SDPI கட்சியின் 18ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் நடைபெற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினேன்.
#SDPI18#SDPIITWing
மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் மறுப்பது அல்ல; அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமையையும் சமமாக அங்கீகரிப்பதுதான் அதன் உண்மையான பொருள். அதே நேரத்தில் மதமும் இல்லை வழிபாடும் இல்லை என்பவரின் உரிமையும் அதில் சமமாக பாதுகாக்கப்படுகிறது.
அடுத்த மூன்றாண்டுகளுக்கான SDTU தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.
உங்கள் பணி தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் மேலும் வலிமை சேர்க்கட்டும்.
S. அகமது நவவி
மாநில பொதுச்செயலாளர்
SDPI – தமிழ்நாடு
மனிதநேயம் மலரட்டும்
அன்பு எல்லைகள் தாண்டட்டும்
அநீதி அழியட்டும்
நீதி நிலைக்கட்டும்
அமைதி உலகம் முழுவதும் பரவட்டும்
இரக்கம் இதயங்களில் நிறையட்டும்
இந்த புனித ரமலான்,
நம் வாழ்வில் நன்மையும் நம்பிக்கையும் தரட்டும்
ரமலான் நல்வாழ்த்துக்கள்
S. அகமது நவவி
மாநில பொதுச் செயலாளர்- SDPI
SDPI கட்சியின் தூத்துக்குடி தொகுதி சார்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினேன்.
இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள், மாநகராட்சி மேயர் ஜெகன் அவர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
பெண்களுக்கு உரிய பாதுகாப்பையும், சமமான உரிமையையும் நிலைநாட்ட ஒன்றிணைந்து உறுதியேற்போம்!
-SDPI மாநிலத் தலைவரின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்" கொண்டவளே பெண் என்று பாடினான் பாரதி. அந்தத் தார்மீகக் குணத்தோடு, சமூகத்தின் சரிபாதி சக்தியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் போற்றுதலுக்குரிய பெண்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் மார்ச் 08 அன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில், எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் சார்பாகப் பெண்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"ஒரு ஆணைப் படித்தவனாக்கினால் அவன் ஒருவனாகவே மிஞ்சுவான்; ஆனால் ஒரு பெண்ணைப் படித்தவளாக்கினால் அந்தத் தலைமுறையே அறிவொளி பெறும்" என்பதற்கேற்ப, பெண் என்பவள் உடல், மனம் மற்றும் அறிவு ரீதியாக முழுமையான பலம் பெற வேண்டும். கல்வி மற்றும் அறிவாற்றல் மூலம் பெண்கள் பெறும் வளர்ச்சியே, ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் அச்சாணியாகும்.
"பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோ?" என்ற புரட்சிக்கவிஞரின் கருத்தை உள்வாங்கி, சமூக நீதி மற்றும் உரிமைகளுக்கான போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு முன்னெப்போதையும் விட இன்று முதன்மை பெற வேண்டும். பெண்கள் வெறும் பயனாளிகளாக மட்டுமல்லாமல், அதிகாரப் பகிர்விலும், தலைமைத்துவத்திலும் மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் மிக்க சக்திகளாகத் திகழ வேண்டும்.
பெண்கள் சுயமாகப் பலம்பெற வேண்டிய அதே வேளையில், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும். ஒரு கூட்டான முயற்சியின் வாயிலாகத்தான் பெண்களின் முன்னேற்றத்தை நம்மால் முழுமையாக உறுதிசெய்ய இயலும். 2026-ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினக் கருப்பொருளான "பெண்களின் தலைமைத்துவத்தை அங்கீகரிப்போம்: சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி" என்பதற்கேற்ப, தடைகளைத் தகர்த்து சாதனைகள் பல படைத்திட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வாழ்த்துகிறேன்.
வலிமை மற்றும் உத்வேகத்தின் அடையாளமாகத் திகழும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பையும், சமமான உரிமையையும் நிலைநாட்ட இந்த நன்னாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம். பெண் சமூகத்திற்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் சமரசமின்றி உழைக்கின்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
இவ்வாறு அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கண்ணியம் மற்றும் மரியாதையுடன் பெண்களை நடத்தும் பண்பே நாகரீகமான சமூகத்தின் அடையாளம்.
ஒவ்வொரு பெண்களும் பாதுகாப்போடு சம உரிமையுடன் முன்னேறும் சூழலை உருவாக்குவோம்!
மகளிர் தின வாழ்த்துக்கள்!
S.அகமது நவவி
மாநில பொதுச் செயலாளர், SDPI கட்சி
குடியரசு தின வாழ்த்துக்கள்
அரியணையில் அமர்ந்து புதிய திருத்தங்கள் என்ற பெயரில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைக்கும் சர்வாதிகார பாசிச பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, அரசியலமைப்பைக் காப்போம் இந்தியாவைக் காப்போம் ஒன்றிணைவோம் உறுதியேற்போம்.#Rebublicday#Jan26#SDPI
அரசியலமைப்பின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்!
குடியரசு தின வாழ்த்துக்கள்
- S.அகமது நவவி
மாநில பொதுச்செயலாளர்
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - தமிழ்நாடு
உண்மையான தலைமை அநீதியை எங்கு கண்டாலும் துணிவுடன் போராடும்
புரட்சி என்பது தனிப்பட்ட நலனுக்காக அல்ல சமூக விடுதலைக்காக. என்று பாடுபடும் SDPI தலைமைக்கு வாழ்த்துக்கள்.
#OurLeadersOurPride#SDPIForIndia#MKFaizyForIndia
SDPI என்பது வெறும் அரசியல் கட்சி அல்ல.
இது அடக்குமுறைக்கு எதிரான குரல்,
அநீதிக்கு எதிரான போராட்டம்,
சாதாரண மக்களின் உரிமைகளுக்கான இயக்கம்.அதன் தலைமைக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள்.
#OurLeadersOurPride#SDPIForIndia#MKFaizyForIndia
நாம் அதிகாரத்தைப் பெற்று பிழைப்பு வாத அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்
அதிகாரம் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் போராடி சிறை சென்ற எம்கே பைஜி அவர்களே வாழ்த்துக்கள்.
#OurLeadersOurPride#SDPIForIndia#MKFaizyForIndia
புதிய எழுச்சியுடன், புதிய வலைதள பக்கங்கள்!
SDPI மாநில IT WING, சமூக வலைத்தளங்கள் துவக்கப்பட்டுள்ளன.
அனைத்து இணைப்புகளும் SDPI OneLinkல் சேர்க்கப்பட்டுள்ளது:
https://t.co/uM2dkfdEhG
Follow and share
ஒடுக்கப்பட்டோருக்கான உரிமை குரல் இனி களத்திலும் டிஜிட்டல் தளத்திலும் ஒலிக்கும்!!