மதுரை கிழக்கில் நவீன விளையாட்டு மைதானம் அமைக்க எம்.எல்.ஏ. திரு. சோ. கார்த்திகேயன் அவர்கள் சட்டப்பேரவையில் கோரிக்கை.
மதுரையில் உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் மைதானம் அமைக்க அரசு முடிவு! 🏟️🏆
அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். 🏟️🏆 @CMOTamilnadu@AadhavArjuna@BussyAnand
தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது பின்வரும் 27 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கழகப் புதிய மாவட்டங்கள்:
1.விருதுநகர் மேற்கு மாவட்டம்
2. மதுரை வடக்கு மாவட்டம்
3. மதுரை மாநகர் மத்திய மாவட்டம்
4. மதுரை கிழக்கு மாவட்டம்
5. புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்
6. நாமக்கல் தென்கிழக்கு மாவட்டம்
7. தேனி வடகிழக்கு மாவட்டம்
8. தேனி தென்மேற்கு மாவட்டம்
9. தூத்துக்குடி மத்திய மாவட்டம்
10. திருவள்ளூர் வடமேற்கு மாவட்டம்
11. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டம்
12. திருப்பத்தூர் தெற்கு மாவட்டம்
13. திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
14. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்
15. திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்
16. திண்டுக்கல் தென்மேற்கு மாவட்டம்
17. தருமபுரி புறநகர் மேற்கு மாவட்டம்
18. சேலம் மத்திய மேற்கு மாவட்டம்
19. சேலம் தெற்கு மாவட்டம்
20. சென்னை தெற்கு மாவட்டம்
21. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்
22. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்
23. கோவை கிழக்கு மாவட்டம்
24. கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்டம்
25. கரூர் தெற்கு மாவட்டம்
26. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்
27. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்
புதிய மாவட்டங்களின் நிர்வாகிகள் விவரங்களை அறிய... Click Here https://t.co/MdFPIj5NN5
புதியதாக பொறுப்பேற்கும் மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு, கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept