இதோ இதுதான் எங்கள் முருகன்🙏
2000 ஆண்டுகளுக்கு முன்பு அவனுக்கு நாங்கள் வழிபாடு நடத்திய முறை இதுதான் ❗
வெறியாட்டு களத்தை தயார் செய்து, சேவல் கொடியை ஏற்றி வைத்து இளம் ஆட்டுக்குட்டியை 🐐 பலி கொடுத்து அதன் ரத்தத்தை🩸 பிடித்து வெறியாட்டு களத்தில் தெளித்து முருகனை வழிபட்டு வெறியாடல் நடத்தினோம்🙏
ஆரிய புராணங்களில் குறிப்பிடப்படும் முருகனுக்கு அசைவ உணவு படைத்ததாக எங்கேயும் குறிப்பிடவில்லை. ஆரிய பிராமணர்கள் எங்கள் முருகனை அபகரித்து கார்த்திகேயனுடனும், ஸ்கந்தனுடனும் இணைத்து பல ஆபாச கதைகளை எழுதி குவித்தார்கள்.அதில் இருக்கும் குறிப்புகளை அடிப்படையாக வைத்து படம் எடுத்து தமிழ் கடவுளான முருகனை வடக்கில் பிறந்தவர் என்று சொல்லி திருடன் நினைப்பது மாபெரும் அயோக்கியத்தனம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.
19 வயதே ஆன பார்த்திபன் என்ற தலித் இளைஞரும், 17 வயதே ஆன பள்ளிப்படிப்பை முடித்த ஒரு சிறுமியும் (வன்னியர் சமூகம்) கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் மாற்றுச் சமூகக் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டாருக்குத் தெரியவந்ததும், கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. கடந்த ஜூன் 29-ம் தேதிக்கிழமை அன்று, சிறுமியின் குடும்பத்தினர் பார்த்திபனை வழிமறித்து சாதி ரீதியாக வசைபாடி, கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான பார்த்திபன், பயந்துபோய் அன்றே பொறையார் காவல் நிலையத்திற்குச் சென்று தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் நல்லிரவில் போலீசார் சிறுமியின் தந்தை உள்ளிட்ட சிலரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை அடுத்த நாளே இது போல கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். மீண்டும் மீண்டும் ஆனவப்படுகொலை நடந்து வருகிறது.
என்ன ஆட்சி மாற்றம்?
ஆணவப்படுகொலைக்கு தனிச்சட்டம் போடப்போகிறாரா முதல்வர் இல்லை கவின் படுகொலை போல அமைதியாக இருக்க போகிறாரா?
Faith is personal. Worship is a personal choice. But hijacking another people’s history, culture, and heritage is intellectual theft. It is nothing short of disgraceful.
@vamsi84@tarak9999
தான் பார்க்காத உலகத்தையும், தன்னை பார்க்காத உலகத்தையும் தம் குழந்தைகள் கண்டுவிட வேண்டுமென்ற உயர்ந்த இலட்சிய வேட்கையுடன் பெற்ற பிள்ளையை தம் தோளில் தூக்கி உயர்த்தி உலகை காட்டும் உன்னத வழிகாட்டிகள்..!
தம் குழந்தைகள் நிம்மதியாக நிமிர்ந்து நடக்க,
தான் படும் துயரங்கள் தம் குழந்தைகள் பட்டுவிடக் கூடாதென்று, கைகளில் காயங்களுடனும் கண்களில் சிரிப்புடனும்
தான் குனிந்து, வளைந்து உழைத்து
நம் கண் முன்னே நடமாடும் ஒப்பற்ற தெய்வங்கள்..!
கண்டிக்கும் நேரத்தில் காவலனாய்..
கற்பிக்கும் நேரத்தில் ஆசானாய்..
அரவணைக்கும் நேரத்தில் அன்னையாய்..
தவிக்கும் நேரத்தில் தோழனாய்.. ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையை கற்றுத்தரும் உலகின் முதல் நாயகர்கள்..!
'கண்டிப்பிலும் தண்டிப்பிலும்
கொதித்திடும் அவரின் முகம் ..
காய்ச்சல் வந்து படுக்கையில்
துடிப்பதும் அவரின் முகம் ..
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே ..!
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் ..
தந்தை அன்பின் பின்னே ..!'
என்ற என்னுயிர்த் தம்பி நா.முத்துக்குமாரின் உள்ளத்தை நெகிழச்செய்யும் பாடல் வரிகளுக்கு ஏற்ப
தம் குழந்தைகளின் வெற்றியையே தன்னுடைய வெற்றியாக கருதி
வாழும் நாள் வரை குழந்தைகளை உள்ளத்தில் சுமந்து, குடும்பத்தின் உயர்வுக்காக உழைத்து உழைத்து ஓடாய் தேயும் உன்னத அப்பாக்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த தந்தையர் நாள் நல்வாழ்த்துகள்!
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த சகோதரி தமிழ்ச்செல்வி மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அப்பாவி பெண் உயிரிழக்க காரணமாகியுள்ள அரசு மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். சகோதரி தமிழ்ச்செல்வி, உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருடைய குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
10 லட்சம் கோடி கடன்.
-- பாட்டாவே பாடினார் சீமான் அண்ணன்.
இலவசங்களால் தான் இவ்வளவு கடன்.
-- தேர்தல் பிரச்சாரத்தில் இதனால் நான் இலவசம் தரமாட்டேன் என சொன்னார் சீமான் அண்ணன்..
போக்குவரத்து துறையில் 75000 கோடி கடன்.
