மண்டல் ஆணையத்திற்கு வழி வகுத்த வே. ஆனைமுத்து
அவர்களின் 102-ஆம் பிறந்த நாள்: அவரது சமூகநீதிப்
போராட்டத்தை பாடநூலில் சேர்க்க வேண்டும்!
தந்தைப் பேரியாரின் பெருந்தொண்டரும், மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டு, மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு காரணமாக இருந்தவருமான பெரியவர் வே. ஆனைமுத்து அய்யா அவர்களின் 102-ஆம் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சமூகநீதி முன்னோடியான அவருக்கு நான் எனது வணக்கங்களை செலுத்துகிறேன்.
ஆனைமுத்து அய்யா அவர்களின் சமூகநீதி போராட்ட வரலாறு மிகவும் நீண்டது. தமது தோழர்கள் சிலருடன் 27.04.1978-ஆம் நாளில் தில்லிக்கு புறப்பட்ட ஆனைமுத்து அய்யா அவர்கள் தான் பிகார், உத்தரப்பிரதேசம், தில்லி உள்ளிட்ட வட இந்தியாவை தமது போராட்டக் களமாக மாற்றி மண்டல் ஆணையம் அமைக்கப்படுவதற்கும், பின்னாளில் அதனடிப்படையில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கும் காரணமாக இருந்தார். அவரது நூற்றாண்டு நிறைவை பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது.
பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தவர். ஆனால், அவரது சமூகநீதி வரலாறு உரிய முறையில் இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது தான் வருத்தமான உண்மை. இந்தக் குறையை போக்கும் வகையிலும், அவரது போராட்டங்களை போற்றும் வகையிலும் அவற்றை பாடநூல்களில் சேர்க்க வேண்டும்.
அதே நேரத்தில் தந்தைப் பெரியாரும், அவர் வழியில் ஆனைமுத்து அய்யாவும் வலியுறுத்திய மக்கள்தொகை அடிப்படையிலான 100% வகுப்புவாரி இடப்பங்கீட்டை சாத்தியமாக்குவதற்காக தொடர்ந்து சமூகநீதிப் போராட்டங்களை முன்னெடுக்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம்.
#SocialJustice
பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில்
இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும்
எதிரானது: மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் த.வெ.க.வில் சேர்ந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் ஆகும். அவர்களின் செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாள்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய தேவை என்ன? காவிரி பிரச்சினைக்காகவோ, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. மாறாக, ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார் என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை.
த.வெ.க.வின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சேர்கின்றனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்?
அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுனர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை த.வெ.க. தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பது தான் இதற்கான காரணம். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது.
ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்த பட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது.
@TVKVijayHQ
பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரும், செய்தி புனல் இணைய செய்தித் தளத்தின் உரிமையாளருமான சுரேஷ்பாபு அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானதை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம், வேடவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய போது..!
Heartiest congratulations to Dr.@Sowmiyanbumani on taking oath as the MLA of #Dharmapuri constituency. Your vision for sustainable development and your deep-rooted commitment to social justice will bring a phenomenal transformation to the lives of the people.
Wishing you a successful and impactful tenure.
#தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகப் பதவியேற்றுள்ள திருமதி.சௌமியா அன்புமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களின் சமூக நீதிச் சிந்தனையாலும், மக்கள் மீதான தீராத அக்கறையாலும் தருமபுரி தொகுதி புதிய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.
உங்கள் மக்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
I feel a profound sense of pride and emotional fulfillment after watching the Marathi film Asha, which powerfully portrays the life and service of an ASHA health worker. I was moved to tears seeing a full-length feature film based on an initiative that began as a public health mission during my tenure as the Union Health Minister of India.
The ASHA (Accredited Social Health Activist) initiative was conceived and launched under the National Rural Health Mission (NRHM) on April 12, 2005, as the world’s largest public health programme. It was built on a clear political vision — to democratize healthcare, decentralize service delivery, and empower rural women as the backbone of India’s public health system. It was not merely a scheme; it was a social revolution in rural healthcare.
When we initiated this mission, the challenges were enormous. Rural India faced high maternal and infant mortality rates, limited access to institutional deliveries, and inadequate awareness of preventive healthcare. Over the past two decades, India has witnessed a historic transformation, with the maternal mortality rate reduced by nearly 60% and the infant mortality rate reduced by nearly 80%. These are not mere statistics; they represent lakhs of saved mothers and children, and stronger families across rural India.
Today, there are more than 10 lakh ASHAs working tirelessly across the country. They serve as the first point of contact between our healthcare system and rural communities. They are trusted companions for pregnant women, guardians of newborn health, facilitators of immunisation, and champions of nutrition and sanitation awareness.
The global community has also recognised their extraordinary contribution. In 2022, the World Health Organization (WHO) conferred the Global Health Leaders Award on India’s ASHA workforce, recognising their outstanding service in advancing public health, strengthening community outreach, and playing a critical role during the COVID-19 pandemic.
