சாதி என்பது செங்கற்களால் ஆன சுவர் அல்லது முள்வேலிக் கோடு போன்ற ஒரு பௌதீகப் பொருள் அல்ல, இது இந்துக்களை ஒன்றிணைவதைத் தடுக்கிறது, எனவே அது கீழே இழுக்கப்பட வேண்டும். சாதி என்பது ஒரு கருத்து; அது மனதின் நிலை." -
- புரட்சியாளர் அம்பேத்கர் 💙❤
#Remembering_DrBR
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மியூசியம் வளாகத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று (01-12-2023) திறக்கப்பட்ட திராவிடப் பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் மணிமண்டபம் திறப்பு விழாவில் #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள்.
மதுரை மாவட்டத்தில் தொடரும் வன்கொடுமைகள்… மதுரை பெருங்குடியில் சிறுவனைக்கூட விட்டு வைக்காத ஜாதி வெறி தாக்குதல்… காவல்துறையே ஜாதிவெறியர்களை உடனடியாக கைது செய்திடுக…
@tnpoliceoffl @maduraipolice @CMOTamilnadu
சுற்றறிக்கை
~~~
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில் 20.11.2023 திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு அம்பேத்கர் திடலில் நடைபெறுகிறது.
மக்களுக்காகப் போராடிய மாபெரும் ஆளுமை தோழர் என்.சங்கரய்யா !
அவரை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும்
அவரது நினைவாக மணிமண்டபம் அமைத்திடவும் வேண்டுகிறோம்!
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை!
---------------------------------------
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் மறைவெய்தியது தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பாகும். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.
பகத்சிங் தூக்கில் இடப்பட்ட செய்தியை அறிந்து தமிழ்நாட்டில் வெடித்த போராட்டங்களில் தனது ஒன்பதாவது வயதிலேயே பங்கேற்றவர் தோழர் சங்கரய்யா அவர்கள். கல்லூரி மாணவராக இருந்தபோது அவரை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அதனால் அவரது பட்டப்படிப்பு முழுமை பெறாமல் நின்று போனது. பல மாதங்கள் சிறையிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி தனது போராட்ட வாழ்வில் சுமார் 9 ஆண்டு காலம் அவர் சிறையில் கழித்திருக்கிறார்.
பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்ட அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்ட நேரத்தில் அதை நிறுவிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர். மக்கள் போராட்டங்களில் என்றைக்கும் முன்னணியில் நின்றவர்.எளிய வாழ்க்கை, சமரசமற்ற கொள்கைப் பற்று, அடக்குமுறைக்கு அஞ்சாத போர்க்குணம் ஆகியவற்றுக்கு சான்றாகத் திகழ்ந்தவர்.
காமராஜர், அண்ணா, எம் ஜி ஆர், கலைஞர் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு மூத்த தலைவர்களோடு அரசியல் பணியாற்றியவர். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்து அவர்களது கோரிக்கைகளுக்காகப் பாடுபட்டவர். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக சமரசம் இன்றிப் போராடியவர்.
தோழர் சங்கர் அய்யாவின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தோழர் சங்கரய்யா அவர்களுக்குத் 'தகைசால் தமிழர்' என்கிற விருதினை அளித்துப் பெருமைப்படுத்தினார். அவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க எடுக்கப்பட்ட முயற்சி சுதந்திரப் போராட்டத்தின் பெருமை அறியாத ஆளுநரால் தடைபட்டுப் போனது.
தோழர் என்.சங்கரய்யா அவர்களை அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றும், அவரது நினைவாக சென்னையில் மணிமண்டபம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்
மறைந்த தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கதைச் செலுத்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்
விசிக
#சங்கரய்யா
தோழர் சங்கரய்யா அவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு
@mkstalin
அவர்களுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். அத்துடன் நாட்டின் விடுதலைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மீட்சிக்கும் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில் #மணிமண்டபம் அமைத்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu@kbcpim@cpimspeak
வியப்புக்குரிய ஆளுமை ,!
சமத்துவம் ததும்பும் தோழமை !
மாண்பமை அமைச்சர்
அண்ணன் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் அவர்கள்.
எழுச்சித்தமிழர் மரியாதைக்குரிய நமது தலைவர் அவர்களின் வெற்றிக்கு தொடர்ந்து அரும்பாடு பட்டு அதை தேர்தல் களத்தில் சாத்தியமாக்குகிற ஆளுமையாக அண்ணன் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் அவர்கள் திகழ்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் மட்டுமே கிடைத்ததால் எழுச்சித்தமிழரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வெற்றிக்கு பின்னால் அண்ணன் எம். ஆர். கே அவர்களின் கள்ளங்கபடமற்ற அரிய உழைப்பு இருக்கிறது என்பதை சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை.
