நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு திமுக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
நீட் தோ்வு உள்படப் பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஒரு மாதக் காலமாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றவர்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டிருக்கிறது. கண்மூடித்தனமான தாக்குதலைக் காவல்துறை மூலம் நிகழ்த்தியிருக்கிறார்கள்.
அமைதியான அறவழியில் போராடியவர்கள் மீது அதிகாரத் துஷ்பிரயோகத்தை ஏவி விட்டிருக்கிறார்கள். உரிமைகளுக்காக அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை அடக்குமுறையால் என்றும் ஒடுக்கிவிட முடியாது.
தலைநகரில் மிகப் பெரிய போராட்டமாக மாறியிருக்கும் இளைஞர்கள் போராட்டத்தைக் கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் ஆகியவற்றால் முடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு. கல்விக்காகப் போராடுகிறவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும்!
மாணவர்களின் உயிர்ப் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும்!
தன்மீது அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ மற்றும் செய்தி வெளியிட்டுள்ள விகடன் குழுமத்தின் மீது நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியும் - 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டுமென நஷ்ட வழக்கு தொடர்ந்திட முன்னாள் அமைச்சரும் - சட்டமன்ற உறுப்பினருமான திரு.அர.சக்கரபாணி அவர்களின் வழக்கறிஞர் நோட்டீஸ்
திமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.அர.சக்கரபாணி அவர்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ மற்றும் செய்தி வெளியிட்டுள்ள விகடன் குழுமத்தின் மீது மான நஷ்ட வழக்கு தொடுப்பது தொடர்பாக 19.07.26 அன்று திரு.அர.சக்கரபாணி அவர்கள் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.35 ஏக்கர் நிலத்தை ஒரு தனியார் அறக்கட்டளை தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, கடந்த மார்ச் 2026-ல் டி. சேதுபதி மற்றும் கே. வெள்ளத்துரை ஆகிய இரு நபர்களுக்கு வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளது. இந்த நிலப் பதிவு தொடர்பாக அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பின்படி, அந்த முறைகேடான விற்பனைப் பத்திரம் ரத்து செய்யப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான திமுக இந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முறையான விசாரணையை வலியுறுத்தி உள்ளது. திமுக சட்டத்துறை இணைச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. பரந்தாமன் அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளையும், உயர் அதிகாரிகளையும் காப்பாற்றும் நோக்கோடும், பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையிலும் விகடன் டிவியின் யூடியூப் பக்கத்தில் கடந்த ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முன்னாள் அமைச்சர் திரு. சக்கரபாணி அவர்களைத் தொடர்புபடுத்தி அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டன. மேலும், ஜூனியர் விகடன் இதழில் (தேதி: 22.07.2026) 'பழனி நில சர்ச்சை... சக்கரபாணிக்கு சிக்கல்' என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் அர. சக்கரபாணி அவர்களின் புகைப்படத்துடன் அவதூறான கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில், நிலத்தை வாங்கியவர்களோடு அர. சக்கரபாணி அவர்களை தொடர்பு படுத்தி எவ்வித ஆதாரமுமின்றி அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய நபர்கள் யார் என்று கூட தெரியாது என முன்னாள் அமைச்சர் அர. சக்கரபாணி அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் விகடன் செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோதே இக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்தார். இருப்பினும், அடிப்படை ஊடக அறத்தை மீறி, அவரது மறுப்பை பிரசுரிக்காமல் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் இந்த அவதூறு பரப்பப்பட்டுள்ளது.
ஆகவே விகடன் குழுமமானது யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரு அவதூறு வீடியோக்களையும் உடனடியாக நீக்க வேண்டும். ஜூனியர் விகடன் இதழின் பிரசுரிக்கப்பட்ட அவதூறு கட்டுரையைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் விற்கப்படாத இதழ்களை உடனடியாக அழிக்க வேண்டும். அடுத்த ஜூனியர் விகடன் இதழின் அட்டைப் பக்கத்திலும், இணையதளத்திலும் முன்னாள் அமைச்சர் அர. சக்கரபாணி அவர்களிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கோரி செய்தி வெளியிட வேண்டும். அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக ரூ. 10 கோடி (பத்து கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 7 நாட்களுக்குள் இக்கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், விகடன் குழுமத்தின் மீதும், சம்பந்தப்பட்ட செய்தியாளர்கள் மீதும் உரிய சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையாக நான் ஊட்டி வளர்த்த @DMK_YouthWing 47-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
அன்பகத்தில் தனி அலுவலகம், தமிழ்நாடு முழுவதும் கிளை வரை நிர்வாகிகள், முரசொலியில் பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம் எனக் கழகத்தின் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றி வரும் இளைஞரணியின் தம்பிமார்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இனி வரும் காலம் முன்பைவிட இளைஞரணி இருமடங்கு உழைக்க வேண்டிய காலம். உழைப்பைக் கொடுப்போம், கழகம் காப்போம், தமிழ்நாடு காப்போம்!
