நமது உரிமை களம் யூட்யூப் சேனலுக்கு கிடைத்த சில்வர் பட்டன் அவார்டுக்கு, தலைவர் @thirumaofficial அவர்கள் கையெழுத்திட்டு வாழ்த்தினார்..
நன்றிகள் தலைவா.. 🙏🙏
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புல்லுக்காட்டுவளசு கிராமத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த காட்சி பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. பள்ளிக்குச் செல்ல இந்தச் சிறிய குழந்தைகள் எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்பதை பாருங்கள்…
பள்ளியின் முன்பக்க நுழைவாயிலை அடைய வேண்டுமெனில், அடுத்த தெருவைச் சுற்றி பல கிலோமீட்டர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால், பல ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளியின் பின்புறம் உள்ள பாதை வழியாகவே பள்ளிக்குள் சென்று வந்தனர்.
ஆனால் தற்போது, அந்தப் பாதையையும் ஒரு தனியார் நபர் ஆக்கிரமித்து சுவர் கட்டி அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
திட்டமிட்ட வகையில், பொதுப் பாதையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தே இந்தச் சுவர் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்கு மின்கம்பம் இருப்பதால்தான் சுவர் இவ்வாறு கட்டப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்தாலும், தேவையற்ற வகையில் சுவர் எழுப்பப்பட்டு, பொதுப் பாதையை ஆக்கிரமிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மாணவர்களின் பாதுகாப்பையும் கல்வியையும் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் @CMOTamilnadu@Collectortnv 🙏🙏
15.7.2026 தந்தை தொல்காப்பியன் அவர்களின் பதினாறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அங்கனூர் அரசு பள்ளியில் அங்கனூர் தொல்காப்பியன் கல்வி அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினோம்!
15.7.2026 தந்தை தொல்காப்பியன் அவர்களின் பதினாறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அங்கனூர் அரசு பள்ளியில் அங்கனூர் தொல்காப்பியன் கல்வி அறக்கட்டளை சார்பாக நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
எனக்கு வெயில் ஆகாது என்று கூறி, மீனவர்களின் குறைகளை கேட்காமல் ஓடிய அமைச்சர்.
அப்போ, நடிகராகவே இருந்திருக்கலாமே.
எதுக்கு அமைச்சர் பதவி..??
அரசியல் எல்லாம்..
சேலத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பை தடுக்கும் சாதிகளில் 'குற்றப்பரம்பரை' என ஒடுக்குமுறை சட்டத்தால்' முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சாதியும் இருக்கிறது.
இந்த சாதியில் பிறந்த அனைவரையும் பிறவி-குற்றவாளிகள் என கிட்டதட்ட 88 சாதிகளை ஆங்கிலேயர் சட்டமியற்றி கொடுமை படுத்தினர். இந்த குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கவேண்டுமென இவர்களுக்காக வெள்ளையரிடத்தில் வாதம் நடத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.
"ஒருவர் பிறப்பால் குற்றவாளியாக முடியாது, சூழ்நிலையே ஒருவரை குற்றவாளியாக்குகிறது" என்ற அறிவியல் பூர்வமான உண்மையை அம்பேத்கர் உரக்கச் சொன்னார். பிறப்பிலேயே ஒரு சமூகத்தை குற்றப்பரம்பரை என்று அழைப்பது அநாகரிகமானது என்று அவர் கடுமையாக வாதிட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை, சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமை வழங்கும் சட்டப்பிரிவுகளை (குறிப்பாக பிரிவு 14, 15, 19, 21) அம்பேத்கர் சேர்த்தார். இந்த அடிப்படை உரிமைகள், குற்றப்பரம்பரை சட்டம் போன்ற கொடூரமான சட்டங்கள் சுதந்திர இந்தியாவில் நீடிப்பதற்கான வழியை முற்றிலும் அடைத்தன.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், அவர்களின் மீதான அவதூறு முத்திரையை அகற்றுவதற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இச்சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
வரலாறு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தால், அண்ணலின் சிலையை இந்த சாதியை சார்ந்தவர்களே நிறுவியிருப்பார்கள். வரலாறை மறந்தவர்கள் நன்றியுணர்வற்று சாதிய வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த வரலாறு அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தால் அவர்களாவது சொல்லி சிலையை திறந்திருப்பார்கள்.
