மக்கள் தலைவர் அண்ணன் @annamalai_k IPS அவர்களால் உருவாக்கப்பட்ட *wetheleader* மக்கள் இயக்கம் சார்பாக *இன்று (14-06-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மாலை 7 மணி வரை ) மாதர்பாக்கம் பஜாரில் (பேருந்து நிலையம் அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம்* நடைபெறுகிறது.
100 -க்கு மேற்பட்ட மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என பெரும் திரளானோர் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டுவருகின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு -
தாமோதரன்.
இப்படிக்கு
A. நரேஷ் குமார்.
உறுப்பினர் - WE THE LEADERS
#Wetheleaders #மாறுவோம் #மாற்றுவோம் #annamalaispeech #annamalaiparty #annamalaiips #Annamalai
நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்று வைத்துக்கொள்வோம். இதற்கான நீடித்த நிலையான செயல்திட்டம் குறித்து குறைந்தபட்சம் மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்கள் பத்திரிகையாளர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விளக்குவாரா?
கடத்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் M.K ஸ்டாலின் அவர்கள் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம் என சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
அந்த வரிசையில் நீங்கள் இப்போது இணைந்து உள்ளீர்கள்.
தமிழகத்தின் நலனை மையமாகக் கொண்டு, தொலைநோக்கு பார்வை, நிர்வாகத் திறன் மற்றும் செயல்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரு தகுதியான தலைவரை தமிழகம் கண்டறியாத வரை, உண்மையான மாற்றம் நிகழப்போவதில்லை.
@annamalai_k
#TamilNadu #Politics #VisionForTamilNadu #LeadershipMatters
விஜய் is Not a National Headline
விஜய் is now international Headline 🔥🔥🔥
2036 -1.5Billion Target தமிழ்நாடு Economy மாத்துறோம் 🔥
விஜய் vs international 🔥💯
அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.
இந்த கூட்டம் கடந்த 7ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்றது.
WeTheLeaders சார்பாக இது போன்ற எந்த கூட்டத்தையும் நடந்த சொல்லவில்லை.
இப்போது வரை அனைவரும் தன்னார்வலர்களாக மக்கள் சேவையில் மட்டுமே செயல்படுகிறோம்.
பொறுப்பாளர்கள் கூட இன்னும் நியமிக்காத போது எப்படி தலைவர் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு பதிலளிக்க முடியும்.
மக்கள் தலைவர் அண்ணன் @annamalai_k அவர்களின் நோக்கம் மக்களுக்காக நல்லாட்சியை வழங்கவேண்டும் என்பதற்காக தனி இயக்கம் தொடங்கியிருக்கிறாரே தவிர எந்த கட்சியையும் அழிக்கவேண்டும் என்று ஒருபோதும் சிந்திக்கமாட்டார்.
அதே போல உங்கள் கட்சியில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தமிழிசை சவுந்தரராஜன், டெய்சி போன்ற பல்வேறு நபர்களின் பேச்சை கேட்கின்றபோது இது போல பேசக்கூடாது என்று பொதுவெளியில் கண்டித்தது உண்டா?
Vanakkam @annamalai anna,
I am not the person either wishing you or reproaching you while you came out of our party. Since we had a great relationship, you had great respect for me and I had a great affection for you.
You know me personally, what hardships I faced, and am even facing now, for my party. I am not able to hear these words that your cadres are speaking against BJP.
I just wanted to know whether you approve of those speeches or not. I know you; you are a person who says anything boldly, whether it is right or wrong.
Answer me, anna. Are these kinds of speeches transpiring with your consent and conscience?
அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.
இந்த கூட்டம் கடந்த 7ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்றது.
WeTheLeaders சார்பாக இது போன்ற எந்த கூட்டத்தையும் நடந்த சொல்லவில்லை.
இப்போது வரை அனைவரும் தன்னார்வலர்களாக மக்கள் சேவையில் மட்டுமே செயல்படுகிறோம்.
