ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவை நிறைவேற்றிட அரசுப் பள்ளியில் பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் 110 விதியின் கீழ் சட்டம் இயற்ற அறிவித்து, பல தடைகளைத் தாண்டி சட்டமாக்கி இன்று அவர்களின் மருத்துவக்கனவை நனவாக்கியுள்ளோம்.
பல தடைகளைத்தாண்டி உருவாக்கப்பட்ட 7.5% உள்ஒதுக்கீடு சட்டம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய இந்நாள் என்வாழ்வில் மகிழ்ச்சியான நாள்; அரசுப்பள்ளியில் படித்தவன் என்றமுறையில் எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்திய நாள்!
அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் மற்றும் வனத்துறை பள்ளி மாணவர்களின் ஏழ்மை நிலையை கருத்தில்கொண்டு அவர்களுக்கான கல்வி கட்டணம், இதர செலவினங்களை Post Matric மற்றும் இதர கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
7.5% உள் உதுக்கீடு மூலம் அரசு, சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 313 மருத்துவ இடங்களும், அரசு,சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 92 மருத்துவ இடங்களும் நடப்பாண்டில் அரசுப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்வான மாணாக்கர்களுக்கு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.
2020-21ம் ஆண்டிற்கான மருத்துவ கலந்தாய்வில் தேசிய தகுதி (ம) நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு, இளநிலை மருத்துவ பிரிவுகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் 7.5% முன்னுரிமை அடிப்படையில் MBBS படிப்பிற்கான சேர்க்கை ஆணைகள், மருத்துவர் அங்கி, ஸ்டெதஸ்கோப்பை வழங்கினேன்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் 2020-21 க்கான மருத்துவ கலந்தாய்வில் தேசிய தகுதி (ம) நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு ஒதுக்கீடு இடங்களில் 7.5% முன்னுரிமை அடிப்படையில் MBBS படிப்பிற்கான சேர்க்கை ஆணை பெற்ற அரசுப்பள்ளி மாணாக்கர்கள் நன்றி தெரிவித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
2020-21க்கான மருத்துவ கலந்தாய்வில் தேசிய தகுதி (ம) நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை மருத்துவ பிரிவுகளில் 7.5% முன்னுரிமை அடிப்படையில் MBBS சேர்க்கை ஆணைகள் பெற்ற மாணாக்கர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் மருத்துவர் கனவை நனவாக்கியமைக்காக கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம், வனவாசி அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் ரூ.123.53 கோடி மதிப்பிலான 86 திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து, ரூ.118.93 கோடி மதிப்பிலான 44 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.
இன்று (19.11.2020) சேலம் மாவட்டம் வனவாசி அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பயனாளிகளுக்கு பல்வேறு துறைசார்ந்த அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
தங்கள் வாழ்வில் சிரமங்களை அனுபவித்துள்ள ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆவதன் மூலம் அவர்கள் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்ய முன்வருவார்கள்.
கிராமம் முதல் நகரம் வரை ஏழைகள் நிறைந்த பகுதிகளில் தரமான மருத்துவ வசதி கிடைக்க இப்படிப்பட்ட மாணவச் செல்வங்களை தொடர்ந்து ஊக்குவிப்போம்.
இளம்வயதிலேயே அறிவியல்மீது ஆர்வம்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தற்போது சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!
2020-21 -மருத்துவக் கலந்தாய்வில் 7.5% உள் ஒதுக்கீடின் கீழ் தேர்வான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கிய மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் மாணவர்களுக்கு மருத்துவ அங்கியையும் ஸ்டெதஸ்கோப்பையும் வழங்கினார்கள்.
#TNGovt#MedicalCounselling
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு ஒதுக்கீடு மூலம் தனது மகளுக்கு மருத்துவ இடம் வழங்கியதற்காக, மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்களுக்கு தந்தை ஒருவர் கண்ணீர் மல்க நன்றி கூறிய நெகிழ வைக்கும் காட்சி! 👇🌱
#TNGovt#MedicalCounselling#AIADMK