தலைவர் படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி… அந்த சந்தோஷமே தனி!
#Jailer 2 கொண்டாட்டம்… அன்றும் இன்றும் என்றும் தலைவர் ரசிகன்! ❤️😎
Thalaivar in my heart. Fan forever! ❤️
@rajinikanth sir 🙏❤️
#Jailer2
இன்றைய தினம் காலை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலத்தில், நமது @WTLFoundation சார்பில், 11 ஏக்கர் பரப்பளவில் ‘திருவனம்’ எனும் 15,000 மரக்கன்றுகளை நடும் மாபெரும் விழாவில் பங்கேற்று, இந்தப் பசுமைப் பயணத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மரங்களை நடுவது என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைகளுக்கான நமது கடமையும் கூட. மண்ணின் வளத்தைப் பாதுகாப்பது, பசுமைப் பரப்பை அதிகரிப்பது, இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாப்பது ஆகியவை நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
கடந்த மாதங்களில், தமிழகம் முழுவதும் நமது @WTLFoundation முன்னெடுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் 2,700-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு, 13 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மக்கள் இயக்கம் தொடரட்டும். மரங்களை வளர்ப்போம், மண்ணைக் காப்போம், பசுமையான, வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முல்லைநகர் கால்வாயை ஆய்வு செய்து வரும் முதல்வர் விஜய்
ChennaiRain Alert | Chennai Flood | Northeast Monsoon
#Newstamil24x7#CMVijay#TVK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (14.10.2026) சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீரேற்றும் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வாயிலாக 3,108 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, காரப்பாக்கத்தில் உள்ள ஒக்கியம் மடுவுவை நேரில் பார்வையிட்டு, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (14.10.2026), at an event held at the Chennai Metropolitan Water Supply and Sewerage Board's water pumping station in Sholinganallur, Chennai, laid the foundation stone for the Ring Main System project, to be implemented through the Board at an estimated cost of Rs. 3,108.55 crore in areas within the Greater Chennai Corporation limits; personally inspected the Okkiyam Maduvu at Karapakkam; and reviewed the flood mitigation works being undertaken by various departments, including the Water Resources Department, the Highways Department and the Greater Chennai Corporation, in view of the Northeast Monsoon.
#CMJosephVijay
Extending Our Heart Whelming Wishes To Superstar ‘RAJINIKANTH’And The Entire Crew Of "#Jailer2"For A Blockbuster WOM And Success Tomorrow On Behalf Of All Thala #AJITHKUMAR Admirers!! 😊💝
இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடா சென்றிருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.
The Hon'ble Chief Minister of Andhra Pradesh Thiru.N.Chandrababu Naidu honored Thiru.C.Joseph Vijay, Hon'ble Chief Minister of Tamil Nadu, with a shawl and presented a memento. Following this, Thiru.C.Joseph Vijay, Hon'ble Chief Minister of Tamil Nadu, honored Thiru.N.Chandrababu Naidu, Hon'ble Chief Minister of Andhra Pradesh, with a shawl and presented a memento at Vijayawada, Andhra Pradesh today (13.10.2026).
#CMJosephVijay
“இந்த ஒற்றை முகம் போதும்…
ஒரு நூற்றாண்டை வழிநடத்தும்!” என்ற
அசைக்க முடியாத நம்பிக்கையோடு,
கணிப்புகளை,
விமர்சனங்களை வென்று,
தமிழ்நாட்டின் அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மக்கள் போற்றிடும் மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்து,
இடைத்தேர்தலின் இணையற்ற
வெற்றிக்கும்,
இனி பெறவிருக்கின்ற
இமாலய வெற்றிக்கும் அன்பிற்கினிய வாழ்த்துகளை பகிர்ந்தேன்! நெகிழ்ந்தேன்!
One leader. One wave. A new chapter!
🙏🔥
#CMJosephVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#TVK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (15.10.2026), பெருநகர சென்னை மாநகராட்சி, வியாசர்பாடியிலுள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றிச் செல்லும் வகையில் மிதவை தூர்வாரும் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்களை அகற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay inspected the flood mitigation works being undertaken to ensure the free flow of rainwater by removing water hyacinth and silt using Floating Pontoon Excavators in Captain Cotton Canal at Vyasarpadi, Greater Chennai Corporation, today (15.10.2026).
#CMJosephVijay
‘மக்களின் நம்பிக்கையும்,
மக்கள் யார் பக்கம் நிற்கிறார்கள்’ என்பதையும் வெற்றி முழக்கமாய்
மாபெரும் விசில் சத்தத்தோடு #தாராபுரம்#மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள்
பறைசாற்றி இருக்கின்றது..
தங்கமான திட்டங்களைத் தந்து
மக்களின் இதயங்களில்
தங்க சிம்மாசனத்தில் நிறைந்து..
தனது பெரும் பணிகளுக்கு இடையிலும் தேர்தல் நடைபெற்ற இரு தொகுதியிலும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு,
அனைவருக்கும் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி சிறப்புமிகு வெற்றிக்கு வழிவகுத்த
மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கும்;
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் வெற்றிவாகை சூடியிருக்கும் சகோதரிகள் சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும்,
அன்பை வாக்குகளாய் வழங்கிய வாக்காளப் பெருமக்களுக்கும், இரவு பகலின்றி களத்தில் உழைத்த தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும்!🔥🙏💐
@TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl
#CMJosephvijay
#தமிழகவெற்றிக்கழகம்
#TVK
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (25.09.2026, வெள்ளிக்கிழமை), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்