பொறுப்பாளர்கள் கூட இன்னும் நியமிக்காத போது எப்படி தலைவர் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு பதிலளிக்க முடியும்.
மக்கள் தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்களின் நோக்கம் மக்களுக்காக நல்லாட்சியை வழங்கவேண்டும் என்பதற்காக தனி இயக்கம் தொடங்கியிருக்கிறாரே தவிர எந்த கட்சியையும் அழிக்கவேண்டும் என்று ஒருபோதும் சிந்திக்கமாட்டார்.
அதே போல உங்கள் கட்சியில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தமிழிசை சவுந்தரராஜன், டெய்சி போன்ற பல்வேறு நபர்களின் பேச்சை கேட்கின்றபோது இது போல பேசக்கூடாது என்று பொதுவெளியில் கண்டித்தது உண்டா?
மக்கள் தலைவர் அண்ணன் @annamalai_k IPS அவர்களால் உருவாக்கப்பட்ட *wetheleader* மக்கள் இயக்கம் சார்பாக *நேற்று (11-06-2026 வியாழக்கிழமை மாலை ) புது கும்மிடிப்பூண்டி பஜாரில் (பேருந்து நிலையம் அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம்* இன்று மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதில் கும்மிடிப்பூண்டியில் இருக்கக்கூடிய 100 -க்கு மேற்பட்ட மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என பெரும் திரளானோர் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு -
சின்னராசு, அந்தோனி, முரளி.
இப்படிக்கு
A. நரேஷ் குமார்.
உறுப்பினர் - WE THE LEADERS
#Wetheleaders #மாறுவோம்_மாற்றுவோம் #annamalaiips #AnnamalaiMovement #annamalaiparty #annamalai_k #Annamalai
மக்கள் தலைவர் அண்ணன் @annamalai_k IPS அவர்களால் உருவாக்கப்பட்ட *wetheleader* மக்கள் இயக்கம் சார்பாக *இன்று (11-06-2026 வியாழக்கிழமை மாலை ) புது கும்மிடிப்பூண்டி பஜாரில் (பேருந்து நிலையம் அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம்* இன்று மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதில் கும்மிடிப்பூண்டியில் இருக்கக்கூடிய 100 -க்கு மேற்பட்ட மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என பெரும் திரளானோர் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு -
சின்னராசு, அந்தோனி, முரளி.
இப்படிக்கு
A. நரேஷ் குமார்.
உறுப்பினர் - WE THE LEADERS
#மாறுவோம்_மாற்றுவோம் #wetheleaders #WeTheLeaders #Annamalai4TN #AnnamalaiMovement #annamalai_k #Annamalai
"தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் எழுதத் தயாராகும் இளைஞர் சக்தி! 💪🔥
தமிழக அரசியலை ஆட்சி செய்த பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்திற்கு மாற்றாக, நேர்மை, துணிச்சல் மற்றும் மக்கள் நல அரசியலை முன்னிறுத்தும் மக்கள் தலைவர் அண்ணன் @annamalai_k IPS அவர்களின் தலைமையில் இளைஞர்களுக்கான தேர்தல் களம் தயாராகி வருகிறது.
மாறுவோம்... மாற்றுவோம்...
இளைஞர்கள் தலைமையேற்கும் தமிழகம் உருவாக்குவோம்! 🚩"
#wetheleaders #WETHELEADER #மாறுவோம்_மாற்றுவோம் #annamalaiips
மக்கள் தலைவர் அண்ணன் @annamalai_k IPS அவர்களால் உருவாக்கப்பட்ட *wetheleader* மக்கள் இயக்கம் சார்பாக *இன்று (10-06-2026 புதன்கிழமை மாலை 4மணிக்கு ) கும்மிடிப்பூண்டி பஜாரில் (நியூ மணி டெக்ஸ்டைல் அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம்* இன்று மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதில் கும்மிடிப்பூண்டியில் இருக்கக்கூடிய 100 -க்கு மேற்பட்ட மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என பெரும் திரளானோர் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டனர்.
