ராஜா Vs நையாண்டி பாடல் -1, SPBயும், MVனும் குரல மாத்தி பாடுவதில ஜாம்பவான்கள். இளையராஜா டீம்ன்னா கங்கை அமரன், SPB ஒரு குரூப், 80ல வந்த பல பாடல்கள்ல எல்லாவிதமான ஜாலி, கிண்டல் எல்லாம் அப்படியோ சரளமா பாட்டில வரும்.
ஆனந்த கும்மி படத்துல வரும் ‘மச்சான் மாட்டிக்கிட்டாறு’ பாடல இந்த டீம் பாடுது, சொல்லனுமா குறும்பு, புகுந்து விளையாடுறாங்க.
‘எங்க அக்கா கிட்ட, அக்கா கிட்ட
அதைச் சொல்லட்டுமா
நீயும் வாங்குறப்போ
வந்து எண்ணட்டுமா
தளும்பாத தண்ணிச் சொம்பு ததுங்கினதோம் போடுது
தகராறு எப்போதுமே வேணாம் மச்சானே’
நகைச்சுவை பாடல்ன்னா இப்படிதான் இருக்கனும். ராஜா ராஜாதான்.
Pramadhavanam உண்மையில் இவர் குரலில் கண்ணை மூடிட்டு கேட்டால், தேவலோகத்துக்கு போனா மாதிரி உணரலாம். Jog ராகத்துல இந்த பாட்டு இயற்றப்பட்டது. இந்த His Highness Abdullah படம் Cassette இன்னும் பத்திரமா இருக்கு.
இளையராஜா Rival இளையராஜா - 6, தமிழ் திரைப்படத்தின் முதல் ஸ்டீரியோ பாடல்களுக்கு ‘ப்ரியா’தான் பிள்ளையார் சுழி. 1978ல ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் இரண்டாவது நாயகன் ரஜினி 1979ல மறுபடியும் சிங்கப்பூர் சற்றி கலக்கிய படம்.
இன்றும் நான் முதல்ல எந்த பாட்டை கேட்பேன்னு கேட்டா அது ‘அக்கரைசிமை அழகினிலே’ மட்டும்தான். வெறும் ரேடியோல கேட்ட காலம் முடிந்து வாக்மேனில் துல்லியமாக ரசித்த பாடல்.
சிங்கப்பூர் தமிழர்களுக்கும் நமக்கும் பாலமாக இன்றும் நிற்கும் பாடல். பழைய சிங்கப்பூரை பார்க்கனுமா, இந்த பாடலை நல்லா பாருங்க.
அதுக்கும் மேல் KJ Yesudas குரல் எல்லா பாடல்களும் அவருக்காகவே ராஜா இசையை அமைத்திருந்தார். இந்த ஸ்டீரியோ ஒலிப்பதிவு KJ Yesudas சென்னை தரங்கினி ஸ்டுடியோ திறந்தபோது முதலில் பதிவானது என்பது கூடுதல் தகவல்.
இளையராஜா Rival இளையராஜா- 5, ஜானி படம் 1980 ரிலீஸ் ஆனபோது தேவிபாரடைஸ்ல பெரியதிரையில் பார்த்து வியந்த இளையராஜாவின் அந்த இசை பாடல். அசோக்குமாரின் கேமிரா ரஜினிய அழகா பல கோணத்தில கலர்புல்லா படம் முழுக்க.
இளையராஜா Senorita I love you’ பாடல்ல முடிவெட்டும் ரஜினிக்காக ஆரம்பத்தில கத்திரிகோல் காட்டும் காட்சியில ஒரு இசைய கச்சிதமா கொடுத்திருப்பாரு.
இது ஒரு துள்ளல் பாடல் வேகமாக்போகும், SPB மிக ஸ்டைலா ரஜினிக்கு ஈடாக பாடியிருப்பார்.
இரண்டாம் சரணத்துக்கு முன் ஒரு பள்ளத்தாக்கு காட்சில ரஜினி குதிரை மாதிரி ஓடுகிறார், இசையும் அதுக்கேத்த மாதிரி வரும்.
குறிப்பா பாட்டில வரும் அந்த vintage car.
‘ஹே ஹே ஹே எங்கெங்கோ
செல்லுதே என் நெஞ்சை
கிள்ளுதே அங்கே அங்கங்கே
வாவென்னும் அங்கங்கள்’
Finishingதான் சூப்பர்
செனோ ரீட்டா ஐ
லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட்
யூ லவ் மீ ஆஹா ஹா ஹா
ல ல ல லா ஹே ஹே ஹே
டுறு ரூ ரூ
கல்லூரி நாட்கள்ல எங்கள் studio drawing roomல அதிகம் பாடிய பாடல். ஒரு குறிப்பிட்ட பெண் பார்க்கும் நிகழ்ச்சியில பாட்டு பாடுவது அப்போதை சம்பிரதாயம். இசையமைப்பாளர்கள் ‘ஜானகிதேவி ராமனை தேடின்னு’ சிம்பிள போடுவாங்க. இளையராஜா அப்படியில்ல.
கொஞ்சம் வித்தியசமா யோசிச்சி உருவாக்கிய பாடல். நாயகி பாட்டுபாடி stuck ஆனதும், KJ Yesudas குரல் ஆலாபனையா இசைமழை பொழிய. பாட்டி பாக்கு இடிக்கிறார், தாத்தா வாயில் வெற்றிலை பாக்கை கனைக்கிறார், மிருதங்கம் தட்டவும், குழந்தை தலையை தட்டுவதுக்கும் இசை. அப்படியே எல்லாருக்கும் காப்பி சப்ளைய இசையில் டொக்..டொக். ஒரு புதிய இசை வடிவத்தை ராஜா 1981ல மீண்டும் கோகிலாவில் புகுத்தினார்.
உண்மையிலே பாடல் கேட்டு ‘வெள்ளிப் பனியுறுகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்’ என்பதுதான் என் நிலை.
மஞ்சள் சட்டை குழுந்தை பாரதிராஜா மகன் மனோஜ் என அப்ப பேச்சு, உண்மையா தெரியாது.
1977 இல்ல 1978ல- Madras University Auditorium அப்ப அதுதான் பெரிய இடம், இளையராவின் இன்னிசை மழை, அது ஒரு ஆனந்தவிகடனின் golden jubilee பெருவிழா. முதல்முறைய ராஜா இந்த பாட்டை மேடையில் பாடுகிறார். இந்த விழாவைப்பத்தி என்கிட்ட பெரிய லிஸ்டே இருக்கு.
யாருக்கும் ஒன்னும் புரியாத ‘ஓரம்போ ஓரம்போ’ பாடல் இடையில கிழவி இடிச்சதுக்கு வய்யுறது மாதிரி ஒருத்தர் திட்டுகிறார். ராஜா மேடையில இந்த பாட்டு ‘பொண்ணு ஊருக்கு புதுசு’ படத்துக்கு புதுசா ரெக்கார்டு பண்ணோம்னு சொல்றார். எல்லாம் பின் டிராப் சைலன்ட்.
இந்த பாட்டு வெளியான பிறகு நிறையபேர் அவரை என்ன பாட்டுடா இது அப்படீன்னு விமர்சனம் பன்னது அப்பறம்.
சூசகமா இனிமே என் இசைதான்னு சொன்ன பாடல்:
‘வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
பாளையம் பன்னப்புரம் சின்னதாயி பெத்த மகன்
பிச்சை முத்து ஏறியே வர்றான்டோய்’