சூலை 11,எதிர்வரும் ஆகத்து17 அன்று நடைபெறும் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை முன்னிட்டு திருவண்ணாமலை - தர்மபுரி - கிருஷ்ணகிரி - ஆரணி - வேலூர் - சேலம் ஆகிய தொகுதிகளின் மண்டல கூட்டத்தில் மக்கள் தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial
அவர்கள் தலைமையில் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவை சுதந்திரமாக செயல்பட பாதுகாப்பு கொடு.!
காரைக்கால் மாவட்ட பாஜக அமைச்சரே பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விவகாரங்களில் தலையிடாதே.! விளையாடாதே.! @collr_karaikal@LGov_Puducherry
மறைந்த திரைப்பட இயக்குனர் அண்ணன் கே.பாக்யராஜ் அவர்களின் திருஉடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன்! அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன்!
இயக்குநர் கே.பாக்கியராஜ் மறைவு:
------------------------------------
தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பு!
----------------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-------------------------------------------
திரைப்பட இயக்குநர் கே.பாக்கியராஜ் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது திருவுடலுக்கு மலர்வளையம் வைத்து விசிக சார்பில் அஞ்சலி செலுத்தினோம். திருமதி பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
கடந்த 2009 ஆண்டு ஈழத்தமிழர்களுக்காக மறைமலை நகரில் நான் உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்டிருந்தபோது அங்கே வந்து என்னை வாழ்த்தி அப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கியவர். அடுத்து, கடந்த 2025 ஆம் ஆண்டு ஆக- 17, எனது பிறந்த நாளான 'தமிழர் எழுச்சி நாள்' அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற 'மதச்சார்பின்மை காப்போம்' என்னும் கருத்தரங்கில் பங்கேற்று வாழ்த்துரையாற்றி எமக்கு பெருமை சேர்த்தவர். என் மீதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் பற்றுக் கொண்டவர். விசிக ஒரு வலுவான அரசியல் சக்தியாக வளரவேண்டுமென அப்போது எம்மை ஊக்கப்படுத்தியவர். இன்று எம்மோடு இல்லை என்பது வெறுமையாய் உள்ளது.
திரையுலகில் பன்முக ஆற்றல் கொண்ட ஒரு பேராளுமையாக விளங்கியவர். இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களும் இவரும் அன்றைய காலகட்டத்தில் மக்களின் மனம்கவர்ந்த படைப்பாளர்களாகக் கொடிகட்டி பறந்தவர்கள். பாரதிராஜா அவர்களின் மறைவை அடுத்த சில வாரங்களில் பாக்யராஜ் அவர்களும் காலமானார் என்பது இருவருக்கும் இடையே உள்ள இணைபிரியா உறவை இயற்கையும் அங்கீகரித்துள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.
இயக்குநராகாவும் நடிகராகாவும் இசையமைப்பாளராகவும் வசனகர்த்தாவாகவும் என பன்முகத் திறன்களைப் பெற்ற இவர், திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்து தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்றார்.
திரைக்கதையை அமைப்பதில் இவருக்குள்ள திறன் இவருக்கேயான தனிச் சிறப்பு ஆகும். அத்துடன், மேனாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் தனது 'கலையுலக வாரிசு' என பாராட்டப் பெற்றவர்.
கலை, இலக்கியம் , பத்திரிகை மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். 1989 காலக் கட்டத்தில் மேனாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்மீது கொண்ட பற்றுதலினால், 'எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்னும் கட்சியைத் தொடங்கி அரசியல் தலைவராகவும் சிலகாலம் செயலாற்றினார். அதாவது, கலைப்பணிகளோடு
தன்னைச் சுருக்கிக்கொள்ளா மக்கள் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இயக்குநர் கே.பாக்கியராஜ் அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்திற்கே நேர்ந்த பேரிழப்பாகும்.
இயக்குநர் கே.பாக்கியராஜ் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்!
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
இன்று தலைகீழாக மாறியுள்ள அரசியல் சூழலில் விசிக தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மாறியுள்ளது
- விசிக தலைவர் திருமாவளவன்
#thirumavalavan#VCK#News18TamilNadu
▶️WATCH NOW || https://t.co/nKfy0at4qg
மாநகராட்சிகளில் தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும்!
'தங்க மோதிரம் திட்டத்தை' மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
சட்டப் பேரவைக்கான மரபையும் முதலமைச்சருக்கான மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
--------------------------------
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பதற்குத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அதனை எதிர்த்து விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடின. பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. தமது உயிரைப் பணயம் வைத்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்து, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தவெக'வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. எஞ்சிய 44 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட ரூ.50 ஆயிரம் முதல்
ரூ. ஒரு இலட்சம் வரையில் வசூலிக்கின்றனர். சிசேரியன் என்னும் அறுவை மூலம் நடக்கும் பிறப்பு எனில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.
இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மேனாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
காரைக்கால் மாவட்ட நிர்வாகமே.!
வனத்துறையே.!