இப்படிக்கு
A. நரேஷ் குமார்.
உறுப்பினர் - WE THE LEADERS
#மாறுவோம்_மாற்றுவோம் #wetheleader #annamalai
மக்கள் தலைவர் அண்ணன் அண்ணாமலை IPS அவர்களால் உருவாக்கப்பட்ட *wetheleader* மக்கள் இயக்கம் சார்பாக *இன்று (10-06-2026 புதன்கிழமை மாலை 4மணிக்கு ) கும்மிடிப்பூண்டி பஜாரில் (நியூ மணி டெக்ஸ்டைல் அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம்* இன்று மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதில் கும்மிடிப்பூண்டியில் இருக்கக்கூடிய 100 -க்கு மேற்பட்ட மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என பெரும் திரளானோர் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டனர்.
இப்படிக்கு
A. நரேஷ் குமார்.
உறுப்பினர் - WE THE LEADERS
@annamalai_k #annamalai #wetheleader
தனிநபர் விமர்சனம் செய்யக்கூடாது என்று நினைத்தாலும் நேற்று மக்கள் தலைவர் அண்ணா அண்ணாமலை குறித்து இந்த அம்மா பேசிய பேச்சை கேட்கின்றபோது இந்த வரிகள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.
"சீச்சீ! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு;
இலட்சியத்திற்காக வாழ்வதே மனிதப் பிறவியின் பெருமை."
மக்கள் தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்கள் கடந்த ஜூன் 5ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி, #WETHELEADER என்ற மக்கள் இயக்கத்தைத் தொடங்கியதிலிருந்து, ஏறக்குறைய 17 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், படித்தவர்கள், நடுநிலையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களை தன்னார்வலர்களாக இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டியில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட இளைஞரணி தலைவராகவும், மாநில OBC அணி செயலாளராகவும் பணியாற்றியுள்ளேன். கட்சிப் பணிகளைத் தாண்டி, கல்வி, விளையாட்டு மற்றும் சமூக முன்னேற்றம் சார்ந்த பல்வேறு முயற்சிகளையும் தனிப்பட்ட முறையில் முன்னெடுத்து வந்துள்ளேன்.
அந்தக் காலகட்டங்களில் பல நிகழ்ச்சிகளின் நிறைவில், “நீங்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கும்மிடிப்பூண்டியில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்” என்று மக்களிடம் கேட்டிருக்கிறேன். அப்போது பலரும், “அண்ணாமலை அவர்களின் நேர்மை, துணிச்சல், ஆளுமை, புள்ளிவிவரங்களோடு பேசும் திறன் மற்றும் மக்களுக்காக போராடும் மனப்பான்மை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது முழு நம்பிக்கை உள்ளது. ஆனால் சில காரணங்களால் நேரடியாக ஆதரிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்” என்று கூறுவார்கள்.
ஆனால், கடந்த ஐந்து நாட்களாக அண்ணாமலை அவர்கள் தனி மக்கள் இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாக அறிவித்ததிலிருந்து, தினந்தோறும் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன.
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால், பாரம்பரியமாக மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள், இளம் தலைமுறை வாக்காளர்கள், பெண்கள், படித்தவர்கள், நடுநிலையாளர்கள் மட்டுமல்லாமல், அரசியல் குறித்து பொதுவெளியில் ஒருபோதும் கருத்து தெரிவிக்காதவர்கள்கூட, “நாங்களும் இந்த இயக்கத்தில் இணைந்துவிட்டோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு சாதாரண அரசியல் நிகழ்வு அல்ல. தமிழக மக்கள் மாற்றத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பதற்கான தெளிவான அறிகுறியாக இதை நான் பார்க்கிறேன்.
