``கார் ரேஸில் தொடர்ந்து பங்கேற்பேன்''
``எவ்வளவு காலம் கார் பந்தயத்தில் ஈடுபட முடியுமோ அவ்வளவு காலம் ஈடுபடுவேன். ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க விரும்புகிறேன்
கடந்த 3 வருடங்களாக துபாயை மையமாகக் கொண்டு வசித்து வருகிறேன். அடுத்த ஆண்டிற்கான பந்தயத் திட்டங்களை தயார் செய்து வருகிறோம்''
- நடிகரும் கார் ரேஸருமான அஜித்குமார் பேட்டி
#ajithkumar #ak #ajithkumarracing #racing #thanthitv
Heartfelt Condolences to Shri Ajith Kumar Garu and Family
I am deeply saddened to learn about the passing of Smt. Mohini Mani Garu, beloved mother of renowned actor Shri Ajith Kumar Garu.
I pray that her soul attains eternal peace. May Shri Ajith Kumar Garu find the strength to overcome this profound loss .
I extend my heartfelt condolences to him and his family.
- @PawanKalyan@PIB_India@IPR_AP@pibvijayawada@pibchennai
திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் காலமானதையறிந்து வேதனையடைகிறேன்.
அம்மாவை இழந்துவாடும் அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
திருமதி மோகினி மணி அம்மையார் அவர்களுக்கு விசிக சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்!
இவண்
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விசிக.
Extremely saddened to hear about the demise of Tmt. Mohini Mani, mother of Thiru Ajith Kumar. My heartfelt condolences to Thiru. Ajith and his entire family. Let her Rest in Peace🙏🏾
தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமார் அவர்களின் தாயார் மோகினி மணி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தாய் மீது நடிகர் அஜித்குமார் கொண்டிருந்த அன்பை நான் அறிவேன். உலகில் எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்பது தாயாரின் மறைவு தான்.
அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
அன்புச் சகோதரர் நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி.மோகினி மணி அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
சமூக விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ள தனது பெற்றோரின் நினைவாக திரு.அஜித்குமார் அவர்கள் நிறுவிய மோகினி-மணி அறக்கட்டளை (Mohini-Mani Foundation) என்ற அமைப்பு வாயிலாக என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கட்டும்.
அம்மையாரை பிரிந்து வேதனையில் வாடும் திரு.அஜித்குமார் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ரா.சரத்குமார்
ராதிகா சரத்குமார்
பாசத்திற்குரிய தம்பி
அஜித்குமார் அவர்களது
தாயார் மறைவு செய்தி கேட்டு
வருந்துகிறேன்.அன்னாரின் ஆன்மா
சாந்தியடைய இறைவனை
இறைஞ்சுகிறேன்.🙏
- கலைப்புலி எஸ்.தாணு
செந்தமிழன் சீமான்
எழுதி இயக்கிய
தம்பி திரைப்படத்தில்
காதலைப்பற்றி நான் எழுதிப்
பாடலில் பதிவாகாமல்போன
வரிகள் ருசியானவை
ஆயிரத்தொரு பாடல்களில்
அத்துணை வரிகளும்
இடம்பெறுகின்றன
இதோ
மாதிரிக்குச் சிலவரிகள்
“காதல் ஒரு வாக்களிப்பு
நீ தாமதித்தால்
இன்னொருவன் போட்டுவிடுவான்
காதல் ஒரு சிகரெட்
இப்போதெல்லாம்
பெண்கள்தான்
முதலில் பற்ற வைக்கிறார்கள்
காதல் ஒரு மரணம்
சிலருக்கு ஒருமுறை
பலருக்குப் பலமுறை”
அன்பு சீமான்!
இனி எடுக்கும் படத்தில்
இந்தப் பாடலை எப்படியும்
இணைத்துவிட வேண்டும்
சகோதரா.
@Seeman4TN
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், பிரபல கார் பந்தய வீரருமான அன்பு சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி.மோகினி மணி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இந்த கடினமான நேரத்தில் திரு.அஜித்குமார் அவர்களுக்கு தன்னம்பிக்கையும், மனதைரியத்தையும் ஆண்டவன் வழங்க வேண்டும் என வேண்டுகிறேன்.
தனது தாயை இழந்து வாடும் திரு.அஜித்குமார் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரை உலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
@SureshChandraa
#AjithKumar
Dear #ajith so sorry to hear of the passing of your mother. Condolences to the family and pray for strength in this sad phase of your life.🙏🙏may she be in peace.
அன்புச் சகோதரர்
அஜித் குமார் அவர்களின்
அன்னையார் மறைவுற்றசெய்தி
அதிர்ச்சி தருகிறது
அம்மையாருக்கு
என் அஞ்சலி
இந்த இழப்பில் துயரமடையும்
குடும்ப உறுப்பினர்கள்
ஒவ்வொருவருக்கும்
என் ஆழ்ந்த இரங்கலும்
ஆறுதலும்
நல்ல கலைஞனைப்
பெற்றுக்கொடுத்த
பெருமாட்டியின்
ஆருயிர் அமைதியுறுக
சிறந்த நடிகரும், சிறந்த கார்பந்தைய வீரருமான நண்பர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். ஈன்றெடுத்த, பாசமிகு தாயைப் பிரிந்து வாடும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.