@Udhaystalin
இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசின் சதி முயற்சியைக் கண்டித்தும், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைக் காக்கவும் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளின் குரலாகப் பச்சைத் துண்டு அணிந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.
மக்களவையிலும், அவை ஒத்திவைக்கப்பட்டபோது நாடாளுமன்ற வளாகத்திலும் தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் உரிமையை நிலைநாட்டவும், மேகதாது அணை திட்டத்திற்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
விவசாயிகளின் துயரத்தைத் துடைக்கவும், தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க நினைப்போருக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் தி.மு.க. என்றும் தளராமல் போராடும்!
'கழகம் வில்லாம், நின் அணியே கணையாம்' என முத்தமிழறிஞர் கலைஞரால் போற்றப்பட்ட தி.மு.கழகத்தின் இதயமாம் இளைஞரணி
தொடங்கப்பட்ட நாள் இன்று.
திராவிடத் தலைவர்களின் வழியில் செயலாற்றிடுவோம் - தமிழ்நாட்டின் உரிமைகளை காத்திடுவோம்!
சிறிய கருத்துக்களுக்கு, விமர்சனங்களுக்கு கூட கைது செய்யும் இந்த சேடிஸ்ட் முதலமைச்சர் விஜயின், 'தொடைநடுங்கி மாடல் அரசு' நீதிமன்றத்தில் குட்டுப்பட்டாலும் திருந்துவதாக தெரியவில்லை
விஜய் ஜனநாயகன் அல்ல ஒரு பயந்தாங்கொள்ளி என்பதையே வரலாறு பதிவு செய்யும்!
ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்களும் – மாநிலங்களவையில் கழக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, எம்.பி., அவர்களும் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
பாராளுமன்ற தி.மு.க. மக்களவைக்குழுத் தலைவர் – கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்கள் மக்களவைச் செயலர் அவர்களுக்கும் –
கழக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா, எம்.பி., அவர்கள் மாநிலங்களவை செயலர் அவர்களுக்கும்;
நடைபெற பாராளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவல் நடத்தை விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பிற அலுவல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திடவும் - பின்வரும் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வரவும், மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளர். அதன் விவரம் பின்வருமாறு :-
"காவிரி ஆற்றின் மீது முன்மொழியப்பட்டுள்ள மேகதாது சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கம் (Mekedatu Balancing Reservoir) குறித்த கவலைகள், அதனால் பாதிக்கப்படும் மாநிலமான தமிழ்நாட்டின் மீதான அதன் தாக்கம் மற்றும் இது தொடர்பாக ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதன் அவசியம் ஆகிய அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை விவாதித்து தீர்மானத்தைக் கொண்டு வருதல்”.
லஞ்சம் ஒழிப்போம் என பில்ட் அப் காட்டிய விஜய் அரசு பழனி கோவில் விவகாரத்தில் முறைகேடு செய்து சிக்கி கொண்ட பிண்ணனி சுவரசியமானது. ஒன்டு குடித்தனத்தில் வாழ்ந்த ரமேஷ் இப்போதுஸ்டார் ஓட்டல்களில் தான் தங்குகிறார்.விஜய் கட்சிக்கே பைனான்ஸ் செய்த கோவை லாட்டரி பிரமுகர் ஆர்வம் காட்டியதால்தான் பழனி கோவில் நில விற்பனை வேகமாக நடந்ததாம்.அற்பனுக்கு வாழ்வு வந்ததை போல உயர்ந்த அமைச்சர்கள் சிக்கி கொண்டார்களாம்.இந்த லஞ்ச ஊழலை பற்றி ஆதவ்அர்ஜுன் ரெட்டி வாய் திறக்காததற்கு காரணம் லாட்டரி பிண்ணனி தான்.
இந்திய அரசியல் களம் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணம் முடித்து தாய் மண்ணுக்குத் திரும்பிய திராவிட நாயகர் நம் கழகத் தலைவர் அவர்களை சென்னை விமான நிலையத்தில் கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் திரண்டு வந்து வரவேற்று மகிழ்ந்தனர். வாழ்த்து முழக்கங்கள் விண் அதிர ஒலித்தன.
“வாழ்த்தாத நாளில்லை வையகம்
மறைமலையடிகள் மறையாத் திருப்பெயர்
வாழ்த்தாத நாளில்லை வையகம்!
பொழுதெல்லாம் தமிழுக் குழைத்த தலைவனை
வாழ்த்தா நாளில்லை வையகம்” – பாவேந்தர் பாரதிதாசன்!
“தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்புபோல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். தனித்தமிழுக்குப் பாடுபடுங்கள்” என வலியுறுத்தி, தமக்கென வாழாமல் தமிழுக்கென வாழ்ந்த மறைமலையடிகளின் 150-ஆவது பிறந்தநாள் நிறைவுப் பெருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது கழக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை! மறைமலையடிகளாரின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.
வேதாசலம் என்ற தன் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் அடிகளார். “இந்தி பொதுமொழியா?” நூல் உள்ளிட்ட தம் பங்களிப்புகளால் இந்தித் திணிப்பை எதிர்த்தார்.
