திமுக உடன் இணைந்த ஒரே காரணத்திற்காக ஈழத்தமிழர்களுக்காக உழைத்த திருமாவளவன் மீது அவதூறு பரப்பினார்கள்... அதே கூட்டம் இன்று திமுக உடன் நெருக்கம் காட்டுகிறார்கள்... அமைச்சர் வன்னி அரசு பேச்சு
#Trichy | #DMK | #VCK | #Minister | #VanniArasu | #PolimerNews
“தமிழ்த் தேசியத்தை பார்ப்பனியத்திற்கு எதிராக நிறுத்தாமல்.. வடவர் ஆதிக்கத்திற்கு எதிராக நிறுத்தாமல்
தெலுங்கர்களுக்கு எதிராக போய் நிறுத்துகிறார்கள். கருணாநிதி எதிர்ப்பில் கொண்டுபோய் நிறுத்திவிட்டார்கள்..” விசிக தலைவர் திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #DMK | #MKStalin
திருச்சி - கண்டோன்மென்ட் பகுதியில் சமூகநீதித்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி மாணவியர் விடுதியில் நேற்று (15.07.26) அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டோம். விடுதி மாணவிகளோடு இரவு உணவு உண்டு, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆகத்து 17 அன்று நடைபெறும் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டுக்காக நியமிக்கப்பட்டுள்ள தலைமை ஒருங்கிணைப்புக் குழு, நிதிக்குழு, மலர் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு, வரவேற்புக் குழு ஆகிய குழுக்களின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. மேற்கண்ட குழுக்களின் பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
26.6.2026
இரவு ஆந்திர மாநிலம்
பிரகாசம் மாவட்டம்
நாளை 27.6.2026
புரட்சியாளர் அம்பேத்கர்
சிலை திறந்து வைத்து
தலைவர் எழுச்சித்தமிழர்
அவர்கள்உரையாற்றுகிறார்
மக்களை சந்தித்து தலைவர்
வருகை பற்றிகலந்துரையாடல்
அண்ணன் பாலசிங்கம்
அண்ணன் தேனி தமிழ்வாணன்
Malin Vck
இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @actorvijay அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது இனியவாழ்த்துகள்.
#HBDCMJosephVijay
மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களை சந்தித்து நேர்காணல் செய்தேன். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பது ஒரு நீண்ட நெடிய போராட்டமாக இருந்திருக்கிறது விசிகவுக்கு. அவருடைய போராட்ட அரசியலும், களப்பணியும், அனுபவமும் அரசியலுக்கு புதுமுகமாக வரும் எவருக்கும் படித்து கற்றுக்கொள்ள வேண்டிய புத்தகம்தான். இவ்வளவு நாள் கேட்கும் இடத்தில் போராடும் இடத்தில் இருந்த மக்களுக்கு தன்னாலானவற்றை எல்லாம் செய்து தரவேண்டும் என்ற வேட்கையும் பொறுப்பும் அவர் கண்களில் தளும்புகிறது. சிலரது வெற்றி நம் வெற்றியைப் போலானது. வன்னி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... இந்நாள் உண்மையில் நன்னாளாக அமைந்தது
Thank you dearest minister Vanni arasu🙏❤️ @VanniArasu_VCK
சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் #வன்னிஅரசு அவர்களை சந்தித்து பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் மனைப்பட்டா கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை செய்து தர பழங்குடி மக்களுடன் சென்று மனு அளித்தேன்..
@VanniTamizhVCK@thirumaofficial
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டதற்கு பின்னர், இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் துறைசார்ந்த பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றேன்.
இவ்வாய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திருமதி. J.E. பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. செஹனாஸ் இலியாஸ், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு. மலையரசன், விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரவிக்குமார், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. அருள் விக்னேஷ், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராகேஷ் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
மகப்பேறு இறப்பு விகிதம் மாநில சராசரியைவிட அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி இளவயது திருமணங்கள், மாணவிகளின் பள்ளி இடைநிற்றல் ஆகியவற்றை தடுத்து, பரவலான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். மாவட்டத்தில் அமைந்துள்ள சமூக நீதித்துறை கீழ் இயங்கும் பள்ளிகள், விடுதிகளை மேம்படுத்தவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 10 & 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சியை உறுதிப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது.
சிங்கப் பெண்களாக ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் மாவட்டத்தில் மக்கள் நல வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதிலும், பெண்கள், தலித்துகள், விளிம்புநிலை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் வெற்றி பெறுவார்கள் என்று வாழ்த்தினேன்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், கொன்னமன்சேரி மற்றும் மீஞ்சூர் கிராமங்களில் வசித்துவரும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள், இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து தங்களுக்கு மனைப்பட்டா வழங்கும்படியும், புதிய வீடுகள் கட்டித் தரும்படியும் கோரிக்கை விடுத்தனர்.
