தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?
இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
என்ன தான் நடக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில்?
ஒரு ஏடிஜிபி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா?
நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, "சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன்" என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச
திரு. @mkstalin வெட்கமாக இல்லையா?
"காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை" என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கைப் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்ட ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே,காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் அவர்களை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 வது நினைவு நாளை முன்னிட்டு மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CNAisourDNA#AnnaForever
தமிழ்நாடு உள்ளவரை, தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் வரை,
அண்ணா வாழ்ந்துக்கொண்டே தான் இருக்கிறார்!
வாழ்க அண்ணா நாமம்!
#CNAisourDNA#AnnaForever
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த சுயமரியாதை சுடரொளி,
தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தமிழ்த்தாயின் தவப்புதல்வர்; திராவிட இயக்கத்தின் பிதாமகன்,
மேடைதோறும் தமிழ் பொழிந்த
காவிய மேகம்!
இருள்சூழ் தமிழ்வானுக்கு
காஞ்சி வழங்கிய ஒளிவெள்ளி!
அரசியல் பகைவரும் அண்ணாந்து வியக்கும்படி அறிவாற்றல் சிகரமென அதிசயமாய் உயர்ந்த, "நம் இயக்கத்தின் கொள்கைச் சுடர்"
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாளில், அவர்தம் உயரியக் கொள்கைகளைப் பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம்.
அண்ணா நாமம் வாழ்க !
#CNAisourDNA
#AnnaForever
@AIADMKOfficial
அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
பத்திரிகையாளர்கள் போன்களைப் பறிமுதல் செய்யவேண்டிய அவசியம் என்ன? FIR லீக் ஆனது முழுக்க அரசின் தவறு. அதனை பத்திரிகையாளர்கள் பக்கம் திசைதிருப்ப முயல்வது கண்டிக்கத்தக்கது.
உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால், ஸ்டாலின் மாடல் அரசு இவ்வழக்கில் ஏதேனும் அழுத்தம் தருகிறதோ என சந்தேகம் எழுகிறது ,
#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மாநில அரசின் தலையீடற்ற , முறையான CBI விசாரணையே நீதியை வெளிக்கொணரும்!
#யார்_அந்த_SIR என்று கண்டறிய இந்த வழக்கை உடனடியாக CBI-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்
#SaveOurDaughters
ஸ்டாலின் மாடல் திமுக அரசு நடந்துவது சட்டத்தின் ஆட்சியா? சமூக வலைதளங்களுக்கான ஆட்சியா?
வேங்கைவயல், அண்ணா பல்கலை., இசிஆர் என முக்கிய வழக்குகள் அனைத்திலும், ஆடியோ, வீடியோ, FIR என லீக் ஆவது, குறிப்பாக திமுக-வைச் சேர்ந்தவர்கள் வாயிலாகவே லீக் ஆவதன் பின்னணி என்ன?
கோர்ட்டில் நடக்கவேண்டிய வழக்குகளின் போக்கை SOCIAL MEDIA NARRATIVE மூலம் திசைதிருப்ப முயல்வதா?
(பி.கு. : ஞானசேகரன் பேட்டி எப்போ ரிலீஸ் பண்ண போறீங்க @arivalayam ?)
நேற்று "கட்சி சம்மந்தம் இல்லை" என்று சொன்ன மரியாதைக்குரிய DC, இன்று வலிய வந்து அஇஅதிமுக-வுடன் இணைத்து பேச முயல்வது ஏன்?
இது DC அவர்களே உவந்து கொடுத்த பேட்டியா? அல்லது, சன் நியூசால் வாங்கப்பட்ட பேட்டியா என்பது பார்க்கும் அனைவருக்கும் தெரியும்.
அதிலும் அறிவாலய வாயிற்காவலர் ஆர்.எஸ்.பாரதி Wanted-ஆக என்ட்ரி கொடுத்து "DC பேட்டியை பார்த்தீர்களா?" என்று கேட்பது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை ரகம்!
திமுக-வின் லட்சணத்தை நாடே காரி துப்பிவிட்ட பிறகு, என்ன செய்வது என்று புரியாமல், Knee Jerk-ல் கண்டதை உளறிக் கொண்டிருக்கிறது ஸ்டாலின் மாடல் திமுக அரசு!
