தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழ்நாடு அரசு. வந்தேமாதரம், தேசிய கீதம் அதன் பின்பு மாநிலப் பாடல் என்ற ஒன்றிய அரசின் அறிவுறுத்தலை தமிழ்நாடு அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரசமைப்பு கட்டாயம் ஏதும் தமிழ்நாடு அரசுக்கு இல்லை.
+
+
நீதிபதி தன் விருப்பத்தின் பேரில் கூறி, உச்சநீதிமன்ற நீதிபதியும் உறுதி செய்தால் தமிழ்நாடு அரசு என்ன செய்யும்? வரும் 18ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டமன்றத் தொடர் தொடங்க உள்ள நிலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையைதான் பின்பற்றுவோம் என தமிழ்நாடு அரசு நிலைப்பாடு எடுக்க என்ன சிக்கல் உள்ளது?
+
ஆர்எஸ்எஸ்-பாஜக மரு வைத்துக்கொண்டு எந்த வேடம் போட்டு வந்தாலும் தமிழர்கள் அவர்களை புறக்கணிப்பார்கள். அண்ணாமலைக்கு சங்கீகள் தொண்டர்கள் எனில், பாஜகவுக்கு விழும் ஓட்டில் மட்டுமே ஓட்டை விழும். தமிழர்கள் ஏமாறப்போவதில்லை.
தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளி தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை கண்டித்து கடந்த 31-05-2026 ஞாயிறு அன்று சைதாப்பேட்டையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த செய்தி.
யூடியூப் இணைப்பு:
https://t.co/gjL7L0RG3m
மே பதினேழு இயக்கம்
9884864010
முன்னுக்குப் பின் முரணாக எழுதியுள்ளார்.
திருவள்ளுவர் 'பதி பசு பாசம்' எனும் கோட்பாட்டு வகையில் சைவராகவே திருக்குறளை படைத்துள்ளார் என்கிறார். மேலும் திருவள்ளுவரின் காலத்தை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்கிறார். உண்மை வரலாறு என்னவென பார்ப்போம்.
'பதி பசு பாசம்' எனும் கோட்பாடு சைவ சித்தாந்தத்திற்குரியது. சைவ சித்தாந்தத்தின் காலம் கி.பி 5ம் நூற்றாண்டு முதலாக 15ம் நூற்றாண்டு வரையான காலகட்டம். திருமூலரின் நூலான திருமந்திரம் சைவத்தின் முதன்மை நூலாகக் கொண்டால், அவரது காலத்தை கி.பி 5ம் நூற்றாண்டு என்கிறார்கள்.
பதி பசு பாசம் குறித்தான சைவ சித்தாந்தத்தின் தத்துவார்த்த நூலான மெய்கண்டார் எழுதிய 'சிவஞான போதம்' படைத்தளித்த காலம் 13ம் நூற்றாண்டு. இந்தக் காலத்திலேயே சைவத்தின் ஆகச்சிறந்த 14 மெய்கண்ட சாத்திரங்கள் 12-14ம் நூற்றாண்டு காலத்தில் படைக்கப்பட்டன. சைவ சித்தாந்தத்தின் 'தத்துவார்த்த முறைப்பாட்டு காலம்' என்பதே 12-14ம் நூற்றாண்டுகளே.
உண்மை நிலை இவ்வாறிருக்க, சைவ சித்தாந்ததின் நூலாக எப்படி திருக்குறள் அமைந்தது என்கிறார் எனபுரியவில்லை. மேலும் சைவத்தின் தோற்றக்காலம் 5ம் நூற்றாண்டு. ஆனால் திருக்குறளின் தோற்றம், (இவர் சொல்வதை கணக்கிலிட்டால், 2000 ஆண்டுகளுக்கு முன்) சைவ தோற்றக்காலமான 5ம் நூற்றாண்டுக்கும் வெகுகாலத்திற்கு முற்பட்டது. ஆகவே இவரது கூற்று உண்மையல்ல.
மேலும் 'பதி-பசு-பாசம்' என்பது சனாதனத்தின் கீழாக வருவதில்லை. இது சைவ சித்தாந்தத்தின் தனித்துவமான கொள்கை. சனாதனம் வேதாந்தத்தின் கீழாக வருவது, சித்தாந்தத்தின் கீழானது அல்ல.
ஆக, இவர் ஒருபுறம் திருவள்ளுவரையும், மறுபுறம் சைவத்தையும் குழப்பி சேர்த்துக்கொண்டுபோய் பார்ப்பன-சனாதனத்திடம் ஒப்படைக்க விரும்புகிறார்.
