சோசப் விசய்...
திமுக ஆட்சி சரியில்லை என்றுதான் சினிமா மோகத்தில் விஜய்க்கு ஓட்டு போட்டார்கள்...
மின்வெட்டுக்கு திமுக தான் காரணம் என்று அமெரிக்காவுக்கே தெரியும்
அதை சரி செய்யனு அதை விட்டுட்டு
மின் வெட்டுக்கு காரணம் திமுகதான் அரைச்ச மாவையே அரைக்க வேண்டாம்
@TVKVijayHQ
சோசப் விசய்...
திமுக ஆட்சி சரியில்லை என்றுதான் சினிமா மோகத்தில் விஜய்க்கு ஓட்டு போட்டார்கள்...
மின்வெட்டுக்கு திமுக தான் காரணம் என்று அமெரிக்காவுக்கே தெரியும்
அதை சரி செய்யனு அதை விட்டுட்டு
மின் வெட்டுக்கு காரணம் திமுகதான் அரைச்ச மாவையே அரைக்க வேண்டாம்
@TVKVijayHQ
தமக்கு செய்த உதவியை நேர்காணல் சந்திக்கும்பொழுதெல்லாம் நன்றி மறவாமல் அண்ணன் அன்புமணி அவர்கள் சுகாதரத்துறை அமைச்சராக இருந்தபொழுது ஆதரவற்ற குழந்தைகளின் உயிர் காப்பாற்றியதை சொல்லி பெருமிதம் செய்யும் அந்த நல் உள்ளம் வாழ்க ராகவா லாரன்ஸ் மாஸ்டர்.🙏✨
நள்ளிரவில் (12.50) மின்சாரத்தை நிறுத்தி எங்களை தூங்கவிடாமல் செய்யும் தவெக அரசை வண்மையாக கண்டிக்கின்றோம் ...
திமுக ஆட்சியை
கண்ணில் காட்டிவிட்டிர்கள்
இந்த நிலை நீடித்தால்
மக்கள் தூக்கி எறிவார்கள்
@CMOTamilnadu@TVKVijayHQ
நள்ளிரவில் (12.50) மின்சாரத்தை நிறுத்தி எங்களை தூங்கவிடாமல் செய்யும் தவெக அரசை வண்மையாக கண்டிக்கின்றோம் ...
திமுக ஆட்சியை
கண்ணில் காட்டிவிட்டிர்கள்
இந்த நிலை நீடித்தால்
மக்கள் தூக்கி எறிவார்கள்
@CMOTamilnadu@TVKVijayHQ
அரசு கேபிள் சேவையில் பாலிமர், நியூஸ் தமிழ் உள்ளிட்ட செய்தித் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்!
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் ஒளிபரப்புச் சேவையிலிருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24x7, தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூறப்படும் காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல.
பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24x7, தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சிகள் உள்பட அனைத்து செய்தித் தொலைக்காட்சிகளும் அரசு கேபிள் டிவி மூலம் தடையின்றி ஒளிபரப்பப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu
மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்தும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் நடப்பு கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வலியுறுத்திய போது
My heartiest congratulations to Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji on leading India as the longest serving Prime Minister.
Over the past decade, his leadership has driven transformative progress, from lifting millions out of poverty to strengthening infrastructure and building a robust digital ecosystem.
May this journey continue with greater resolve, leading India towards becoming a self-reliant, hunger-free nation and a true global power.
@PMOIndia@narendramodi
சென்னை மாநகராட்சி மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும்!
சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் இன்று வரை வழங்கப்படாததைக் கண்டித்து அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமாக ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். உழைத்த ஒப்பந்தப் பணியாளர்களுக்கு 10 நாள்களுக்கு மேலாகியும் ஊதியம் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
மருத்துவப் பணியாளர்களின் போராட்டத்தால் சென்னையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் இன்று காலை முதல் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் தவறால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது.
மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. காரணம் எதுவாக இருந்தாலும் உழைத்த பணியாளர்களுக்கு ஊதியத்தை நிறுத்தி வைப்பதோ, வழங்க மறுப்பதோ நியாயமல்ல; அது மனித உரிமைகளுக்கு எதிரானது.
