பெரியார் அறிவுலகத்தை வேக வேகமாக திறக்கத் தெரிந்த அரசுக்கு, அதில் என்ன புத்தகங்கள் இருக்கிறது என ஆய்வு செய்யத் தெரியாதா..? தி.மு.க மீது அமைச்சர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் த.வெ.க அரசுக்கு இபிஎஸ் கேள்வி..
#Tiruppur | #EPS | #PeriyarArivulagam |#PolimerNews
நிருபர்களை சந்திக்க முதலமைச்சர் விஜய்க்கு என்ன தயக்கம்..?
4 முறை மாற்றி மாற்றி அறிவித்துள்ளார்கள்..! ஆட்சி செய்ய தெரியல..? பயிர்கடன் தள்ளுபடியை உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் வரவுள்ள சூழலில் இப்போது மீண்டும் அறிவித்துள்ளார்கள்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..
#Tiruppur | #ADMK | #EdappadiPalaniswami | #CMVijay | #TVK | #PolimerNews
ஒரே நாளில் 11 கொலைகள்-
தீபாவளி நாளான்று பட்டாசு சத்தத்திற்கு இணையாக தேனி, கடலூர், திருச்சி, சென்னை, சிவகங்கை, திருவள்ளூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சத்தமும் கேட்டிருக்கிறது தமிழ்நாட்டில்!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து, மாநிலம் முழுவதும் ரத்தக் களறியாக மாறியிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது.
"ரோட்டில் நின்றால் கொலை... தட்டிக்கேட்டால் படுகொலை!" என்னும் அளவிற்கு ரவுடிகளும் குற்றவாளிகளும் தெருக்களில் அச்சமின்றி நகர்வலம் வரும் அளவிற்கு நாட்டின் சட்டம் ஒழுங்கைத் தள்ளியிருக்கிறது தவெக அரசு.
இதில் உச்சகட்ட கொடுமையாக, தேனியில் பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களையே ரவுடிகள் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
"காக்கிச் சட்டைக்கே இங்கே பாதுகாப்பில்லை என்றால், சாமானிய மக்களுக்கு எங்கே இருக்கும் பாதுகாப்பு?"
அஇஅதிமுக ஆட்சியில் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற தமிழ்நாடு காவல்துறை, இன்றைக்கு ஆளத் தெரியாத ஆச்சரியக்குறி தவெக அரசால் கலகலத்துப் போய் நிற்பது மிகுந்த வேதனைக்குரியது.
அரசியல் என்பது சினிமா செட் அல்ல; முதலமைச்சர் நாற்காலி என்பது 'பஞ்ச் டயலாக்' பேசுவதற்கான மேடையும் அல்ல என்பதை இந்த 'ரீல்' முதல்வர் @actorVijay அவர்கள் இப்போது புரிந்து கொள்வார்?
படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களின் குடும்பத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 40 லட்ச ரூபாய் நிதி உதவி என்பது போதுமானது அல்ல.
அஇஅதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும் சரி, எதிர்கட்சியாக இருந்தபோதும் சரி, Line Of Duty-ன் போது உயிரிழக்கும் காவலர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். இந்த அரசும், கடந்த 14.10.2026 அன்று வெளியிட்டுள்ள அரசாணையில், பணியின்போது துணிச்சலுடன் உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என கூறியுள்ளது.
தான் போட்ட அரசாணை கூட இந்த ஆச்சரியக்குறி அரசுக்கு நியாபகம் இல்லை என்பதுதான் இங்கு ஆச்சரியமாய் இருக்கிறது.