திருக்குறளும், திருவள்ளுவரும் இவர்களது சதிகளுக்கு கீழாக அடக்கப்படக்கூடியவர் அல்ல. ஏனெனில் அவர் அற உணர்வைப் பாடியவர். இந்த சங்கிக்கும்பலுக்கும் அறத்துற்கும் தொடர்பே கிடையாது. இவர்கள் கர்மத்தின் கீழாக வருபவர்கள். கர்ம கோட்பாட்டிற்கு அறம் என்பது அடிப்படையல்ல.
நாம் அனைவரும் இந்நிலத்தில் விவாதிக்கப்பட்ட சமய-கோட்பாடுகளை புரிந்துகொள்ளாவிடில், நமது வரலாறை இழந்துவிடுவோம்.
இதற்காகத்தான் ஆண்டுகளாக 'தமிழ்த்தேசியப் பெருவிழா' நிகழ்வை கடந்த 3 ஆண்டுகளாக மே17 இயக்கம் நடத்தி வருகிறது. இதில் பலவேறு தமிழ் அறிஞர்கள் நமது அறிவுச் செல்வத்தை நம்மிடம் எளிய வகையில் பகிர்கிறார்கள். அடுத்தமுறையாவது இம்மாநாட்டில் நீங்கள் பங்கெடுத்தால், இந்த திரிபு அரசியலை புரிந்துகொண்டு அம்பலப்படுத்த இயலும்.
பூஜை செய்த பார்ப்பான் லஞ்சம் பெற்று கையும் களவுமாக மாட்டியதால் அடுத்த உத்தரவு வரும் வரை அவர் பூஜை செய்ய தடை (பணியிடை நீக்கமல்ல). மேற்கொண்டு லஞ்சம் பெறாதபடி தடை. ஆனால் மொட்டையடிக்கும் இடத்தில் பணம் கேட்டதால் இரண்டு மொட்டையடிக்கும் தொழிலாளர்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு.
நெதர்லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள இராஜேந்திரசோழன் காலத்து ஆனைமங்கல செப்பேடுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தவர் மோடி என பொய்-விளம்பரத்தைச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த செப்பேடுகளின் முக்கியத்துவம் குறித்தும், அதை இந்தியா கொண்டு வந்து சேர்க்கும் பணி எவ்வுதம் நடந்து கொண்டிருக்கிறதென தொடர்ந்து மாநிலங்களவையில் குரல் எழுப்பி மோடி அரசின் கவனம் ஈர்த்தவர், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திரு @nrelango_dmk . அவரது பாராளுமன்ற உரையை பகிர்ந்துள்ளேன். அவரது வேண்டுகோள் இதுமட்டுமல்ல, லண்டன் காப்பகத்தில் உள்ள கி.பி.769-770 ஆண்டுகால பாண்டியர் காலத்திய நெடுஞ்சடைய வரகுணவர்ம பாண்டியன் ஆட்சிக்காலத்திய 'வேள்விக்குடிச் செப்பேடுகளையும்' கொண்டு வரவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். மோடி அரசு சோழர்கள் ஆட்சியை தமது ஆர்.எஸ்.எஸ் வகைப்பட்ட 'அகண்டபாரத' கனவுக்காக பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு, சோழர்கால லெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள செப்பேடுகளை மட்டுமே மீட்டெடுத்துள்ளது. சோழர் காலத்திற்கு முன்னதாக உள்ள தமிழரின் மிகப்பழமையான செப்பேடுகளில் ஒன்றான 'பாண்டியர்கால செப்பேடுகளை' மீட்டெடுக்க முயலவில்லை. இதை கவனித்து, திரு.என்.ஆர்.இளங்கோ 2024ம் ஆண்டிலேயே பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது தொடர் அழுத்தத்தைத் தொடர்ந்தே தற்போது செப்பேடுகள் இங்கே வந்தடைந்தது. திரு @nrelango_dmk இம்முயற்சி வெற்றியடைய பாடுபட்டவர். அவரே பாராட்டிற்குரியவர். ஆனால், மோடியின் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டு இதை மீட்டெடுத்து வந்ததாக பிரச்சாரம் செய்கிறது. இந்தியை திணித்து மும்மொழிக் கொள்கை வழியே தனது 'இந்தி' மொழிவெறி கொண்ட சங்கிகள், தமிழ்-தமிழர் மீதான அக்கறையில் இந்தச் செப்பேடுகளை மீட்கவில்லை. லண்டனில் உறங்கிக்கொண்டிருக்கும் 'வேள்விகுடி செப்பேடுகள்' கிடைத்தால் நமக்கு பயன் தரும் தகவல்கள் கிடைக்கும் என்பதை கவனத்தில் வைத்து நம் அழுத்தத்தை வலுப்படுத்த வேண்டும். மிகக்குறிப்பாக சோழர்-பாண்டிய செப்பேடுகள் தமிழ்நாட்டிற்கு உடனே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
சோழர்களோ, பாண்டியர்களோ இந்தியா எனும் கனவிற்காக போரிட்டவர்கள் அல்ல, தமிழருக்கும், பார்ப்பன-இந்திய கூட்டத்திற்கும் தொடர்பில்லை இது தமிழர் வரலாறு. அதைச் சொந்தம் கொண்டாட குடுமிக்கூட்டத்திற்கு அருகதையில்லை.
