@SJB56856832 இந்த கம்பெனி பொலிவியாவில் கடை விரித்து கடைசியில் அங்கே அரசாங்கம் கவிழ்ந்து நாடு நாசமானது தான் மிச்சம். கோவையில் இந்த கம்பெனி காலூன்றி இருக்கிறது. இனி வரும் காலங்களில் தான் ரிசல்ட் தெரியும்
@shanmugamchin10 நான் ஒரு வருடம் முழுக்க அங்கன்வாடி மையம் மூலமாக எனது பேரனுக்கு முட்டை வாங்கியுள்ளேன். ஒரு நாள் கூட இது போன்ற நிலை இல்லை. இதெல்லாம் பொய் புகார்
@DixadinaDMK புகார் நம்பும்படி இல்லை. தவெக ஆட்சி அமைந்து ஐம்பது நாளில் அரசு பணிகளில் எப்படி பணி நியமனம் செய்கிறார்கள் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் பணம் கொடுத்து பணி நியமனம் வாங்க நான் முயற்சித்தேன் என்பது உண்மை அல்ல.
@sureshkalipandi காவிரி ஆற்றில் மணல் அள்ள முடியும் என்பதை உதவி பொறியாளர் பொறுப்பிலிருந்து துவக்கி அதே வேலையாக இருந்து இப்போது ஓய்வு பெற போகும் நேரத்தில் ஜாலியாக இருக்க போகிறார்
@tn_updatess அப்படி எல்லாம் திமுகவினர் ஆள் தெரியாமல் வாக்காளர் யார் என்று தெரியாமல் பணம் தர மாட்டார்கள். ஒவ்வொரு வாக்காளர் பற்றிய விபரங்களை தெரியாமல் திமுக நிர்வாகிகள் வேலை செய்ய மாட்டார்கள். இதெல்லாம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை உண்டாக்க வெளியாகும் செய்தி. நான் திமுககாரன் அல்ல
மாண்புமிகு திமுக தலைவர் @mkstalin மற்றும் எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin ஒரு வேண்டுகோள்.
வரவிருக்கும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நம் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நிக்கவில்லை என்றால் அங்கு @ptrmadurai அவர்களை தயவுசெய்து நிறுத்துங்கள்.
PTR போன்று ஒருவர் சட்டமன்றத்தில் மைனாரிட்டி CM விஜய் மற்றும் இதர சட்ட மன்ற உறுப்பினர்களை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். PTR மற்றும் உதயநிதி அவர்களின் கேள்விகளுக்கும் நம் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதில் சொல்ல திணறுவதை தமிழ்நாட்டு மக்கள் பார்க்கவேண்டும். நாம் செய்ததை மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும்.
ஒரு முனையில் @Udhaystalin அவர்களும் மறுமுனையில் @ptrmadurai அவர்களும் நின்று எதிர்க்கட்சியின் பலத்தை காட்டுவார்கள். மக்களுக்கும் நிறைய அரசியல் புரிதல் வர இது வழிவகுக்கும்.
உங்களின் முடிவை எதிர்பார்த்து உங்களின் உடன்பிறப்பு 🖤❣️
@arivalayam@DMKITwing@OfficeOfPTR@KanimozhiDMK@dmk_raja
என் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டு கோவை தெற்கு தொகுதியில் வாக்களித்து வெற்றி பெற வைத்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு எனது அன்பையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்..
இரவு பகல் பார்க்காமல் உடனிருந்து உழைத்த கழக உடன்பிறப்புகள் மற்றும் தோழமை கட்சியினருக்கு எனது அன்பை தெரிவித்துக் கொள்கிறேன்..
எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை வழங்கி தமிழ்நாட்டை தலை நிமிர்த்திய கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி அவர்களின் வழிகாட்டுதலில் என்றும் எனது மக்கள் பணிகள் தொடரும்..
எனக்கு மக்கள் பிரதிநிதி எனும் அங்கீகாரத்தை வழங்கி 10 ஆண்டுகளாக புதுப்புது அனுபவங்களைக் கொடுத்த என் தாய்வீடான #திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் எனும் பொறுப்புகள் கிடைக்க அடித்தளமிட்டதோடு மட்டுமின்றி, தங்களின் குடும்ப உறுப்பினராக ஏற்று, அன்பு காட்டுவது தற்போதைய தேர்தல் முடிவுகளால் ஒருபோதும் தடைபடப்போவதில்லை. எப்போதும்போல எனது தாய்வீட்டு மக்களை போற்றுவேன்; கொண்டாடுவேன். அவர்களில் ஒருவனாக அனைவரின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்பது என் பணி.
