பொது வாழ்வில் இவ்வளவு சாதித்த பிறகும் கூட என்ன காரணத்தினாலேயோ இங்கு முற்போக்காளர்கள் என்று தங்களை கருதிக் கொள்பவர்கள் மத்தியிலேயே முதல்வர் ஸ்டாலின் அவர்கள் குறைத்து மதிப்பிடப்படுவதையும், நைசாக புறக்கணிக்கப்படுவதையும் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். (இது பற்றி வேறொரு சமயத்தில் விரிவாக எழுதுகிறேன்)
அத்தகையோருக்கெல்லாம் சேர்த்துதான் நேற்று திரு. ராகுல் காந்தி அவர்கள், 'சமகால இந்தியாவின் ஜனநாயகப் போராட்டக்களத்தில் தலைவர் ஸ்டாலின் எவ்வளவு உயர்வாக மதிப்பிடப்படுகிறார்' என்பதையும், 'நாளை ஆர்எஸ்எஸ் பாசிசம் வீழ்த்தப்பட்ட வரலாறு எழுதப்படும்போது அதில் ஸ்டாலினின் இடம் எவ்வளவு மகத்தானது' என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
பூனைகள் தொடர்ந்து கண்ணை மூடிக்கொள்ளலாம். சூரியன் பிரகாசமாக ஒளிர்கிறது! ❤️✨
அல்ஜஜீரா டிவியின் புதிய டாக்குமென்டரி
இந்தியாவில் தடைசெய்யும் முன்பு பாருங்கள், எல்லோருக்கும் பகிருங்கள்.🙏🏿
மதத்தின் பெயரால் மூளை சலவை செய்யப்படும் ஏமாளி மக்கள்
மோடியால் மக்கள் எவ்வாறு முட்டாளக்கப்படுகிறார்கள், எவ்வாறு மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்,தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறுகிறார்கள்.
- Inside Narendra Modi’s messaging machine.
லவ்வர் திரைப்படம் பற்றி இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் பார்வைகள் முக்கியமானவை. படம் பார்க்கும்போது எனக்கும்கூட இந்தக்கேள்விகள் எழுந்தன.
ஆணாதிக்கம் கொண்ட இளைஞனின் நிறம், பொருளாதாரச்சூழல், குடும்பப்பின்னணி, நண்பர்கள் ஆகியவற்றுக்கும் வாழ்க்கை குறித்த தாராளவாத அணுகுமுறை கொண்ட நாயகி மற்றும் அவர் நண்பர்களின் நிறம், பொருளாதாரச்சூழலுக்கும் இடையே பாரபட்சமான சித்திரிப்பு இருக்கிறது. குடி மற்றும் போதை குறித்தும் பாரபட்சமான தொனி இருந்ததும் உண்மைதான். மேலும் அருண் (மணிகண்டன்) தன் காதலி மீது சதா சந்தேகப்பார்வை கொண்ட, நச்சரிக்கும் ஆணாதிக்கவாதியாக இருப்பதற்கு ஒழுங்கற்ற வாழ்க்கை கொண்ட அவன் அப்பா, நிச்சயமற்ற வேலை போன்ற பின்னணிகள் சித்திரிக்கப்பட்டிருப்பதும் தேவையில்லை. ஓர் ஆண் ஆணாதிக்கம் கொண்டவனாக இருப்பதற்கு அவன் ஆணாக இருப்பதே போதுமானது.
ஆனால் இந்தப் பிரச்னைகளைத் தாண்டி எனக்கு ‘லவ்வர்’ படம் பிடித்திருந்தது. எடுத்துக்கொண்ட கதையின் மையத்திலிருந்து கொஞ்சமும் விலகாத திரைக்கதை. ஒரு காட்சிகூட தேவையற்றது என்று சொல்லிவிட முடியாது. சந்தேகமும் நம்பிக்கையின்மையும் கொண்ட காதலன், அவனால் அல்லலுறும் காதலி என்னும் கதையின் மையத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட காட்சிகளே சொல்லப்படும் சாத்தியமுண்டு. இதைச் சுவாரஸ்யப்படுத்துவதற்காக வழக்கமாகச் சிலபல கிளைக்கதைகளை உருவாக்குவார்கள். இங்கேயும் நாயகனின் அப்பா மற்றும் மதன் என்னும் யூ ட்யூபரின் கிளைக்கதை இருந்தாலும் அவை மிகக்குறுகிய கணங்களே. எனவே மீண்டும் மீண்டும் ஒரே மையத்தில் சுழன்று சலிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள காட்சிகள் என்றாலும் அதைப் பிரச்னையின் தீவிரத்தை உணர்த்தும் அழகான காட்சிகளாக மாற்றியிருந்தார்கள்.
