#ThalaAjith+#directorsiva Combo
நான்கு படங்களிலும் உண்மையான கருத்து...🙏
@directorsiva அவர்களுக்கு தல ரசிகர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்..🙏
As heavy rain and strong winds lashed the surrounding areas of Erode, a banner of TVK fell and there was a power shortage. DMK, AIADMK did the same mistake which disturbed the public. Now TVK is doing the same. @TVKVijayHQ@BussyAnand sir we need change...🙏🙏
Wonderful to see this...🙏
Volunteers of both MLAs of TVK fighting to stick posters & banners in the city. End of the day, we people are the real fools to expect changes. Shameful!!🥲
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் நிகழ்வுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யாததன் விளைவாக கடுமையான வெயிலை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் மயக்கமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நிமிடத்திற்கும் நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி விசாக நிகழ்வுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலில் கூடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, இனி வரும் காலங்களில், இறை நம்பிக்கையுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@tnhrcedept
நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், பிரபல கார் பந்தய வீரருமான அன்பு சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி.மோகினி மணி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இந்த கடினமான நேரத்தில் திரு.அஜித்குமார் அவர்களுக்கு தன்னம்பிக்கையும், மனதைரியத்தையும் ஆண்டவன் வழங்க வேண்டும் என வேண்டுகிறேன்.
தனது தாயை இழந்து வாடும் திரு.அஜித்குமார் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரை உலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
@SureshChandraa
#AjithKumar
இன்றைய தினம் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இந்திய கார் பந்தய வீரருமான திரு. அஜித்குமார் அவர்களது தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தாயாரை இழந்து வாடும் திரு. அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு, அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி..!
தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகரும், கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கின்றது.
தன் உயரங்களை கண்டு
வியந்த, மகிழ்ந்த உயிரான தாயை பிரிவதென்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
பாசமிகு அன்னையை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்! 🙏🏿
#RIP
நடிகர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் இரங்கல் செய்தி.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan
மதிப்பிற்குரிய திரு. அஜித் குமார் அவர்களுக்கு, தங்களின் மதிப்பிற்குரிய தாயார், திருமதி மோஹினி மணி அவர்கள் காலமான செய்தியைக் கேட்டு நான் மிகுந்த துயரமடைந்தேன்.
இந்தத் துயரமான தருணத்தில், எனது ஆழ்ந்த மற்றும் உளமார்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
84 ஆண்டுகள் நீடித்த, கண்ணியமிக்க அவரது வாழ்க்கை அமைதியான முறையில் நிறைவுபெற்றுள்ளது; இந்தத் துயர காலத்தில், அவருடனான இனிய நினைவுகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலையும் மன வலிமையையும் அளிப்பதாக அமையட்டும்.
அன்னாரின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன்.
ஆழ்ந்த இரங்கல்களுடன்,
D.M.கதிர் ஆனந்த்
நாடாளுமன்ற உறுப்பினர்
வேலூர், தமிழ்நாடு.
#AjithKumar
@mkstalin | @katpadidmk | @Udhaystalin | @DMKITwing | @dmknorthvellore | @arivalayam | @SureshChandraa
My deepest condolences to Actor and Racing Champion Thiru Ajith Kumar and his family on the sad demise of his beloved mother, Smt. Mohini Mani. Praying for strength and peace for the family to bear this immense loss. May her soul rest in peace. Om Shanti.
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
அன்னையை இழந்து வருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். @SureshChandraa
My deepest condolences to Ajith Kumar sir and his family on the demise of his beloved mother Smt. Mohini Mani. Praying for strength and peace for the entire family in this grieving situation . May her soul rest in peace 💔🙏
அவர் அதிர்ந்து பேசாதவர் ஆனால் அதிரடி மகனைப் பெற்றெடுத்தவர் . அந்த மகனால் முகவரி பெற்ற என்னைப் போன்றவர்களுக்கும் அவரே அன்னை . அறிவான இரு மகன்கள் மேலும் உண்டு .அன்னையின் இழப்பு யாருக்குமே நேரக்கூடாத துயரம் . அவர்தம் ஆன்மா அந்த மூன்று சகோதரர்களுக்கும் இனி இறை சக்தியாக இருந்து வழி காட்டட்டும்...
அன்பு சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் மனவருத்தத்தையும் அளிக்கிறது.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் தாயின் இடம் என்பது எந்த உறவாலும், எந்த சாதனையாலும், எந்த வெற்றியாலும் ஈடு செய்ய முடியாதது. நாம் முதன்முதலில் உலகை அறிந்ததும் தாயின் கண்களில்தான்; அன்பை உணர்ந்ததும் தாயின் அரவணைப்பில்தான்.
பிள்ளையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பெருமையுடன் கண்டு மகிழ்ந்த அந்த அன்னையின் பிரிவு, வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரிழப்பு.
இந்தத் துயரமான நேரத்தில், தாயாருடன் பகிர்ந்து கொண்ட எண்ணற்ற நினைவுகளே சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு ஆறுதலாகவும் மனவலிமையாகவும் அமையட்டும்.
அன்னையை இழந்து வாடும் அன்பு சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— D.ஜெயக்குமார்
திரைக்கலைஞர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமிகு. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.