உள்ளபடியே சொல்கிறேன்; வருகின்ற பொதுத் தேர்தலில் மக்கள் தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்களின் தலைமையில், மாற்றத்திற்கான மிகப்பெரிய மக்கள் எழுச்சி தமிழகத்தில் உருவாகும். அந்த எழுச்சியே தமிழக அரசியலின் புதிய அத்தியாயத்தை எழுதும்.
நன்றி.
#மாறுவோம்_மாற்றுவோம் #wetheleaders #annamalaitamilnadu #annamalaifortamilnadu #annamalaifans #annamalaibjp #annamalaikuppusamy #annamalaifor #annamalaiips
@annamalai_k
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் https://t.co/bpwUirXkR4 என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வறுமையில் பிறந்து, கடும் உழைப்பால் உயர்ந்த அவர், தனது வாழ்வின் லட்சியமாகக் கருதிய அந்தப் பதவியை அடைந்தார். அப்பதவியில் சிறப்பான முறையில் செயல்பட்டு, அதற்குப் பெருமை சேர்த்ததோடு, "கர்நாடக சிங்கம்" (Lion of Karnataka) என்ற பட்டத்தையும் பெற்றார். ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு குறிப்பிடத்தக்க தலைவராக அவர் திகழ்ந்தார்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன், தனது சொந்த லட்சியங்கள், கனவுகள் மற்றும் தொழில்முறை இலக்குகளை பாதியிலேயே விட்டுவிட அவர் முன்வந்தார். பதவி, அந்தஸ்து மற்றும் வருமானம் ஆகியவற்றைத் துறந்து, மக்களுக்குச் சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்ட ஒரு தன்னலமற்ற தலைவராக அவர் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
ஒரு புயலைப் போல தமிழ்நாட்டிற்குள் நுழைந்த அவர், அரசியல் களத்தை உலுக்கியதுடன், எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் சவாலாகவும் அமைந்தார். சுனாமியைப் போல எழுந்து நின்று, எதிராளிகள் நடுங்கும் வகையில் உறுதியாகத் திகழ்ந்தார்.
அவரது வளர்ச்சியையும் செல்வாக்கையும் பொறுத்துக்கொள்ள முடியாத சில சக்திகளும், அவரை நீக்கினால் மட்டுமே கூட்டணி சாத்தியம் என்று நம்பிய சில எதிர்ப்பாளர்களும், அவரை ஓரங்கட்டுமாறு மத்தியத் தலைமையைத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
யாருக்காக இந்த உன்னதமான மனிதர் ஓரங்கட்டப்பட்டாரோ, யாருடைய வார்த்தைகளுக்கு அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை விட அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ, அவர்களே விரைவில் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவிக்கக்கூடும். அது நிகழும்போது, கட்சிக்காக உண்மையிலேயே அனைத்தையும் தியாகம் செய்தது யார், துரோகம் இழைத்தது யார் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
அவர் நீக்கப்பட்டவுடன் பொதுவாழ்விலிருந்து மறைந்துவிடுவார் என்று பலர் நினைத்தனர். ஆனால், சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போல அவர் மீண்டும் எழுந்து வருவார்.
கரூர் மண்ணில் கண்டெடுக்கப்பட்ட அந்த 'கருப்பு வைரம்' (Black Diamond) மீது தமிழ்நாட்டின் அரசியல் களம் மீண்டும் ஒருமுறை தன் பார்வையைத் திருப்பும்.
ஒரு நல்ல மனிதரின் கண்ணீரும் வியர்வையும் ஒருபோதும் வீண் போகாது. ஒன்று மட்டும் உறுதி: அவரை எதிர்த்தவர்கள் மற்றும் அவருக்குத் துரோகம் இழைத்தவர்கள் அனைவரும் காலப்போக்கில் முக்கியத்துவத்தை இழந்து, தங்கள் அடையாளத்தையே தொலைத்துவிடுவார்கள்.
அண்ணன் @annamalai_k அவர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள், இன்றே இணைந்துகொள்ளுங்கள்!
