நேரில் வந்து சூரிக்கு Surprise கொடுத்த சீயான் விக்ரம்! ❤️
The way #ChiyaanVikram appreciated #Soori for #Mandaadi performance was genuinely heartwarming. Such a beautiful moment of love and respect! ❤️🥹
Dear @chiyaan,
This has been such an emotional journey for all of us. We frst heard the title chiyaan 63 on dec 13, 2024.
We missed u so much throughout this journey.
Our title chiyaan 63 journey is coming to an end after nearly 2 yrs of an emotional rollercoaster.
We are here to celebrate only u chiyaan! ❤️
We fans have been patiently waiting for ur arrival & now we’re all so happy n excited to finally get the title update! 🔥❤️
Here comes our very own #PowerHouse chiyaan vikram! 🔥❤️
#Chiyaan63 @anandshank
Despite his ex, running around trying to tarnish his reputation, the maturity this young guy is showing is truly admirable.
MATURITY.📈
HATS OFF TO YOU, MAN🤞✨
#DhruvVikram#DV4
பழி வாங்கும் சீரியல்கள் இதன் முன் ஜுஜுபி
அந்த நாளை மறக்கவே முடியாது. 30.11.2024 - வெளியில் அடை மழை – புயல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது
இரவு 1.30 மணிக்கு எனக்கு ஃபோன். அலறி அடித்து எழுந்தேன்
கீழ் வீட்டில் இருக்கும் அந்த 72 வயது பெண்மணி. ‘’அவரால மூச்சு விட முடியலை – கொஞ்சம் வர முடியுமா’’ என்று. அவருடைய கணவருக்கு வயது 75. அவர்களுக்கு நான் தான் financial assistant. EB Bill கட்டுவது, ATMல் பணம் எடுப்பது, Instamartல் ஆர்டர் போடுவது முதலான சின்ன சின்ன வேலைகள்.
கீழே போனேன். அவர் கண்ணைத் திறக்கவில்லை. ஆனால் மூச்சு விட ரொம்ப சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.
வீட்டில் குட்டி Oxygen Cylinder போன்ற வஸ்து இருந்தது. அதை அந்த அம்மா அவருடைய மூக்கில் வைத்தார். 1 நிமிடம் சரியாகியது போலிருந்தது.
ஒரு இழுத்து மூச்சு விடும் சத்தம் கேட்டது. ‘’ஹோ’ என்று ஒரு சத்தம். பின் அமைதியோ அமைதி. என் கண் முன்னே ஒருவர் இறப்பதைப் பார்க்கிறேன்.
நான் அவர் நெஞ்சைத் தொட்டுப்பார்த்தேன். மூக்கில் கை வைத்துப் பார்த்தேன். இறந்து போய் விட்டார் என்று தோன்றியது. ஆனால் அதை அவர் மனைவியிடம் சொல்ல தைரியம் இல்லை
அவரே சொன்னார் ‘’இறந்து போய்விட்டார் போல என்று’’
அவருடைய சொந்தக் காரர்களின் நம்பரை வாங்கி ஃபோன் செய்து பார்த்தேன். ஒருவரும் எடுக்கவில்லை. அவருடைய மருமகளுக்கு ஃபோன் செய்தேன். அவரும் எடுக்க வில்லை. என்ன செய்வதென்று தெரியாத போது, அவர் REGULARஆக போகும் ஆஸ்பத்திரியின் நம்பரைக் கொடுத்தார்.
கூப்பிட்டேன். அவர்கள் Ambulanceஐ அனுப்புகிறோம் என்றார்கள். இந்த மழையில் எவ்வளவு நேரம் எடுக்கப் போகிறாரோ என்று நினைத்தபோது, தெய்வமாக சிவக்குமார் என்ற அந்த நபர் ஆம்புலன்ஸுடன் வந்தார்.
உள்ளே வந்தவர், அவரைப் பார்த்துவிட்டு ‘’அவர் இறந்து விட்டார்’’ என்றார்.
இந்த அம்மா, ‘’மருமகளை மட்டும் கூட்டிட்டு வாங்களேன்’’ என்றார். (இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன்) மகள் 2020 கொரோனாவில் இறந்தார். மகன் 2021 கொரோனாவில் இறந்தார். மருமகள் 1கிமீ தள்ளி ஒரு வீட்டில் 2 அழகான குழந்தைகளுடன் வசிக்கிறார்.
அந்த வீடு, இந்த அம்மாவின் பெயரில் இருக்கிறது (அதாவது மாமியார் பெயரில்) – அந்த வீட்டின் மதிப்பு சுமார் 4 கோடி. இப்போது இவர் இருக்கும் வீடு கணவர் பெயரில் இருக்கிறது. சுமார் 80 லட்சம்.
ஆம்புலன்ஸ்காரர் ‘’நானே உங்களைக் கூட்டிட்டுப் போறேன்’’ என்றார். ஆம்புலன்ஸில் ஏறி, மருமகளின் வீட்டுக்குப் போனேன். அந்த வீட்டுக்குப் போனால் காம்பவுண்ட் கேட் locked. சிறுவயதில் மட்டுமே காம்பவுண்ட் சுவரை ஏறிக் குதித்திருக்கிறேன்.
அந்த மழையில் மீண்டும் ஒரு முறை சுவர் ஏறிக் குதித்தேன். அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன். காலிங் பெல்லை அடித்தேன். 5 நிமிடம் கழித்து திறந்தார். என்னை நன்றாகத் தெரியும். விவரத்தைச் சொன்னேன். 5வது நிமிடம் எங்களுடன் வந்தார்.