எனவே, சென்னை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் பிற கோரிக்கைகளையும் மாநகராட்சியும், அரசும் இணைந்து நிறைவேற்ற வேண்டும். @CMOTamilnadu
எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலில் செய்த ஒரே நல்ல காரியம் என்றால் அது திருமாவளவன் அவர்களை முதல்வர் ஆகாமல் தடுத்தது தான்.
அவர் இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய நல்லது.
மின்சார வாரிய கேங்மேன்களை
கள உதவியாளர், வயர்மேன்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், காலியாக உள்ள கள உதவியாளர்கள், வயர்மேன் ஆகிய பணியிடங்களில் தங்களை நியமிக்க வேண்டும் என்ற கேங்மேன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்றாலும் கூட, அதை ஆய்வு செய்ய மின்வாரியம் முன்வராதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நீண்டகாலமாக களப்பணியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு தான் கேங்மேன் எனப்படும் கடைநிலை தொழில்நுட்பப் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில் உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்ற 9613 பேர் 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேங்மேன் பணியில் நியமிக்கப்பட்டனர்.
இரு வருடப் பயிற்சிக்குப் பிறகு ரூ.16,200 - ரூ.51500 ஊதிய விகிதத்தில் நியமிக்கப்பட்ட அவர்கள், கேங்மேன் பணிக்கான வேலைகளைக் கடந்து மின் தடை நீக்குதல், தாழ்வழுத்த மின் தடை நீக்குதல், மின்மாற்றிகள் பராமரிப்பு, மின் கணக்கீடு செய்தல் உள்ளிட்ட கள உதவியாளர்கள், வயர்மேன் செய்யும் பணிகளையும் செய்து வருகின்றனர். இந்தப் பணிகளை செய்யும் போது மின்சாரம் தாக்கி 80-க்கும் மேற்பட்ட கேங்மேன் உயிரிழந்துள்ளனர்; 200-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
கேங்மேன் என்ற பெயரில் இவர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தாலும் கூட வயர்மேன், கள உதவியாளர் பணிகளையும் இவர்கள் தான் செய்து வருகின்றனர். இத்தகைய நிலையில் காலியாக உள்ள 26,605 கள உதவியாளர்கள், 14,358 வயர்மேன் பணிகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் போது, இப்போது பணியில் உள்ள கேங்மேன்களை அந்த பணிகளில் நியமித்து விட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும் புதிதாக ஆள்களை தேர்வு செய்யலாம் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானது தான்.
கேங்மேன்களாக பணியாற்றி வருபவர்கள் வயர்மேன், கள உதவியாளர் பணிக்கான கல்வித் தகுதியையும், பயிற்சிகளையும் பெற்றுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் தேவையான கல்வித் தகுதியையும் கடந்து பட்டப்படிப்பு, முனைவர் ஆராய்ச்சிப் பட்டம் வரையிலான படிப்புகளையும் முடித்துள்ளனர். கேங்மேன்களை அடுத்தக்கட்ட பணிகளுக்கு நியமிப்பது குறித்து மின்வாரியம் ஆய்வு செய்யலாம் என்று நீதிமன்றங்களும், தொழிலாளர் நல அமைப்புகளும் பரிந்துரைத்துள்ளன. ஆனால், மின்வாரியம் மட்டும் இவற்றையெல்லாம் செவிமடுக்க மறுக்கிறது.
மிகக்குறைந்த ஊதியத்தில் பணி செய்யும் கேங்மேன்கள் அவர்களின் சொந்த ஊரிலிருந்து 500 கி.மீ தொலைவுக்கு அப்பால் பணி செய்ய வேண்டியிருப்பதே அவர்களுக்கு பெரும் தண்டனையாகும். இந்த தண்டனையிலிருந்து கேங்மேன்களை மீட்கவும், அவர்களின் தகுதிக்கேற்ற பணியும், ஊதியமும் கிடைப்பதை உறுதி செய்யவும் அவர்களை வயர்மேன், கள உதவியாளர் பணிகளில் அமர்த்த அரசு முன்வர வேண்டும்.
@CMOTamilnadu