நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவரும், கர்மவீரர் காமராஜர் அவர்களது அன்புக்கு உரியவரும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகளைத் திரையில் கொண்டு வந்து அவர்களுக்குப் பெருமை சேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது பிறந்த தினம் இன்று.
ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்து, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் ஒரு தலைப்பட்சமான மதச்சார்பின்மையைப் புறக்கணித்து, தனது வாழ்வின் இறுதி வரை தேசியத்தின் பக்கம் நின்ற சிம்மக் குரலோன் அவர்களது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை
உறுதி செய்யப்பட்டதன் மூலம் நீதி வென்றுள்ளது; பாதிக்கப்பட்ட
மக்களுக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வேண்டும்!
தமிழ்நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை மற்றும் வனத்துறையைச் சேர்ந்த 27 அதிகாரிகளின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், அரசு வேலை அல்லது சுயதொழில் தொடங்க உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டுள்ளார். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமாகவேனும் நீதி கிடைத்துள்ளது.
வீரப்பன் வேட்டை என்ற பெயரில் தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியில் உள்ள வாச்சாத்தி கிராம மக்களுக்கு 1992-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் நாள் வனத்துறையினரும், காவல்துறையினரும் இணைத்து அரங்கேற்றிய கொடூரங்களும், வக்கிரங்களும் மனித குலத்தால் நினைத்துப் பார்க்க முடியாதவை. வாச்சாத்தி கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி குழந்தைகள் உட்பட 133 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வளவுக்குப் பிறகும் வாச்சாத்தி கொடுமைகளுக்கு நீதி வழங்க வேண்டிய அன்றைய தமிழக அரசு, அனைத்தையும் மூடி மறைக்கவே முயன்றது. நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு வாச்சாத்தி மக்களுக்கு நீதி பெற்றுத்தரப்பட்டுள்ளது.
காவல்துறை, வனத்துறை போன்ற வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் கொண்ட அமைப்புகள், எளிய மக்களிடம் அத்துமீறுவதையும், தங்களுக்கு மேலிடத்திலிருந்து வரும் அழுத்தங்களை தணித்துக் கொள்ள அப்பாவி மக்களை கொடுமைப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன. மனித உரிமைகளைப் பற்றி இந்த அமைப்புகள் கவலை கொள்வதே இல்லை. அதற்கான சிறந்த எடுத்துக் காட்டு தான் வாச்சாத்தி வன்கொடுமை ஆகும். இந்த தீர்ப்புக்கு பிறகாவது சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகள் மனிதர்களையும், மனித உரிமைகளையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வாச்சாத்தி வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார்களா? என்பதைப் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.10 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். வாச்சாத்தி மக்கள் சுய தொழில் செய்யும் நிலையில் இல்லை என்பதால் பாதிக்கப்பட்ட 18 பேரின் குடும்பத்தில் உள்ள தகுதியானவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக வாச்சாத்தி வன்கொடுமை போன்ற குற்றங்கள் நடைபெறும் போது, அதை மூடி மறைக்க முயலாமல், வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கும், குற்றம் செய்தவர்களை தண்டிப்பதற்கும் தேவையான அரசியல் துணிச்சலை தமிழக அரசு பெற வேண்டும்.
@CMOTamilnadu
உங்களுடையது நடிப்பல்ல
நடிகர் திலகம் அவர்களே;
உடல்மொழி இலக்கியம்
கலைஞர் விரலும்
உங்கள் குரலும்
ஒரு புரட்சிக்குப்
பூபாளம் பாடின
அதில் கண்விழித்தவர்களில்
நானும் ஒருவன்
நினைவு தப்பும் நாள்வரையில்
நினைத்துக்கொள்வேன்
உங்களை
ஓயாது கடல் அலை
தேயாது நின்புகழ்
என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அத்தனை நண்பர்களுக்கும், ட்விட்டர் பக்க நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றிகள். எல்லாரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டி ஆசீர்வதிக்கிறேன்.
பல ஆண்கள் கூடி ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்திப் பொதுவெளியில் நடக்கச் செய்வது என்பது காட்டுமிராண்டித்தனம். அவ்வாறு செய்பவன் தன் குடும்பத்தின் தராதரம் என்ன என்பதையே பிறருக்கு உணர்த்துகிறான். நிர்வாணத்தால் எந்த மான குறைவும் ஏற்பட்டு விடாது என உணர்ந்து பெண் வலிமையுடன் இருக்கவேண்டும்.
சங்கத் தமிழை இனிக்கும் மெட்டுக்கு லயிக்கும் விதமாய் பாட்டெழுதித் தந்த தமிழின் குழந்தை, தமிழரின் பெருமை நண்பர் @Vairamuthu க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு குடியரசு நாட்டில் அரசு செய்ய வேண்டியக் கடமைகளை எல்லாம் மன்னராட்சியின் மனநிலையில் இருந்து கொண்டு இட்ட பிச்சை எனக் கூறுவதெல்லாம் அவர்கள் தமிழ் மக்களை எவ்வளவு கீழானவர்களாகவும், இழிவானவர்களாகவும் கருதுகிறார்கள் என்பதற்கு சான்று. திராவிடமும்,பார்ப்பனியமும் வேறல்ல.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமைந்தது கருணாநிதி போட்ட பிச்சை என எ.வ வேலு தெரிவித்திருந்த கருத்துக்கு மன்னிப்புக் கேட்டாலும், தொடர்ச்சியாக திமுகவினர் இதுபோன்ற கருத்துக்களை நாவடக்கம் இன்றி பேசி வருகிறார்கள்.
அமைச்சர் சேகர் பாபு குறித்து குழந்தையின் தாய் ஆயிஷா கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. திமுக இதனை அரசியலாகப் பார்க்கிறதோ என்கிற எண்ணம் உண்டாகிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல. குழந்தைக்கு உரிய சிகிச்சையும், குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் அரசு வழங்க வேண்டும்.
தலையில் நீர் கட்டிய சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த குழந்தைக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையில் அந்தக் குழந்தையின் கை அழுகி நீக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கு அதிர்ச்சியளிப்பதுடன் சுகாதாரத்துறையின் செயலற்ற போக்கையும் காட்டுகிறது.
பீகாரில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக மாற்றுத்திறனாளி முஸ்லிம் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிக்குரியது.இது மாட்டிறைச்சியின் பொருட்டல்லாமல் மதத்தின் மீதான வெறுப்பை வெளிக்காட்டும் விதமாகவே இருக்கிறது.வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியத் தேசியத்தின் அழகு.பெருமை. அதை காப்பது நம் கடமை.
மனநலம் சரியில்லாத நபர் மீது சிறுநீர் கழிப்பதென்பது உச்சகட்ட அருவெறுப்பு மிகுந்த செயல். நாகரிகமடைந்த நபரோ, சமூகமோ இவ்விழிவான அறிவற்ற செயலை எதன் பொருட்டும் ஏற்கவோ, துணை நிற்கவோ கூடாது. இதுபோன்ற மனித மாண்பற்ற செயலை செய்தவர் மிகக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இஸ்லாமிய நண்பர்களுக்கு பக்ரீத் நாள் வாழ்த்துகள்.எந்நாளும் உங்களுடைய வாழ்வில் நலம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்த நல்ல நாளில் சகோதரத்தைப் போற்றிடுவோம். நாம் இந்தியர்.
தாலுகா தோறும் போதை மீட்பு மற்றும் மது நோயாளிகள் மறுவாழ்வு மையங்கள் அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும் என்கிற கமல்ஹாசனுடைய கருத்தை வரவேற்கிறேன். ஆதரிக்கிறேன்.