ஒரு சிலர் ‘இந்தப் படமே தவறான படம்’, ‘இப்படி ஒரு படத்தை எடுத்ததன்மூலம் ஆணாதிக்கத்தை நார்மலைஸ் செய்கிறார்கள்’ என்றெல்லாம் விமர்சித்திருந்தார்கள். எனக்கு இதில் உட்ன்பாடில்லை. பிரச்னைகளைச் சித்திரிக்காமல் தீர்வை நோக்கி நகர முடியாது. பிரச்னைகளைக் காட்சிப்படுத்துவது அதிகாரத்தை நியாயப்படுத்தவா, விமர்சிக்கவா என்பதுதான் முக்கியம்.
தான் காதலியைச் சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்வது தவறு என்று அவ்வப்போது உணர்ந்தாலும் நாயகனால் அதிலிருந்து மீள முடியவில்லை. ‘கடைசியா ஒரு சான்ஸ்’ என்று கதறிக்கொண்டேயிருக்கிறான். ஆறாண்டுகள் பொறுத்துப்பார்த்து விலகும் முடிவை எடுக்கிறாள் நாயகி. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத நாயகன், ஒருகட்டத்தில் எதார்த்தம் புரிந்து விலகுகிறான். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாயகியைச் சந்திக்கும்போது முதிர்ச்சியுடன் அவனால் விடைபெற முடிகிறது. அவனைவிட்டு விலகிவந்தபோதும், மீண்டும் அவனுடன் சேர நினைக்காதபோதும் அவளுக்கு அவன்மீது இன்னும் காதல் மிச்சமிருக்கிறது. இதுதான் கதை. இதை இப்படித்தான் காட்சிப்படுத்த முடியும்.
எனக்கு இந்தத் திரைப்படத்தில் பிடித்த சில அம்சங்கள்.
* ஈகோவின் காரணமாகவோ, சாதி, மதம், வர்க்கம், பரம்பரைப் பகை காரணமாகவோ சேர முடியாத காதலர்கள் எப்படியும் சேரவேண்டும் என்ற பதைபதைப்பைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்துவதே 99% தமிழ்ப்படங்கள். ஆனால் இந்தப் படம் அதிலிருந்து முற்றிலும் விலகி, எந்தத் தடையுமில்லாமல் சேர்ந்திருக்கும் காதலர்கள், ஆனால் அவர்களை வதைப்பது அன்பு என்னும் பெயரிலான வதை என்றாகும்போது, பிரிவு ஒன்றே விடுதலை என்னும் இயல்பைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்துவதே இந்தப் படத்தின் தனித்துவம்.
* இந்தப் படத்தில் ஒரு முக்கியமான வசனம் வருகிறது. ‘’நம்மகூட ரிலேஷன்ஷிப்ல இருக்கிறவங்க ஹர்ட் ஆகக்கூடாதுன்னுதான் சில விஷயங்களை மறைக்கிறோம், பொய் சொல்றோம். ஆனா அதுவே அவங்களை ஹர்ட் பண்ணிடுது’ - நூறு சதவீதம், நம் வாழ்க்கையின் மிக முக்கியமான பிரச்னையிது.
நம் அன்புக்குரியவர் மறைப்பதற்கும் பொய் சொல்வதற்கும் நாமும் அன்பு, காதல் என்ற பெயரிலான நம் வன்முறையுமே காரணமாகிறது. எல்லோருக்குமான அந்தரங்க வெளியை அனுமதிப்பது மட்டுமே சுதந்திரத்தின் அருமை உணர்ந்த உண்மையான அன்பாக இருக்கும். இதைத்தான் ஒருவகையில் ‘லவ்டுடே’ படமும் நகைச்சுவையாகப் பேச முயன்றது. ஆனால் அரசியல்ரீதியாக அதன் பிரச்னைகள் வேறு.
* எனக்கு இந்தப் படத்தில் முக்கியமான பாத்திரமாகத் தெரிந்தது, கீதா கைலாசத்தின் ‘அம்மா’ கேரக்டர். ஊதாரி கணவனுக்காகவும் குழந்தைகளுக்காகவும் உடலின் இயலாமைகளை மீறி உழைத்துக்கொண்டிருக்கும் கணிசமான பெண்களைப் பார்த்திருக்கிறேன். உண்மையில் இந்த ‘அம்மாக்களின்’ கதையே தனித்துப் படமாக்க வேண்டிய ஒன்று.