📌https://t.co/D3poJsqOXr
#wetheleadersfoundation #LeadTheChange #visionwithannamalai #leadership
@WTLFoundation@BjymNilgiris@experienceluv@Bagavathprathee
உங்களின் தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் கரூர் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காமல் ஓடி ஒளிந்தபோது தீயசக்திகளிடம் இருந்து போனாபோகுதுனு காப்பாற்றி விட்டவர் எங்களின் மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள்..
நீங்கள் எல்லாம் வார்டு உறுப்பினர் ஆவதற்கு கூட தகுதியற்றவர்கள் .
மக்கள் தலைவர் திரு. @annamalai_k அவர்களை தமிழகத்தின் முதலமைச்சராக காணும் நாள் வரை எங்களின் அரசியல் பயணம் ஓயப் போவதில்லை.
இது வெறும் ஆதரவு அல்ல;
ஒரு இலட்சியப் போராட்டம்!
மாறுவோம். மாற்றுவோம்..
தமிழகம் வெல்லட்டும்!
#wetheleader#AnnamalaiBJP#Anna2Point0
இன்று ஊடகங்களை சந்தித்து, OBC அணி மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான காரணங்களை மனம் திறந்து விளக்கினேன்.
மேலும், மக்கள் தலைவர் திரு. @annamalai_k IPS அவர்களின் தலைமையில் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றுவேன் என்பதையும் உறுதியாக தெரிவித்துக் கொண்டேன்.
கொள்கையும், நேர்மையும், மக்கள் நலனும் என் அரசியல் பயணத்தின் அடையாளமாக என்றும் தொடரும்.
#AnnamalaiNextCM
#annamalai
வணக்கம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு. @annamalai_k அவர்கள் வெளிப்படுத்திய நேர்மை, துணிச்சல், ஆளுமை, கல்வி அறிவு மற்றும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கான தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, நான் பணியாற்றி வந்த அரசுப் பணியிலிருந்து விலகி அரசியல் பயணத்தைத் தொடங்கினேன்.
அதனைத் தொடர்ந்து, 2022 டிசம்பர் 25 அன்று பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படைத் தொண்டனாக என்னை இணைத்துக் கொண்டு, கட்சி வழங்கிய ஒவ்வொரு பொறுப்பையும் முழு அர்ப்பணிப்புடனும் உண்மையான ஈடுபாட்டுடனும் மேற்கொண்டேன். 2023 ஆம் ஆண்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகவும், 2024 ஆம் ஆண்டு இளைஞரணி மாவட்டத் தலைவராகவும், 2025 ஆம் ஆண்டு முதல் OBC அணி மாநிலச் செயலாளராகவும் பொறுப்பேற்று கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளேன்.
இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் மீது எப்போதும் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவன் நான். அதேவேளையில், தமிழகத்தின் எதிர்கால நலனையும் அரசியல் மாற்றத்திற்கான மக்களின் எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு, எங்களின் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் முன்னெடுத்து வரும் மாற்றத்திற்கான பயணத்திற்கு வலுசேர்க்கும் நோக்கில், இன்று 05.06.2026 முதல் OBC அணி மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் என்பதை மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சி எனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கும், என்னுடன் பயணித்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#wetheleaders #அண்ணாமலை #annamalaifortamilnadu #annamalaitamilnadu #annamalaifans #annamalaifor #annamalaibjp #annamalaikuppusamy #annamalairesign #annamalaiisourhope
வணக்கம்! 🙏 மக்கள் தலைவர் அண்ணாமலை தலைமையில் பணியாற்ற We The Leaders-க்கு வரவேற்கிறோம்.
களப்பணிகள் விரைவில் தொடங்கும். அதுவரை, இயக்கத்தை வளர்ப்போம்: https://t.co/MPswBEKSYb — இந்த இணைப்பைக் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து, அவர்களையும் பதிவு செய்யச் சொல்லுங்கள்.
உயரும் ஒவ்வொரு கரமும் நம்மை வலிமையாக்கும். 💪
#wetheleaders #அண்ணாமலை