ஆட்சிக்கு வந்து முதல் நாளிலேயே பணி நிரந்தரம் செய்வோம் என்று உறுதியளித்து வாக்குகளைப் பெற்றுவிட்டு, அதனை நிறைவேற்றக்கோரினால் கைது செய்வதா? செவிலியர்களுக்குச் செய்த துரோகத்திற்கு தவெக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் போராடிய செவிலித் தங்கைகளை காவல்துறையைக் கொண்டு வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ள தவெக அரசின் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நோயுற்ற மக்களை இரவும் பகலும் கண் விழித்து காக்கும் தாயினும் சிறந்த செவிலியர்களை, உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது மிகுந்த வேதனைக்குரியது. செவிலியர் தங்கைகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தவெக அரசு, சிறிதும் மனச்சான்றின்றி காவல்துறை ஏவி அடக்கி ஒடுக்கி கைது செய்வது வெட்கக்கேடானது!
கடந்த ஆட்சியில் இதே வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காகச் செவிலியர்கள் போராடியபோது ஆதரவு தெரிவித்த தவெக, ஆட்சிக்கு வந்தால் முதல் நாளிலேயே பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதியும் அளித்தது. அன்று நியாயமாகத் தெரிந்த செவிலியர் கோரிக்கைகள், இன்று அதிகாரத்தில் அமர்ந்ததும் செல்லாததாகிவிட்டதா?
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு; ஆளுங்கட்சியானதும் இன்னொரு நிலைப்பாடு என்பதுதான் தவெகவின் சந்தர்ப்பவாத அரசியலா? கொரோனா காலத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்களை காத்த செவிலித்தங்கைகளை காயப்படுத்துவது நியாயம்தானா? அன்றைக்கு தேவதைகளாக தெரிந்தவர்கள் இன்றைக்கு தேவையில்லாதவர்கள் ஆகிவிட்டார்களா? அதிலும், பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி, தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட செவிலியர்களின் ஐந்து பிரதிநிதிகளைக் கைது செய்ய தவெக அரசு முயல்வது அதிர்ச்சியளிக்கிறது. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தவர்களைக் கைது செய்வது, இனி அரசின் வார்த்தையை மக்கள் நம்ப முடியாத நிலையை உருவாக்கும் கொடுஞ்செயல்! பேச்சுவார்த்தை என்ற பெயரில் போராட்டப் பிரதிநிதிகளைச் சிறைப்பிடிப்பது சனநாயக அரசுக்கு இழுக்காகும்.
வாக்குகளைப் பெறுவதற்கு ஆதரவு! வாக்குறுதியை நிறைவேற்றக் கேட்டால் கைது! இதுதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறிய மாற்று அரசியலா? இதுதான் தவெக அரசு பெண்களை காக்கும் முறையா? வீதியில் கதறும் செவிலித்தங்கைகளின் கண்ணீருக்கு முதல்வர் விஜய் அவர்கள் என்ன பதில் கூறிப்போகிறார்? செவிலியர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, அவர்களையே காவல்துறையால் அடக்குவது அப்பட்டமான நம்பிக்கைத் துரோகம் இல்லையா? இதுபோன்ற துரோகங்களை அரசு செய்தால் அரசின் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? வருங்கால இளந்தலைமுறை பிள்ளைகள் இனி அரசின் வார்த்தையை நம்ப எப்படி மக்கள் தொண்டு செய்ய முன்வருவார்கள்?
அரசு மருத்துவனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தர நிதி இருக்கும் அரசிடம், அந்த குழந்தைகளை நல்லபடியாக பிறப்பிக்கும் செவிலித்தாய்களுக்கு உரிமை வழங்க பணம் இல்லையா? மக்களின் உயிரைக் காக்கும் செவிலியர்களுக்குத் தங்களுடைய பணிக்கும் வாழ்வுக்கும் பாதுகாப்பு கேட்க உரிமை இல்லையா? அவர்களின் உழைப்பைப் பெறத் தெரிந்த அரசுக்கு, அந்த உழைப்பிற்குரிய ஊதியத்தையும், மரியாதையையும் வழங்கத் தெரியாதா?
ஆகவே, தவெக அரசு இனியும் வெற்று வாய்மொழி உறுதிகளை வழங்கிக் காலம் கடத்தாமல், பணிநிரந்தரம், உரிய ஊதியம் உள்ளிட்ட செவிலியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், போராடும் செவிலித்தங்கைகளின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முழுமையாக திரும்பப்பெற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பொய் தவிர உமக்கு ஒன்னும் தெரியாதா வோய்…?