தந்தி டி.வி. பேட்டியில் மோடி அண்ணாமலையைப் பற்றிச் சொல்லும்போது "நல்ல வேலையை உதறிவிட்டு அரசியலுக்கு வந்தவர். அவருக்கு ஒரு நல்ல ஜாதிப்பின்னணியும் இருக்கு" என்கிறார். எவ்வளவு கேவலமான ஸ்டேட்மெண்ட் இது!
அது என்ன 'நல்ல ஜாதிப்பின்னணி'? அப்படியானால் எல்.முருகனைப் பற்றிய மோடியின் கருத்து என்ன? தன் கட்சிக்காரர்களை சாதி பார்த்து மதிப்பிடுகிற ஒருவர் எப்படி எல்லோருக்குமானவராக இருப்பார்?
ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பேரிடி!
பிஎச்.டி.,க்கும் தேசிய நுழைவுத் தேர்வா?
மாநில உரிமைக்கு மீண்டும் படுகுழி!
--------------------------------------------------------------
அங்கே கடித்து... இங்கே கடித்து... இப்பொழுது ஆய்வு மாணவர்களைக் குறிவைக்கிறது பா.ஜ.க. அரசு!
மாண வர்களே, பெற்றோரே உங்கள் கல்விக் கனவுகள் நனவாக பார்ப்பனிய எதேச் சதிகாரத்தை ஒழித்துக் கட்டுவீர்!
மத்திய பல்கலைக் கழகங்களுக்கு ‘க்யூட்!’
மருத்துவக் கல்வியில் நுழைவதற்கு நீட் என்னும் கொடும் நுழைவுத் தேர் வைத் திணித்து, அதன் மூலம் ஒடுக் கப்பட்ட, எளிய மக்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, பெரும் வணிகத் தளமாக மாற்றியிருப்பதைப் போலவே, மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு கியூட் என்னும் நுழைவுத் தேர்வைத் திணித்துள்ளது.
அதன் அடுத்த கட்டமாக, இப்போது மாநிலப் பல்கலைக்கழகங்களின் உரிமையிலும் தலையிட்டுள்ளது ஒன்றிய அரசு. பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட (பிஎச்.டி.,) ஆய்வு மாணவர் இடங் களுக்கு, அந்தந்தப் பல்கலைக்கழகங்களே தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்ந் தெடுத்துக் கொள்கின்றன.
ஆனால், முனைவர் பட்ட ஆய்வு மாணவராக ஒரு பல்கலைக்கழகம் தன் மாணவரைத் தேர்ந்தெடுத்துக் கொள் வதற்கும் இனி அதற்கு உரிமையில்லை. தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) நடத்தும் National Eligibility Test (NET) தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிஎச்.டி.,க்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலைமையை, வரும் 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டுள் ளதாக கடந்த 27.3.2024 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது பல்கலைக் கழக மானியக் குழு.
அந்தந்த மாநிலத்தவர், அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெறவும், இனி தேசிய நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமாம்.
அதிலும் மூன்று வகையான நெட் தேர்வுகள் இருக்குமாம்.
1. JRF எனப்படும் உதவித் தொகை யுடன் கூடிய பிஎச்.டி.,யும் உதவிப் பேராசிரியர் தகுதிக்குமான தேர்வு
2. உதவித் தொகை அல்லாமல், பிஎச்.டி.,க்கும் உதவிப் பேராசிரியர் தகுதிக்குமான தேர்வு.
3. உதவித் தொகையும் இல்லாமல், உதவிப் பேராசிரியர் தகுதிக்கும் இல்லா மல், பிஎச்.டி., மட்டும் படிப்பதற்கான தகுதித் தேர்வு.
பிஎச்.டி., படிக்கவும் தடைக்கல்!
தற்போது ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் நெட் தேர்வுகள், ஆய்வு மாணவர்கள் ஜே.ஆர்.எஃப் உதவித் தொகை பெறுவதற்கும், ஆய்வுப் படிப்பு மேற்கொள்ளாத முதுநிலை மாணவர்கள் உதவிப் பேராசிரியர் படிப்புக்குத் தகுதி பெறுவதற்கும் மட்டும் நடைபெற்று வருகிறது.
இனி, வெறும் பிஎச்.டி, அதனுடன் உதவிப் பேராசிரியர், அதனுடன் ஜே.ஆர்.எப். என்று மூன்று பிரிவுகளில் நடத்தப்படும். அதுவும் ஜூன் 2024 முதல் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறதாம்.