'நமது முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு, நம் எல்லோருக்குமான அரசு. நமது சமூக நீதித்துறையின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மனைப்பட்டா இல்லாத நிலையை உருவாக்குவதே இலக்கு என்று தீர்மானித்து அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். நிச்சயம் நம் மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, மனைப்பட்டா வழங்க நானே நேரில் வருவேன்' என்று அவர்களிடம் உறுதி அளித்தேன்.
சாதிய வன்முறை நடந்த களத்திற்கு அமைச்சர்கள் செல்வது இத்தனையாண்டுகளில் பார்த்ததில்லை. மாண்புமிகு அமைச்சர் தோழர் @VanniArasu_VCK மக்களைச் சந்தித்து சுமூக தீர்வெடுக்க முனைவது நம்பிக்கையளிக்கிறது. சாதிய சிக்கல்களின் பொழுது அதிகாரிகளின் தலையீட்டை பெறுவதற்காகவே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் உண்மையறிய வராமல், தலையிடாமல் தவிர்ப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தால் பெரும் சாதிக்கலவரமாகிவிடும் என மடைமாற்றுவார்கள். ஆனால் அதையெல்லாம் நிராகரிக்கும் கள அனுபவம் தோழர் வன்னி அரசுவுக்கு உண்டு. மக்களுடன் பணி செய்ததால் மக்களைச் சந்திக்கும் துணிச்சல் அவருக்கு இருக்கிறது. இப்பணி மென்மேலும் தொடர மாண்புமிகு அமைச்சர் தோழர் வன்னி அரசுவுக்கு வாழ்த்துகள்.
இன்று (03.06.26) வடசென்னையில் அமைந்துள்ள வேப்பேரி அரசு தொழில் பயிற்சி நிலைய சமூகநீதி மாணவியர் விடுதியையும், இராயபுரம் அரசு தொழில் பயிற்சி நிலைய சமூகநீதி மாணவர் விடுதியினையும் ஆய்வு செய்தோம். இவ்வாய்வின் போது, சமூக நீதித்துறை செயலாளர் திரு. என். சுப்பையன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் திரு. செந்தில்ராஜ் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மாணவ - மாணவியரின் விடுதிகளில் உள்ள தங்குமிடம், உணவுக்கூடம், நூலகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, அவர்களிடம் கலந்துரையடினோம்.
மாணவிகள் தங்கள் விடுதியின் ஒவ்வொரு தளத்திலும் Napkin Disposal Unit ஒன்றை அமைக்கும்படி கோரினர். மாணவர்கள் தங்கள் விடுதியில் கொசு வலை அமைக்க வேண்டும், விளையாட்டு திடல் & உடற்பயிற்சி கூடம் வேண்டும், கழிப்பறையை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும், குடிநீர் தொட்டியை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மாணவ - மாணவிகள் இருவரும் தத்தம் விடுதிகளில் நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான நூல்களை புதுப்பிக்க வேண்டும் என்று பொதுவாக கோரினர். எங்களது ஆய்வின் போதும், நூலகத்தில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, புதிய நூல்களை சேர்க்க வேண்டிய தேவை உள்ளதை கண்டறிந்தோம். மாணவர்களின் கோரிக்கைகளை உடனே பரிசீலித்து நிறைவேற்றும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.
தொடர்ந்து, மாணவியர் விடுதி வளாகத்தில் அமைந்துள்ள சமூகநீதி விடுதிகளுக்கான 'Centralized Kitchen'-ல் ஆய்வு மேற்கொண்டோம். சமையல் செய்யும் இடம், சமையல் பொருட்கள் சேமிப்பு அறை, உணவு பாத்திரங்கள் உள்ளிடவற்றை ஆய்வு செய்து, சமையல் பணியாளர்களை சந்தித்தோம். இன்றைய மதிய உணவை இராயபுரம் விடுதி மாணவர்களுடன் அருந்தி, உணவின் தரம் குறித்தும், அவர்களின் தேவை குறித்தும் விசாரித்தேன்.
'மாணவர்களின் வளமான கல்விச் சூழலுக்கு அடிப்படையாக விளங்கும் தங்குமிடம், உணவு, இருப்பிட பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் என அனைத்து விடயங்களையும் நமது துறை உறுதி செய்யும். மாணவர்கள் தங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி, வேறு எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. சமூக நீதித்துறை என்றும் அவர்களுக்கு துணையாக இருக்கும்' என்று மாணவர்களிடம் உறுதி அளித்தேன்.