"இவர் தான் என் குழந்தைக்கு அப்பா" : பொய் சொன்ன சிறுமி, சேலம் இளைஞரை ஒதுக்கி வைத்த ஊர், நிரபராதி என விடுவித்த நீதிமன்றம், என்ன நடந்தது?
தன் மீது விழுந்த பழியைத் துடைக்க, இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்தைத் துணிச்சலோடு ஏற்றுக்கொண்டு, இறுதியில் 'நிரபராதி' என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள ஒரு வாலிபரின் வைராக்கியக் கதை ஒட்டுமொத்த தமிழகத்தையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
அவதூறும்... திடீர் கைது நடவடிக்கையும்:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகேயுள்ள எம்.காளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (32). ஐடிஐ படித்துவிட்டுத் தன் எதிர்காலக் கனவுகளோடு உழைத்து வந்த இவருடைய வாழ்க்கை, கடந்த 2024ஆம் ஆண்டு தலைகீழாக மாறியது. 17 வயது சிறுமி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேட்டூர் மகளிர் போலீசார் கார்த்தியை 'போக்சோ' (POCSO) சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். அந்த சிறுமி கருவுற்று இருப்பதாகவும் அதற்கு இவர்தான் காரணம் என்றும் புகார் கொடுத்திருந்தார்.. கார்த்தி போலீசாரிடம் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று எவ்வளவோ எடுத்துரைத்தும், அவருடைய வார்த்தைகள் செவிமடுக்கப்படவில்லை. அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
"ஜாமீன் வேண்டாம்!" – கார்த்தியின் அசாத்திய சபதம்:
சிறைக்குச் சென்ற பலரும் எப்படியாவது ஜாமீனில் வெளியே வந்துவிட வேண்டும் என்றே துடிப்பார்கள். ஆனால், கார்த்தி முற்றிலும் வித்தியாசமான ஒரு முடிவை எடுத்தார். தன் மீது சுமத்தப்பட்டது அப்பட்டமான பொய் வழக்கு என்பதால், அவர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய யாருக்கும் அனுமதி தரவில்லை.
"என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். கெட்ட பெயரோடு நான் ஜாமீனில் வெளியே வரமாட்டேன். நான் குற்றமற்றவன், நிரபராதி என்று இந்த நீதிமன்றம் மூலம் நிரூபித்த பின்னரே என் கால்கள் இந்தச் சிறையை விட்டு வெளியேறும்; அதுவரை நான் உள்ளேயே இருக்கிறேன்!" என்று இரும்பு மனிதனாகச் சிறைக்குள் வைராக்கியத்துடன் காத்திருந்தார். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. கார்த்தி தன் சபதத்தில் இருந்து பின்வாங்கவே இல்லை.
திருப்புமுனையை ஏற்படுத்திய அறிவியல் சோதனை (DNA Test):
இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கிடையில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அந்தச் சிறுமிக்குக் குழந்தை பிறந்தது. வழக்கின் உண்மைத்தன்மையைக் கண்டறிய, நீதிமன்ற உத்தரவின்படி சிறுமி, குழந்தை மற்றும் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி ஆகிய மூன்று பேருக்கும் மரபணு (DNA) சோதனை நடத்தப்பட்டது.
அறிவியல் ஒருபோதும் பொய் சொல்லாது என்பதற்கு இணங்க, அந்த டிஎன்ஏ சோதனையின் முடிவுகள் வந்தன. சோதனையில், சிறுமிக்குப் பிறந்த குழந்தைக்குக் கார்த்தி தந்தை இல்லை என்பது 100% உறுதியானது. அதாவது, கார்த்திக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற உண்மை வெட்டவெளிச்சமானது. அந்த சிறுமி வேறொரு நபரை காப்பாற்றுவதற்காக கார்த்தி மீது பழி போட்டது தெரிய வந்தது
நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு:
இந்த வழக்கு நேற்று மீண்டும் சேலம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. டிஎன்ஏ சோதனை அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி மீனாட்சி, கார்த்தி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுதலை செய்து அதிரடி உத்தரவிட்டார்.