அந்த வகையில், திரு. செந்தில்குமார் குடும்பத்தினருக்கும் ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என இந்த அரசைக் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
ஒரே நாளில் 11 கொடூரக் கொலைகளை செய்து தமிழகத்தை பதற வைத்த அனைத்துக் குற்றவாளிகள் மீதும் மிகக்கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
தீபத் திருநாளாம் #தீபாவளி பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தீபாவளி திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட, செல்வம் செழித்திட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தீபங்கள் ஒளிர்வதுபோல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் இனிய தீபவாளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
#HappyDiwali
@AIADMKOfficial
கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட "பெரியார் அறிவுலகத்தில்" நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில்
பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
மக்களின் சிந்தனையை மேம்படுத்தவும், அறிவுப் பசியைப் போக்கவும் பயன்பட வேண்டிய நூலகங்களில் கூட கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது என்பது எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
போலி பிம்பங்களை உருவாக்கி, ‘பொய்க்கால் குதிரை’ அரசை நடத்தி வரும் ரீல் முதல்வர் @actorvijay அவர்கள் சமீபத்தில்தான் இந்த பெரியார் அறிவுலக கட்டிடத்தினை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோடு ஷோ நடத்துவதிலும், கேமராக்களுக்கு முன்னால் கையசைத்து ஆக்ஷன் செய்வதிலும் காட்டும் ஆர்வம், சிறிதளவாவது தான் திறந்து வைக்கும் நூலகத்தில் நூல்கள் சரியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா, அதற்கான உள்கட்டமைப்பு சரியாக உள்ளதா என்பதை ஆராய்வதில் இருந்திருக்க வேண்டாமா?
சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு ரெடியாகி வந்து ரிப்பன் வெட்டி திறப்புவிழா நிகழ்ச்சியில் நடித்துவிட்டு போய்விட்டால் மட்டும் தன் கடமை முடிந்துவிட்டது என முதல்வர் நினைத்துக் கொண்டாரா என்ன?
சென்ற ஆட்சியின் திட்டம் என்று இப்போது வாய்கிழிய பேசும் இதே ஆட்சியாளர்களின் வாய்கள், திறப்பு விழாவின் போது பேசிய பேச்சுகள் எல்லாம் நினைவிருக்கிறதா?
இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தி இவ்வளவு பேசும் இந்த அரசு, நூலகம் திறக்கும் முன் வந்த நூல்களை சரிபார்த்திருக்க வேண்டாமா?
தங்கள் கொள்கைத் தலைவர் பெயரில் ஒரு நூலகம் , நேரடியாக முதல்வரே திறந்தாலும் கூட , ஒரு குறைந்தபட்ச ஆய்வை கூட
இந்த அரசு செய்யாமல் அக்கறை அற்று இருந்திருப்பதும் தவறு தானே!
அதுமட்டுமல்லாமல், ஒருபுறம் தவறு செய்தது நாங்கள் இல்லை திமுகதான் என ஆளுங்கட்சியும்,மறுபுறம் தவறு செய்தது நாங்கள் இல்லை தவெகதான் என திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டி மக்களை குழப்பி வருகின்றன.
தானும் குழம்பி, மக்களையும் குழப்பி, தமிழகத்தை ஒரு தொடர் குழப்பநிலைக்கு இவர்கள் தள்ளிவிட்டனர்.
இந்த குழப்பநிலை ஒன்றும் இந்த குழம்பி போன பொய்க்கால் குதிரை அரசுக்கு புதிதல்ல.
ஒரு யூனிட் மின்சாரம் ₹20-க்கு வாங்குவது ஊழல் என்று அன்று சட்டமன்றத்தில் கூச்சலிட்ட அதே மின்சாரத் துறை அமைச்சர், இன்று ஒரு யூனிட் மின்சாரத்தை ₹40 வரை கொடுத்து கொள்முதல் செய்து மக்கள் வரிப் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார்.
இது ஊழல் இல்லையா? மக்களை ஏமாற்றும் பச்சைப்பொய் இல்லையா?
தார் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகம் என்று காரணம் கூறி, பொதுப்பணித்துறை அமைச்சர் அன்று டெண்டர்களை ரத்து செய்தார்.
ஆனால் அன்று ஒரு டன் ₹48,000-க்கு இருந்த தார் விலை இன்று ₹1,00,000-ஐ தொட்டு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது.
இன்று வரை புதிய டெண்டர்களும் விடப்படவில்லை, பணிகளும் நடக்கவில்லை. அப்படியென்றால் அன்று டெண்டரை ரத்து செய்ததால் யாருக்கு என்ன லாபம்? இது மக்களைக் குழப்பும் செயலில்லையா?
