்மீது அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ மற்றும் செய்தி வெளியிட்டுள்ள விகடன் குழுமத்தின் மீது நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியும் - 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டுமென நஷ்ட வழக்கு தொடர்ந்திட முன்னாள் அமைச்சரும் - சட்டமன்ற உறுப்பினருமான திரு.அர.சக்கரபாணி அவர்களின் வழக்கறிஞர் நோட்டீஸ்
திமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.அர.சக்கரபாணி அவர்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ மற்றும் செய்தி வெளியிட்டுள்ள விகடன் குழுமத்தின் மீது மான நஷ்ட வழக்கு தொடுப்பது தொடர்பாக 19.07.26 அன்று திரு.அர.சக்கரபாணி அவர்கள் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.35 ஏக்கர் நிலத்தை ஒரு தனியார் அறக்கட்டளை தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, கடந்த மார்ச் 2026-ல் டி. சேதுபதி மற்றும் கே. வெள்ளத்துரை ஆகிய இரு நபர்களுக்கு வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளது. இந்த நிலப் பதிவு தொடர்பாக அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பின்படி, அந்த முறைகேடான விற்பனைப் பத்திரம் ரத்து செய்யப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான திமுக இந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முறையான விசாரணையை வலியுறுத்தி உள்ளது. திமுக சட்டத்துறை இணைச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. பரந்தாமன் அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளையும், உயர் அதிகாரிகளையும் காப்பாற்றும் நோக்கோடும், பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையிலும் விகடன் டிவியின் யூடியூப் பக்கத்தில் கடந்த ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முன்னாள் அமைச்சர் திரு. சக்கரபாணி அவர்களைத் தொடர்புபடுத்தி அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டன. மேலும், ஜூனியர் விகடன் இதழில் (தேதி: 22.07.2026) 'பழனி நில சர்ச்சை... சக்கரபாணிக்கு சிக்கல்' என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் அர. சக்கரபாணி அவர்களின் புகைப்படத்துடன் அவதூறான கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில், நிலத்தை வாங்கியவர்களோடு அர. சக்கரபாணி அவர்களை தொடர்பு படுத்தி எவ்வித ஆதாரமுமின்றி அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய நபர்கள் யார் என்று கூட தெரியாது என முன்னாள் அமைச்சர் அர. சக்கரபாணி அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் விகடன் செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோதே இக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்தார். இருப்பினும், அடிப்படை ஊடக அறத்தை மீறி, அவரது மறுப்பை பிரசுரிக்காமல் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் இந்த அவதூறு பரப்பப்பட்டுள்ளது.
ஆகவே விகடன் குழுமமானது யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரு அவதூறு வீடியோக்களையும் உடனடியாக நீக்க வேண்டும். ஜூனியர் விகடன் இதழின் பிரசுரிக்கப்பட்ட அவதூறு கட்டுரையைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் விற்கப்படாத இதழ்களை உடனடியாக அழிக்க வேண்டும். அடுத்த ஜூனியர் விகடன் இதழின் அட்டைப் பக்கத்திலும், இணையதளத்திலும் முன்னாள் அமைச்சர் அர. சக்கரபாணி அவர்களிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கோரி செய்தி வெளியிட வேண்டும். அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக ரூ. 10 கோடி (பத்து கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 7 நாட்களுக்குள் இக்கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், விகடன் குழுமத்தின் மீதும், சம்பந்தப்பட்ட செய்தியாளர்கள் மீதும் உரிய சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
அஜித்குமார் காவல் மரணத்தின்போது பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது "சாரி வேண்டாம் சார்.. எங்களுக்கு நீதி வேண்டும்" என விஜய் சொன்னார்.
இன்று 'ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்' என மக்கள் கேட்கின்றனர்!
- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள்