அமைச்சர் நிர்மல் குமார் பேச்சிற்கு
கழக முன்னாள் அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி அவர்களது பதிலடி.
எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லாமல் குதர்க்கமாக பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
நான் கேட்ட கேள்விக்கு கடைசி வரை அமைச்சர் பதில் சொல்லவே இல்லை
தவெக அரசு அமைந்த பிறகு ஆட்சி நடத்துவதை விட எதிர்க்கட்சிகள் மீது வழக்கு பதிவு செய்வதில் தான் சிறப்பு கவனங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒரு வழக்கல்ல 10 வழக்குகள் அல்ல எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திப்பதற்கும் , சட்டப்படி எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
ஒரு சட்டமன்றத்தினுடைய நிகழ்வு என்பது ஆரோக்கியமான விவாதம் நடக்க வேண்டும். நாட்டினுடைய நிலைகளை குறித்து சட்டமன்றம் நடைபெறுகின்ற பொழுது உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதும் அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் பதில் சொல்வதும் முதலமைச்சர் பதில் சொல்வதும் இதுவரை இருந்த ஒரு நடைமுறை. ஆனால் இன்றைய தவெக அமைச்சர்கள் எதிர்கட்சிகள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பதில் தெரியாமல் வேறு விதமாக அவர்கள் அந்த பதில்களை சொல்லி அந்த இடத்தில் ஒரு கூச்சல் குழப்பத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள்.
நான் நேற்று என்ன கேட்டேன். மின்சாரத்துறை அமைச்சரிடம் 18 ஹார்ட் டிஸ்க் காணாம போயிடுச்சு கண்டுபிடிச்சது 38 ஹார்ட் டிஸ்க்ன்னு சொன்னீங்க மீதி இருக்கற 20 ஹார்ட் டிஸ்க் எங்க இருந்து கண்டுபிடிச்சது உரிய விளக்கம் என்ன.? என கேள்வி கேட்டா அது கடைசி வரைக்கும் அவர் பதிலே சொல்லல. திரும்பவும் ஒரு கேள்வி கேட்டேன் நீங்க வெள்ளை அறிக்கையில திமுக ஆட்சியில எங்களுடைய முதலமைச்சராக இருந்த திராவிட மாடல் ஆட்சியினுடைய நாயகர் மாண்புமிகு தளபதி அவர்கள் முன்னெடுத்த திட்டங்களை வெள்ளை அறிக்கையிலே சுட்டி காட்டி இருக்கறீங்க 99000 மின்மாற்றிகள் மாற்றப்பட்டிருக்கின்றன புதிதாக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டிருக்கின்றன 2020- 21 ல 14500 கோடி இருந்த மின்வாரியத்தினுடைய ஓராண்டு கடன் கடந்த 2025-26 ல 933 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. என்பதை வெள்ளை அறிக்கையிலே சொல்லி இருக்கீங்க ஆக முழுசா வெள்ளை அறிக்கையில திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு சொல்லிவிட்டு நேற்று சட்டமன்றத்தில் வந்து திமுக ஆட்சியில் எந்தவிதமான பணிகளும் நடக்கல என்கிறது போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தாங்க. நான் அததான் கேள்வியா கேட்டேன், நீங்களே வெள்ளை அறிக்கையிலே சொல்லிருக்கீங்கன்னு இப்ப அதுக்கு பதில் சொல்லணும். அதுக்கு சட்டமன்றத்தில் பதில் சொல்வதை விட்டுவிட்டு வேறு விதமான வார்த்தைகளை பயன்படுத்துவது இது போன்ற நிகழ்வுகளை சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் முன்னெடுக்கின்றார்கள்.
ஒரு கேள்விக்கு பதில் தெரியாமல் சட்டமன்றத்தில் பதிலளிக்க திறமை இல்லாமல் திராணி இல்லாமல் இதுபோன்ற குதர்க்கமான வார்த்தைகளை பயன்படுத்தி சட்டமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். உரிய நேரத்தில் மக்கள் அவர்களுக்கு உரிய பதிலை தருவார்கள்.