பசுமையான அலையாத்திமரக்கன்றுகளை JCB இயந்திரம் வைத்து அழித்த நபர் மீது இந்திய வனப்பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடு. @collr_karaikal@LGov_Puducherry@velichamtvtamil@thirumaofficial
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. #VCK | #Thirumavalavan | #TNGovt | #VelichamTV | Thol.Thirumavalavan
புதுச்சேரி மாநிலத்தில் கலை, அறிவியல், தொழிற்முறை படிப்புகளின் மேல்நிலை தேர்ச்சி விகிதத்திற்கு ஏற்ற போல சேர்க்கை எண்ணிக்கையை உயர்திடுக.
அதே போல், தொழிற்முறை கல்வி, இளநிலை கல்வி படிப்புகளின் ஆண்களின் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்திட வேண்டுகிறேன்.
@LGov_Puducherry@collr_karaikal
புதுச்சேரி அரசு.!
காரைக்கால் மாவட்டம் நிர்வாகமே.!
மண்டல அளவிலான அதிகாரிகள் அடங்கிய ஆதார் குறை தீர்ப்பு கூட்டம் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரைந்து நடத்திட வேண்டுகிறேன். @collr_karaikal@LGov_Puducherry
"இந்தியா கூட்டணி என்னும் மதச்சார்பின்மைக்கான தேசிய அளவிலான கூட்டணி அமைந்ததில் திமுகவின் பங்கு மகத்தானது. அவர்கள் இல்லாமல் இந்தியா கூட்டணி முதல்முறையாக கூடுகிறது என்பது உள்ளபடியே கவலையளிக்கக் கூடிய ஒன்று. அதற்காக வருந்துகிறோம்." - #தலைவர்_திருமாவளவன்#Thirumavalavan | #VCK |
ஜூன் 5, கண்ணியத்தமிழர் காயிதே மில்லத் பிறந்த நாள்!
விடுதலைச்சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கம்!
சமூகநல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாள் முழுவதும் களமாடிய ஒப்பற்றத் தலைவர் மாமனிதர் காயிதேமில்லத் அவர்களின் பெயரில் விருது வழங்கிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
- தொல்.திருமாவளவன்
சமத்துவப் பெரியர் முத்தமிழறிஞர் கலைஞர்அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எமது செம்மாந்தவீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
சமூகநீதி மண்ணாய்த் தமிழகத்தைச் சமைத்த மகத்தான கருத்தியல் பேராளுமை கலைஞர். பெரியாரின் கனவை நனவாக்கும் வகையில் சமத்துவபுரம் கண்ட சமூகப்புரட்சியாளர் கலைஞர்.
உயர்கல்வி மேம்பாடு, தகவல் தொழில் நுட்பம், எளியோருக்கான அதிகாரவலிமை போன்றவற்றை நிலைநாட்டி, புதியதொரு தமிழ்நாட்டைச் செதுக்கிய அவரது போற்றுதலுக்குரிய பங்களிப்பை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்வோம்!
நம் கட்சியை குறி வைத்து சில அறமற்ற ஊடகங்களும் , பிழைப்புக்காக டிஜிட்டல்,உலகில் கவனம் பெறத் தவிக்கும் சில மூன்றாந்தர சின்ன சின்ன ஊடகவாதிகளும் தொடர்ந்து விவாதங்களை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அண்மைகால அரசியல் முடிவுகளையடுத்து வேறெப்போதையும் விட நம் தலைவர் கட்சித்தோழர்களால் மிகவும் கொண்டாடப்படுகிறார் என்பதை நாடே பார்த்துக்கொண்டிருக்கும் போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் குழப்பம் நிலவுவதைப்போலவும் , இரண்டாங்கட்ட தலைவர்கள் நம் தலைவருக்கு நெருக்கடி தருவதாகவும், மொத்தத்தில் தலைவர் கட்டுப்பாட்டில் கட்சி இல்லாததைப்போன்ற ஒரு தவறான மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
இது ஒரு இயல்பான, ஏதேச்சையான உரையாடலா அல்லது திட்டமிடப்பட்ட அரசியல் சதியா என்ற கேள்வி எழுகிறது.
இரண்டாம் நிலை பொறுப்பாளர்கள் மீது அவதூறுகளும் அபாண்டமான பொய்செய்திகளும் அதி பயங்கரமாக பரப்பப்படுகின்றன. இது கட்சி மீதான பொறுப்புணர்ச்சியா அல்லது நம்மை பலவீனப்படுத்த முனைவோரின் காழ்ப்புணர்ச்சியா என்பதை நாம் தெளிவாக புரிந்து கொண்டு களமாட வேண்டிய தருணம் இது.
