இவ்வளவு கீழ்த்தரமாக இதை விட கீழ்த்தரமான பெண்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பேசி திரியும் விஜய் ஆதரவு கூலி கும்பல் 1000 ஐடி மேல இருக்கும். இவர்கள் மீது என்ன நடவடிக்கை இது வரை எடுத்தது விஜய் அரசு? யார் கொடுக்கும் தைரியத்தில் இதை செய்ய துணிகிறார்கள் ?
கைது செய்யுமா !
இவன் மொத்த பக்கமும் இதான் செய்கிறான்.. இதுவும் AI என உருட்டுவானுக்க : பதிவிட நாள் 16 ஆம் தேதி , நேரம் 9.21 PM. அந்த பதிவின் தனிப்பட லிங்க் எடுத்து வைத்துள்ளேன்.
காவல்துறை என்ன செய்வதாக முடிவு ?
இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்று அத்துமீறிய தவெக நிர்வாகி!
தவெக நிர்வாகிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது.
இந்த மாதிரி ஈனச்செயல்ல 75 வருச திமுகவை விட அதிகமா செய்திகள்ல தவெககாரனுக அடிபடுறானுங்க.
அஜித்குமாரின் காவல் படுகொலைக்கு எதிராகப் பேசிவிட்டு, ஆகாஷின் காவல்நிலையப் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
மானாமதுரையில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தம்பி ஆகாஷின் மரணத்துக்கு நீதிகேட்டு, அவரது உடலை வாங்க மறுத்து, மூன்று மாதங்களுக்கு மேலாகக் குடும்பத்தினரும், உறவுகளும் போராடி வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணமாகக் காட்டி, பெற்றோரைக் கைதுசெய்து, உடலைக் காவல்துறையினரே அடக்கம் செய்திருப்பது அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும். திமுகவின் ஆட்சியில் காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட தம்பி அஜித்குமாரின் படுகொலைக்கு எதிராக அன்றைக்கு நீதிகேட்டு பேசிய முதல்வர் விஜய் அவர்கள், அதே திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட தம்பி ஆகாஷின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகாஷ் குற்றமிழைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலைசெய்வதற்கு காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நல்ல உடல்நலத்தோடு திடகாத்திரமாக இருந்த ஆகாஷ் காவல்துறை விசாரணைக்குப் பின்னர், ஒரேநாளில் உயிரிழக்கிறாரென்றால், அம்மரணத்துக்குக் காவல்துறையினர்தான் முழுப்பொறுப்பு. இதனை நீதிமன்றம்கூட கேட்க மறுத்திருப்பது ஏமாற்றமும், வேதனையுமளிக்கிறது. திமுகவை அரசியல் எதிரி என மேடைதோறும் பேசிவிட்டு, திமுகவின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட காவல்நிலையப் படுகொலையை மூடி மறைக்கத் துணைபோவது வெட்கக்கேடானது இல்லையா?
பெற்றோர், குடும்பத்தினர் இல்லாது காவல்துறையே அடக்கம் செய்வதெல்லாம் ஏற்கவே முடியாதப் பேரவலம். தவெகவின் ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துபோன சூலூர் சிறுமியின் உடலைத் தாய்க்குத் தெரியாது, அடக்கம் செய்ததும், அதேபோல கும்மிடிப்பூண்டியில் இறந்துபோன சிறுமியின் உடலைப் பொன்னேரிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்திருப்பதும், இப்போது ஆகாஷின் உடலைப் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அடக்கம் செய்திருப்பதுமான காவல்துறையின் போக்குகள் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோமா? இல்லை! உத்திரப்பிரதேசத்தில் வாழ்கிறோமா? எனும் கேள்வியை எழுப்புகிறது. உங்களது திரைப்படங்களில் வில்லன்கள்கூட செய்யத் துணியாத ஒன்றை, உங்களது ஆட்சியில் அதிகாரவர்க்கம் செய்யுமென்றால், இதுதான் மக்களுக்கான மாசற்ற ஆட்சியா முதல்வரே? திரைப்படங்களில் அநீதிக்கு எதிராகச் சண்டையிட்டு அந்த மாயப்பிம்பத்தைக் காட்டியே வாக்குகளைப் பெற்று, ஆட்சியதிகாரத்துக்கு வந்த நீங்கள், நிஜத்தில் கொடுங்கோன்மையைக் கட்டவிழ்த்துவிட்டு செய்யும் கொடுமையெல்லாம் வாக்குச் செலுத்திய மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும்.
ஆகவே, தம்பி ஆகாஷ் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவுசெய்து, தொடர்புடைய காவலர்களைக் கைதுசெய்ய வேண்டுமெனவும், ஆகாஷின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அரசு குளிர்சாதன பேருந்தில் ஏசி வேலை செய்யாததால் பயணிகள் அவதி.. போக்குவரத்து மேலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஏசி பேருந்துகளை நிறுத்தி விடுகிறேன் என்று அலட்சியமாக பதில் கூறியதாக பயணிகள் குற்றச்சாட்டு
#NewsTamil24x7#PublicTransport#ACBusIssue#PassengerComplaint #TransportProblem #GovernmentBus
சிறப்பு .நாம் தமிழர் கட்சியின் உறவுகள் செய்த மகத்தான சேவை .இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல் .மக்கள் நம்மை ஒதிக்கினாலும் நாம் மக்கள் நலம் பேணுவோம் .
திரு.சீமானை கேவளமாகவும், மிகவும் அருவறுகத்தக்க வகையில் விமரசனம் செய்த
யூ-டுபர்கள், திராவிட பெருமக்கள் பெரும் மதிப்பிற்க்கும் மேலான தற்குறிகளும் பார்க்கவும். உங்களுக்கு ரத்தம் தேவைபட்டாலும் நாம் தமிழரை அழைக்கவும்
இதை பற்றி பேச எந்த ஒரு ஊடகத்திற்கும் திராணி இல்லை
“தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும்
முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை?
தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக
உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம்.
என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு?
தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா?
ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா?
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
”இங்க 1 ரூபாய் கொடுத்து வாங்கி வெளிய 10 ரூபாய்-க்கு விக்கிறாங்க”... அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்த மொத்தமாக ஹோட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
#Thoothukudi | #AmmaUnavagam | #Public | #PolimerNews