ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையோடு், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையும், மாற்றுதிறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட சமூகநீதி சமூகங்களின் நலத்துறைகளின் ஒருங்கிணைந்த அமைச்சகமாக அமைந்தால் தான் அது “சமூகநீதித் துறை”.
சாதிவாரி கணக்கெடுப்பை விசிக முழுமையாக ஆதரிக்கிறது.
விசிக அமைச்சர் @VanniTamizhVCK அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்துவார் என தலைவர் @thirumaofficial அறிவித்துள்ளார்.
மாறுபட்ட நிலைப்பாட்டால் பாமக வின் அணைத்துகட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, அழைப்பிற்கு நன்றி @draramadoss
I am wondering what protocol is there in lighting the lamp. I am sure this act of Mayor Priya @PriyarajanDMK will never be appreciated or tolerated by DMK LeaderAnnan @mkstalin
அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கும், ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தால் பிற மாவட்ட அமைச்சர்கள் பொறுப்பளிப்பதும் சரி, ஆனால் 7 தொகுதியுள்ள விழுப்புரம் மாவட்ட அமைச்சர் வன்னி அரசு அவர்களை 4 தொகுதியுள்ள கள்ளக்குறிச்சிக்கு நியமனம் சரியா? @CMOTamilnadu@TVKVijayHQ
இன்று (26.05.2026) சென்னை தாட்கோ தலைமை அலுவலகக் கூட்டரங்கில் எனது தலைமையில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து தாட்கோ அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி. ரவிக்குமார், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் டாக்டர்.ந. சுப்பையன் இ.ஆ.ப., ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு.க.சு. கந்தசாமி இ.ஆ.ப., ஆதிதிராவிடர் நல இயக்குநர் டாக்டர் கி. செந்தில் ராஜ் இ.ஆ.ப., சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.ம. சிந்தனை செல்வன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்
#சமூக_நீதித்துறை
#TAHDCO
#தமிழ்நாடு_அரசு
"தி.மு.கவிற்கு ஆதரவு கொடுத்தாலும் விமர்சிப்பார்கள், வேறு நிலைப்பாட்டை எடுத்தாலும் விமர்சிப்பார்கள்.." ஆ.ராசா கருத்து குறித்து திருமாவளவன் கருத்து
#Thirumavalavan | #VCK | #Raja | #DMK | #Politics | #PolimerNews
பக்ரீத் பெருநாள்:
----------------
சோதனைகளைத் தாங்கும் உள்ளமும்
ஈகம் செய்யும் அர்ப்பணிப்பும் வளர வேண்டும்!
இசுலாமியப் பெருங்குடி மக்களுக்கு வாழ்த்துகள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இசுலாமியப் பெருங்குடி மக்களால் போற்றப்படும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளில் இசுலாமியர்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நபிகள் நாயகத்திற்கும் முன்னோடியான இப்ராஹிம் நபி அவர்கள் தன் வாழ்வில் நேர்ந்த சோதனைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட பெருமகன் ஆவார். தான் ஏற்றுக்கொண்ட இறைநம்பிக்கை கொள்கைகளுக்காக தனது ஆருயிர் மகன் இஸ்மாயில் நபி அவர்களையே பலியிடத் துணிந்தார் என்றும்; அப்போது இறைவன் இப்ராஹிம் நபி அவர்களைத் தடுத்தாட்கொண்டு அவரது மகனைப் பலியிடும் செயலைத் தடுத்துநிறுத்தியதோடு, மாறாக ஆட்டுக்கிடாவைப் பலியிடுமாறு ஆணையிட்டார் என்றும்; அந்த இறைநம்பிக்கை , இறைப்பற்று, மகனையே ஈகம் செய்திட முன்வந்த துணிச்சல் ஆகியவற்றை நினைவுகூர்ந்து போற்றிடும் வகையில், இசுலாமியர்கள் இந்த நாளை பக்ரீத் பெருநாளாக்க் கொண்டாடி வருகின்றனர். இதனை 'குர்பானி' எனவும் கொண்டாடுகின்றனர்.
இறைவனின் சோதனைகளைத் தாங்கும் நெஞ்சுறுதியும், தன் மகனையே தியாகம் செய்ய முன்வந்த ஈக உணர்வும் இப்ராகிம் நபி அவர்களிடத்தில் மேலோங்கியிருந்ததை நபிகள் நாயகம் முகமது நபி அவர்கள் உட்பட, அவரைத் தொடர்ந்து இஸ்லாமியப் பேரினம் என்றென்றும் நெஞ்சில் இருத்திப் போற்றி வருகிறது என்பது பக்ரீத் நாளின் மகிமையும் பெருமையும் ஆகும்.
எத்தகு சோதனைகளையும் தாங்கும் மனவலிமையும், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக எதனையும் இழக்கத் துணியும் அர்ப்பணிப்பும் நம்மைப்போன்ற யாவருக்கும் வளர்ந்திட வேண்டும் என்பதே நமக்கு இந்தப் பெருநாள் உணர்த்தும் அறமாகும்.
இத்தகைய போற்றுதலுக்குரிய ஈகத் திருநாளில், ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான 'ஹஜ் என்னும் புனித மெக்கா பயணத்தை' மேற்கொள்ளும் ஹாஜிகள் உள்ளிட்ட இஸ்லாமியர் யாவருக்கும் எமது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
Thol. Thirumavalavan | இதுதான் முதல்முறை
விசிகவின் தொடர் முன்முயற்சியால் நெல்லையில் ஆணவப் படுகொ*ல செய்யப்பட்ட கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்திருக்கிறது
வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் உதவி மேலாளர் பதவி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை!
- விசிக தலைவர் திருமாவளவன்
VCK | Kavin Case | Nellai | Sipcot
#Thirumavalavan | #VCK | #KavinCase | #Nellai | #Sipcot | #TamilNews | #NewsTamil24x7
கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின் அவர்களின் அம்மா மற்றும் தம்பி ஆகியோர் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் முன்முயற்சியினால் கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்திருக்கிறது.
வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் முதன் முதலாக உதவி மேலாளர் பதவி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை!
அரசு வேலைக்கான நியமன ஆணையை என்னிடம் காண்பித்து தம்பி கவினின் குடும்பத்தினர் நன்றி கூறினர்!
பெட் ரோல் டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
பெட் ரோல் டீசல் விலையை நான்காவது முறையாக ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ளது. இன்று ஒரே நாளில் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு மக்கள் மீது சுமத்தப்படும் அநீதியான சுமையே ஆகும். இதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படவுள்ள நிலையில், கடந்த வார சரிவைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை இன்று ஒரு பீப்பாய்க்கு 91 டாலரை நோக்கி சுமார் 5% சரிந்துள்ளன. அமெரிக்க - ஈரான் இடையே ஏற்படுத்தப்படப் போவதாகக் கூறப்படும் இந்த ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், போர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், முடக்கப்பட்ட சில ஈரானிய சொத்துக்களை விடுவிப்பதற்கும், மற்றும் தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் கூடுதல் பேச்சுவார்த்தைகளுக்கும் வழிவகுக்கும் என்று அறிக்கைகள் சுட்டிக்காட்டின. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறப்பது இந்தியா உள்ளிட்ட முக்கியமான ஆசிய நாடுகளின் பொருளாதாரங்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகளில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகச் செல்வதால், இது எண்ணெய் விலைகளை கணிசமாகக் குறைக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2 வாரங்களில் இல்லாத அளவுக்கு இன்று சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு 92 டாலர் என விற்கப்படுகிறது. இதையொட்டி இங்கும் பெட் ரோல் டீசல் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்திருக்கும் சூழலில் ஏழை எளிய மக்களின் மீது சுமையை அதிகரிக்கும் விதமாக மோடி அரசு இன்று ஒரே நாளில் பெட் ரோல் டீசலில் லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் விலையை உயர்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் எந்தவிதத் தர்க்கமோ நியாயமோ இல்லாமல் இங்கே விலையை உயர்த்துவது ஏற்புடையது அல்ல. எனவே இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறோம்.
இவண்
தொல். திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விசிக
மேகேதாது அணை விவகாரம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
~~~~~~~~
மேகேதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
காவிரி பிரச்சினை என்பது தமிழ்நாடு தழுவிய பிரச்சினையாக இருப்பதாலும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாக இருப்பதாலும் அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் கேட்டு முடிவெடுப்பது நல்லது. எனவே, சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு அமையவேண்டும்.
தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, தமிழ்நாடு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி மட்டுமே செய்துள்ளது.
இதன் மூலம் உச்ச நீதிமன்றம் 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் மேக்கேதாட்டு அணை கட்டுமானத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி எதுவும் அளிக்கவில்லை. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு ( DPR) அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது. அன்றைய தலைமை நீதிபதி கவாய் வழங்கிய அந்தத் தீர்ப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
“கர்நாடக மாநிலத்தால் தயாரிக்கப்படவுள்ள விரிவான திட்ட அறிக்கையானது (DPR), காவிரி மேலாண்மை வாரியத்தின் (CWMA)-ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே காவிரி நதிநீர் ஆணையத்தால் (CWC) பரிசீலிக்கப்படும்; ஏனெனில், விரிவான திட்ட அறிக்கையைப் பரிசீலிப்பதற்கு காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் (CWMA) முன் ஒப்புதல் ஒரு முன்நிபந்தனையாக இருக்க வேண்டும்.“ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே, விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் நிலையிலேயே அணை கட்ட ஒப்புதல் கிடைத்ததாக அர்த்தம் கிடையாது.எனவே, கர்நாடக அரசால் பூமி பூஜை நடத்த இயலாது. இது கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமாரின் ஒரு அரசியல் நாடகமே தவிர வேறொன்றும் இல்லை.
திரு டி.கே.சிவக்குமாரின் பேச்சின் அடிப்படையில் நாம் பதற்றமடைய வேண்டாம். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்திடம் நமது தரப்பு நியாயங்களை ஆதாரங்களோடு எடுத்துக் கூறி, கர்னாடக அரசு தயாரிக்கும் விரிவான திட்ட மதிப்பீட்டுக்குக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுக்க வேண்டியதே நம் முன்னால் இருக்கும் முக்கியமான உடனடிக் கடமையாகும்.
காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடையே ஒன்றுபட்ட அரசியல் நிலைபாடு தேவை. அதை ஏற்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே சாலச் சிறந்த வழியாகும். இதை மாண்புமிகு முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
தொல். திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விசிக
மேகேதாது அணை விவகாரம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
~~~~~~~~~

தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விசிக.