"இந்தி எழுத்துகளை அழித்தால் வடமாநிலப் பயணிகள் எப்படி ஊர்ப் பெயர்களை அறிந்துகொள்வார்கள்?" என்று 'அறிவுப்பூர்வமான' வினாவை எழுப்பி, தங்கள் இந்தி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் இங்குள்ள பா.ஜ.க.வினர்!
தமிழர்கள் வடமாநிலங்களுக்குச் செல்லும்போது எப்படி அறிந்துகொள்கிறார்களோ அப்படியே அறிந்துகொள்ளட்டும்!
#தமிழ்_வாழ்க!
#StopHindiImposition
#LetterToBrethren
Cont.. 2/2
உத்தம் சிங் தொடர்கிறார்: “இது பாராட்டுவதற்காக அல்ல. நான் அவர்களையெல்லாம் விமர்சிக்கவும் இல்லை. ராஜாவைப் பாராட்டவும் இல்லை. நான் இசையைக் கொண்டாடுகிறேன். ராமசந்திரா.. தனி பாணி.. நௌஷாத் சாப் தனி பாணி.. மதன்மோகன் வேறு ஒரு பாணி… ரோஷன்ஜி ஒரு பாணி… எல்லாரும் Greatதான். சந்தேகமில்லை. அவர்களோடெல்லாம் நான் பணிபுரிந்திருக்கிறேன். அவர்களெல்லாம் யார் என்ன என்று எனக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால் (ராஜாவைக் காட்டி) இவரோடும் இருபது வருடங்களாகப் பயணித்து வருகிறேன். நான் எப்படிச் சொல்லாமல் இருக்க முடியும்..” என்றவர் ராஜாவைப் பார்த்து “நீங்கள் Great என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்” என்கிறார்.
“இதுதான் இவர் பிரச்னை. இவருக்கு இசை தெரியும் என்பதை இவர் ஒப்புக்கொள்ளவே மாட்டார்” என்று உத்தம் சிங் சொன்னதும், “இதெல்லாம் தலைக்குப் போய்விடும்.. உங்களுக்குப் பிடித்தால் பாராட்டிக்கொள்ளுங்கள்… அதற்காக…” என்று போகிறது அந்தச் சண்டை!
கீழுள்ள காணொளியின் முதல் ஐந்து நிமிடத்தின் ஓரளவு நெருக்கமான எழுத்தாக்கம்தான் மேலே. கடைசி சில நிமிடங்கள் வளையோசை பிறந்த கதையை கலகலவெனப் பகிர்ந்திருக்கிறார்… கேட்டுக்கொள்ளுங்கள்!
#ilayaraja #Music #UthamSingh #Ilaiyaraaja