தமிழ் மொழிக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் அளிக்கும் மரியாதையை பொறுத்துக் கொள்ள முடியாத ராகுல் காந்தி தமிழக மாணவர்கள் மத்தியில் அடுக்கும் கீழ்த்தரமான போலி குற்றச்சாட்டுகள்!
#RahulGandhiLies
தமிழ் மொழியையும், அதன் தொன்மையான பண்பாட்டையும் வளர்த்தெடுக்க பெரிதாக எதையும் செய்யாதவர்கள், முதலில் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
கல்வியில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது, திருக்குறளைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து அதன் பெருமையை உலகறியச் செய்வது, தமிழர்களின் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் புனிதமான செங்கோலுக்கு நாடாளுமன்றத்தில் உரிய கௌரவம் அளித்தது என மத்திய அரசின் செயல்பாடுகளே அதற்குச் சான்றாக விளங்குகின்றன.
எனவே, மத்திய உள்துறை அமைச்சர் திரு.@AmitShah அவர்கள் இந்தி மொழியைத் திணிப்பதாகக் குற்றம்சாட்டுவதற்கு முன், ராகுல் காந்தி இந்த உண்மைகளை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.
பொய்யான கருத்துகளைப் பரப்பி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன், தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை ராகுல் காந்தி முதலில் கேட்டறிந்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் தொன்மையும் பெருமையும் மிக்க பாரம்பரியத்தையும், இந்தியாவின் பண்பாடு, கல்வி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்குத் தமிழ்நாடு ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பையும் திரு.@AmitShah அவர்கள் பல்வேறு தருணங்களில் தொடர்ந்து எடுத்துரைத்துள்ளார்.
பொய்களைப் பரப்புவதில் ராகுல் காந்தி அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டார். பொய் சொல்லாமல் அவரால் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டதாகத் தோன்றுகிறது.
ஆனால், உண்மை என்னவென்றால், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் வளமான பண்பாட்டிற்கு உரிய மரியாதை அளிப்பதோடு, தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளையும் பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு.@AmitShah அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
தமிழில் தேர்வுகள் எழுதுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியது, திருக்குறளைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து அதன் பெருமையைப் பறைசாற்றுவது, வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை அமைத்தது, தமிழர்களின் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் புனிதமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியது எனத் தமிழ் மொழியையும், தமிழர் பண்பாட்டையும் போற்றிப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே இதற்குச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.
நாளை, அக்டோபர் 11 அன்று, சென்னையில் ரூ. 13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நிறைவடைந்த திட்டங்களின் துவக்க விழாவும் நடைபெறுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது கட்டத்தின் பூந்தமல்லி-வடபழனி வழித்தடம் துவக்கி வைக்கப்படும்.
கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் துறைமுகம் சார்ந்த உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.
சென்னை ஐஐடியில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம் (எஸ்ஜிபிசி ) துவக்கிவைக்கப்படுகிறது.
கல்வித்துறையில் மகத்தான பணிகளை மேற்கொண்டுள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்கிறேன்.
https://t.co/sXMFVIStEk
नवरात्रि के शुभारंभ पर शांति की अधिष्ठात्री मां शैलपुत्री के चरणों में कोटिश: नमन। उनकी दिव्य कृपा से सभी के मन में धैर्य और आत्मविश्वास का दीप प्रज्वलित हो। देशवासियों पर सदैव मां का आशीर्वाद बना रहे, यही कामना है।
https://t.co/z4ktFiTagZ
நம் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்கள், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, மக்கள் நலத்திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிப்பதற்காக இன்றைய தினம் சென்னை வருகை தருவதை முன்னிட்டு, நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மற்றும் பணிகளை இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
இன்றைய தினம், தமிழகத்திற்கு வருகை தந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, மக்கள் நலத்திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிப்பதற்காக சென்னை வந்தடைந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களைச் சென்னை விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
I am delighted to have warmly welcomed the Hon’ble Prime Minister of India, Thiru. @narendramodi Ji Avl, at Chennai Airport today, on his visit to Tamil Nadu to inaugurate various development projects and dedicate several welfare initiatives to the nation.
இன்றைய தினம், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழகம் வருகை தந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களைச் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக வருகை தந்திருந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களை மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் டாக்டர் @DrLMurugan அவர்களுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினோம்.
One Name. 25 Years. Unstoppable Legacy
The architect of Modern India, the ultimate history-maker—our Prime Minister Shri @narendramodi ji
#25YearsOfSeva
1/3
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவிகளை சீரழித்த காங்கிரஸ் எம்.பி.யின் கொடூரச் செயலைக் கண்டித்தும், அதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்காத காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தும் தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
#AntiWomenCongress
கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காங்கிரஸ் எம்.பி.யின் கொடூரச் செயலைக் கண்டித்தும், அதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்காத காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தும் முன்னாள் தேசிய பாஜக மகளிர் அணி தலைவி திருமதி. @VanathiBJP அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
#AntiWomenCongress
நீட்டை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ், உச்ச நீதிமன்றத்தில் நீட்டுக்காக வாதாடியது காங்கிரஸ், ஆனால் இன்று அனைத்தையும் மறைத்துவிட்டு பொய்யை மட்டும் பேசுகிறார் ராகுல் காந்தி
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வரும் நமது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களை வரவேற்க மீனம்பாக்கத்தில் குவிந்துள்ள மக்கள் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள்!
#TNWelcomesModi