@dravidatheee@TRBRajaa சரியான சுட்டிக்காட்டல்! அண்ணன் @TRBRajaa கூறியது போல, எதிரிகளின் தந்திரங்களை முறியடித்து கழகத்தின் உண்மைத் தொண்டர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. தலைமை எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு, கழகத்தின் சாதனைகளை மட்டும் முன்னிறுத்திப் பயணிப்போம்..
@sathrak1967 கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அரசியல் முடிவுகளைப் பற்றி பேசும்போது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தாண்டி, ஆதாரத்தோடும் பொறுப்போடும் பேசுவதுதான் ஆரோக்கியமான அரசியலுக்கு வழி
மாணவர்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு தடை விதிக்கும் வகையில் கல்லூரிக் கல்வி ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையை, கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு தவெக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதேபோல், நேற்று குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சர்ச்சைக்குரிய அறிக்கையும் வெளியாகி திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவின்றி அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களா? அல்லது முதலில் தனது பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும் அதிகாரிகள் மீது பழியைப் போட்டு பின்வாங்குகிறதா இந்த அரசு? ஜனநாயக உரிமைகளை பறிக்க முயற்சிப்பதும், எதிர்ப்பு எழுந்ததும் பின்வாங்குவதும் தவெக அரசில் தொடர்கதையாகிவிட்டது.
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கவும் முடியாது; காவிரி உரிமையை விட்டுக்கொடுக்கவும் முடியாது.
தமிழ்நாட்டின் உரிமைக்காக எங்கள் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்கும்!..@KanimozhiDMK
#DelimitationBill: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் #FairDelimitation என்பதிலும் எங்கள் தலைவர் திரு.@mkstalin தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை.
இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது, முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா?
#CauveryIssue-க்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், #MekedatuDam-க்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சினையைத் திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.
உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?