ஒரு முதலமைச்சர் தான் எடுத்துக்கொண்ட பதவி பிரமாணம் என்னங்கிறது என்ன? யார்கிட்டயும் எதுவும் மறைக்க மாட்டேன். உண்மையா நேர்மையா நடந்துக்கிறன் தானே அவருடைய உறுதிமொழியில பதவியே ஏற்று இருக்கார். அப்ப கையில இருந்தா நீங்க வெளியிட வேண்டியதுதானே.?
எந்த துறையில் தவறு நடந்தது எவ்வாறான தவறு நடந்தது? யார் தவறு செய்தார்கள்? அவர்கள் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்கிறோம். அப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.? இதுல என்ன நேரம் காலம் ஜோசியம் பார்த்து நேரம் காலங்கம் பார்த்தா அத வெளியிட முடியும். அதான் எங்களுடைய எதிர்கட்சித் தலைவர் மிக தெளிவாக சொன்னார். அப்படி ஏதேனும் உங்களிடம் இருந்தால் வெளியிடுங்கள் என்று நேற்று கேட்டார் இப்ப வரைக்கும் அவங்க வெளியிடல. மூணு பைல் கட்டி வச்சிருக்கு முடிச்சு போட்டு வச்சிருக்கு அந்த பைல அவுத்தாருனா வெளியில வந்துரும்னு சொன்னவங்க 24 மணி நேரம் ஆச்சு நேற்றே அதை வெளியிட வேண்டியதுதான அவங்ககிட்ட இருந்தாதானே வெளியிட முடியும். இந்த ஆட்சி 100 நாள் கடந்து போயிருக்கு மக்களுக்கு எந்தவிதமான ஒரு பயனும் இல்லாத அரசாக இந்த தவெக அரசு உள்ளது.
”Comeback கொடுப்பதில் நாம் தான் Specialist, சிறப்பாக Comeback கொடுப்போம்”..
தி.மு.கவினர் முதலில் தங்கள் பிள்ளைகளிடத்தில் அரசியல் பேச வேண்டும்.. இளைஞர்கள், பெண்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவது அவசியம்.. புதுமுகங்களுக்கு அதிகளவிலான பொறுப்புகள் வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேச்சு
#Chennai | #DMK | #MKStalin | #Politics | #PolimerNews
தி.மு.க.தலைமைச் செயற்குழுக் கூட்டம் 22-08-2026 தீர்மானங்கள்
தலைமைச் செயற்குழுக்
கூட்டத் தீர்மானம் :1
கிளைக் கழகங்கள்தான் நமது கழகத்தின் வலுவான கட்டமைப்புக்கு ஆணிவேர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள். கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கிட, கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என்றும்
தீர்மானிக்கப்படுகிறது.
இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!
101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!
மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.
சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!
தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க!
#ChennaiDay #MadrasDay
வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர்.
கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை
'Optics matter in administration' அதாவது, அரசியலில் செய்யப்படும் எந்த ஒரு செயலின் மீதான பொதுப் பார்வை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது மிக மிக முக்கியம்.
ஏனென்றால், முதல் பார்வையில் ஒரு விஷயம் எப்படி இருக்கிறதோ, அதைத்தான் பெரும்பாலானோர் பிடித்துக்கொண்டு பேசுவார்கள். அது குறித்த தர்க்க நியாயங்களுக்குள் எல்லோரும் செல்வதில்லை என்பது நிர்வாக அனுபவம் உள்ளவர்களுக்குப் புரியும்.
அதற்குச் சமீபத்திய சிறந்த உதாரணம், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்பதை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்ததும், அதற்கு எம்எல்ஏக்கள் வானளாவப் புகழ்ந்ததும், பாட்டுப் பாடியதும்.