"வென்றுவிட்டேன்..." – விடுதலையான கார்த்தியின் உருக்கமான பேட்டி:
நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து கம்பீரமாக வெளியே வந்த கார்த்தி கண்கலங்கியபடி பேசுகையில்:
"நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது என் மனசாட்சிக்குத் தெரியும். கெட்ட பெயரோடு ஊருக்குள் போய் தலைகுனிந்து நிற்பதை விட, நான் குற்றமற்றவன் என்பதை சட்டப்பூர்வமாக நிரூபித்துவிட்டுத்தான் மறுபடி என் மண்ணை மிதிப்பேன் என்று உறுதியாக இருந்தேன். அதனால்தான் ஜாமீன் கூடக் கேட்காமல் இரண்டு வருடம் சிறையிலேயே இருந்தேன். போலீசாரிடம் ஆரம்பத்திலேயே நான் கெஞ்சினேன், அவர்கள் கேட்கவில்லை. இன்று உண்மை ஜெயித்துவிட்டது, என் சபதத்தை முடித்துவிட்டு இப்போது நிம்மதியாக என் ஊருக்குச் செல்கிறேன்" என்றார் உணர்ச்சிப் பெருக்குடன்.
சிந்திக்க வேண்டிய கேள்வி:
அறிவியல் பூர்வமாக கார்த்தி நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டாலும், செய்யாத குற்றத்திற்காக ஒரு வாலிபர் தனது வாழ்வின் விலைமதிப்பற்ற இரண்டு ஆண்டுகளைச் சிறைக்குள் கழித்திருப்பதும், அவர் சந்தித்த மன உளைச்சலும் எவராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று. சட்டம் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டுமில்லாமல், அவசர அவசரமாகப் போடப்படும் பொய் வழக்குகளில் இருந்து கார்த்தி போன்ற சாமானியர்களின் வாழ்வை பாதுகாக்க வேண்டும்.
இன்னைக்கு ஜென் தத்துவம்ன்னு ஒரு புத்தகத்தை படிச்சேன்..
அதோட முதல் பக்கத்துல இந்த பாயிண்ட்லாம் இருந்தது.. அதுல 5வது பாயிண்ட் ரொம்பவே தேவையான ஒன்னுதான். நம்ம நிறைய பேரு இந்த தப்ப பண்றோம்.
நிறைய விஷயங்கள்ல இப்படித்தான் லூஸ் டாக் விட்றோம்னு நினைக்குறேன்..
🚨 தமிழகத்தில் ஜூலை 1 முதல்
அமலுக்கு வரும் 12 புதிய ரூல்ஸ்
ஆதார் அட்டை முதல் ரேஷன் கார்ட் வரை
பொதுமக்கள் உஷார் புதிய நடைமுறை🔥
#tvk#Vijay#pmmodi#tnscheme#july1
பூமியிலிருந்து கிட்டத்தட்ட 1.4 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றிவரும் வாயுக்கோள் என்றழைக்கப்படும் சனி கோள்..
தொலைநோக்கியின் உதவியுடன் மிக துல்லியமாக எடுக்கப்பட்ட சனி கோளின் வீடியோ..
#Saturn | #Planet | #Telescope | #PolimerNews
வலியக்கடந்து வரும்போதுதான் வாழ்க்கையின் எதார்த்தம் புரியும்.. அந்தம்மா உண்மையில அத்தனை வலிகளையும் கடந்து வந்ததால் தான் எதார்த்தத்தைப் பற்றி பேசுராங்க.. உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் அம்மா.. ❤️❤️❤️
#mommy
@kavitha129@CMOTamilnadu அல்ஸர் அல்லது ஏதாவது காயங்கள் இருந்தால் உடனே சரி படுத்தி குணமாக வைத்திருப்பது மிக அவசியம்
இந்த மருந்தில் ரத்தத்தின் திடத்தை குறைக்கும் மருந்து உள்ளது அதனால் புண் ஏதாவது உள்ளோ வெளியிலோ ஆறாம இருந்த ரத்த கசிவு ஏற்படும்
இது ஒரு vicious cycle
30 நாட்களுக்குள் நில அளவை செய்ய வேண்டும்; இல்லையெனில் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை – சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு!
