பாலு சார் இசைக்குழுவில் பல ஆண்டுகள் நான் பலகுரல் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறேன் என் திறமைகளை அவர் மூலம் தான் எல்லோரும் தெரிந்து கொண்டார்கள் ஆரம்ப காலத்தில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அந்த மூத்த சகோதரரை இழந்து விட்டேன்.
நீட் வேண்டாம் என்று மக்கள் பாதை அமைப்பினர் 6 பேர் ஆறாவது நாள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள். கோயம்பேடு அருகில். நான் இன்று கலந்து கொண்டேன் அது மக்கள் பாதை அதனால் மக்களும் கலந்து கொள்ள வேண்டும்.
வடிவேல் பாலாஜி உன் மறைவு எல்லோரையும் துக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த கண்ணீர் இன்று மட்டும் அல்ல. இனி டிவியில் நீ வரும் போதெல்லாம் சிரிப்போடு அழுகையும் வரும்.
சிரிக்க வைத்த ஆன்மா சாந்தியடையும்
இந்த கொரோனா காலத்தில் மக்கள் கடன் சுமையால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.
அதிலிருந்து அவர்களை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் ஏதாவது வழி வகை செய்ய வேண்டும்.
கொரோனா குறைந்து வருகிறது என்று ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. ஆனால் உலக அளவில் கொரோனாபாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த துயரத்திலிருந்து மக்கள் விரைவில் விடுபட நான் வணங்கும் அண்ணாமலையாரையும் எம்ஜிஆரையும் வேண்டுகிறேன்.