பெரியார் என்ன செஞ்சு கிழிசாறுனு கேட்கிறான் பாரு அவன் தான் பெரிய அயோக்கியன்...
மனிஷன் எவ்வளவு தெளிவா சாதியவாதிகளின் அயோக்கியத்தனத்தை List போட்டு பொலந்துட்டாப்பல👌👌
குறிப்பு: சாதியவாதிகளே இந்த வீடியோவை தவிர்ப்பது நல்லது (1/2)
பண்டிதர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான இன்று மழலையர் நாளாக கொண்டாடப்படுகிறது. மழலையர் மனதில் சாதி-மத வேற்றுமை உணர்வுகளை விதைக்காமல், சமத்துவ சகோதரத்துவ எண்ணங்களை விதைத்து அன்பை பொழிவோம். பண்டிதர் நேரு அவர்கள் வலியுறுத்திய அறிவியல் மனப்பான்மை (Scientific Temper) நோக்கோடு அவர்கள் வளர துணையாய் நிற்போம்.
#மழலையர்நாள்
பெண்களை கருவறைக்குள் அனுப்பிய முதல் பீடாதிபதியான சித்தர்பீடத்தின் குரு பங்காரு அடிகளாரின் மறைவு வேதனையளிக்கிறது. அவர் பிறப்பால் ஆண் என்றாலும் அனைவராலும் அம்மா என அழைக்கப்பட்டவர். அந்த அளவுக்குத் தாய்மை பண்புகளால் மகளிரின் பேரன்பைப் பெற்றவர். ஆன்மீகத் தளத்தில் பெண்களுக்கான மதிப்பீட்டைப் பெரிதும் உயர்த்தியவர்.
சங்பரிவார் சனாதனிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகமல் அவர்களுக்கு ஒரு சவாலாக இயங்கியவர்.
மறைந்த அடிகளாருக்கு
விசிக சார்பில் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
#அடிகளார் #சித்தர்பீடம் #விசிக
கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் அத்திப்பள்ளி அருகே பட்டாசுக் கடையில் நடந்த வெடி விபத்தில் தமிழகத்தைச் சார்ந்த 14பேர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தா.அம்மாபேட்டை கிராமத்தைச் சார்ந்த 8 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையத்தைச் சார்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 4ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் இத்தகைய வெடி விபத்துகள் நிகழாமல் இருக்கும் வகையில் அரசு உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும், வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் உரிய நெறிமுறைகளை பின்பற்றுகிறதா என தொடர்ச்சியாக அரசு கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வெடிவிபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எமது அஞ்சலியை செலுத்துகிறோம். அவர்களது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#VCK
#Thiruma