-- கடனில் துறை இருக்க யார் கேட்டார்கள் இலவச பேருந்து என கேட்டார் சீமான் அண்ணன்.
மின்சாரவாரியத்தில் 2.75 லட்சம் கடன்.
-- இவ்வளவு கடனில் எதற்கு இலவச மின்சாரம் என கேட்டார் சீமான் அண்ணன்.
பிறக்கும் குழந்தை தலையில் 1 லட்சம் கடன் இருக்கிறது.
-- நாமெல்லாம் பிறக்கும் பொழுதே கடனாளிகள் என சொன்னார் சீமான் அண்ணன்.
இதற்கு எதற்கு வெள்ளை அறிக்கை சீமான் அண்ணனின் தேர்தல் பிரச்சார காணொளிகள் பார்த்தாலே தெரியும்.
கும்மிடிப்பூண்டியில் வடமாநில தொழிலாளியால் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை! என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக்கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
@CMOTamilnadu@TVKVijayHQ
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வடமாநிலத் தொழிலாளி பிபின் மஞ்சி என்பவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர நிகழ்வு இதயத்தை நொறுக்குகிறது. பெற்ற குழந்தையைப் பறிகொடுத்து ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவித்து நிற்கும் பெற்றோருக்கு என்ன வார்த்தைகள் கூறினாலும் அவர்களின் மனதவிப்பை ஆற்றிவிட முடியாது. பஞ்சு போன்ற குழந்தையின் காலில் சிறு முள் குத்தினாலும் தாங்க முடியாத தாய் - தந்தையரின் இழைக்கப்பட்ட இப்பெருங்கொடுமையை எப்படிக் கடந்து வாழப்போகிறதோ என்று எண்ணும்போதே நெஞ்சம் பதறுகிறது.
தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் பெண்கள் பாதுகாப்பிலும், போதைப்பொருள் ஒழிப்பிலும் அலட்சியம் காட்டுவது பேராபத்தானது. அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் காரணமான போதைப்பொருளை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? வாகனம் ஓட்டி ரீல்ஸ் வெளியிடுவதில் அதீத கவனம் செலுத்தும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள், போதைப்பொருளை ஒழிப்பதில் அத்தகைய ஆர்வத்தையும், வேகத்தையும் காட்டுவதில்லையே ஏன்? போதை ஒழிப்பை முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய அரசிடமிருந்து தொடங்க வேண்டும். ஊர் முழுக்கப் புதிதாக டாஸ்மாக் பார்களைத் திறந்து வைத்துவிட்டு போதைப்பொருளை ஒழிக்கப்போவதாகத் தவெக அரசு கூறுவது நகைப்புக்குரியது. வெட்கக்கேடானது.
கடந்த திமுக ஆட்சியில் இதேபோன்று கும்மிடிபூண்டியில் 10 வயது சிறுமி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோதே, அதனை நான் கடுமையாகக் கண்டித்ததோடு, பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்துள்ள வடமாநில தொழிலாளிகள் வருகை மற்றும் இருப்பு குறித்து முறையான ஆவணப்பதிவு அவசியம் என்றும், அவர்களின் கட்டுப்பாடற்ற நடமாட்டம் குறித்துத் தொடர் கண்காணிப்பு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அன்றைய திமுக அரசும், இன்றைய தவெக அரசும் வடமாநிலத்தவர் வருகை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே தற்போதும் வடமாநில தொழிலாளியால் மீண்டும் ஒரு பெண் குழந்தை அநியாயமாக வன்கொடுமைக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளது.
ஏதும் அறியா பெண்குழந்தைகளை வன்கொடுமை செய்யும் ஈவு இரக்கமற்ற கொடூர குற்றவாளிகளுக்கு விரைவான மரண தண்டனை அளிப்பது ஒன்றே, இதுபோன்ற கொடுங்குற்றங்களைத் தடுப்பதற்கு ஒற்றை வழியாகும். அத்தகைய உறுதியும், பெண்கள் மீதான அக்கறையும் இல்லாததாக ஆளுகின்ற அரசுகள் இருக்கும் வரை இதுபோன்ற கொடூர குற்றங்களை ஒழித்திட முடியாது.
ஆகவே, தவெக அரசு இனியாவது வெற்று விளம்பர அரசியல் செய்வதை நிறுத்தி, பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கேரளாவில் இருந்து ஏழு டன் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்ட வந்த லாரியை மக்கள் சிறைபிடித்தார்கள் - செய்தி
இந்தியாவிலயே அதிகம் படித்த மக்களைக் கொண்ட கேரளா மாநிலம் நாங்கள் படித்த முட்டாள்களை கொண்ட மாநிலம் என்று நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.
தமிழ்த்தேசிய இனத்தின் கலை அடையாளம்!
மண்ணின் மகத்தானப் படைப்பாளி!
இனமான உணர்வுகொண்ட பெருந்தமிழர்!
எங்கள் ஐயா பாரதிராஜா அவர்களுக்குப் புகழ் வணக்கம்!
காலங்கடந்து நிற்கும் உங்களது ஒப்பற்றப் படைப்புகளாலும், இனமானச் செயல்பாடுகளாலும் இரவா புகழ்கொண்டு தமிழர் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு வீற்றிருப்பீர்கள் ஐயா!
ஈழத்தின் மீதும் தலைவர் மேதகு மீதும் தீராத காதல்!
புலிக்கொடி மீது பித்தன்! நாம் தமிழர் மீது நம்பிக்கை!
தமிழர்களின் பெருமை. மண்ணின் மைந்தன்!
இளைப்பாறுங்கள் அப்பா! #RIPBhrathiraja 👏🏻