MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முத���மைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா?
தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது.
அன்றாட���் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?
இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட, #DravidianModel ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது.
ஆனால் இன்றைய நிலை என்ன?
இந்தியா முழுவதும் GST வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத Waste ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான Guidance TN-இல் இருந்தும் அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வருகின்றன.
பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.
இவற்றில் கவனம் செலுத்த���மல், விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் என்பது போல எல்லாவற்றிலும் 'வெற்றி' என Sticker ஒட்டினால் போதும் என நினைக்கும் அரசிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவிக்கின்றனர்.
#VoteForDMK #Dharapuram
பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் - என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்?
திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.
குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் க��வலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.
இது தவிர, மயிலாடுதுறை - திருவண்ணாமலை - சேலம் - கன்னியாகுமரி - தேனி கூடலூர் என கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன.
இப்படி கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த Reels ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?
இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங��கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#DummyCM #Murders
எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி!
வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் பல்வேறு அரசிய��் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அ��்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்.
��ேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். அதேபோல், நாளை செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நாளை தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து��துடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்றிட வேண்டும். கழகத்தின் 78-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.
மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகள��� நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநக��ில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.
அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!
தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?
இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?
இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
#Murder
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் தி.மு. கழகத்தின் தலைவராக கழகத் த��ைவர் @mkstalin அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று!
தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டர்களைத் தொய்வின்றி வழிநடத்தி- அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்!
இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த கழகத் தலைவர் தலைமையில் அணிதிரள்வோம்!
#DMK @arivalayam
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்ப��ையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.
இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதி��்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பரந்தூர் விமான நிலையத் திட்ட��்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #ParandurAirport
இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!
101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அம��்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!
மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ���ண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.
சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!
தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க!
#ChennaiDay #MadrasDay
சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
கோவையில் போதை கும்பலை தட்ட��க் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.
போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூக���்திற்கும் விடப்படு��் எச்சரிக்கை.
நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.
குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.
மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.
இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அர��ு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்?
இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
#சட்டம்_ஒழுங்கு
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?
ஆட்சிக்கு முன் - ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலு��் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த #SofaModel அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது.
இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்.
#TNFishermen
மக்களுக்கான திட்டங்கள் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு என முக்கிய அம்சங்கள் ஏதுமின்றி, ���ிருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது #SofaModel அரசு.
மாற்றம் மாற்றம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதையே முழுநேர வேலையாக செய்கிறார்கள் என்பதற்கு இந்த பட்ஜெட்டும் ஒரு சாட்சி.
100 நாள் ஆட்சி எப்படி பூஜ்ஜியமாக இருக்கிறதோ அதைப்போல இந்த திருத்திய பட்ஜெட்டும் மாபெரும் பூஜ்ஜிமயாகவே உள்ளத��.
#Budget
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
���ஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தே���்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசிய�� போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin @arivalayam
காவிரி விவசாயிகளின் கண்ணீர் துடைக்க, மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நீதிமன்றம் என அனைத்து தளங்களிலும் `கழகத்தின் குரல்’ தொடர்ந்து ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய் ஆட்சியை உறக்கத்தில் இருந்து எழுப்பப் போராடுவோம்!
காவிரி, கர்நாடகத்தின் அணையைக் காக்க வழிந்தோடும் `உபரி நீர்’ அல்ல... தமிழரின் உயிரைக் காக்கும் `உரிமை நீர்’!
அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் ��ாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம்.
ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே காரணம்.
சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,
டெ���்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம்.
சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய்
‘உதவும் கைகள் அறக்கட்டளை’ மற்றும் திணை நிலவாசிகள் நாடகக் குழு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு அய்யாவின் சிலையை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அண்ணன் மு.வீரபாண்டியன் அவர்களுடன் இணைந்து திற���்துவைத்தோம்.
அத்துடன், திணை நிலவாசிகள் நாடகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பகு எழுதிய “அம்மாச்சி - கற்பனையின் முதல் ஆசிரியர்” நூலையும் வெளியிட்டோம்.
போராட்டக் குணம் நிறைந்த அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள முதல் சிலையை திறந்து வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
கொள்கையற்ற கவர்ச்சி அரசியல் கூட்டம் உருவாகியுள்ள இந்த காலச்சூழலில், கொள்கையும், லட்சியமும்தான் நம் முதன்மை அடையாளம் என்று வழிகாட்டியவர் அய்யா நல்லகண்ணு அவர்கள்.
அவருடைய வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை இவ்விழாவில் குறிப்பிட்டு பேசினோம்.
நல்லக்கண்ணு அய்யாவின் புகழ் ஓங்கட்டும்.
சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டி��்கிறேன்.
#CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்
#BanNEET
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW
விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று ��ைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்து இருக்கிறார்கள்.
பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக, மக்கள் பிரதிநிதி என்றும் பார்க்காமல், காலை 6 மணிக்கே காவல்த���றையை வீட்டுக்கு அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் SP அலுவலத்தில் அடைத்து வைப்பது உட்ச��ட்ச அடக்குமுறை.
இதே தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க MLA, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில் கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறி வைத்து காவல்துறை கைது செய்கிறது.
எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கே அரசிற்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.
ஆளும் அரசின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற - விமர்சிக்கின்ற மாபெரும் ஜனநாயகக் கடமை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது.
இது புரியாமல், பேசினாலே கைது என்று தொடரும் இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளை செய்தாலும் கழக உடன்பிறப்புகள் ஒர���போதும் அஞ்சமாட்டோம்.
மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவை சந்திக்கப்போவது உறுதி.
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.���ல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர��க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட��டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.