“தமிழர் அனைவரும் பண்டுபோல் தமக்குந் தம் இல்லங்களுக்கும் தம்மூர்களுக்கும் பிறவற்றிற்கு மெல்லாந் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டும்” என்ற மறைமலையடிகளின் வேண்டுகோளினை ஏற்று நம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்! வாழ்க மறைமலையடிகள் புகழ்!
‘மெட்ராஸ் மாகாணம்’ என்றிருந்த நம் மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்றிட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய நாள் இன்று.
‘தமிழர்கள் வாழும் பகுதிக்கு தமிழ்நாடு என்று கூட பெயர் சூட்ட முடியவில்லையே’ என்ற தந்தை பெரியாரின் ஏக்கத்தையும், சங்கரலிங்கனாரின் தியாகத்தையும், தமிழ்ப்பெரியோர்கள் பலரின் விருப்பத்தையும் ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் நிறைவேற்றிக் காட்டியது நம் திராவிட முன்னேற்றக் கழகம்.
அன்றைக்கு தீர்மானத்தை நிறைவேற்றி, ‘தமிழ்நாடு' என்று அண்ணா அவர்கள் மும்முறை முழங்க, 'வாழ்க... வாழ்க...' என்ற உறுப்பினர்களின் முழக்கத்தால் சட்டமன்றமே உணர்ச்சிப் பெருக்கால் தத்தளித்தது.
அந்த இனிய தினத்தை தமிழ்நாடு நாளாக திராவிட மாடல் ஆட்சியில் நமது கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அறிவித்தார்கள்.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்!
தமிழ் வெல்க!
தமிழ்நாடு வாழ்க!!
#தமிழ்நாடு_நாள்
I condemn the manner in which Delhi Police handled Mr. Sonam Wangchuk, dragging him and forcefully admitting him to a hospital.
The Union Government should engage with him in a meaningful dialogue. Mr. Wangchuk has consistently raised important concerns about the integrity of our education system, and those concerns deserve a sincere and constructive response.
He must be treated with dignity and respect. Above all, his life and well-being must remain the highest priority.
மெட்ராஸ் மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி, 'தமிழ்நாடு' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய வரலாற்றுப் பெருமித நாள்!
தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வெல்க!
திமுகனாலே இந்துக்களுக்கு எதிராகவும், கோயிலுடைய வழிபாடுகளுக்கு எதிராகவும் ஒரு ப்ரொஜெக்ட் பண்ணிக்கிட்டு இருந்த சமூகத்தில், திராவிட மாடல் ஆட்சியில், நாங்கள் கோயில் நிலத்தை பாதுகாத்தோம். பழனிக்கு மொட்டை போடுவாங்கன்னு தான் நம்ம எல்லாம் பார்த்தோம். பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி, விஜய் ஆட்சி.
- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள்
சமூக வலைத்தளத்தில் தவெக அரசின் ஊழல்களை பதிவிட்டால் அவர்களை கைது செய்வது, அரசியல் கண்ணோட்டத்துடன் எதிர்க்கட்சியினரை பழி வாங்குவது என்ற வரிசையில் இப்போது ஊடகவியலாளர் விஜயனை காவல்துறை குறி வைத்திருக்கிறது. கடத்தல் பாணியில் இழுத்துச் சென்று, அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு அலைக்கழிக்கிறது. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக உள்ள விஜயனின் செல்போனும் காவல்துறையால் பறிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மதிக்காத இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
60 நாள் ஆட்சியின் அராஜக முகம் ஒவ்வொரு நாளும் கொடூரமாக வெளிப்படுகிறது. என் ஆட்சியில் ஜனநாயகத்திற்கும் மரியாதை கிடையாது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்க வேண்டிய ஊடகங்களுக்கும் மரியாதை கிடையாது என்று சொல்லாமல் சொல்கிறாரா சி.எம் சார்?
கல்விக்கூடங்கள் இன்று தவெக-வின் அரசியல் விளையாட்டு மைதானங்களாக மாறியதன் விளைவுதான், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி வளாகத்திற்குள் சக மாணவனை சக மாணவனே கத்தியால் குத்தியிருக்கும் இந்த அவலம்!
பள்ளிகளில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர் மனதை நஞ்சாக்கும் உங்கள் அரசியல் அராஜகத்தால் இன்று ஒரு தலித் மாற்றுத்திறனாளி மாணவனின் உயிர் பலிவாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கல்வி கற்க வேண்டிய இடத்தில் கத்தி கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. ஆனால், 'தூய சக்தி' என்று மேடை போட்டுப் பேசும் முதலமைச்சர் விஜய், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஒரு வார்த்தையேனும் பேசியதுண்டா?
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பள்ளி வளாகத்திற்குள்ளேயே தாக்குதல் நடக்கும் அளவிற்கு உங்கள் நிர்வாகம் சீரழிந்து கிடப்பது, உங்கள் அரசின் கையாலாகாத்தனத்தின் அப்பட்டமான சாட்சி