திராவிட மாடல் அரசில் திருவெறும்பூருக்கு நாம் கொண்டுவந்த தொகுதியின் புதிய அடையாளங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல துணை நிற்போம்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கான சாதனைத் திட்டங்களைத் தந்துள்ள எனது அரசியல் ஆசான் கழகத் தலைவர் அவர்களின் வழியில் மக்கள் பணி என்றும் தொடரும். 🖤❤️
PTR அவர்களை எல்லாம் தோற்கடிக்கிறீங்க நீங்க எல்லாம் யாருடா?
நீங்க தேர்ந்தெடுத்து இருக்கிற தற்குறிக்கு பேசவே வராதுடா. அவன் எல்லாம் உங்களுக்கு நல்லது செய்வான்னு ஓட்டு போட்டு இருக்கீங்களே வெட்கங்கெட்ட மானங்கெட்ட இத்திரைகளா...
மதுரக்காரங்கன்னு எவனாவது நீ வாய தொறங்க...
தலைவரே தோற்றது நீங்கள் கிடையாது உங்கள் முன்பு தமிழ்நாடு தான் இன்று தோற்றுப் போயுள்ளது அதற்கான பலனை அவர்கள் அனுபவித்தே தீருவார்கள் என் தலைவன் எவர் முன்பும் தலை தாழாமல் நிற்க வேண்டும் என்று தான் காலமே இன்று உங்கள் தொகுதியில் உங்களை தோற்கடித்து உள்ளது நம் கட்சியின் வேர்களை வலுப்படுத்த வேண்டும் இனி தனித்தே களம் காண்போம் கூட்டணி கூட்டணி என்று நீங்கள் அரவணைத்தது உங்கள் மன அமைதியை தான் கெடுத்துள்ளது. விழுந்து விட்டோம் ஆனால் வீறு கொண்டு எழுந்து நிற்போம் நம்மை புறந்தள்ள நினைப்பவர்கள் முன்பு மலையென எழுந்து மீண்டும் வெற்றி பெறு தற்போதிலிருந்தே அதற்கான வேலைகளை தொடங்குவோம் இனி நம்மை மட்டுமே நாம் நம்பி நம் கழக உடன்பிறப்புகளுக்கு ஊக்கமளித்து களம் காண வையுங்கள் உங்களை இழந்த தமிழ்நாடு தான் இனி வருத்தப்பட வேண்டும் உங்களை இழந்ததை விட பெரிதாக மீட்டெடுப்போம் யார் உங்கள் முதுகில் குத்தினாலும் எங்கள் உயிருள்ளவரை உங்கள் உடன்பிறப்புகள் உங்களுடன் நிற்போம்
உங்களின் உழைப்பு தான் தலைவரே உங்களுக்கு அழகு உங்கள் அடையாளம் அதை ஒரு நாளும் சோர்ந்து போக விட்டு விடாதீர்கள் மீண்டு வருவோம் இழந்ததை விட பிரம்மாண்டமாக இனி வெல்வோம் 💪
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
எனது மன்னை தொடர்ந்து மின்னட்டும் ♥️🌄
மூன்று முறை வாய்ப்பளித்த எனது #மன்னார்குடி மண்ணுக்கு சேவை செய்யும் வாய்ப்பளித்து என்னை அரவணைத்த அனைவருக்கும், தற்போதும் வாக்களித்த எனது ஆருயிர் மக்களுக்கும் நன்றி ♥️🙏🏾
ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக எனக்கு கிடைத்த இந்த 5 ஆண்டுகளில் மட்டும் நமது மன்னைக்கு இது வரை யாரும் செய்திராத வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டுவந்த பெருமையோடு இன்று (நீண்ட நாட்களுக்கு பிறகு) உறங்குவேன்.
மன்னையில் #திமுக வுக்கு வாக்களிக்க தவறியவர்கள் மன்னையின் அடுத்த 5 ஆண்டுகால வளர்ச்சியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ♥️🙏🏾
தமிழ்நாட்டின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக இருந்த எனது அருமை தலைவர் @mkstalin அவர்களது உழைப்பை தமிழ்நாடு மறந்ததுதான் மிகுந்த வேதனை அளிக்கிறது.
அவரின் உழைப்பை காலம் போற்றும்.
என்றும் எனது மண்ணுக்கும் மக்களுக்கும் துணை நின்று தொடர்ந்து உழைப்பேன்🙏🏾
தமிழ்நாட்டில் உள்ள #உடன்பிறப்புகள் அனைவரும் ஆட்சி இல்லாத போதும் தமிழுக்காக தமிழ்நாட்டிற்காக தொடர்ந்து உழைப்பார்கள்🙏🏾
#மின்னும்_மன்னை #திமுக
@Srividhya_Hari ஓட்டு போட போகும் போது OTP எதற்கு வரும். ஏதோ ஒரு கதையை எழுத ஆதார் ஓடிபி என கதையை விட வேண்டிய நிலை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் பூத் ஸ்லிப் தந்திருப்பார்கள். வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஏதாவது ஒரு ஆவணம் காண்பித்து வாக்கு பதிவு செய்வதோடு முடிந்தது. இதெல்லாம் கதை