திமுகவின் மற்றொரு முகமாக தான் தவெக வந்திருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை இதன்மூலம் நிரூபணம் ஆகியுள்ளது..!
கோவிலில் உள்ள தங்கத்தை ஆக்கிரமிக்க திமுக முயன்றது, நிலத்தை ஆக்கிரமிக்க தவெக முயல்கிறது., இந்துக்களிடையே ஒற்றுமை என்ற ஒன்று இல்லாததால் நினைத்தது போல ஆடிக்கொண்டு இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்..!
#TVKFails
உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும் தானா?
“கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல, அரசியலின் மேடை அல்ல” என்று நீங்கள் நீட்டி முழக்கி, இன்னும் ஒரு நாள் கூட முழுதாக முடிவடையவில்லை, அதற்குள் இன்று கரூரில் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் பங்கேற்ற விழா, பள்ளிக்கூடங்களில் “நேரலை”யில் ஒளி பரப்பப்படுவதாக காணொளி வெளியாகியுள்ளது.
சட்டமன்ற விவாதங்களை தடையின்றி நேரலையில் ஒளிபரப்ப முடியாத உங்கள் @TVKPartyHQ அரசு, தவெகவின் கட்சி நிகழ்வுகளை மெனக்கெட்டு அரசுப் பள்ளிகளில் நேரலை செய்வது அருவருப்பான அரசியல் வியூகம். பள்ளிக் கூடங்களையும், படிக்கும் மாணவர்களையும், கட்சி தூதுவர்கள் போல பாவிக்கும் தவெகவினரின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.
இல்லை தெரியாமல் தான் கேட்கிறோம், வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, பிள்ளைகளை பார்க்கச் செய்யுமளவிற்கு இன்றைய கரூர் நிகழ்வு என்ன அறிவார்ந்த அரசு நிகழ்ச்சியா? அல்லது அனுபவம் வாய்ந்த அறிஞர்கள் பங்கேற்ற அறிவியல் விவாத மேடையா? தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்கு, திரு. ஜோசப் விஜய் அவர்கள் பாவ மன்னிப்பு கேட்கும் “Personal Event” தானே?
மற்ற கட்சிகளை குறை கூறி, தங்களை புனிதராக நிறுவ முற்படும் தவெகவின் கட்சி நிகழ்வை, அரசுப் பள்ளிகளில் நேரலையில் ஒளிபரப்புவதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? அந்தளவிற்கு விளம்பர மோகம் உங்களை வாட்டி வதைக்கிறதா? அல்லது எப்படியும் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தில் மீண்டும் குழந்தைகளை குறிவைக்க முயற்சிக்கிறீர்களா?
கடந்த 40 ஆண்டுகளில் நியூசிலாந்திற்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற வகையில், திரு. @narendramodi அவர்களுக்கு அவரது முதல் பயணத்தின்போது உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் கடுவன்குடி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் திருக்கோவிலின் திரிசூல பத்ரகாளி சிலை, நந்தியின் கருங்கல் சிலை மற்றும் கும்பகோணம் அருகேயுள்ள நாகநாதசுவாமி திருக்கோவிலின் ஆறு முகமுடைய சுப்பிரமணிய சுவாமி சிலைகள் உள்ளிட்ட 11 மற்றும் 12-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த நம் பொக்கிஷங்களை மீண்டும் தமிழகத்திற்கு மீட்டுக் கொடுத்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து காணாமல் போன ஆனைமங்கலம் செப்பேடுகள் உள்ளிட்ட பல பாரம்பரியச் சிலைகளையும், கலாச்சாரச் சின்னங்களையும் மீட்டு, நமது அடையாளங்களைப் போற்றிப் பாதுகாத்து வரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் தமிழ்ப் பற்று நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழை வெறும் அரசியல் மொழியாக மட்டுமே சிலர் பயன்படுத்தி வரும் நிலையில், தமிழ் மொழியையும் அதன் ஆழ்ந்த கலாச்சாரப் பெருமைகளையும் கொண்டாடுபவர் நமது பிரதமராக வாய்த்தது, நாம் செய்த பெரும் புண்ணியம்.
இதன்மூலம் அமைச்சர் @rajmohan குதிரைபேரம் நடக்கவில்லை விஜய் ஈர்ப்பு விசையால் அவர்களே வருகிறார்கள் என்று சொல்கிறார்.,
ஆனால் நடப்பது என்ன என்பது மக்களுக்கு தெளிவாக தெரிகிறது அமைச்சரே.. புவிஈர்ப்பு, விஜய் ஈர்ப்பு என பட்டிமன்ற பேச்சுக்களை விட்டுவிட்டு மக்களுக்கு தேவையானதை செய்ய முயலுங்கள்..!
#TVKFails
இன்று கரூரில் முதல்வர் @TVKVijayHQ பேசிய பேச்சு பள்ளியில் நேரலையில் காண்பிக்கப்பட்டுள்ளது..!
யார் இதற்கான உத்தரவை கொடுத்தது? கல்வித்துறை அமைச்சர் @imrajmohan முதல்வருக்கு anchor வேலை செய்துகொண்டிருக்கிறார்., படிக்கும் எம் மாணவர்களின் நிலை எதை நோக்கி செல்கிறதோ தெரியவில்லை..!
#TVKFails
பாரதத்தின் உலகளாவிய பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் இந்த மறுசீரமைப்பு ஒப்பந்தம், பிரதமர் திரு. @narendramodi அவர்களின் கலாச்சாரத்தைப் போற்றிப் பாதுகாக்கும் உன்னத சிந்தனைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்!
பிரதமர் திரு. @narendramodi அவர்களின் 'சுயசார்பு இந்தியா' தொலைநோக்குப் பார்வையின் கீழ், பாதுகாப்புத் துறையில் இந்தியா அடைந்து வரும் இந்த அசாத்திய வளர்ச்சி, நம் தேசத்தை அசைக்க முடியாத ஒரு வல்லரசாக உலகிற்குப் பறைசாற்றுகிறது..!