AI யா இல்லையான்னு கண்டுபிடிக்க 5 நிமிடம் தான் ஆகும்…
மக்களுக்கு தேவையானதை செய்யாம விளம்பர பைத்தியம் பிடிச்சு அலையாத யா….
த.வெ.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு படுதோல்வி!
சென்னை முதல் ஈரோடு வரை தொடரும் படுகொலைகள் மற்றும் குற்றச் சம்பவங்களால், பொதுமக்களைக் காக்கத் திராணியில்லாத திறனற்ற அரசாக த.வெ.க அரசு மாறியுள்ளது.
#LawAndOrderFail#TVKVijayFails#DummyCM#TVKCrimes
ஆட்சிக்கு வந்தே ஆறே மாதத்தில் ஆடாத ஆட்டம் ஆடிய ஆனானப்பட்ட நடிகை ஜெயலலிதா மாட்டுனது டான்சி நிலம் உட்பட பல வழக்குல..
ஆனா அந்த வழக்குகளில் முதல் தண்டனையை நடிகை ஜெயலலிதா பெற்றது கொடைக்கானல் ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குலதான்...
இதோ போன்று இப்போ நம்ம அழகு நடிகர் ஆட்சிக்கு வந்த நாலாவது மாசத்துலயே அதே கொடைக்கானலில் ஜெயலலிதாவை போனறே ஒரு நில விவகரத்துல தொக்கா சிக்கி இருக்கார்.
தொக்கா மாட்டுனடா ...😆
ஒரு பக்கம் அமைச்சர் கார்ல போறாரு நீங்க வீடியோ எடுத்தீங்கனு காரை பிடிச்சு நிப்பாட்டுறாங்க..
ஒரு பக்கம் என்ன டானா ஐந்து பேர் கூடி நின்றாலே கைது பன்னுவோம்னு மிரட்டுறாங்க..
நடப்பது என்ன சர்வாதிகார ஆட்சியா..!? 😡
கருப்பு சிவப்பு கொடி கட்டிவர கார்களை மட்டும் நிறுத்தி மிரட்டுவீங்களா?
அமைச்சர் போகும்போது வீடியோ எடுக்கக்கூடாதுன்னு அராஜகம்..
அமைச்சர்னா என்ன வானத்திலிருந்து குதிச்சு வந்தாரா?
ரீல்ஸ் ஆட்சியில திமுகவிற்கு மட்டும் வீடியோ எடுக்க தடை..
நல்லா இருக்கு உங்க நாயம்🤦♀️🤦♀️🤦♀️
தாய்மாமன் தங்க மோதிரம் வாங்க காலை முதல் இரவு வரை காத்திருந்த தாய்மார்கள்.. சர்வர் பிராப்ளம் என கூறியதால் வாக்குவாதம்..
இரவு 8 மணி அளவில் மோதிரம் வழங்கப்பட்டது!
TN Govt | Viral News
#Ranipetai#GovtHospital#GoldRingScheme
தவெக ஒரு கட்சியா இல்லை பாலியல் கூடாரமா? தினம் தினம் செய்திகளில் தவெகவினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன! பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவரை காவல்துறை சிரித்துப் பேசி அரவணைப்பது எந்த மாதிரியான நீதி?
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து சிகப்பு கம்பளம் விரிப்பது போலவும், சகஜமாக சிரித்து பேசுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு காவல் நிலையம் சென்றால் அலைக்கழிக்கப்படுவதும், குற்றவாளிகள் விருந்தினர்கள் போல நடத்தப்படுவதும் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
#TVKFailsTN
"இது இன்னைக்கு நடக்கல, டெய்லி இப்படி தான் கரெண்ட கட் பண்ணிடுறாங்க.. நாங்க எப்படி நைட்ல தூங்குறது? தண்ணி வசதி இல்ல எதுவும் இல்ல.. EB-க்கு ஃபோன் பண்ணா Switch Off"... சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மின்சாரம் இல்லாமல் அவதி - ஆத்திரத்தில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
#Chennai | #Washermanpet | #TNEB | #Electricity | #Protest | #PolimerNews
#WATCH | “உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” -போர்ச்சுகலில் நடக்கும் கார் பந்தயத்திற்கு ஆதரவு கோரி வீடியோ வெளியிட்ட ரேஸர் அஜித்குமார்
#SunNews | #AjithKumarRacing | #Portugal
As expected, Sofa journalists did not open their mouths to this threat from the police officials.
Imagine if this happened during the DMK regime, no one could control the Sofa journalists.