இன்றைய தினம் 10.03.2026, செவ்வாய்க்கிழமை - தமிழர் தேசம் கட்சி நடத்திய முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம், ஒருங்கிணைந்த. சிவகங்கை மாவட்டம் சார்பாக , சிவகங்கையில் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று எழுச்சியுரையாற்றினேன்!
இந்நிகழ்வில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த தாய்மார்களுக்கும், பெரியோர்களுக்கும், இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
மேலூர் தொகுதி முத்தரையர் கூட்டமைப்பு சார்பாக மதுரை மேலூர் கீழையூரில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழாவில் கலந்துகொண்ட பொழுது 🙏💛♥️👑
#Ramesh_Muthuraja#Madhagupatti#மதகுபட்டி
இன்றைய தினம் - 27.02.2026,வெள்ளிக்கிழமை - வேலூர் மாவட்டம், கி.வ.குப்பம் வட்டம், முடினாம்பட்டு, கிராமத்தில் எழுந்தருளி அருபாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு மாடு விடும் விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தேன்!
சிறப்பான வரவேற்பளித்த இளைஞர்களுக்கும், தாய்மார்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
நாளைய தினம் 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை_ திருச்சி ஆலம்பட்டி புதூரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழை மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களிடம் வழங்கினேன்!
#முத்தரையர்மாநாடு
புதுக்கோட்டை மாவட்டம் (அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 180-க்கும் மேற்பட்ட முத்தரையர் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, நம் உறவுகளைச் சந்தித்து சனவரி 25,2026 திருச்சி, ஆலம்பட்டி புதூர் பகுதியில் நடைபெறவுள்ள முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை வழங்கினேன்!
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதன் அவசியத்தை கிராமம் கிராமமாக எடுத்துரைத்தபோது, உறவுகளிடம் காணப்பட்ட ஆதரவும், எழுச்சியும், நம்பிக்கையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை!
ஒவ்வொரு சந்திப்பிலும் மாநாட்டை வெற்றிபெறச் செய்ய அவர்கள் அளித்த உற்சாகமான உறுதிமொழிகள், நம் இலக்கை நோக்கிய பயணத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளன. திருச்சி மாநாடு நமது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மாபெரும் திருப்புமுனையாக அமையும்.
சொந்தங்களின் ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றி. அவர்களின் பேராதரவோடு, திருச்சி மாநாடு நிச்சயம் நாம் எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு வெற்றியை ஈட்டித் தரும்!
அனைவரும் சனவரி 25, 2026 அன்று திருச்சியில் சந்திப்போம்!
வாருங்கள்! வரலாறு படைப்போம்!
#முத்தரையர்_மாநாடு_2026
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், பொன்னகரம் பகுதி மீனவர்கள் 4 பேர் மாயம், மீனவர்களை மீட்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் (மும்மூர்த்தி த/பெ நாராயணன், விநாயகம் த/பெ ராக்கப்பன், மணிகண்டன் த/பெ மாரியப்பன், மணி த/பெ நாகசுந்தரம்) கடந்த 09.01.2026 அன்று பிற்பகல் 2.00 மணியளவில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில், இதுவரை கரை திரும்பவில்லை என்ற அதிர்ச்சி மிகுந்த செய்தி வெளியாகியுள்ளது. இவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியாததால், மீனவக் குடும்பங்களும், அப்பகுதி மக்களும் ஆழ்ந்த துயரத்திலும் அச்சத்திலும் மூழ்கியுள்ளனர்.
மீனவர்கள் மாயமாகி பலமணி நேரமாகியும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் கடலோரக் காவல் படை போதுமான அக்கறையும் தீவிரமும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது. விலைமதிக்க முடியாத உயிர்கள் ஆபத்தில் இருக்கும்போது. கடலோரக் காவல்படை கால விரயம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடற்படை ஹெலிகாப்டர்கள், அதிநவீன கப்பல்கள் மற்றும் ஆழ்கடல் தேடுதல் உபகரணங்கள் மூலம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியை உடனடியாகத் தீவிரப்படுத்த வேண்டும்.
மீட்புப் பணிகளில் உள்ளூர் மீனவர்களை ஈடுபடுத்தி, அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் தேடுதல் வியூகங்களை வகுக்க வேண்டும். மீட்புப் பணிகளின் முன்னேற்றத்தை மூத்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உளவியல் ஆதரவையும், நிவாரண உதவிகளையும் வழங்க வேண்டும்.
இந்த விசயத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து, காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மீனவர்களின் உயிரைக் காப்பது அரசின் தார்மீக கடமையெனவும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்!
@CMOTamilnadu@tnpoliceoffl
இன்றைய தினம் டெல்லியில் வீரத்திலும், கொடைத்தன்மையிலும் சிறந்து விளங்கிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 'சுவரன் மாறன்' புகழுக்கு மகுடம் சூட்டும் வகையில் சிறப்பு தபால் தலையை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டேன், மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் அண்ணன் திரு. @CPR_VP அவர்கள் பெரும்பிடுகு
முத்தரையர் தபால்தலையை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் மத்திய நிதயமைச்சர் திருமதி. @nsitharaman அவர்கள், மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்கள், முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் திரு.விஸ்வநாதன் அவர்கள், தமிழ் தேசம் கட்சியின் திரு. K K செல்வகுமார் அவர்கள்
கலந்து கொண்டனர்.
Today in Delhi, participated in a special postal stamp event to honor the glory of the great emperor Perumbidugu Mutharaiyar “Suvaran Maran”, who excelled in bravery and generosity.
