தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி தடக்கமல்லா வினோத் குமார் பதவி ஏற்றார்.
சென்னை ���யர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, புதிய நீதிபதி வினோத் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இணையதளங்களில் பகிரப்படும் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அகற்றுவது தொடர்பாக நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை வகுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த���ு குறித்த வழக்கை விசாரித்து முடிக்கும் வரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை விசாரிக்க கூடாது - செந்தில் பாலாஜியின் உதவியாளர் கார்த்திகேயன் மனு ...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணைக்காக 9 முறை சம்மன் அனுப்பியும் ஒரு முறை கூட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இதுவரை ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் விளக்கம்
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பெற்றுள்ள ஸ்ரீவஸ்தவாவுக்கு, இந்திய பார்கவுன்சில் தலைவர் பிரபாகர், பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து
#அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடந்தி முடிவெடுக்கப்படும், பீகார் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வேலை பளு அதிகமாக உள்ளது, தேர்தல் ஆணையத்துக்கு, விசாரணை தொடர்பாக கால வரம்பு நிர்ணயிக்க தேவையில்லை உயர் நீதிமன்றத்தில் #தேர்தல்ஆணையம் விளக்கம்
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர், எம்பி - எம்எல்ஏக்களாக இருந்தால் சம்மன் வழங்க மாட்டீர்களா? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் சம்மன் வழங்க இயலாது என தெரிவித்து விட்டால் , சம்மன் அனுப்புவதற்காக தனி பிரிவை உருவாக்க நேரிடும் என்று நீதிபதி எச்சரிக்கை
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நாளை பதவி ஏற்கிறார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். #madrashighcourt#chennainews
சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அமலாக்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட pendrive, Hard disk உள்ளிட்டடிஜிட்டல் ஆவணங்களின் நகலை அமைச்சர் செந்தில் பாலா��ி தரப்பிற்கு அளிக்க அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன், அலிகான் துக்ளக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.