சிறந்த படம் - பைசன் காளமாடன்
எளியவர்களின் எலும்புகளை உருவி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, எஞ்சிய குருதிகொண்டு சிவப்புச் சாயம் பூசி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெருஞ்சுவரை ஒவ்வொரு செங்கல்லாக முட்டி உடைத்த கோபக்காரக் காளை இந்த ‘பைசன்.’
மலையுச்சி மாஞ்சோலை தொடங்கி மருத நில வனத்தி வரை அதிகாரத்தால் ஒடுக்கப்படுபவர்களின் கண்ணீரே தாமிரபரணியாக ஓலமிடுகிறது என மாரி செல்வராஜ் புனைந்த இந்த வன்சோகக் கவிதைக்குக் கலங்காத இதயங்களே இல்லை.
ஆதிகுடிகள் தங்கள் வலிமை உணர, தொட்டுக் கைப்பிடித்து களமாடிய விளையாட்டே இன்று தீட்டின் தழும்பாய் மாறிப்போனதை ஒவ்வொரு முறையும் கோட்டுக்கு வெளியே தயங்கி நிற்கும் கிட்டானின் உடலே உணர்த்தியது.
அப்படி, தன்மீது வன்மம்கொண்டு கொட்டப்பட்ட ஒவ்வொரு கல்லின் மீதும் கால் பதித்து மேலேறி, கிட்டான் தாங்கிய பதக்கம் எண்ணற்ற மணத்தி கணேசன்களுக்கு சமர்ப்பணம்.
‘‘எதுக்கு கத்தி எடுத்தோம்னே மறந்துட்டாங்க’’ என விசனப்படும் பாண்டியராஜாவையும், ‘‘எப்படி ஆடுறான்னு பாருலே, என்ன சாதின்னு இல்லை’’ என ஆதங்கப்படும் கந்தசாமியையும் ஆடுகளத்தில் இருபுறமும் நேருக்கு நேராய் மாரி நிறுத்தியபோது அசல் குற்றவாளி யார், எது என்கிற உண்மை எல்லோருக்கும் உறைத்தது.
வெற்றிக்கான காலக்கெடு என்பதே இந்தச் சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில்தான் அமைகிறது என்பதை, திட்டவட்டமாய் சொன்ன வகையில் இந்த வாழ்க்கை வரலாற்றுப் படம் மிக முக்கியமான காட்சி ஆவணம்.
நீலம் ஸ்டூடியோஸ், அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் போற்றத் தகுந்த தயாரிப்பான ‘பைசன் காளமாடன்’ - சமூகத்தின் துயரப் பிரதிபலிப்பு.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #BisonKaalamaadan | #MariSelvaraj | #BestFilm
சிறந்த நடிகர் - பிரதீப் ரங்கநாதன் (டிராகன், டியூட்)
நம்மிலிருந்து வந்த ஒருவர் பெறும் பெருவெற்றி நமக்கும் முன்னெழுந்து ஓடுவதற்குத் தேவையான தெம்பைக் கொடுக்கிறது.
பிரதீப் ரங்கநாதனின் திரைப் பயணம் அப்படியானது.
ஐ.சி.யூ-வில் போராடிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்குத் தன் தொடர் வெற்றிகள் மூலம் பிரதீப் புகட்டியது ஆயிரம் டன் ஆக்ஸிஜன்.
கனவுத் தொழிற்சாலை அழகுக்கென வகுத்துவைத்திருக்கும் கட்டுப்பெட்டித்தனங்களையெல்லாம் உடைத்து இவர் அடைந்திருக்கும் உயரம் பல்லாயிரம் சாமானியர்களுக்கான வெளிச்சம்.
தனக்காக மட்டுமே படைக்கப்பட்டது இந்த உலகம் என நார்சிச இழைகள் ஓடும் முன்பாதி டிராகனையும், தன் தவறுகளுக்காகத் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் பின்பாதி ராகவனையும் வசனங்கள் இல்லாமல் முக பாவனைகளிலேயே வேறுபடுத்திக்காட்ட முடிந்தது இவரால்!
‘இழந்த எல்லாவற்றையும் மீட்டெடுக்கலாம், அப்பாவின் நம்பிக்கையைத் தவிர’ என்பதை உணர்ந்து தனபாலன் மடியில் ராகவன் சரணடையும் இறுதிக் காட்சி, பிரதீப் அந்தக் கதாபாத்திர வரைவுக்கு எழுதிய திருத்தமான நிறைவுரை.
ராகவனுக்கு அப்படியே நேர்மாறாய் தனக்குப் பிடித்தவளுக்காக எல்லாவற்றையும் உதறித்தள்ளும் கதாபாத்திரம் அகன் சிதம்பரம்.
'தாலி மற்றுமொரு நகையே’ எனவும், 'பெற்றெடுக்காவிட்டாலும் மனைவியின் குழந்தை தன் பிள்ளையே’ எனவும் வெகுஜனப் போக்குக்கு எதிரான அத்தனை அம்சங்களும் இருந்தன ‘டியூட்’ படத்தில்.
அதற்கு பிரதீப் சொன்ன ஒற்றை ‘யெஸ்’ இனிவரும் தமிழ் சினிமாவுக்கான புதிய பாதை.
இதுநாள்வரை வில்லன்களை துவம்சம் செய்யும் இன்டர்வெல் ‘ஆண்மை’ தனத்துக்காக ஆரவாரித்த அதே கூட்டம், காதலிக்காகத் தன் சுயத்தை தியாகம் செய்துவிட்டு நடைபோட்ட அகனுக்கும் ஆர்ப்பரித்ததே அதற்கு சாட்சி.
தனக்கென ‘பி.ஆர் ஜானர்’ என புதுப் பிரிவையே உருவாக்கி, அதில் வெற்றிகள் குவிக்கும் பிரதீப் நாளைய சினிமாவின் விடிவெள்ளி.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #PradeepRanganathan | #Dragon | #Dude | #BestActor
Still ignoring Dhruv after Bison? 😂
One of the year's best performances, praised everywhere and already backed by major awards.
Who cares about these dummy awards? Our Prince will collect Filmfare and National Awards soon enough.
#DV04#DhruvVikram
Justice Senthilkumar Ramamoorthy of #MadrasHighCourt extends till July 31, 2026 the time granted to film director, producer and actor Gautham Vasudev Menon to release 'Chiyaan' Vikram starrer #DhruvaNatchathiram@THChennai Backgrounder👇
https://t.co/sieI5WXeH0
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த `தலைவர் 173' படம் கைவிட்ட நிலையில், தற்போது அந்த கதையை நடிகர் விக்ரமிடம் அனுக உள்ளதாக தகவல்
இந்தக் கூட்டணி உறுதியானால், 'சியான் 64' படமாக அமையும் என எதிர்பார்ப்பு
#SibiChakravarthy#Thalaivar173Dropped#Vikram#Chiyaan64 #thanthitv
Justice Senthilkumar Ramamoorthy of #MadrasHighCourt extends till July 31, 2026 the time granted to film director, producer and actor Gautham Vasudev Menon to release 'Chiyaan' Vikram starrer #DhruvaNatchathiram@THChennai Backgrounder👇
https://t.co/sieI5WXeH0