தலைவர் அவர்களின் மணி விழா மேடையில் திமுக வெற்றிக்கு சிறுத்தைகளின் பங்களிப்பு முக்கியமானது என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மனதார புகழ்ந்தார் அதே மனசாட்சியோடு நமது தலைவரின் வெற்றிக்காக உழைத்த அண்ணன் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் அவர்களை எண்ணிப் பார்க்கிறேன் !
காட்டுமன்னார்க்கோயில் பேரூராட்சி தலைவர் பதவி என்பது பொதுவில் ஒதுக்கப்பட்ட பதவியாகும். ஆனால் பேரூராட்சியில் ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த அண்ணன் திரு கணேசமூர்த்தி அவர்களை பேரூராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற செய்தவர் அண்ணன் எம்.ஆர்.கே அவர்கள்.
இந்த சரித்திர சாதனையை ஆரவாரம் ஏதும் இல்லாமல் அமைதியாக அவர் சாதித்திருக்கிறார்.
காட்டுமன்னார்க்கோயில் ஒன்றியம் பொதுத்தொகுதிதான். பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது , அதில்கூட சிறுபான்மை சமூகத்தை சார்ந்த இஸ்லாமிய சகோதரி திருமதி சஃதியா பர்வீன் அவர்களை ஒன்றிய பெருந்தலைவராக வெற்றி பெற செய்து தனது சமத்துவ உணர்வை சமூக நல்லிணக்க பாங்கை உறுதி படுத்தியிருக்கிறார் அண்ணன் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் அவர்கள்
பெருந்தலைவர் அய்யா எல் இளையபெருமாள் அவர்களுக்கு நூற்றாண்டு நினைவு அரங்க மண்டபம் அமைக்கவேண்டுமென சட்டமன்றத்தில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் அதை அறிவித்தபோது மனம் நிறைந்து சட்டமன்றத்திலேயே வாழ்த்தி பேசியவர் அண்ணன் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் அவர்கள்.
வாழ்த்தி பேசியதோடு நிற்காமல் சிதம்பரம் புறவழிச் சாலையில் மையமான பகுதியில் மிகசிறந்த இடத்தை பல கோடி மதிப்புள்ள நிலத்தை அதற்காக தேடி உறுதிபடுத்தியவர் அமைச்சர் அண்ணன் எம். ஆர். கே. பி. அவர்கள்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில்
கோரோனாவால் அவர் பாதிக்கப்பட்டு தேர்தல் பணிகளை செய்ய முடியாத நிலைக்கு ஆளானார். அந்த நிலையில் கூட உயிரை பணயம் வைத்து காட்டுமன்னார்க்கோயில் சட்டமன்ற தொகுதியில் எனக்காக களத்தில் இறங்கி அவர் பணியாற்றினார். உரத்து பேச முடியாத அளவுக்கு உடல் நலம் குன்றியிருந்த நிலையில் கூட நான் குறிஞ்சிபாடியில் வெற்றி பெறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் காரணமாக இருந்தார்கள். எனக்காக சிந்தனை செல்வன் பணியாற்றினார். ஆகவே அவரது வெற்றிக்கு நாம் பணி செய்வது என்பது நாம் நன்றி உள்ளவர்கள் என்பதை உறுதிசெய்ய காலம் தந்த வாய்ப்பு என்று கட்சிகார்ர்களை வணிகர்களை பிறசமூக தலைவர்களை கூட்டி கூட்டி பேசினார்.
கடந்த நவம்பர் - 4, 5 ஆகிய தேதிகளில் காட்டுமன்னார்கோவிலில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது எல்லா வாக்குச்சாவடிகளிலும் திமுக நண்பர்களை காண முடிந்தது. வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த தருணத்தில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் மாத்திரம் 50,000 வாக்குகள் கூடுதலாக எழுச்சித்தமிழர் அண்ணன் திருமா பெற வேண்டும் என்று எங்கள் அமைச்சர் அண்ணன் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார் என்று திமுக உடன் பிறப்புகள் சொன்ன போது நன்றியில் நான் கரைந்து போனேன்.
இதைப்போல இன்னும் நூறு செய்திகளை சொல்ல முடியும். எல்லாவற்றையும் தாண்டி எனது தனிப்பட்ட வாழ்வில் அவர்செய்த உதவிகளை என் உயிருள்ளவரை மறவேன். என். எல் சி வேலையை துறந்து எண்ணற்ற வழக்குகளை சுமந்து துயரத்தின் எல்லையில் கிடந்த எனது குடும்பம் இன்று தலை நிமிர்ந்திருக்கிறது என்றால் தலைவர் திருமாவின் அன்பும் அண்ணன் எம் ஆர் கே அவர்களின் உதவியும் என் வாழ்விணை தங்கத்தின் சகிப்பும்தான்.