எனவே பெரியார் அறிவுலக ஊழல் விவகாரத்தில் தவெக அரசாக இருந்தாலும் சரி இல்லை முந்தைய திமுக அரசாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு!
எனவே ,பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து உடனடியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்து, இந்த ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பொய்க்கால் குதிரை அரசை @AIADMKOfficial சார்பில் வலியுறுத்துகிறேன்.
கடந்த #ஜூன் மாதம் வெளியான கீழே உள்ள #புத்தகம் திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதா என்பதை மட்டும் சொன்னால் கூட போதும்!
😡புத்தகத்தின் பெயர் The Vijay Revolution: People Power & the Politics of Hope.
166-ஆம் பக்கத்தில் விஜய்யின் பத்துத் திரைப்படங்களைப் பட்டியலிட்டு
”அகல் விளக்கு பதிப்பகம் என்ற பெயரில் 2000 புத்தகங்கள் இருக்கிறது; அந்தப் புத்தகங்கள் போலியானவை.. 300 பக்க நூலுக்கு ரூ.1500 விலை இருக்கிறது.. ஒரு நூல் கூட சுயமாக எழுதப்பட்டவை அல்ல” - பெரியார் அறிவுலகத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நூல்கள் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
#PerumalMurugan | #PeriyarArivulagam | #PeriyarLibrary | #Rajmohan | #PuthiyathalaimuraiTV
அகல் விளக்கு பதிப்பகம் திடீரென்று தமிழ் மக்களின் முன்னால் அறிவு விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது! மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நூல்களைப் பற்றி பேசுகிறார்கள். 'நூல்களைப்' பற்றி பேசவேண்டும் என்பதுதான் என் ஆசை!
கோவை, திருச்சி உள்ளிட்ட சிறப்பு நூலகங்களின் நூல் பரிந்துரை குழுவில் பெருமாள் முருகனைப் போல நானும் உறுப்பினராக இருந்தேன். சுமார் 135 பேர் உறுப்பினர்களாக இருந்து நூல்களைப் பரிந்துரைத்தோம். எல்லாமே வெளிப்படையாக நடந்தன. பரிந்துரைக்கான நூல்கள் கூகுள் ஷீட்டில் அனுப்பப்படும். அதில் பரிந்துரையைக் குறிப்பிட வேண்டும். எல்லாமே இணையத்தில் உள்ளன. எல்லாரும் பார்க்கலாம்.
நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியலில் திரிஷா விஜய் என்பவர் எழுதிய நூல் உட்பட அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாக பெருமாள் முருகன் குறிப்பிட்டிருக்கும் எந்த நூல்களும் வரவில்லை. நான், கடிதம், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய பிரிவுகளில் நூல்களைப் பரிந்துரை செய்தேன். திரிஷா விஜய் நூல் கட்டுரை நூல் என்பதால் என்னிடம் வந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை.
நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதை நான் வெளியிடவும் தயாராக இருக்கிறேன். என்னைப் போலவே மற்ற பரிந்துரை உறுப்பினர்களுக்கும் அவரவர் பரிந்துரைத்த நூல்களின் பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கும். எனவே நூல் பரிந்துரை உறுப்பினர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தாலேயே அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் முன்பே பரிந்துரை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டனவா என்பது தெரிந்துவிடும்.
பரிந்துரைக்கப்பட்ட நூல்களை அப்படியே வாங்கவும் முடியாது. பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, நூல் தேர்வுக் குழு தேர்வு செய்யும். பின்னர் இறுதி படுத்தப்பட்ட நூல்களை கொள்முதல் குழு விலையை குறைத்துப் பேசி வாங்கும். இதை உயர்நிலைக் குழு கண்காணிக்கும். எனவே தவறு அதிகாரிகள் மட்டத்தில் நடந்திருக்கிறது என்பது தெளிவு.
