தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது.
இதுதான் நாம வளர்ந்த இடம், அரசியலையும் உலக நடப்புகளையும் அறிந்து கொண்ட இடம்!
டீக்கடைகள், சைக்கிள் கடைகள், முடி திருத்தகங்கள் = திமுக-வின் unofficial கிளைக் கழகங்கள்! 🖤❤️
தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்க, தலைவர் கலைஞர் சிறந்த திருவாரூருக்குப் புறப்பட்டுவிட்டேன்…
மக்களுடன் இரண்டறக் கலக்கும் இப்பயணங்களின் வாயிலாக உங்களைச் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு, #DravidianModel-2.0-வுக்கு ஆதரவு கேட்டு வருகிறேன். #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது!
🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்!
🌄 இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்!
🌄 மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்!
#வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK
Concerned to hear that Congress Parliamentary Party Chairperson Madam Tmt. Sonia Gandhi has been admitted to hospital.
I am confident that Madam Tmt. Sonia Gandhi will be back to good health very soon. Wishing her a speedy and complete recovery.
@RahulGandhi@PriyankaGandhi
The proposed amendments to the Transgender Persons (Protection of Rights) Act, 2019 cannot be pushed through without listening to the very people whose rights and lives it will affect.
When a law framed in the name of protection is being opposed by the community itself, it calls for reflection, not imposition.
The Union BJP Government must pause, engage, and build a genuine consensus with transgender persons before moving forward.
அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் @MaiamOfficial தலைவருமான திரு. @ikamalhaasan அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.
இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான்.
அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் #DravidianModel 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்!
பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்!
"கோவிட் காலத்தைப் போல" என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது.
பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.
சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?
மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. "இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது?" என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி...
மண், மொழி, மானம் காத்திட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அய்யா பழ. நெடுமாறன் அவர்களுக்கு நன்றி!
தமிழுணர்வை நெஞ்சில் ஏந்திக் களமாடுவோம்; தமிழ்நாட்டைச் சூழும் பேராபத்தை முறியடித்து வாகை சூடுவோம்!
#VoteForDMK
தி.மு.க. என்றாலே வளர்ச்சி;
தி.மு.க. என்றாலே நவீன உள்கட்டமைப்பு!
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் ஒருபுறம்,
பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய, தரமான பேருந்துகள் மற்றும் டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள் மற்றொருபுறம்!
#StalinStatement-இல் நான் உறுதியளித்தபடி 2030-இல் அதிகரிக்கப்பட்ட பசுமைப் பரப்பும், சீரான நடைப்பாதைகளும், அழகிய பூங்காக்களும் நிறைந்த மாநகரங்களைத் தமிழ்நாடெங்கும் உருவாக்கிக் காட்டுவோம்!
#VoteForDMK
https://t.co/6YkUjQSk8O
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்!
மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என ஒன்றிய பா.ஜ.க. அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் #வெல்வோம்_ஒன்றாக!
இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும்! #DravidianModel 2.0 அமையட்டும்!
అందరికీ ఉగాది శుభాకాంక్షలు! ಎಲ್ಲರಿಗೂ ಯುಗಾದಿ ಹಬ್ಬದ ಶುಭಾಶಯಗಳು! #HappyUgadi
ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும் என விழைகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள விருந்தினர்களை நம் மக்களின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்.
மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பதில் மட்டுமல்ல; மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை, சமூகநீதி ஆகியவற்றிலும் தமிழ்நாட்டின் #DravidianModel நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி!
“சென்னையில் மட்டும்தான் முதல்வர் படைப்பகங்களா?” என்று கேட்பவர்களுக்கு…
நீங்கள் காணும் இந்த உலகத்தர வசதி தமிழ்நாடு முழுக்க கிடைக்கும்!
Stay tuned for #DravidianModel 2.0!
ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
நமது #DravidianModel ஆட்சியில் தங்கள் தொகுதி அடைந்திருக்கும் வளர்ச்சி பற்றியும், நம் சாதனைத் திட்டங்களுக்கு இருக்கும் வரவேற்பு பற்றியும் ஒவ்வொருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் விவரிக்கின்றனர்.
நேர்காணலுக்கு வரும் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, நீங்களும் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்… உங்கள் கருத்துகளில் இருந்து கிடைக்கும் insights, #DravidianModel 2.0-வுக்கு அடித்தளமாகட்டும்!
ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொளியே சான்று!
நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்!
#VoteForDMK
Relentless pressure. Repeated letters. And finally, approval.
After months of delay, the Union Government has cleared archaeological excavations at 8 sites including #Keeladi. This is a win earned through DMK’s persistent efforts.
But we are not done. The Union BJP Government is still sitting on the Keeladi excavation report. We will not stop until that too is out.
தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது!
அடுத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் #கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்!
https://t.co/HfW30oGUsp