இப்படியெல்லாம் பொங்கும் நன்றி உணர்வை வெளிப்படுத்த அமைச்சர் என்னை ஒருபோதும் அனுமதித்ததில்லை. அனால் அதற்கான வாய்ப்பை சில உதிரிகள்…அரைவேக்காடுகள்…..அரசியல் அயோக்கியர்கள் இன்று உருவாக்கி தந்துள்ளார்கள்.
இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க முயலுவதை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும்!
ஓ.என்.ஜி.சியின் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு மறுதலிக்க வேண்டும்!
தமிழர் விரோத ஃபாசிச பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
-------------------------------------------------------------------
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-------------------------------------------------------------------
இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க சுற்றுசூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று விண்ணப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைத்திட ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிற, ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளால் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் விவசாயம் கடுமையாகப் பாதிப்படைந்து வருகிறது. ஒ.என்.ஜி.சி., வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களின் இந்த நாசகார திட்டத்தை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வெகுமக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை கடந்த காலங்களில் முன்னெடுத்துள்ளன.
இப்போராட்டங்களின் விளைவாக 2020ஆம் ஆண்டு அப்போதைய அரசு காவிரி டெல்டாவைப் 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக' அறிவித்து சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதுடன், சட்ட வரம்புக்கு உட்படாத ஒருசில மாவட்டங்களிலும் தொடர்ந்து புதிய கிணறுகளுக்கான அனுமதியைக் கோருவது, மற்றும் அவற்றுக்கான ஏல அறிவிப்புகளை மேற்கொள்வது உள்ளிட்ட எதேச்சதிகார போக்குடன் ஃபாசிச பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களுக்கு விரோதமான இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
கடந்த 13.06.2021 அன்று தமிழ் நாடு முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் “தமிழ் நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ் நாடு அரசு ஒருபோதும் வழங்காது” எனத் தெரிவித்திருந்தார். திட்டவட்டமாக ஒரு மாநில அரசின் முதல்வரே ஹைட்ரோகார்பன் கிணறுகளை அனுமதிக்க முடியாது என அறிவித்த பின்னரும் தமிழ் நாட்டில் புதிய கிணறுகளை அமைக்க முயல்வது ஜனநாயக விரோதமானதாகும்.
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பாடம் புகட்டும் வகையில் உடனடியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அனுமதி கோரும் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு மறுதலிக்க வேண்டும் எனவும் தமிழ் நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்துவதை அனுமதிக்கக் கூடாதெனவும் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
7.11.2023
ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை சிதைக்கும் நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் விலக்கு அளிக்கக் கோரி 'நீட் விலக்கு நம் இலக்கு' 50 நாட்களில் 50 இலட்சம் கையெழுத்துக்கள் என திமுக இளைஞர்அணி, மாணவர்அணி, மருத்துவர் அணி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு கோரி இன்று அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்தார் மாண்புமிகு அமைச்சர் அன்பு இளவல்
@Udhaystalin
அவர்கள். குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய அஞ்சல் அட்டையில் கையெழுத்திட்டு எமது ஆதரவை நல்கினோம். கட்சியின் நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை நிலைய செயலாளர்கள், சென்னை மாவட்ட செயலாளர்கள், மற்றும் பிற முன்னணி பொறுப்பாளர்கள் என பலரும் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றோம். தமிழ்நாடு முழுவதும் இவ்வியக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் தவறாமல் பங்கேற்று கையெழுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். #BanNEET #SaveStudents #DMK #VCK #INDIAWins.
#மாவீரர்நாள்2023 தமிழ்த்தேசியப்பெருந்தலைவர்
@thirumaofficial
அவர்கள் மாவீரர் நாள் உரையாற்றுகிறார். தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்த நவம்பர்27 மாலை 5 மணிக்கு மயிலாப்பூரில் அணிதிரளுவோம் உறவுகளே!
மக்கள் தலைவரின் மணிவிழா
60 அடி கொடி கம்பங்கள்:
~~~~~~~~~~~~~~~
தமிழ்நாட்டில் 59 வது
60 அடி கொடி கம்பம்!
கடலூர் மாவட்டத்தில் 22 வது
60 அடி கொடி கம்பம்!
#தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்களின் 60 வது பிறந்தநாள் மணிவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் ஆங்காங்கே 60 அடி கொடி கம்பங்களை ஏற்றி வருகின்றனர்.
அதன்படி, கடலூர் கிழக்கு மாவட்டம், சிதம்பரம் நகரம் பேட்டை பகுதியில் இன்று (08-11-2023) தலைவர் ஏற்றி வைத்தார்.