மணி 2.30. டாக்டர் வந்து ஒரு முறை பார்த்து இறந்து விட்டார் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று தோன்றியதால், கூப்பிட்டோம். Ambulanceல் கூட்டி வாருங்கள். ஆனால் வெளியிலேயே இருங்கள். உள்ளே வராதீர்கள். உள்ளே வந்தால் வெளியில் போவது கஷ்டம் என்றார்.
Ambulance Driver, அவர் அஸிஸ்டென்ட், நான் மற்றும் மருமகள் ஆகிய நான்கு பேரும் கஷ்டப்பட்டு, அவரைத் தூக்கினோம். அவர் 100 கிலோவுக்கு மேல் எடை உள்ளவர்.
ஆஸ்பத்திரிக்குப் போனோம். வெளியிலேயே டாக்டர் வந்தார். பார்த்தார். இறந்து விட்டார் என்றார். Certificateஐ நாளை வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.
மீண்டும் வீட்டுக்கு வந்தோம். மணி 4.30
வீட்டுக்கு அவருடன் வந்தோம் – ஆம்புலன்ஸ்காரரே ஒரு ICE BOX. Generatorஐ அரேஞ்ச் பண்ணினார் – காலை 6.30 மணி ஆகியது
நான் அன்று தனியாக இருந்ததால், இவர்களுக்கு என்னால் காஃபி மட்டுமே போட்டுக் கொடுக்க முடிந்தது – ஆம்புலன்ஸ் காரர் எங்காவது இட்லி கிடைத்தால் வாங்கித் தருகிறேன் என்றார் – வேண்டாம் என்று சொன்னார்கள்
அந்த ஆம்புலன்ஸ்காரர் போன்ற நபர்களை, இக்கட்டான நேரத்தில் ஆண்டவன் அனுப்பி வைக்கிறார் என்று நினைக்கிறேன்
சொந்தக்காரர்கள் எல்லோருக்கும் ஃபோன் பண்ணிச் சொன்னோம் - காலை 11 மணி வரை எந்த உறவினரும் வரவில்லை – செம மழை (வர முடியவில்லை) – 11.30 மணிக்கு மேல் வந்தனர்
அவர் இறந்து போன அன்று தன்னந்தனியாக மருமகள் மட்டுமே எல்லாவற்றையும் மேனேஜ் பண்ணினார் - ரொம்ப பரிதாபமாக இருந்தது – 13ம் நாள் காரியம் வரை அவரே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்
தற்போது
அவர் இறந்த 14 வது நாள், மாமியார் அவருடைய கோடம்பாக்கம் அக்கா வீட்டுக்குப் போனார் – அக்காவுக்கு ஒரு பையன் (50 வயது – எங்கோ வேலை பார்க்கிறார் – பிஸினஸூம் பண்ணுகிறார்) – அவர்களை எல்லாம் கடந்த 5 வருடத்தில் ஒரு முறை கூட நான் பார்த்ததில்லை.
கோடம்பாக்கத்தில் உள்ள அவர்கள் வீட்டுக்கு சென்றபின், அவர்கள் செய்த மூளைச் சலவையில், மருமகள் தற்போது குடியிருக்கும் வீட்டை அக்கா பையனின் பெயரில் Gift Deedஆக எழுதிக் கொடுக்க, அந்த நபர் உடனே அதை அடமானம் வைத்து, ரூ.70 லட்சம் வரை வாங்கி விட்டார்.
இப்போது வீட்டில் குடியிருக்கும் மருமகளுக்கு வீட்டை காலி பண்ணு என்று நோட்டீஸ் போயிருக்கிறது.
மருமகள், எங்களுடைய அப்பார்ட்மென்ட் வீடும் இது போல் ஆகலாம் என்றெண்ணி, இருந்த பூட்டுக்களை உடைத்து, அவரோட பூட்டுக்களைப் போட்டார்.
நாலு நாளில், அக்கா பையன் வந்து, மீண்டும் பூட்டுக்களை உடைத்து, புதிதாக பூட்டுக்கள் போடப்பட்டன.
மீண்டும் மருமகள். இந்த முறை பூட்டுக்களை மாற்றியதுடன், இரண்டு சட்டம் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். இது அக்கா பையனுக்குத் தெரியாது
குடி வந்தவர்களும் எல்லா பிரச்சனைகளையும் தெரிந்தே இங்கு வந்திருக்கின்றனர். எப்போதும் சிகரெட்டும் கையுமாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
எப்போது வேண்டுமானாலும் களேபரம் நடந்து போலீஸ் வரலாம். இது மட்டுமே என்னோட கவலை. வீட்டுக்கு குடி வந்திருப்பவர்களின் ஃபோன் நம்பரைக் கேட்டேன். ‘எதற்கு’’ என்றார்கள்.
திரும்ப பூட்டு உடைக்கும் வைபவம் நீங்கள் இல்லாதபோது நடந்தால், atleast உங்களைக் கூப்பிட்டுச் சொல்ல என்றபோது ‘’We are advocates. We know how to deal with this’´என்று பதில்.
நடப்பவைகளைப் பார்க்கும்போது பணம் என்ன பாடுபடுத்தும் என்று தெரிகிறது – இந்த அம்மா (மாமியார்) இன்றுவரை நன்றாக நடமாடும் வகையில் இருக்கிறார்
அருமையாக சமையல் செய்யக் கூடியவர் – அவர் முடியாமல் படுத்தால் தான் அவருக்கு உண்மை நிலை விளங்கும் – அதுவரை மற்ற விஷயங்கள் கண்ணை மறைக்கும் - அவருக்கு மருமகள் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. அது அவர்களின் குடும்ப விஷயம்.
சீரியல்களில் காட்டப்படுவவை ஒன்றுமேயில்லை என்பது மட்டும் தெரிகிறது