மாவட்ட காவல்துறை அதிகாரிக்கும், வருவாய்-நிர்வாக அதிகாரிகளுக்கும் வரலாறு தெரியவில்லை. விடுதலையான மக்களுக்கும் வரலாறு தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கும் வரலாறு தெரியவில்லை.
காவல்துறையை ஏவிய தவெக ஆட்சியாளர்கள் அண்ணலின் சிலையை நிறுவ முன்வரவில்லை. தவெக ஆட்சியாளர்களின் காவல்துறை ஒடுக்குமுறையை திமுக-அதிமுக ஆகிய எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பவில்லை.
கற்றறிந்த அதிகாரிகளும், காவல்துறையினரும், ஆட்சியாளர்களும், எதிர்கட்சியினரும் வரலாறு அறியாதவர்களெனில்
இங்கே யார் 'தற்குறி' ??
இந்த தற்குறிகளுக்கு மத்தியில் இனிமேல் அண்ணல் அம்பேத்கர் சிலைகள் ' கால் மேல் கால்' போட்டவாறுதான் வடிவமைக்கப்பட்டு திறக்கப்பட வேண்டும்.
தற்குறிகளுக்கு மத்தியில் அறிவாளி கால்-மேல்-கால் போட்டு திமிராக அமர்வதுதான் கற்றோர்க்குச் சிறப்பு
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், ஒதியத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறப்ப்ந்தற்கு கண்டனம் தெரிவித்து ஆதிக்க சமூகங்கள் நெருக்கடி கொடுப்பதற்கு வளைந்து கொடுக்கிறது அதிகாரவர்க்கம். காவல்துறை சிலையை திறப்பதற்கு துணை நிற்காமல், சிலை திறப்பாளர்களை கைது செய்துள்ளது. சிலையை திறப்பதற்கு முன்முயற்சி எடுத்தவர்கள் சிறையில். தங்களுடைய பகுத்யில் அரசியல்சாசனத்தை வகுத்தளித்து இந்த நாட்டை குடியரசாக்கிய அண்பலின் சிலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், அதற்கு ஆதரவாக அதிகாரவர்க்கமும், காவல்துறையும் அடக்குமுறையை ஏவுகிறார்களெனில் எத்தனை தூரம் தரம்தாழ்ந்து போயுள்ளது...
எதிர்ப்புற்கு அடிபணிந்து அண்ணலின் சிலையை தகரத்தால் மூடி வைத்திருந்தார்கள் அதிகாரிகள். பின்னர் ஊர்மக்கள் ஆட்சியாளரிடம் போராடி சிலையை திறக்க அனுமதி பெற்றிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, இரவோடு இரவாக தகரத்தை நீங்களே அகற்றிவிடுங்கள் என அறிவுறுத்தி உள்ளார்கள். அவ்வகையில் இந்த தகரங்களை அகற்றியுள்ளனர் சிலையை நிறுவியவர்கள். உடனடியாக காலையில் காவக்துறையை குவித்து, தகரங்களை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திரண்ட ஊர்மக்களை காவல்துறையை கொண்டு தடியடி நடத்தி காயப்படுத்தியுள்ளனர். குண்டாந்தடி கொண்டு ஆட்சியதிகாரத்தை திணிக்கின்றனர். இன்றளவும் 200-300 காவலர்களை ஊருக்குள் நிறுத்தியுள்ளார் மாவட்ட காவல்துறை ஆணையாளர்.
