ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கும் விந்தையான த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
கரிசல் மண்ணின் குரலாகவும், தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளராகவும் விளங்கிய சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் ஐயா பூமணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமது எழுத்தின் வழியாக மண்ணின் மணத்தையும், மக்களின் வாழ்வியலையும் தலைமுறைகளுக்கு பதிவு செய்த அவரது இலக்கியப் பணி என்றென்றும் நிலைத்திருக்கும்.
இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் இந்த வேளையில்,
அன்னாரின் புகழுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய உலகினருக்கும், வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
பள்ளி மணிகள் பல ஒலிக்கட்டும்,
பாமரனுக்கும் கல்வி எளிதாகட்டும்,
என தமிழகத்தின் கல்விக்கண்
திறந்த கர்மவீரர் ..,
நாடு நலம் பெற,
விவசாயம் செழிக்க,
அணைகள் பலதந்த மாமனிதர்..,
தமிழகத்தின்
வளர்ச்சிக்கு வித்திட்ட,
பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப் பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்த பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல.
தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்!
இந்த பத்திரப் பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா?
இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப் பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பத்திரப் பதிவு நடக்கிறது என்றால், அதை ஏதோ ஒரு Powercenter தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்க வேண்டும். தனது ஆட்சியில் தான் மட்டுமே Powercenter என்று சொன்ன @CMOTamilNadu அவர்களே, இந்த ஊழலில் பின்னால் #யார்_அந்த_Powercenter?
அதுவும், முதலில் ஒரு சார்பதிவாளர் இதனை பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில், அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப் பதிவு நடைபெற்றது என்றால், இந்த பத்திரப் பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா? அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு #யார்_அந்த_Powercenter?
இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது.
நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
பிரபல பின்னணி பாடகி திருமதி. S ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிமையான குரலால் வருடிய திருமதி. ஜானகி அவர்கள், தனது ஆயிரக்கணக்கான பாடல்கள் வழியாக மக்களின் வாழ்வின் ஒவ்வொரு உணர்வுக்கும் குரலாக இருந்தவர்.
தமிழ் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் பின்னணி குரலாக ஒலித்து அவர் பாடிய கீதங்கள் மக்கள் மனங்களில் என்றும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன. அவரது மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரை மற்றும் இசைத் துறைகளைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
"அடிமைப்பட்டு உயிர்வாழ்வதை விட, சுதந்திர மனிதனாய் உயிரை விடுவோம்"
என வீரமுழக்கமிட்டு,
ஆங்கிலேயரின் பீரங்கிக் குண்டுகளைத்
தன் நெஞ்சில் தாங்கி, தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வேட்கையை முதன்முதலில் விதைத்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன். @AIADMKOfficial
வியட்நாம் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்தோர் உடல்கள் தாயகம் திரும்புவதற்கும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலம்பெறச் செய்யவும் வியட்நாம் நாட்டு அரசுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
@MEAIndia@CMOTamilnadu
தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ்நாட்டில்
ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
இதற்கு மூலக் காரணம், மாண்புமிகு அம்மா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு துவங்கிய @Guidance_TN நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்!
Guidance TamilNadu நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா?
Amateur அமைச்சரவையின் Immature அமைச்சராக உள்ள இன்றைய தொழில்துறை அமைச்சர்,
இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை.
உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உணவு சேமிப்பு கிடங்கில் போதிய இடம் இல்லாததால், சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாம்பட்டி, ஐந்தாங்கட்டளை ஊராட்சிகளுக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் கருகி வீணாகியதாக செய்திகள் வந்துள்ளன.
திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது புரியவில்லை. மேலும் பல நாட்களாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லை அரிசி மில்களுக்கு அரவைக்கு அனுப்பாமல் அதிகாரிகள் தேக்கி வைத்ததால் அவைகள் பாழ்பட்டு விட்டதாக ஒருசில விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தங்களுடைய தவறுகளை மறைக்க அதிகாரிகளே ஒரு செயற்கையான தீ விபத்தை ஏற்படுத்தியிருப்பார்களோ என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது போன்ற சூழ்நிலை தமிழகம் முழுவதும் ஏற்படாமல் இருக்க இந்த தீ விபத்து குறித்து முழு விசாரணை ஒன்றை நடத்தி யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று த.வெ.க அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை,கரூர், திருச்சி கிழக்கு, ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்தாலும், அவர்களின் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுக்கள் நிலுவையில் உள்ளதால், அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்திய விடுதலை போராட்ட வீரர்,
"கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்" என்று முழங்கி, சமுதாயத்தில் விளிம்புநிலை மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து, வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காக போராடிய சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் ஐயா #இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
உயிர் காக்கும் உயரிய பணியை அர்ப்பணிப்புடனும், கருணையுடனும் மேற்கொண்டு வரும்
அனைத்து மருத்துவர்களுக்கும்
தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள்.
கொரோனா உள்ளிட்ட பெருந்தொற்றுக் காலத்திலும் முன்னணி வீரர்களாக நின்று பல உயிர்களைக் காத்திட்ட தங்களின் அரும்பணி நினைவுகூரத்தக்கது.
தங்களின் சேவை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வினை உறுதிசெய்திடும் வகையில் அமைந்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற வரலாற்று நாள் இன்று!
மக்கள் நலன், நேர்மை, எளிமை, சமூகநீதி — இவைதான் எம்.ஜி.ஆரின் அசைக்க முடியாத அரசியல் அடையாளங்கள். அவர் உருவாக்கிய எங்கள் இயக்கத்தின் இலட்சியம், அண்ணன் எடப்பாடியார் தலைமையில் என்றும் நிலைத்திருக்கும்!
இன்று பிரிந்து செல்லுபவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்; ஆனால் கழகத்தை காத்து நின்று போராடும் விசுவாசிகளுக்கு ஒரே காரணம் - எம்.ஜி.ஆர்.!
@AIADMKOfficial@EPSTamilNadu
#PuratchiThalaivarMGR #AIADMK #Edappadiyar #அஇஅதிமுக
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக பொய்க்கால் குதிரை அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதே திட்டத்தை, கடந்த 03.11.2024 அன்று நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
அந்த தீர்மானத்தில் இத்திட்டத்தை தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள இன்றைய ஆளுங்கட்சி, இதனை அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் என்று கூறி இதனை கைவிட வலியுறுத்தி உள்ளது.
தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வந்துவிட்டது? ஆட்சிக்கு வருவதற்கு முன் நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா @CMOTamilNadu ?
எதற்கு இந்த இரட்டை வேடம்?
மேலூர் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பி, பல ஆதாரப்பூர்வமான கேள்விகளை அரசை நோக்கி கேட்டு மக்களுக்காக நின்றவன் நான். “மக்கள் பிரச்சனைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்றுவோம்” என்று சட்டப்பேரவையிலேயே முழங்கினேன் நான். இந்த வரலாறெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி, குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம், தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தீர்களா?
மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, மக்களுடன் நிற்பது மட்டும் தான் @AIADMKOfficial-ன் ஒரே பணி!
அது ஒருநாளும் மாறாது!
நச்சுத் திட்டம் என்று இன்றைய ஆளுங்கட்சி சொன்ன திட்டத்தை இப்போது செயல்படுத்த முனைவது குறித்த காரணத்தை இன்றைய முதலமைச்சர் விளக்க வேண்டும்; உள்ளபடியே அது நச்சுத் திட்டம் தான் என்றால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK#Porvaall