@sardesairajdeep Bro, don’t look only at the crude prices, look at the high transportation costs and its availability, there are multiple factors that determine the retail prices
Biometric verification, CCTV monitoring, security checks and supervision are standard practices in any serious, large-scale examination.
China's Gaokao is taken by over 13 million students every year under some of the world's strictest examination protocols. Nobody calls it "militarisation" they call it protecting merit.
When India wants is competing with super powers across the world and become a Greater nation, we need credibility and fair competition. Students deserve confidence in the system, not political fearmongering every time standards are enforced. @BJP4India@blsanthosh
திரு பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது. தமிழ்த் திரையுலகை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரைப்படத்துறையில் உச்சத்தைத் தொட்ட ஓர் ஆளுமையாகத் திகழ்ந்தார். குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் போற்றத்தக்கது. துயரமான இந்த வேளையில், எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.
இன்று முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன.
பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது. தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் காலத்தில், ஒரு சில நிமிட ஏஐ காணொளியைக் கூட சரியான தமிழில் தயாரிக்க முடியாத நிலை அரசுத் துறைகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. காணொளி ஒளிபரப்பப்படுவதற்கு முன் யாரும் பரிசீலிக்கவில்லையா? அல்லது பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா?
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உலக அரங்கில் தமிழ் மொழியின் பெருமையையும் தமிழர் பண்பாட்டையும் எடுத்துரைத்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் தாய்மொழியிலான ஒரு சிறு காணொளியைக் கூட முறையாக உருவாக்கத் தவறியது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.
@CMOTamilnadu
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
புதிய இயக்கம் தொடங்கியுள்ள பாசமிகு அண்ணன் திரு.@annamalai_k அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்!
தமிழகத்தில் மாபெரும் அரசியல் எழுச்சியை உருவாக்கிய உங்களின் அயராத உழைப்பு அளப்பரியது. அரசியலைத் தாண்டி என் உடன்பிறவா சகோதரராக உங்கள் மீதான அன்பும், மரியாதையும் எக்காலத்திலும் மாறாதது.
அரசியல் களத்தில் காட்சிகள் மாறினாலும் சரி, எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சரி, தேசமே பிரதானம் என்று நான் பயணிக்கத் தொடங்கிய பாதையில் எவ்வித சமரசமும் இல்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய தாய் இயக்கமான #RSS சித்தாந்தங்களையும், எனது அரசியல் அஸ்திவாரமாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளையும் நெஞ்சில் ஏந்தி, எனது மக்கள் பணி என்றென்றும் உறுதியாகத் தொடரும்.
#Annamalai
🚨BREAKING: The Melbourne Stars and Melbourne Renegades are no more.
As @tommorris32 reports, the two franchises will merge to create a super Victorian franchise.
READ: https://t.co/36aV3naxVL | @SEN_Cricket | #BBL