தோழர் பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச் போட்டவர்கள் அதைத்தொடர்ந்து தோழர் @aloor_ShaNavas எதிராக குரைக்க தொடங்கி இருக்கிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் நம் தலைவர் கர்ஜித்ததையோ சட்டமன்றத்தில் நாம் சாதித்ததையோ அல்லது தமிழ்நாட்டில் நடந்த எந்த ஆணவப்படுகொலைகளையோ கடைசி பக்கத்தில் கூட பதிவுசெய்யாத @JuniorVikatan இதழ் கரிசனையோடு முதல் பக்கத்திலேயே அல்லது நடுப்பக்கத்திலேயே தலைவர் தடுமாறுகிறார் என்பதைப்போல விஷத்தை கக்கிக்கொண்டிருக்கிறது.
உடனே சொல்லி வைத்தார்போல முகமூடியணிந்த சாதிய சனாதன சக்திகள் பக்கவாத்தியம் இசைத்து ஆர்பரித்து அணி திரள்கிறார்கள். இவர்கள் ஏதோ ஒருப்புள்ளியில் கை கோர்க்க தொடங்கியுள்ளனர் என்பதை நம்மால் தெளிவாக அவதானிக்க முடிகிறது.
1. இவர்கள் எதை நிகழ்த்த விரும்பினாலும் முதலில் அதற்கு சாதகமான ஒரு narrative வை மாய டிஜிட்டல் உலகில் கட்டமைக்கிறார்கள்.
2. பிறகு சமூக ஊடகங்களில் fake ID கள் மூலமாக அந்த உரையாடலை boost செய்கிறார்கள்.
3. இவர்கள் டார்கெட் செய்ய விரும்பும் கட்சியில் உள்ள சில அதிருப்தியாளர்களின் சமூக வலைதள பக்கங்களை ஹேக் செய்து அவர்களை மூளை சலவை செய்கிறார்கள்.
4. அவர்கள் மூலமே அக்கருத்தை பரப்பி அதை அக்கட்சியின் பெரும்பான்மை கருத்து என்பது போன்ற பொய்த்தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
5. கூடவே கவனம் பெறத் தவிக்கும் சில மூன்றாந்தர அரைவேக்காட்டு ஊடகவாதிகளை விட்டு அதை கொஞ்சம் கூட அரசியல் நாகரிகம் இல்லாத அருவருப்பான மொழியில் youtube debate ஆக்குகிறார்கள்.
6. யாரை இவர்கள் குறி வைத்தார்களோ அவர் அமைதியாகவே இருந்தாலும் கூட அவரை கழுவி கழுவி ஊத்துகிறார்கள்.
7. எப்படியோ ஒரு மாய நெருக்கடியின் மூலம் தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டு அப்பழியை திமுக மீது வசதியாக போட்டு தங்கள் அரசியல் அஜெண்டாவை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். ( தேர்தலில் தோற்றுள்ள ஒரு கட்சியை தொடர்ந்து குதறுவது நம் எதிரி சாதிய சனாதன சக்திகள்தான் என்பதை மடை மாற்றம் செய்யும் ஒரு உத்தியே அன்றி வேறென்னவாக இருக்க முடியும் )
நவீன மாஃபியா கும்பலின் இந்த செயல் திட்ட சூத்திரங்களையும், அவை அரங்கேற்றப்பட்ட விதத்தையும் அண்மைகால நிகழ்வுகளோடு நடு நிலையாகயும் , பொறுப்புணர்வோடும் நாம் விருப்பு வெறுப்பின்றி பொருத்திப்பார்த்தால் இதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
வெளிப்படையாய் தெரியும் எதிரிகளை எதிர்த்து களமாட கற்றுத்தேர்ந்த சிறுத்தைகள் உதிரிகளைப்போலத்தோன்றும் நம் கொள்கைப் பகைவர்களை அடையாளம் காண்பது மிக அவசியமானது.
சாதி வெறியும் சனாதன சூழ்ச்சியும் புதிய வடிவம் எடுத்துள்ளன. நவீன social media யுகத்திற்கு ஏற்ப அவை தங்களை தகவமைத்துக்கொண்டுள்ளன.
அன்று குடிசையை எரித்தவர்கள் , இன்று நமது நம்பத்தன்மையை, நாற்பதாண்டுகால அரசியல் நன்மதிப்பை பொசுக்க கூடி விட்டார்கள்.
அன்று அவர்கள் கையில் தீ பந்தம். இன்று சோஷியல் மீடியாவும், fake Id களும், பின்புலத்தில் கார்ப்பரேட் மாஃபியாகளும்.
காலில் செருப்பு போட்டதும் ஜீன்ஸ் அணிந்ததும் அன்று அவர்கள் கண்ணை உறுத்தியது.
இன்று நம் தலைவரின் கருத்தியல் ஆளுமையும், அவர் இந்திய அரசியலில் கவனம் பெறுவதும் அவர்களின் நெஞ்சாங்குலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தோழர்களே, நம் கட்சியில் குழப்பம் நிலவுவதைப்போன்ற தோற்றத்தை உருவாக்க ஊளையிடும் இந்த youtuberகளை கவனமாக கண்காணியுங்கள்.
எல்லாமே வலதுசாரி கும்பல்கள். கடந்த எந்த காலத்திலும் எந்த ஆணவப்படுகொலையின் போதும் சிறு குரல் எழுப்பாதவர்கள்.
(1/2)