நூல்களைப் பரிந்துரை செய்த பணிக்காக எங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பூதியம் இந்த செப்டம்பர் மாதம் தான் வழங்கப்பட்டது. எப்போதுமே அரசு துறைகள் சார்ந்த பணிகளுக்கு நிதி எப்போது விடுவிக்கப் படுகிறதோ அப்போது தான் எல்லாவற்றுக்கும் கணக்கு நேர் செய்யப்படும். ஆனால் அகல் விளக்கு பதிப்பக போலி நூல்களுக்கு மட்டும் நூல் கொள்முதல் அரசாணையைப் போட்ட உடனே எப்படி கொடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
பெரியார் அறிவுலக இறுதிகட்ட பணிகள் கடந்த சில மாதங்களில் தான் நடைபெற்று திறக்கப்பட்டது. எனவே நடந்த முறைகேட்டை AI இல்லாத உண்மையான அரசாணை மற்றும் கடிதங்களின் ஆதாரங்களோடு வெளியிட்டு எல்லாருக்கும் தெளிவு படுத்த வேண்டும். குற்றம் சாட்டிவிட்டு கடந்து போகக் கூடாது. பெருமாள் முருகன் கட்டுரையை அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், அவர் சொல்வதைப் போல குழு விசாரணை அமைக்க முன்வரவேண்டும்.
பெருமாள் முருகன் குறிப்பிடும் நூலாசிரியர் பெயர்களில் நூல்களை எழுதி வெளியிடும் எண்ணம் கடந்த ஆண்டு இறுதியிலேயே அகல் விளக்கு பதிப்பகத்துக்கு தோன்றியிருக்குமா என்ற எண்ணம் தான் எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குள்ளே எழுகிறது!
-அழகிய பெரியவன்
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற ₹5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் யார் என்பதை @TVKVijayHQ அமைச்சர் @RajmohanTN பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்!
லஞ்சம் கொடுக்க முயன்றவரின் அடையாளத்தை மறைப்பது குற்றம். ஆதாரங்களுடன் உண்மையை வெளிக்கொணர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதே, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164(3)-ன் கீழ் அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தின் உணர்வுக்கும், அமைச்சரின் பொறுப்புக்கும் ஏற்புடையதாகும்.
ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் இப்புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@AIADMKOfficial@CMOTamilnadu@lokbhavan_tn@tnpoliceoffl
தமிழகத்தின் அக்டோபர் மாத #GST வருவாய் வளர்ச்சி வெறும் 3%-ஆக, தேசிய சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதாக வரும் செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது.
ஒருபுறம், தமிழகத்தின் விலைவாசி உயர்வு தேசிய சராசரியை விட அதிகமாகி, மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
மறுபுறம், நமக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுக் கொண்டிருக்கின்றன. இன்று கூட, 3 தென்கொரிய நிறுவனங்கள் தங்கள் 1614 கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாட்டை நிராகரித்துவிட்டு ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன.
திருமலை படத்தில், @actorvijay “Take Diversion “ என்று நடிகர் விவேக்கை திருப்பதியில் இறக்கி விடுவதைப் போல, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில்களை எல்லாம் “Take Diversion” என்று ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது இன்றைய தவெக அரசு.
தொழில் வளம் பெருகி, பல வேலைவாய்ப்புகள் வந்து, அதனால் GDP முன்னேறி, Per Capita Income உயர்ந்தால் தானே, GST வருவாய் அதிகரிக்கும்?
தொழில் வளம் எல்லாம் மற்ற மாநிலங்களிடம் தாரை வார்த்துவிட்டு, மக்களுக்கு “Purchasing Power” இல்லாமல் போனால் எப்படி GST வருவாய் உயரும்?
இதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்கும் ஆட்சியா இன்றைக்கு இருக்கிறது? இந்த லட்சணத்தை சுட்டிக் காட்டினால் இன்றைய ஆட்சியாளர்களுக்கு கோபம் வேறு வருகிறது.
தமிழ்நாட்டின் எதிர்கால தொழில்வளத்தைக் கட்டமைக்க மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கிய @Guidance_TN அமைப்பை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி இருக்கிறது இன்றைய ஆச்சரியக்குறி அரசு. குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போல இந்த கூட்டத்திடம் தமிழகத்தில் நிர்வாகம் மாட்டிக் கொண்டு படும் பாடு, வரலாற்றுச் சோகம்!