ASHA workers have become the face of grassroots governance. They are the bridge between the government and the people. They embody the spirit of inclusive development and women-led empowerment.
Watching this transformative journey portrayed on screen was not just emotional , it was deeply personal. I vividly remember the long hours we spent over several months, conceptualising this mission, refining every detail, within the walls of Nirman Bhavan, New Delhi. I wholeheartedly congratulate the writer, director, producer, and the entire cast and crew of the film Asha, now streaming on Amazon Prime Video, for bringing national attention to the silent warriors of our healthcare system. This film is a tribute to India’s grassroots democracy in action.
Let this film remind us that visionary public policy, backed by political will and sustained commitment, can truly change the destiny of a nation.
தென்மாவட்டங்களில் கனிமக்கொள்ளையை தடுக்க
முடியாததால் மானமுள்ள திமுக நிர்வாகி விலகல்: இனியாவது முதல்வர் விழிப்பாரா, சீரழிப்பாரா?
தென்காசி மாவட்டம் கடையம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடற்ற வகையில் நடைபெற்று வரும் கனிமக் கொள்ளையை தடுக்க முடியாததாலும், அதன் தீமைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படாததாலும் திமுகவின் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளர் கடையம் சந்திரசேகர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார். சுயமரியாதையைக் காக்க இந்த முடிவை அவர் எடுத்திருப்பது மிகவும் சரியானது.
திமுக சுற்றுச்சூழல் அணி நிர்வாகியின் பதவி விலகலை ஒரு சாதாரணமான நிகழ்வாக பார்க்கக் கூடாது. தென் மாவட்டங்களில் கட்டுப்பாடற்ற வகையில் கனிமக் கொள்ளை நடக்கிறது; அதை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக போராட வேண்டிய திமுக நிர்வாகியாலேயே தடுக்க முடியவில்லை; கனிமக் கொள்ளை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திமுக நிர்வாகியே புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல செய்திகளை இந்த ஒற்றை பதவி விலகல் கடிதம் கூறுகிறது.
தென் மாவட்டங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கனிமக் கொள்ளை நடைபெறுகிறது; ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கேரளத்திற்கு கடத்திச் செல்லப்படுகின்றன; கனிமக் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு காட்பாதராக இருந்து திமுகவின் பெரும்புள்ளி ஒருவர் பாதுகாக்கிறார் என்று பல ஆண்டுகளாக நான் குற்றஞ்சாட்டி வருகிறேன். அவை அனைத்தும் உண்மை என்று இப்போது திமுக நிர்வாகியின் வாக்குமூலத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நலனிலும், இயற்கை வளங்களின் நலனிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அக்கறை இருக்கிறதா? என்பதை நிரூபிப்பதற்கான நேரம் வந்து விட்டது. இனியாவது கனிமக் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது அவர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை வாக்கு என்னும் ஆயுதத்தைக் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிப்பார்கள்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்.
நாள்: 15-12-2025
நேரம் : காலை 10.00 மணி
இடம் : VVV சக்தி மஹால், விழுப்புரம்-செஞ்சி சாலை , கொய்யாதோப்பு.
#SowmiyaAnbumani#Vikaravandi
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்.
நாள்: 15-12-2025
நேரம் : காலை 10.00 மணி
இடம் : V.V.V சக்தி மஹால், விழுப்புரம் - செஞ்சி சாலை, கொய்யா தோப்பு
#விக்கிரவாண்டி#SowmiyaAnbumani
நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்.
நாள்: 12-12-2025
நேரம் : காலை 10.00 மணி
இடம் : KNT மஹால், நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், நெய்வேலி
#SowmiyaAnbumani#Neyveli#மகளிர்உரிமைமீட்புப்பயணம்
"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், சோழர்களால் 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்ட வீரநாராயணன் ஏரியை (வீராணம் ஏரி) தூர்வாரி பராமரிக்க வேண்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த போது.!
#உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
#விடியல்எங்கே?
திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்
(பகுதி 12)
221.அரசு வீட்டு வசதி மற்றும் குடிசைமாற்று வாரிய வீடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் & 297)
222.கந்துவட்டி கொடுமையில் இருந்து ஏழை, சிறு வணிகர்களைக் காக்க ரூ.15 ஆயிரம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 298)
223.வணிக வரி அதிகாரிகள் விதிக்கின்ற உத்தேச வரி விதிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வணிகர்கள் 25 சதவிகித வரிவிதிப்புத் தொகையைச் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையைத் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 300)
224.மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு சொந்தமான கடைகளின் வாடகை உயர்வு ரத்து செய்யப்பட்டு, புதிய வாடகை நிர்ணயிக்கப்படும். (வாக்குறுதி எண் & 301)
225.மத்திய அரசு சி-று தொழில் பட்டியலிலிருந்து நீக்கியுள்ள தீப்பெட்டி, பட்டாசு, மெழுகுவர்த்தி தயாரித்தல் உள்ளிட்ட 21 பொருட்களை மீண்டும் அப்பட்டியலில் சேர்க்க ஆவன செய்யப்படும். (வாக்குறுதி எண் & 303)
226.மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்களில் வர்த்தக மேம்பாட்டை உறுதி செய்ய வர்த்தக மையங்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 304)
227.நலிந்து வரும் உப்பு உற்பத்தி, வெள்ளிக் கொலுசு தயாரிப்பு, பித்தளைத் தொழில், வெள்ளி விளக்குகள் செய்யும் தொழில், பாத்திரத் தொழில் ஆகியவற்றைக் குடிசைத் தொழில்களாக அறிவித்து அவை மேம்படத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். (வாக்குறுதி எண் & 305)
228.பெண்களுக்கு அதிக அளவில் வேலை வழங்கிவரும் பட்டாசுத் திரிதொழில் உரிய பாதுகாப்புடன் கூடிய குடிசைத் தொழிலாக அறிவிக்கப்படும். (வாக்குறுதி எண் & 306)
229.மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 70 வயது நிறையும் பொழுது 10 சதவிகிதமும், 80 வயது நிறையும் பொழுது மேலும் 10 சதவிகிதமும் ஓய்வூதியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 308)
230.புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். (வாக்குறுதி எண் & 309)
231.தமிழக அரசு அலுவலர்களின் பணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க மாநில நிர்வாகத் தீர்ப்பாயமும் தலைமைச் செயலாளர் / துறைச் செயலாளர் / துறைத் தலைவர் தலைமையிலான கூட்டு ஆலோசனைக் குழுக்களும் மீண்டும் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் & 310)
232.ரூ.8 ஆயிரம் அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 311)
233.பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மீது 17பி பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்குக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்குப் பாதிப்பிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும். (வாக்குறுதி எண் & 312)
234.தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 313)
235.அதிமுக அரசினால் பழிவாங்கும் நோக்கத்தில் வேலைநீக்கம் செய்யப்பட்ட மக்கள்நலப் பணியாளர்கள் இயற்கை எய்தியிருந்தால் அவர்களது வாரிகளுக்கு அரசு வேலை வழங்குவதோடு, குடும்ப நிவாரண நிதியாக 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 315)
236.பள்ளிக் கல்வித்துறையில் பகுதிநேரப் பணியாளர்களாகப் பணிபுரிந்து நிரந்தரமாக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் 50% பகுதிநேரப் பணிக் காலத்தை ஓய்வூதியம் நிர்ணயிப்பதற்குக் கணக்கில் எடுத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் & 316)
237.கதர் கிராமத் தொழில் வாரியத் தொழிலாளர்கள், சுகாதாரத் துறையில் பணியமர்த்தப்பட்ட கொசு ஒழிப்புப் பரிசோதகர்கள், வேளாண்மை விதை சுத்திகரிப்பு நிலையத் தொழிலாளர்கள் போன்றோரின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய முறையில் நிறைவேற்றப்படும். (வாக்குறுதி எண் & 317)
238.திருநங்கையரின் தேவைக்கேற்பக் குடிசைமாற்று வாரியம் வாயிலாக வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். (வாக்குறுதி எண் & 321)
239.ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட்டு, ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், வழங்க உரிய திட்டம் வகுக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 323)
240.அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பெரிய, சிறிய கோயில்களிலும் மூத்த குடிமக்களுக்குக் காலையிலும், மாலையிலும் ஒரு மணிநேரம் தனி வரிசையில் தரிசனம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும். (வாக்குறுதி எண் & 324)
தமிழகத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் கெலவரப்பள்ளி அணையில், கர்நாடகத்தின் அனைத்து விதமான கழிவுகளும் கலப்பதை தடுத்து நிறுத்தக் கோரி 19.08.2025 அன்று மருத்துவர் அன்புமணி அவர்கள் பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். இப்போது இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.!
இன்று, இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பரமேஸ்வரமங்களம் V.R.திருமண மஹாலில் நடைபெற்ற, நெமிலி ஒன்றிய பாமக முன்னாள் சேர்மன், மூத்த முன்னோடி, பெ.சண்முகம் அவர்களின் இளைய மகன், ச.பாலாஜி - ஏ.யுவராணி இணையரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்திய போது.!
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்அவர்களின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் -
செப்டம்பர்
10 - பண்ருட்டி, கடலூர்
11 - புவனகிரி
12 - நெய்வேலி, விருதாசலம்
#AnbumaniRamadoss#PMK#உரிமைமீட்க#தலைமுறைகாக்க
உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரத்தில் தலைவர் அன்புமணி அவர்கள் உரையாற்றிய போது..! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க