பெரியார் தன் கொள்கைகளை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என எவரையும் கட்டாயப்படுத்தவில்லை. நீங்களே சிந்தித்து எது சரியென்று படுகிறதோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார்!
என்னை விட்டு விலகிச் சென்றவர்கள்
எதையும் எடுத்துச் செல்லவில்லை.
ஆனால்,
அவர்கள் சென்ற பிறகு
இந்த அறையில் இருந்த காற்றுக்குக் கூட
வேறு அர்த்தம் வந்துவிட்டது.
தமிழ்நாடு மக்கள் திமுகவுக்கு கொடுத்த வாய்ப்பு வெறும் 19 வருடங்கள் தான்..!
அந்த 19 வருடங்களில் திமுக சாதித்தது இமாலாயம் அளவில்..!
திமுக என்ன கிழித்ததுனு சொல்ரவனுங்க.. இந்தா படிச்சு தெறிஞ்சுக்கங்க.
1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்.
2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்.
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்.
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்.
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்.
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்.
7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்.
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்.
9. கை ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது கலைஞர்.
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்.
11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்.
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்.
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்.
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்.
15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.
16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்.
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்.
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்.
19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்.
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்.
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்.
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்.
23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்.
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்.
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்.
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்.
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்.
28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்.
29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்.
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்.
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்.
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்.
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்.
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்.
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்.
36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்.
37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்.
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை
பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்.
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது.
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்.
44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்.
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்.
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம்
அமைத்தது கலைஞர்.
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்.
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்.
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்.
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்.
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்.
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்.
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்.
57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்.
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்.
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர்.
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்.
இரவு மிகவும் நீளமாக இருக்கிறது.
தூக்கம் வராததற்கு
தேநீரோ, வயதோ காரணமல்ல;
நினைவுகள்
ஒன்றன்பின் ஒன்றாக
சாட்சிக் கூண்டில் ஏறிக்கொண்டிருக்கின்றன.
நேற்று வரை
கைத்தட்டல்களின் சத்தத்தில்
கேட்காமல் போன குரல்கள்,
இன்று
மௌனத்தின் நடுவே
இடியாய் ஒலிக்கின்றன.
நண்பர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
என்ன செய்தி என்றார்.
'ஒன்றுமில்லை சும்மா தான் என்றேன்.
எனக்கு அவரிடம் பேச வேண்டும் போல் இருந்தது. காரணமே இல்லாமல் பேசுவது தான் நட்பு.
செய்தி இருந்தால் மட்டும் பேசுவது காரியவாதியின் செயல்பாடு. எதுவும் இல்லாமல் பேச வேண்டும்
-இறையன்பு
இரவு முழுவதும்
தன் தோல்விகளை எண்ணிக்கொண்டிருந்தவன்
அதிகாலையில்
ஒரு பறவையின் சத்தத்தால் விழித்துக்கொள்கிறான்.
அது
உலகத்தை மாற்றும் அறிவிப்பு அல்ல.
வெறும் ஒரு பறவைதான்.
ஆனால்
நேற்று வரை மூடியிருந்த அவன் மனதில்
அது ஒரு ஜன்னலைத் திறக்கிறது.