தேர்வுக்கு ஒரு வார்த்தை கூட படிக்காமல், இவ்வளவு ஏன், என்ன Subject என்றே தெரியாமல், தேர்வு நாள் அன்று Question Paper-ஐ பார்த்தால் பதில் வந்துவிடுமா? உங்களுக்கு தான் கேள்வியே என்னவென்று தெரியாதே..!!
அதேபோல், எந்த துறை பற்றியும் தெரியாமல், நிர்வாகம் பற்றி கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல், ரீல்ஸ் காண்பித்து முதல்வராகி விட்டால் மட்டும் எல்லாம் தானாக நடந்துவிடுமா @CMOTamilNadu அவர்களே?
தமிழ்நாட்டிற்கென்று ஒரு வளர்ச்சிப் பாதையை கஷ்டப்பட்டு கட்டமைத்து, அந்த வளமான பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறோம். அதை பாழாக்கி விடாதீர்கள்!
@AIADMKOfficial
“கஜானா காலி” என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் அதே வேளையில், வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 41.50-க்கு இந்த வெட்டி அரசு கொள்முதல் செய்யப்போவதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.
பிறகு, அமைச்சர் அதை மறுத்துவிட்டார் என்ற செய்தி வந்தது. பரவாயில்லை, ஏதோ தவறான செய்தி பரவி விட்டது போல என்று நினைத்து முடிப்பதற்குள் தான், மின்துறைக்கு அமைச்சராக இருப்பவர் @CTR_Nirmalkumar என்பது நினைவுக்கு வந்தது.
அப்படி என்றால், அமைச்சர் சொன்னது தான் கண்டிப்பாக தவறாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தோம். ஏனென்றால், ஒரு செய்தித் தாளைக் கூட ஒழுங்காகக் படிக்கத் தெரியாமல், “ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மின் நிலையத்தின் உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ.46” என்று வந்திருந்த செய்தியை, “ராஜஸ்தான் அரசு 46 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கியுள்ளது பார்த்தீர்களா?” என்று மாற்றி உருட்டியவர் தான் இந்த நிர்மல்குமார்!
அப்போதே தமிழக மக்களுக்கு Sketch புரிந்துவிட்டது- 40 ரூபாய்க்கு மேல் மின் கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றத் தான் அமைச்சர் இந்த அடியைப் போடுகிறார் என்று!
நினைத்த மாதிரியே இப்போது இப்படி ஒரு செய்தி வர, அதற்கான விளக்கத்தில், “இந்த ஒப்பந்தம் கோரியதை ரத்து செய்கிறோம்” என்று U-Turn அடித்து இருக்கிறாரே தவிர, அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று மறுக்கவில்லை. இந்த லட்சணத்தில் “தூயசக்தி” என்ற தம்பட்டம் ஒன்று தான் இந்த ஆச்சரியக்குறிகளுக்கு கேடு!
“வெற்றி மின் கொள்ளைத் திட்டம் Phase-3” ரத்தாகிப் போனதற்கு ஆழ்ந்த வருத்தங்கள் @CMOTamilNadu !
@selvinnellai87 நாங்கள் காரில் சென்று கொண்டிருந்த பொழுது signal இல் ஒருவர் வந்து பணம் கேட்டார். கையில் இல்லை என்று சொன்னதும் உங்களுக்கு accident ஆகிடும் என்று சாபம் விட்டு விட்டு சென்று விட்டார் .
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை சந்தி சிரிக்க,
மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை Fuse பிடுங்கிய நிலையில் இருக்க,
தற்போது சிறைத்துறையும் அந்த List-ல் சேர்ந்துவிட்டது.
மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் Highlight!
எப்போது பார்த்தாலும் “மைக்” வெறி பிடித்து அலைந்து, தூக்கத்தில் கூட “அண்ணாதிமுக புராணம்” பாடிக் கொண்டிருக்கும் @CTR_Nirmalkumar-ன் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது. வெட்கக்கேடு!
ஏற்கனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய போதே தமிழக சிறைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் இந்த அரசுக்கோ, அமைச்சருக்கோ நேரம் இல்லை போலும்!