தமிழீழ இனப்படுகொலைக்கான 17ம் ஆண்டு நினைவேந்தல்!
இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை மெழுகுவர்த்தி ஏற்றி நினைவேந்துவோம்.
நாளை மாலை 4:30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஒன்றுகூடுவோம்!
மே பதினேழு இயக்கம்
9884864010
+
அதன் பலனாக தற்போது லெய்டன் செப்பேடுகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. வேள்விக்குடி செப்பேடு இதனை விட மிக முக்கியமானது. அதனை மீட்க ஒன்றிய அரசு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்கது.
நெதர்லாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இராஜேந்திர சோழன் காலத்து செப்பேடுகள் பலகட்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளன. லெய்டன் செப்பேடுகள் அல்லது ஆனைமங்கலம் செப்பேடுகள் எனப்படும் இவை சோழர் கால வரலாற்றை அறிந்துகொள்ள உதவுகிறது.
+
+
காலனிய காலத்தில் நெதர்லாந்து கொண்டுசெல்லப்பட்ட இந்த செப்பேடுகளையும், லண்டனில் உள்ள வேள்விக்குடி செப்பேடுகளையும் மீட்டு தமிழ்நாட்டுக்கு கொண்டுவர முன்னாள் எம்பி என்.ஆர்.இளங்கோ அவர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
+
'நெல்'லை பேசும் முன் 'நீட்'டை பேசுவோம்
நீட் தேர்வு ஊழல் குறித்து எப்போது வாய் திறக்கபோறீங்க அண்ணாமலை..?
ஊடகத்தின் முன்பாக எப்போதும் குத்தவைத்து உட்கார்ந்திருக்கும் நீங்கள், தற்போதைய 'நீட் தேர்வு ரத்து', 'நீட் தேர்வில் பாஜக நபர்களின் ஊழல்' குறித்தெல்லாம் வாய் திறப்பீர்களா அல்லது "என்ன ஆனாலும் நீட்டை ரத்து செய்யமாட்டோம்.." என சொன்னீர்களே அதே நிலைப்பாட்டை தொடர்வீர்களா?
நீட்டை தொடர்வீர்கள் என்றால், நீட் ஊழலில் உங்களுக்கு என்ன தொடர்பு என கேட்க அனைத்து உரிமையும் தமிழருக்கு உண்டல்லவா... ஊழலில் திளைக்கும் நீட் தேர்வில் பாஜக பலனடைவது அம்பலமான பின்னர், உங்களை போன்றோருக்கு தொடர்புண்டா என ஆய்வு செய்யவேண்டுமல்லவா.
ஏற்கனவே அண்ணாமலையாகிய உங்கள் மீதான ஊழல்பட்டியலை உங்கள் கட்சிக்காரர்கள், ஆர்.எஸ்.எஸ் நபர்கள் சமூகவளைதளத்தில் எழுதி அம்பலப்படுத்திவிட்டார்கள். இந்நிலையில் உங்கள் மீது சந்தேகம் கொள்வதற்கு நூறு நியாயங்கள் உண்டல்லவா திரு.அண்ணாமலை?
+
ஆகையால், ஆட்சியை முடக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தவெக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது இன்றியமையாதது. ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் விஜய் ஆட்சியை செழுமைப்படுத்தும்; தமிழ்நாட்டை வலிமைப்படுத்தும்.
நேற்று நியமிக்கப்பட்ட ஜோதிடரின் சிறப்புப் பதவி ஆணை இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்து இனி தமிழ்நாட்டின் மரபு கடைபிடிக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அரச்சுனா உறுதியளித்துள்ளார்.
+
+
இவை விமர்சனங்கள் மற்றும் எதிர்வினைகளால் சாத்தியமாக்கியுள்ளது. விஜய் தலைமையிலான ஆட்சியில் மாற்றங்கள் தெரிகிறது. மற்றவர்கள் சொல்லி நான் ஏன் செய்ய வேண்டும் என்ற ஈகோ இல்லை. இது தொடர்வது ஜனநாயகத்திற்கும் தமிழ்நாட்டின் நல்லது.
+