⚖️ வழக்கு எண்: W.P.(MD) No.13465 of 2020
📅 தீர்ப்பு நாள்: 05.10.2020
🏛️ நீதிமன்றம்: மதுரை அமர்வு, சென்னை உயர்நீதிமன்றம்
👨⚖️ நீதிபதி: S. வைத்தியநாதன் (S. Vaidyanathan)
தமிழகத்தில் நில அளவை (Survey/Resurvey) பணிகளில் ஏற்படும் தாமதம், லஞ்சம், நிர்வாக அலட்சியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மதுரை அமர்வு சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
📌 வழக்கின் பின்னணி
மதுரை மாவட்டம் பொன்மேனி கிராமத்தில் உள்ள நிலத்தை மீண்டும் மீண்டும் அளவிட முயற்சிப்பதால் இடையூறு ஏற்படுவதாக மனுதாரர் நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நில அளவை நடத்துவதற்கு தடையிட மறுத்ததுடன், எதிர்காலத்தில் அனைத்து நில அளவை நடவடிக்கைகளும் வெளிப்படையாக நடைபெற பல முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியது.
⚖️ உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்
✅ நில அளவைக்கான கட்டணம் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அளவீடு மேற்கொள்ள வேண்டும்.
✅ காலதாமதம் ஏற்பட்டால், விண்ணப்பக் கட்டணத்தை திருப்பி வழங்குவதுடன், பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
✅ அனைத்து நில அளவை நடவடிக்கைகளும் இரு தரப்பினரும் முன்னிலையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
✅ நில அளவை முழு செயல்முறையும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.
✅ அரசின் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமான நில அளவை மேற்கொள்ள வேண்டும்.
✅ நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், தடை உத்தரவு இல்லையெனில் நில அளவை மேற்கொள்ளலாம்.
✅ நில அளவை தொடர்பான தகவல்கள் மற்றும் பதிவுகள் RTI சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
✅ நில அளவை தொடர்பான அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்ட தனி பதிவேடு (Register) பராமரிக்கப்பட வேண்டும்.
✅ நில அளவையர்கள் உட்பட வருவாய்த் துறை அதிகாரிகள் மீது லஞ்ச புகார்கள் இருந்தால், விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
✅ இந்த வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
📢 தீர்ப்பின் முக்கியத்துவம்
நில அளவை மனுக்கள் ஆண்டுக்காண்டு நிலுவையில் கிடப்பது, லஞ்சம் கோரப்படுவது, தேவையற்ற தாமதம் செய்வது போன்ற நடைமுறைகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு முக்கியமான சட்டப் பாதுகாப்பாக அமைந்துள்ளது. பொதுமக்கள் தங்களது நில அளவை உரிமையை விரைவாகப் பெற இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டலாம்.
🚨 ரேஷன் கார்டு முகவரி மாற்றம்: புதிய கட்டுப்பாடுகள் அமல்! 🚨
குடும்ப அட்டையில் முகவரி மாற்ற புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன:
📌 PDS இணையதளம் வழியாக மட்டுமே இனி விண்ணப்பிக்க முடியும்.
📌 புதிய முகவரிக்கு ஆதாராக, ஆதார் மற்றும் சிலிண்டர் ரசீதுடன், இனி விண்ணப்பதாரரின் 'தந்தை வீட்டின் காஸ் ரசீதையும்' சமர்ப்பிக்க வேண்டும்.
📌 திருமணமான பெண்கள் முகவரி மாற்றம் கோரினால், மனைவியின் தந்தை வீட்டு காஸ் ரசீது கட்டாயம்.
📌 ஆதார், மின் கட்டண அட்டை, வங்கி கணக்கு புத்தகம் இருந்தாலும், காஸ் ரசீது இல்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்!
முழு விவரங்களுக்கு கீழே உள்ள படத்தைப் பார்க்கவும். 👇
#RationCard #TNPDS #SmartCard #TNNews #TamilNadu #MakkalSevai
18+
இன்று கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் கூட்டுக் குடும்பங்கள் அழிக்கப்பட்டதுதான்.
கூட்டுக்குடும்பத்தை அழித்தது மருமகள் தான். கல்யாணம் பண்ணி வந்த உடனே, மாமியார் கூட சண்டை போட்டுட்டு புருஷனைக் கூட்டிட்டு கிளம்பிடுறாங்க.