அது சரி, புழல் ஜெயிலுக்கு Inspection எல்லாம் போனீர்களே @CMOTamilNadu- நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? நீங்கள் நடத்தியது ஆய்வு தானா? அல்லது, சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிடப் பரிகாரமா?
கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடும் நிலையில் தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?
அதிகரிக்கும் கொலைகள்,
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,
ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம்,
தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள்,
சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்,
இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய ஆச்சரியக்குறி ஆட்சியாளர்கள் “150 நாள் வெற்றி மலர்” வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
தப்பியோடிய கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கும் சமூக நீதியும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதையே சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன.
•சாத்தான்குளம் அருகே பெண் ஒருவரை வீடு புகுந்து மர்மநபர் வெட்டிக் கொலை செய்துள்ளதாகவும்,
•கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே Lift கேட்டு சென்ற சிறுவன் மாயமானதாகவும்,
•கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஜாதிய பாகுபாட்டால் மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும்
வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
தமிழ்நாட்டில் நடக்கும் கொலைகளை எல்லாம் பார்த்தால், திரு. @actorvijay ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் எல்லாம் தங்களை “#LeoDas”-ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது.
கொள்கை (?), கூட்டணி என எல்லாவற்றிலும் “சமூகநீதி” என்று பெயர் வைக்கும் இந்த ரீல்ஸ் முதல்வரின் ஆட்சியில் ஜாதிய பாகுபாட்டால் ஒரு மாணவன் உயிரிழந்து இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மேடைகளில் பேசும் டயலாக் எல்லாம் இப்போது எங்கே போனது?
ஸ்ரீபெரும்புதூர், செஞ்சி சிறுமிகளைத் தொடர்ந்து, ஊத்தங்கரை சிறுவனைக் காணவில்லை. ஸ்ரீபெரும்புதூர் சிறுமி மீட்கப்பட்ட நிலையில், செஞ்சி சிறுமியை இன்னும் இந்த அரசு கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து சிறுவர்கள் காணாமல் போவது பெற்றோர்களை என்ன வேதனைக்கு உள்ளாக்கும் என்பதெல்லாம் இந்த முதல்வருக்கு கொஞ்சமாவது புரியுமா?
இது ஒரு Pattern-ஆக நடப்பது போன்ற சந்தேகம் கூட இந்த அரசுக்கு வரவில்லையா?
சாத்தான்குளம் மற்றும் கோவை வழக்குகளில் தொடர்புள்ளோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும்,
மாயமான சிறுவர்களை மீட்டு, இந்த விவகாரத்தை தீவிரமாக அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
அதிமுகவையும், பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் அமைச்சர் @AadhavArjuna மீது, @AIADMKOfficial சார்பில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆதிராஜாராம் அவர்கள் மூலம் சென்னை பெருநகர மூன்றாவது நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமைச்சர் மீதான கிரிமினல் வழக்கில் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளத் தேவையான Sanction தொடர்பாக, BNSS பிரிவு 218-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி @lokbhavan_tn அவர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வழக்கின் தொடர் விசாரணை வரும் நவம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்ய வேண்டுமென்றால் முறையான வாரண்ட் கொடுக்கப்பட வேண்டும்.
அரசியல் தொடர்பான வழக்குகளுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி, அதிகாலை 5.30 மணிக்கு இரவு நேர உடையிலேயே கைது செய்து, எவ்வித ஆணையும் இல்லாமல் காவல் நிலையத்திற்கு ஒரு பெண்ணை அழைத்துச்செல்ல எந்த சட்டத்தில் இடம் இருக்கிறது?
இது முற்றிலுமாக முறையற்ற செயல், இத்தகைய செயலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துகொள்கிறோம்.
கொலைகாரர்கள், கொள்ளையடிப்பவன், போதை பொருள் கடத்துகிறவன் அதற்கு துணை போகிறவர்களை கூட, இந்த அரசு இப்படி கைது செய்யவில்லையே.
இது போன்ற தொடர் நடவடிக்கைகள் இது மற்றுமொரு பாயச அரசாகவே காட்சியளிக்கிறது.