குற்றம் செய்தவரின் தாத்தா அதிமுகவில் இருந்தால் என்ன ,மாமா அதிமுகவில் இருந்தால் என்ன,
குற்றம் புரிந்தவர் அதிமுகவில் இருந்தால் அது யாராக இருந்தாலும் எங்கள் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @epstamilnadu அவர்களால் உடனடியாக நிரந்தரமாக நீக்கப்படுவார்.
ஆனால் எங்களின் கேள்வி-
குற்றம் புரிந்தவரின் அந்த கார் திமுக கொடி கட்டி இருந்தது ஏன்?
மீண்டும் கேட்கிறோம்,
திமுக கொடி என்பது குற்றம் புரிவதற்கான லைசன்சா?
Better luck next time @arivalayam!
பட்ஜெட் மாயாஜால அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது
பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயரும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி
தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை
மத்திய அரசின் பட்ஜெட் என கூறுவதை விட, பீகார் மாநில பட்ஜெட் என கூறலாம்
மத்திய அரசின் பட்ஜெட் என கூறுவதை விட, பீகார் மாநில பட்ஜெட் என கூறலாம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டிய காவல்துறையை சேர்ந்தவர்களே அவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கினால் இந்த ஸ்டாலின் மாடல் அரசில் பெண்கள் யாரைத் தான் நம்புவது?
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் அவலம்.
#SaveOurDaughters
மத்திய பட்ஜெட் 2025-2026
மாயாஜால அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Budget2025
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இல்லாதது தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #Budget2025
சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக பணியாற்றியவரும்,
ஆலய நுழைவு சட்டம்,
ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் போன்ற புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி, சமூக நீதியை நிலைநாட்டியவரும், ஆதிதிராவிட நலத்துறையின் தந்தை என்று போற்றப்பட்டவருமான திரு.ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் கொள்கைகளையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
2024-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியவர்களை மையமாக கொண்டு 2025-26 நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிதி நிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும்.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.
பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது.
தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை.
விவசாயத்துறையை பொருத்தவரை 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் உள்பட சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு உற்பத்தியை பெருக்கவும், இடுபொருள் விலையை கட்டுப்படுத்தவும், விளைப்பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் தமிழ்நாட்டிற்கு எவ்வாறு உதவும் என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலமாகும். விவசாய வளத்தை பெருக்கவும், விரையமாகும் நீரை பயன்படுத்த உதவும் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
அதேபோல் சிறு குறு தொழில்களுக்கும், ஏற்றுமதிக்கும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவும், திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் புதிய வேகத்தை கொடுக்கவும் திட்டங்கள் ஏதும் இல்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இல்லாதது தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது.
10 ஆண்டுகளுக்கு மேல் 8 சதவீதத்திற்கு குறையாத பொருளாதார வளர்ச்சியை அடைந்தால்தான் 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என பொருளாதார அறிக்கை கூறுகிறது. இந்நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால் ,
இது ஒரு மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது.
பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயர்த்தப்படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
@FinMinIndia
"2 லட்ச ரூபாய் தருகிறோம், வேங்கைவயலில் மலம் கலந்தது நீ தான் என ஒப்புக்கொள்" என சுதர்சனிடம் போலீசார் கேட்டதால், அதனை ஒப்புக்கொள்ளாதே என்று தான் சொன்ன ஆடியோ திரித்து கசியப்பட்டுள்ளது என்பதே சுதர்சன் தாயாரின் கூற்று.
ஒரு முக்கியமான வழக்கின் ஆதாரம் எனக் கூறப்படும் AUDIO எப்படி வெளியில் கசிகிறது?
MEDIA TRIAL நடத்தி, அதன் மூலம் தனக்கு சாதகமான Narrative அமைத்து, நீதி விசாரணையை திசைதிருப்ப முயல்கிறதா ஸ்டாலின் மாடல் திமுக அரசு?
வேங்கைவயல் வழக்கில் ஆரம்பம் முதலே இந்த திமுக அரசின் செயல்பாடுகள் வழக்கை முன்முடிவெடுத்து முடிக்கும் நோக்கிலேயே இருந்து வரும் நிலையில், CBI விசாரணையே இதற்கான நீதியை வெளிக்கொணரும்!