மாநிலப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை விவகாரத்தில் ஒன் றிய அரசுக்கோ, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கோ எந்த உரிமையும் கிடையாது என்று அரசமைப்புச் சட்ட ரீதியாகத் தெரிந்திருந்தும், தொடர்ந்து இத்தகைய உரிமை மீறல்களில் ஈடுபட்டுக் கொண் டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் அரசு.
கல்வி முழுமையாக மாநிலப் பட்டிய லுக்குக் கொண்டு வரப்படுவது ஒன்றே இவற்றுக்குத் தீர்வாக அமைய முடியும்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதிய புதிய பிரச்சினைகளை நம் தலையில் கட்டிக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராகத் தனித்தனியாகப் போராடிக் கொண்டிருக்காமல், ஒட்டுமொத்தமாக, பாசிசத்துக்கு எதிராக ஓட்டு வழங்குவதன் மூலம் பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ்.சின் பார்ப்பனிய அதிகார அரசியலையும் ஒழித்துக் கட்டுவதுதான் தீர்வாக இருக்க முடியும்.
மாணவர்களும், பெற்றோர்களும், கல்வி ஆர்வலர்களும், சமூகநீதி உணர் வாளர்களும் செல்ல வேண்டிய திசை என்ன என்பதை நம் எதிரிகளே தெளி வாகக் காட்டுகிறார்கள்.
உதயசூரியன் உதிக்கும் திசை நோக் கிக் கை நீட்டுவோம்! ஒற்றை விரலால் புரட்சி செய்து இந்த எதேச்சதிகாரக்கும் பலை அதிகாரத்தை விட்டு ஓட்டுவோம்!
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
1-4-2024
சென்னை
தமிழக அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் அதிக மதிப்பெண் பெற்று வருகிறார்கள் அதற்க்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கின்றனர் இங்கு சில தற்குறிகள் சொல்வதை போல அரசு பள்ளிகள் மோசம் இல்லை.
பழைய வீடியோ பொய்னா இப்ப இதுக்கு என்ன பதில் வச்சிருக்கான் இவன்…. இவ்வளவு சாதி ஆணவம் படைச்சவன் கையில அதிகாரம் கிடைச்சா அந்த தொகுதியும் அதை சுத்தி இருக்க பகுதிகளிலும் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் அதிகரிக்கும்…. சரி வேட்பாளர மாத்த சொல்லலாம் னா இவனே இப்படி ன்னா கட்சியில இருக்க மத்தவங்க….????
பேசாம 40ல நாமக்கல்ல கழிச்சிக்கலாம்..
கட்சி கொள்கைக்கு மாறா பேசினா வேட்பாளர மட்டும் குறை சொல்லலாம். அந்த கட்சிக்காரன் அப்படி தானே பேசுவான். இவங்களோட கூட்டணி வச்சதே தப்பு. திமுக இந்த கொள்கை சமரசத்துக்கு பொறுப்பு ஏத்துகணும். இதை கண்டுகாம சமூக நீதிக்கானவர்களா தங்களை முன்னிலைப்படுத்த முடியாது.
ஆணவப்படுகொலை செய்வேன் என்று வெளிப்படையாக பேசி தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்று ஜாதி வெறியுடன் பேசிய ஜாதி வெறியர் ஒருவரை வேட்பாளராக போடுகிறது கெ.ம.தே.க
சமூக நீதி பேசும் ஜாதி ஒழிப்பு பேசி விட்டு இந்தியா கூட்டனியிலிருந்து இது போன்ற ஜாதி வெறியர்களை ஒரு வேட்பாளராக போடுவது நியாயமே இல்லை 🤢
இந்த நபர் எப்படி மற்ற சமூக மக்கள் சிக்கலை தீர்ப்பார் ?? திமுக தலையிட்டு இந்த வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும்
Dear TN,
Delimitation is the biggest threat for us.
If BJP forms government once again, we will all be diminished. TN will be reduced near to zero.
This is our final frontier to defend.
Please vote wisely.
#Delimitation
Kevin Briggs is a former California highway patrol officer who has stopped more than 200 people from committing suicide on the Golden Gate Bridge.
When Briggs finds a suicidal individual, he usually starts a conversation with them by asking how they are doing, then asking their plans for the following day.
If they did not have plans for the next day, he attempts to make plans with them, inviting them to come back to the bridge if their plan did not work out at the end of the day.
The image below is from 2005 when Briggs spent 60 minutes convincing Kevin Berthia to climb back over a rail on the bridge. Berthia went on to marry and have multiple children.
Briggs has earned the nickname ‘Guardian of the Golden Gate’ for having saved the lives of over 200 people.