அதைத் தொடர்ந்து, அன்றைய தினத்தில் விவாதிக்கப்பட்ட ஏறத்தாழ மூன்று துறைகளின் மானியக் கோரிக்கைகளுக்குப் பதினைந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அது நியாயமானதா, இல்லையா? எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? எவ்வளவு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும்? அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரமும் பொருளாதாரமும் உயர்வதற்கான வாய்ப்புகள் எத்தனை? என்பதையெல்லாம் விவாதிக்காமல், ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து சுமார் 150 கோடி ரூபாய் செலவு வைக்கும் எம்எல்ஏக்களுக்குக் கார் வழங்கும் விஷயத்தைப் பேசுபொருளாக மாற்றிவிட்டார்கள்.
அரசின் நிர்வாகச் செலவுகளில் எம்எல்ஏக்களுக்குக் கார் வழங்குவது என்பது மிக மிகச் சாதாரணமான ஒன்று. அதுவும் குறிப்பாக வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், வேளாண்மை அலுவலர் என வட்ட அளவிலான அரசு அலுவலர்களுக்கும், வட்டார அளவிலான அரசியல் ஒன்றியத் தலைவர்களுக்கும் கார் வழங்கப்பட்டிருக்கும் சூழலில், அரசின் அதிகாரப்பூர்வ வாகனம் எம்எல்ஏக்களுக்கு வேண்டும் என்பது ஒன்றும் நியாயமில்லாத கோரிக்கை அல்ல.
அதுவும் இவ்வளவு பெரிய அரசு நிர்வாகத்தில், பட்ஜெட்டில் ஆண்டுக்குச் சராசரியாக 30 முதல் 35 கோடி ரூபாய் என்பது ஒன்றும் பெரிய விஷயமும் அல்ல. ஏனென்றால், அரசின் மொத்த பட்ஜெட்டில் வீணாகும், விரயமாகும் செலவுகளே மிக எளிதாக 20 விழுக்காடு இருக்கக்கூடும்.
ஆனால், இதை ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்றும், தான் என்ன செய்தாலும் மக்கள் ரசிப்பார்கள், ஏற்றுக்கொள்வார்கள் என்ற மமதையிலும், நிர்வாக அடிப்படைப் புரிதலும் இல்லாமல், இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சரியான அதிகாரிகளைச் சரியான ஆலோசனைகளுடன் பயன்படுத்தாமலும் இவ்வளவு சாதாரணமான ஒரு பிரச்சினையைப் பெரிய பேசுபொருளாக மாற்றி, சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறது தவெக அரசு.
இந்த நிகழ்வை திமுக அரசு எப்படி கையாண்டிருக்கும்?
ஒருவேளை எம்எல்ஏக்களுக்குக் கார் வழங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தால், தெளிவாக முடிவு செய்திருப்போம்.
வழங்கலாம். ஆனால் நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு கூடுதல் வாகனங்கள் வழங்கப்பட்டு, எம்எல்ஏக்கள் பொதுமக்களின் பணிகளை மேற்கொள்வதற்காகத் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஓர் அரசாணையை வெளியிட்டிருப்போம்.
அதற்குப் பிறகு கொஞ்ச நாள் கழித்து, அந்த வாகனங்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எம்எல்ஏக்களிடம் ஒப்படைத்துவிட்டு, பிறகு ஓராண்டு கழித்து அதற்குரிய தொடர் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கி சரியாகச் செய்திருப்போம்.
இப்படித்தான் பல விஷயங்களைச் செய்ய வேண்டும், செயல்பட வேண்டும்.
ஏனென்றால், அரசியலில் என்ன செய்கிறோம் என்பதைவிட, அதை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற ‘optics’ மிக மிக முக்கியம்.
எடுத்துக்காட்டாக, இதன் பொருளாதாரப் பின்னணி என்ன, இதன் செலவினம் என்ன, அரசின் மொத்த பட்ஜெட் என்ன என்பதையெல்லாம் சாதாரண மக்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ‘கார்’ என்பது பெரிய விஷயம். தனக்குக் கிடைக்காமல் மற்றவர்களுக்கு அரசிடமிருந்து அது கிடைப்பதை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இந்தப் புரிதல் இல்லாமல், சாதாரண ஒரு விஷயத்தை சின்னாபின்னமாக்கியிருக்கிறது.