The Honorable Vice President of India, Thiru @CPR_VP Avl, released the postal stamp in recognition of Emperor Perumbidugu Mutharaiyar.
Finance Minister Smt. @nsitharaman Avl and Central Minister Thiru. @DrLMurugan Avl , Mutharaiyar Munnetra Sangam Leader Thiru. Viswanathan Avl, Tamizhar Desam Party Leader Thiru. KK Selvakumar Avl were also present at the event.
மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் புகழைப் போற்றும் வகையில், அவரது தபால் தலையை வெளியிட உறுதுணையாக இருந்த பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் - மத்திய இணையமைச்சர் திரு. @DrLMurugan அவர்கள்..!
தான் கண்ட போர்களில் எல்லாம்
வெற்றி வாகை சூடிய மாவீரர்,
முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர்,
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர்
திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர்
திரு. @CPR_VP அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பிலும், @AIADMKOfficial சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
@PMOIndia@VPIndia
இன்று, தமிழ்ப் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) அவர்களின் 1350-வது ஆண்டினை கொண்டாடும் விதமாக, அவரது நினைவு தபால் தலை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தனது வீரத்தின் மூலம் வரலாற்றில் நிலைக்கின்ற வகையில், தான் பங்கேற்ற அனைத்துப் போர்களிலும் வென்றவரான தமிழ்ப் பேரரசரைப் போற்றுகின்ற வகையில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு இந்த நினைவு தபாலை வெளியிட்டிருப்பது, தமிழர்கள் அனைவருக்குமான பெருமைக்குரிய நிகழ்வாகும். மேலும், இத்தகைய பெருமைக்குரிய நிகழ்வினை, மாண்புமிகு துணைக் குடியரசுத் தலைவர் திரு.@CPR_VP அவர்கள் வெளியிட்டிருப்பது சிறப்பானதொரு நிகழ்வாகும்.
இன்று டெல்லியில் நடைபெற்ற இந்த அற்புதமான விழாவில், மாண்புமிகு நிதியமைச்சர் திருமதி. @nsitharaman அவர்கள், மாண்புமிகு மாநிலங்களவை துணைத் தலைவர் திரு.@harivansh1956 அவர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பாஜக மாநிலத் தலைவருமான அண்ணன் திரு. @NainarBJP அவர்கள், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் திரு.@MenonArvindBJP அவர்கள், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் திரு. செல்வக்குமார் அவர்கள், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் திரு. விஸ்வநாதன் அவர்கள், தமிழக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் திரு. @KaruppuMBJP அவர்கள், பத்மஸ்ரீ திரு.தாமோதரன் அவர்கள், டாக்டர் சந்திரசேகரன், அரியர் சுவரன் மாறன் பிடரி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.
@VPIndia@JM_Scindia@PemmasaniOnX@MIB_India@IndiaPostOffice
தமிழர் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு தபால் தலை வெளியிடும் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தலைமையிலான அரசு.தமிழர் கலாச்சாரத்தையும், நம் மண்ணின் மைந்தர்களின் தியாகத்தையும் என்றும் போற்றும் பிரதமர் அவர்களின் அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..!
Glad that the Vice President, Thiru CP Radhakrishnan Ji, released a stamp in honour of Emperor Perumbidugu Mutharaiyar II (Suvaran Maran). He was a formidable administrator blessed with remarkable vision, foresight and strategic brilliance. He was known for his commitment to justice. He was a great patron of Tamil culture as well. I call upon more youngsters to read about his extraordinary life.
@VPIndia@CPR_VP
Vice President C. P. Radhakrishnan releases Commemorative Postage Stamp in Honour of Emperor Perumbidugu Mutharaiyar
The Vice President highlights the Legacy of Emperor Perumbidugu Mutharaiyar and his Contributions to Temples, Irrigation, and Tamil Literature
The Vice President praises Prime Minister @narendramodi’s Visionary Leadership in Promoting Tamil Culture and the Centre’s Efforts to Honour Unsung Tamil Kings and Freedom Fighters
Read here: https://t.co/vLltE6EAmp
@VPIndia
வீரத்திற்கும் கொடைக்கும் இலக்கணமான பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்குச் சிறப்பு தபால் தலை வெளியிட்டிருப்பதன் மூலம், தமிழர் பண்பாட்டின் மீதும் வரலாற்றின் மீதும் பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள் கொண்டுள்ள பற்றும், அக்கறையும் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது..!
தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழின் சிறப்புகள் காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பெரும்பங்கு வகித்து, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) அவர்களின் வீரத்தையும், புகழையும் போற்றும் வகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலையை, மாண்புமிகு குடியரசுத் துணைத்தலைவர் திரு @CPR_VP அவர்கள், வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
போர்கள் பல வென்று, பொற்கால ஆட்சி தந்த நிகரில்லா மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் அஞ்சல் தலை வெளியிடும் சிறப்பான நிகழ்வில், மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு @DrLMurugan அவர்கள், ராஜ்ய சபா துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், @BJP4Tamilnadu மாநிலத் தலைவர் அண்ணன் திரு @NainarBJP அவர்கள், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் தலைவர் அண்ணன் திரு @KKSelvakumaroff மற்றும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் R.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
@IndiaPostOffice
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் புகழை போற்றும் விதமாக வரும் 14-ஆம் தேதி அஞ்சல் தலை வெளியிடும் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு தமிழ்கூறும் நல்லுலகு சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்..!