தவெக ஆட்சியின் அவல நிலை
"வேண்டும், வேண்டும்... கரண்ட் வேண்டும்!"
தொடர் மின்வெட்டு காரணமாக திடீர் சாலை மறியல்...
சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன!
அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்று தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அணி நிர்வாகி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக செயற்குழு உறுப்பினர் அணிஸ் என்பவர் பெண் வழக்கறிஞரிடம் 15 லட்சம் வரை அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி தமிழக வெற்றிக்கழக அரசின் முகத்திரையை கிழித்துள்ளது.
ஒப்பந்ததாரர்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி கமிஷன், கோவில் நிலங்களில் முறைகேடு, அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் என ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில் ஊழலில் ஊறிப்போயுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
இந்த, "விஜய் தப்பு பண்ண மாட்டான்; தப்பு பண்றவங்களையும் விடமாட்டான்" என்று பஞ்ச் டயலாக் பேசிய ரீல்ஸ் முதலமைச்சரும், அஞ்சு கட்சி அம்மாவாசையான சட்டத்துறை அமைச்சரும் இந்த ஆடியோவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் கிழக்கு கோபுரம் திருப்பணி பார்வையிடச் சென்ற
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஷூ அணிந்து கொண்டு கோபுரத்தில் ஏறியது கண்டனத்திற்குரியது....
அறநிலைத்துறை அமைச்சர் என்றால் காலணி அணிந்து உள்ளே செல்லலாமா??
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு, மற்ற மாநிலங்களின் அனுமதி பெறப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் பதில் அளித்ததற்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள்
@EPSTamilNadu
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு, மற்ற மாநிலங்களின் அனுமதி பெறப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் பதில் அளித்ததற்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
ஆட்சி அதிகாரம் உங்கள ஆட வைக்கிறது @TVKVijayHQ
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் கிழக்கு கோபுரம் திருப்பணி பார்வையிடச் சென்ற
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஷூ அணிந்து கொண்டு கோபுரத்தில் ஏறியது கண்டனத்திற்குரியது....
அறநிலைத்துறை அமைச்சர் என்றால் காலணி அணிந்து உள்ளே செல்லலாமா??
@RameshOffcl
வெட்கக்கேடு
என்றும் மக்கள் அதிமுக பக்கம் தான்...
மறக்குமா நெஞ்சம்..! பாட்டி இன்னும் பழச மறக்கலையே..!! அ.தி.மு.க துண்டுடன்...
இலவச வீட்டு மனை பட்டா பெற வந்த மூதாட்டி....
பதறிப் போய் துண்டை அகற்றிய அதிகாரிகள்....
வங்கி உயர் அதிகாரியை அறைந்த அழகிரி மகள் , தவெக அனுதாபி கயல்விழி!
உங்கள் கட்சியில் சேர்வதற்கு இது தான் Qualification-ஆ @actorvijay?
ஆளுங்கட்சியில் சேரப் போகிறோம் என்ற அதிகாரத் திமிரே இப்படி நடக்க வைக்கிறது என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் எப்படி இருப்பார்கள்?
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
கள்ளக்குறிச்சி, தென் சென்னை வடக்கு (கிழக்கு) மற்றும் தென் சென்னை தெற்கு (கிழக்கு) ஆகிய மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
இன்னா டா ரோட்டுக்கு வந்து விக்க ஆரம்பிச்சிட்டிங்க.... 😁😁
தெருவுக்கு வருவீங்கன்னு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரம் வருவீங்கன்னு தெரியாதுடா.... 😃
#TVKVijayFails
கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அணை நிரம்பினால்தான் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கார்நாடக காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் அவர்கள் கூறுவது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானதாகும்.
சட்ட ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரைப் பெற வேண்டிய த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் இன்றுவரை வாய்மூடி மௌனியாக இருக்கிறார்.
தற்போது, 'தமிழக முதலமைச்சர்,
காவிரிப் பிரச்சனையில் பேச்சுவார்த்தைக்காக கர்நாடக முதலமைச்சரை சந்திக்கப் போகிறேன்' என்று சொன்ன பிறகு, 'யார் வேண்டுமானாலும் வரட்டும், யாரோடும் நாங்கள் பேசத் தயார், எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை' என்று கர்நாடகாவின் காங்கிரஸ் முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமார் அவர்கள் கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
மேகதாது விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களது கருத்துகளைக் கேட்டும்; டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தும், பிறகு அனைவரது கருத்துகளின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்.
ஏற்கெனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, கர்நாடக அரசு காவிரியில் நமக்கு வழங்க வேண்டிய உரிய பங்கு நீரை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்துகொள்ள வேண்டும். காவிரியில் நமக்குரிய பங்கு நீரைப் பெற வேண்டும் என்று த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில், மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்கள், கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழகத்திற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதைக் கேட்கும்போது, 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது ? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள். ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை மதிக்காத கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழக மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதல், ஆளுங்கட்சி நிர்வாகிகள் ரவுடிக் கும்பலாக மாறி பொதுமக்களையும் வியாபாரிகளையும் மிரட்டுவதுதான் அன்றாட வேலையாகிவிட்டது!
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா நடைபெறும் இடத்தில், ஒரு புனிதமான சூழல் என்றும் பாராமல் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி, மாமூல் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகிகளின் அராஜகத்திற்குப் பின்னால் இருப்பது யார்? இந்த ரவுடிப் படைகளுக்கு இவ்வளவு அதிகாரம் கொடுத்தது யார்?
சொந்தக் கட்சியினரைக் கூடக் கட்டுப்படுத்தத் திராணியற்ற, நிர்வாகத் திறமையற்ற ஒருவர் முதலமைச்சராக இருப்பது தமிழகத்திற்குச் சாபக்கேடு!
#பொய்க்கால்_குதிரை_அரசு
நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை தவெக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அரசியல் சாசன சட்டத்தையும், உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை தர மறுக்கும் கர்நாடக முதலமைச்சருக்கு கண்டனம்!
நடைபெற உள்ள காவிரி ஆணைய கூட்டத்தில் உரிய பங்கு நீரைப் பெற நடவடிக்கை எடுக்க த.வெ.க. அரசை வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்