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மாமியாருடன் comfortableஆ இல்லை. என் புருஷன் என்னுடன் செலவிடும் நேரம் குறைகிறது. தனிக்குடித்தனம் சென்றால் கணவர் தன்னையே சுற்றி 🙈 வருவார் என்று நினைக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஆணின் Comfort zone தான்.
ஆணுக்கு எதுவுமே மறைத்து வைத்தாலோ, ஈஸியாகக் கிடைக்காமல் போனாலோ தான் அதைத் தீவிரமாகத் தேடுவார்கள்.
ஈஸியாகக் கிடைத்துவிட்டால் அவர்களது interest வேறுபக்கம் திரும்பிவிடும். தனிக்குடித்தனத்தில் இது தான் நடக்கிறது என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கூட்டுக்குடும்பத்தில் மனைவியை சந்திக்க முடியாமல் போகும் போது திருட்டுத்தனமாகவாவது அவளை அடைய முயல்வார்கள். அது அவர்களுக்கு போதையாகிறது
பெண்ணுக்கும் ஆணுக்கும் தன் உறுப்பைப்பற்றி சிறிய பயம் இருக்கும். அதனால் தனிக்குடித்தனத்தில் நாளை செய்யலாம் நாளை செய்யலாம் என்று சந்தோசத்தையே தள்ளிப் போடுகிறார்கள்
கூட்டுக்குடித்தனத்தில் திருமணமான மூன்றாவது மாசமே நல்ல செய்தி இருக்கா என்று பெரியவர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். இதற்குப் பயந்தாவது பெண்ணும் ஆணும் சேர்ந்து குழந்தையைப் பெற்று விடுகிறார்கள்.
இறுதியாக ஒன்று - ஆண் எப்போதும் பணத்தை நினைத்துப்பயப்படுகிறான். மனைவி கர்ப்பமாகிவிட்டால் எப்படி சமாளிப்பது என்ற பயமும் தனிக்குடித்தனத்தில் உள்ளது.
கட்டுக்குடும்பத்தில் அந்த பயம் இல்லை. ஏதாவது ஒன்றென்றால் அண்ணன் இருக்கான் தம்பி இருக்கான் அம்மாவும் அப்பாவும் இருக்காங்க என்ற தைரியம் ஆணுக்கு மூடை வரவழைக்கிறது.
கூட்டுக்குடும்பம் என்பது மிகவும் முக்கியமானது என்பதைப் பெண்கள் புரிந்து நடந்து கொண்டால் இல்லறமும் தாம்பத்தியமும் சுகமாகும்.
கருத்தரிப்பு மையங்களும் குறையும்....
@tamilamuthan100@tamil_typist@aarjeekaykannan அருமையான உரையாடல் 😍 நன்றிகள் பல
இப்போதும் கூட சங்கர் லால் கதைகள் மின் புத்தக வடிவில் கிடைக்கிறது
தொலைகிராமத்தில் கிடைத்தால் அனுப்புகிறேன்
எந்த ITR Form File பண்ண வேண்டும்னு குழப்பமா இருக்கா? இந்த post அ save பண்ணிக்கோங்க.
Tax filing தேவைகளுக்கு - 9629596296 க்கு வாட்ஸாப் செய்யவும்.
ITR-1 (Sahaj)
- Salary மட்டும்,
- income ₹50L கீழ,
- ஒரே ஒரு house property,
- capital gains இல்லாதவங்களுக்கு.
ITR-2
- Salary + Mutual Fund/Stock capital gains,
- multiple house properties,
- foreign income,
- income ₹50L மேல் இருந்தா.
ITR-3
- Freelancer,
- Consultant,
- Doctor
- full books of accounts வச்சிருக்கீங்களா, அல்லது partnership firm partner-ஆ இருந்தா.
ITR-4
- Small business / Freelancer,
- presumptive taxation (44AD/44ADA) opt பண்றவங்களுக்கு.
- Detailed accounts maintain பண்ண வேண்டாம்.
அடிக்கடி நடக்கிற தப்பு:
Mutual fund sale பண்ணிட்டு ITR-1 file பண்ணுறாங்க. அது தப்பு ITR-2 தான் சரியான form.
