"மின்னும் மன்னை" எனும் செயல் திட்டத்தின் கீழ், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுவரும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்களின் சீரிய முயற்சியில், நகர மன்ற தலைவர் மன்னை.த.சோழராஜன் அவர்களின் மேற்பார்வையில், திராவிட நாயகர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - @mkstalin அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், ரூ.46.5 கோடி மதிப்பீட்டீல் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையமாக "மன்னார்குடி நகராட்சி பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம்" கட்டப்பட்டுள்ளது.
இப்பேருந்து நிலையத்தை வருகின்ற 12- 10- 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு @KN_NEHRU அவர்களும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் TRB.ராஜா அவர்களும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளனர். மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு.முரசொலி மற்றும் மாவட்ட செயலாளர் மாண்புமிகு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்களின் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெறும்.
மன்னார்குடி மக்களின் வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.🙏
கிராமப்புற மக்களின் குறைகளை தீர்க்க வருகிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் “நம்ம ஊரு நம்ம அரசு” திட்டம்
#நம்மஊர்_நம்மஅரசு
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்கள், சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு தின விழாவில் பங்கேற்று, தமிழ்நாடு முழுவதும் 33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3,134.21 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் முன்னெடுப்பை தொடங்கி வைத்தார்கள்.
இதன் அடையாளமாக, சென்னையைச் சேர்ந்த 1,401 சுய உதவிக் குழுக்களுக்கு 123.65 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்கள்.
கழக ஆக்கப்பணிகள், தேர்தல் செயல்திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்க இன்று முதல் ஒவ்வொரு தொகுதியைச் சார்ந்த கழக உடன்பிறப்புகளுடன் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து உரையாட இருக்கிறார்!
#உடன்பிறப்பே_வா