தவெக அரசு இந்த அநீதியை கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது. காவல்துறையை தன்னிச்சையாக சாதியவாதிகளுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு பட்டியல் சமூகத்திற்கு எதிராக தனது சாதிய வன்மத்தை காட்டுகிறது. சேலம் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் இந்த அநீதியை எதேச்சதிகாரத்தை கட்டவிழ்த்திருக்கிறார். காவல்துறை முதலமைச்சர் விஜய் அவர்களின் கீழே இயங்குகிறது எனில் எப்படி இந்த அநீதி தெரியாமல் நடக்கும்?
அண்ணல் அம்பேத்கர் சிலை கால்மேல் கால் போட்டதுபோல் இருப்பதால் இந்த சிலையை திறக்கக்கூடாதென ஆதிக்கவாதிகள், சாதியவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், அதற்கு காவல்துறையும், அதிகாரிகளும் உடந்தை. காறி உமிழவேண்டிய அதிகாரவர்க்கம், வெட்கங்கெட்டு சாதியவாதிகளாக இயங்குகிறது. கைகட்டி தவெக அரசு வேடிக்கை பார்க்கிறது.
TNUSRB தேர்வுகள் ஒத்திவைப்பு:
----------------------------
வயது தகுதி பாதிக்கப்படும் தேர்வர்களுக்கு ஓராண்டு வயது தளர்வு வழங்க வேண்டும்
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
-----------------------------
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) வெளியிட்டுள்ள Revised Annual Planner 2026–2027-இன் படி, 2026ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய துணைக் காவல் ஆய்வாளர் (SI), இரண்டாம் நிலைக் காவலர் (Grade-II Police Constable), சிறைக்காவலர் உள்ளிட்ட எந்தவொரு சீருடைப் பணியாளர் தேர்வும் நடத்தப்படாமல், அனைத்துத் தேர்வுகளும் 2027ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு, காவல்துறையில் பணியாற்றும் இலக்குடன் பல ஆண்டுகளாகத் தீவிரமாகித் தயாராகி வரும் ஆயிரக்கணக்கான போட்டித் தேர்வர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர்களுக்குக் குறைந்தது ஓராண்டுக்காவது தளர்வு வழங்கவேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
TNUSRB விதிகளின்படி, காவலர் தேர்வுகளுக்கான அதிகபட்ச வயது தகுதி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 2026ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று வயது தகுதியுடன் இருந்த ஏராளமான தேர்வர்கள், தேர்வு 2027ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், 2027ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று வயது வரம்பைத் தாண்டி தகுதியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து தேர்வுக்குத் தயாராகி வந்த இளைஞர்கள், தேர்வை எழுதும் வாய்ப்பையே இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டு முதல் தேர்வுக்குத் தயாராகி வரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நீண்டகால உழைப்பு வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு, 2026ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், அடுத்த ஆண்டில் போட்டி மேலும் அதிகரித்து, வேலைவாய்ப்பு பெறுவதிலும் கூடுதல் தாமதம் ஏற்படும்.
எனவே, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கருத்தில் கொண்டு, 2026ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று வயது தகுதியுடன் இருந்த அனைவருக்கும் 2027ஆம் ஆண்டு நடைபெறும் TNUSRB தேர்வுகளுக்குக் குறைந்தபட்சம் ஓராண்டு வயது தளர்வு வழங்க வேண்டும். தேவையெனில் இரண்டு ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்குவதையும் பரிசீலிக்க வேண்டும்.
அத்துடன், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 2026ஆம் ஆண்டிலேயே இரண்டாம் நிலைக் காவலர் (Grade-II Police Constable) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு, அவர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
12.7.2026, சேலம் மாவட்டம் மேட்டூர் அரங்கனூர் கிராமத்தில் விசிக பொறுப்பாளர் அம்பேத் அவர்களின் தந்தை மறைந்த இந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவர் கோவிந்தன் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்
12.7.2026, சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் விசிக இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநிலச் செயலாளர் சேலம் வசந்த் அவர்களின் இல்லத்தை திறந்து வைத்து வாழ்த்தினேன்!