Golden Rule:
சந்தேகமா இருந்தா, நீங்க நினைக்கிற form க்கு ஒரு form மேல போட்டுடுங்க . தப்பான form போட்டா defective return notice நிச்சயம்.
Due date: July 31, 2026
Late fee: ₹5,000 வரை + interest
உங்க கூட இருக்கிற யாராவது இன்னும் ITR-1 போட்டுக்கிட்டிருந்தா, அவங்களுக்கு இந்த post அ share பண்ணுங்க! 🙏
#TaxFiling #AY2026_27 #ITR #IncomeTax #TaxFilingIndia #ITRForms #PersonalFinanceIndia #SalariedIncome #FreelancerIndia #CapitalGains #TaxTips #ITR1 #ITR2 #ITR3 #ITR4 #RefundDelay #AssessmentYear #TaxIndia
தமிழக முதலமைச்சர், மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் என்கிற செய்தி ஒரு சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிடப்பட்டது. ஆனால், அந்தத் தமிழ் வாக்கியத்தின் சிக்கலான அமைப்பால், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களின் தானியங்கி மொழிபெயர்ப்பு (Machine Translation) முற்றிலும் தவறான ஓர் அர்த்தத்தை ஆங்கிலத்தில் காட்டியது. [“Honorable Chief Minister of Tamil Nadu Mr. S. Joseph Vijay passed away today (10.06.2026) due to illness,...”] 😮
இந்தத் தவறு ஏன் நடந்தது?
தமிழில் பதிவான செய்தி இது தான்:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த ஒரே சொற்றொடரில் இரண்டு வெவ்வேறு பெயர்ச்சொற்களும் (Nouns), அவற்றை விவரிக்கும் இரண்டு வெவ்வேறு விளக்க விவரங்களும் (Descriptive clauses) ஒன்றோடொன்று கலந்து எழுதப்பட்டுள்ளன. பொதுவாக மனிதர்களால் அதன் சூழலைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், மொழிபெயர்ப்பு இயந்திரம் குழம்பிவிட்டது.
ஆனால், இதுபோன்ற சொற்றொடர்களைப் படிக்கும்போது மனிதர்களுக்கும் பல நேரம் குழப்பம் வரும்.
ஆகவே, நாம் சாதாரணப் பயன்பாட்டிற்கு எழுதும்போது கூட ஒரு முக்கியமான விதியைப் பின்பற்ற வேண்டும்: ஒரு பெயர்ச்சொல்லை விவரிக்கும் விளக்க விவரத்தை, அந்தப் பெயர்ச்சொல்லுக்கு மிக அருகிலேயே வைக்க வேண்டும்.
இரண்டு வெவ்வேறு பெயர்ச்சொற்களையும் அவற்றின் விளக்க விவரங்களையும் ஒன்றோடு ஒன்று கலக்காமல், தனித்தனியாக வரிசையாக ஜோடிகளாக (Sequential pairs) நிறுத்த வேண்டும். இயன்றபோது, வாக்கியங்களைச் சுருக்கமாக உடைத்து எழுதினாலே இந்தத் தவறு வராது. ✍️
அதிகாரப்பூர்வமான செய்தியில் விவரங்கள் இப்படி வந்திருக்கின்றன:
முதலமைச்சர் - இயக்குநர் நோயால் இறந்தார் - அஞ்சலி செலுத்தினார்.
இதை இப்படி ஜோடியாகப் பிரித்துக்கொள்ளவேண்டும்:
- நோயால் இறந்த இயக்குநர்.
- அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்.
இந்த ஜோடிகளைப் பிரிக்காமல் ஒன்றன்பின் ஒன்றாக எழுதினால் இப்படி வரும்:
உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த வகையில், படிக்கும்போதும் தெளிவு கூடும். தேவையற்ற குழப்பங்களையும் நாம் ஓரளவு தவிர்க்க முடியும். 🌐
#மொழிபெயர்ப்பு #தொழில்நுட்பம் #எழுத்துமுறை #தொடரமைப்பு
#பயணிதரன்
#அறிவுக்கருவிகள்
#வாழ்வெனும்பயணம்