நமக்கெல்லாம் இருக்கும் பயம் ஒன்றே ஒன்றுதான்.
ஒரு நிர்வாக அனுபவமும் இல்லாமல், எந்தப் புரிதலும் இல்லாமல், இவ்வளவு பெரிய வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த நாட்டை இவர்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம்.
மேல்நோக்கிச் செல்ல வேண்டிய ஒரு வாகனம் தட்டுத் தடுமாறி அதே இடத்தில் நின்று, அதன்பிறகு பாதாளத்தை நோக்கி விரைந்து வந்துவிட்டால், மீண்டும் அதை மேல்நோக்கிச் செலுத்துவது எவ்வளவு கடினமோ, அதேபோல்தான் தமிழ்நாட்டுக்கும் நடந்திருக்கிறது.
ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம்.
அவரைச் சுற்றி நின்று ஓட்டுவதற்கு ஆலோசனைகள் சொல்கிறார்கள். சரியாகச் சொல்கிறார்களா, சரியாகச் சொல்லாமல் இருக்கிறார்களா, யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்று தெரிந்துகொள்வதற்குள் ஐந்தாண்டுகள் முடிந்துவிடும். வண்டி பல நூறு கிலோமீட்டர் பின்னால் வந்துவிடும்.
இது ஒரு எளிதான ஒரு புரிதல்தான்,
செங்குத்தான வளர்ச்சிப் பாதையில் இறங்குவது மிக மிகச் சுலபம். ஏறுவது மிக மிகக் கடினம்.
நாம் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறோம்.
காலமே, நீ ஓர் அதிசயப் பெட்டகம்!
என்னென்ன அதிசயங்களை வைத்திருக்கிறாயோ தெரியவில்லை!
@TVKWarriorsHQ இதான்டா திராவிட கட்சியோட சாம்ராஜ்யம் 🔥🔥
திருவனந்தபுரத்தில் நடந்த மாநாட்ல மலையாள மொழிக்கு முன்னுரிமை கொடுக்கல...
ஆனா அதே மாநாடு தமிழ் நாட்டுல நடக்கும் போது திமுக ஆளும் கட்சியா இல்லைனாலும் செஞ்ச சம்பவத்துக்கு பயந்து முதல் வரிசைல தமிழுக்கு முக்கியத்துவம் குடுக்குறாங்கனா...🖤❤️
@ramk8060 இதான்டா திராவிட கட்சியோட சாம்ராஜ்யம் 🔥🔥
திருவனந்தபுரத்தில் நடந்த மாநாட்ல மலையாள மொழிக்கு முன்னுரிமை கொடுக்கல...
ஆனா அதே மாநாடு தமிழ் நாட்டுல நடக்கும் போது திமுக ஆளும் கட்சியா இல்லைனாலும் செஞ்ச சம்பவத்துக்கு பயந்து முதல் வரிசைல தமிழுக்கு முக்கியத்துவம் குடுக்குறாங்கனா...🖤❤️
கலைஞர் செய்த சாதனைகள்ல முக்கியமானது அவர் மக்களின் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்தி பிடிச்சிருக்காரு அப்டின்றது தான்!
பா.விஜய் தமிழ் கவியரங்கம் பற்றி பேசின விஷயம் கலைஞருக்கு மட்டுமில்ல, திமுக தலைமைல இருந்த தமிழ்நாடு அரசியல் Standard க்கே ஒரு பெரிய Elevation!! 🔥
ஆனா கடந்த 5 வருட ஆட்சில ஆரம்ஸ்ட்ராங் கொலைக்கு திமுக பொறுப்பு,
வேங்கைவயல்க்கு திமுக பொறுப்பு,
ஆணவக்கொலைக்கு திமுக பொறுப்பு, அவ்ளோ ஏன் தெருநாய்க்கடிக்கு கூட திமுக பொறுப்பு,
ஆனா இப்போ நடக்குற பிரச்சினைகளுக்கு தவெக பொறுப்பு இல்லை.. சூப்பர்யா..