Chanakya :
अग्निः शेषं ऋणं शेषं शत्रुः शेषं तथैव च।
पुनः पुनः प्रवर्धेत तस्मात् शेषं न शेषयेत्।।
Meaning :
Fire left incomplete, debt left incomplete, and an enemy left incomplete will grow again and again. Therefore, no remainder should be left of them.
@2DoApp I have been familiar with your work for quite some time, and based on the attached screenshots, it seems that the recent UI updates may not have been implemented by you. Please pardon me if this observation comes across as inappropriate.
Daily vehicles parking at the entrance of the park near Vembuli Amman Temple, Virugambaakkam, Ch-92 is obstructing commuter access. Requesting authorities to address this issue for smoother and safer entry to the park. @ChennaiTraffic
@Johni_raja பாஜகவை (அண்ணாமலை) எதிர்த்து, அதிமுக & திமுக கூட்டணி மிக விரைவில் வரும். பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தள் & ஜனதா தள், உத்திர பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் & சமாஜ் வாடி கட்சிகள் போல இங்கேயும் தமிழகத்தில் நடக்கும்.
இப்ப நீங்க பாக்கற இந்த போட்டோ ஓரு அபூர்வமான போட்டோ.
1998 ஆம் வருசம் எடுத்த இந்த போட்டோவை, 2002 ஆம் வருசம் வரைக்கும் யாரும் பாத்திருக்க முடியாது. கிட்டத்தட்ட 4 வருசமா இந்த போட்டோ எங்க இருந்துச்சு, இந்த போட்டோ எங்க எடுக்கப்பட்டது, இதற்க்கு பின்னாலே இருக்கிற விஷயம் என்ன???
சிவாஜி காலமான பின்னாலே, சிவாஜி பிலிம்ஸ் ஆபீசுக்கு போனவங்க பாத்திருக்கலாம் இந்த போட்டோவை.
எட்டடி உயரத்துலே சுவத்துலே மாட்டி வெச்சிருந்தாங்க சிவாஜி பிலிம்ஸ் ஆபீஸ்லே.
நடிகர்திலகம் சிவாஜி
இந்தியா முழுக்க போயிருக்கிறார். ஆனால் காசிக்கு போனது இல்லே.
காசிக்கு போகணும், அங்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு போய், சிவனை வழிபடணும்னு ரொம்ப நாளாவே சிவாஜிக்கு ஆசை இருந்துச்சு.
சிவாஜியோட இந்த ரொம்ப நாள் ஆசையை நிறைவேத்தி வைக்கணும்னு அவங்க குடும்பம் நெனச்சது.
சிவாஜிக்கு உடல் நலக்குறைவு அடிக்கடி வந்துட்டு இருந்த கால கட்டம் அது. இருந்தாலும் காசிக்கு போகணும்ங்கற அந்த முக்கியமான ஆசையை நிறைவேத்த கமலாமம்மா ஆசைப் பட்டாங்க.
1998 ஆம் வருஷம் அக்டோபர் 9 ஆம் தேதிதான் அதுக்கு ஒரு வாய்ப்பு வந்துச்சு.
நடிகர்திலகம் கமலாம்மா ராம்குமார் மற்றும் முக்கிய குடும்ப நண்பர்கள் சேர்ந்து காசிக்கு போனாங்க.
சிவாஜி அங்க போறதுக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கு. சிவாஜியை விருந்தாளியா கூப்பிட்டு இருந்தார் பனாரஸ் மகாராஜா. சிவாஜிக்கு நல்ல வரவேற்பு கொடுத்து அரண்மனையில் தங்க வெச்சார் பனாரஸ் மகாராஜா.
சிவாஜி கங்கையிலே குளிக்க ஆசைப்பட்டதை தெரிஞ்ச மகாராஜா அதுக்கு சௌகரியம் ஏற்பாடு பண்ணி கொடுத்தார். கங்கையிலே எப்பவும் அதிகப்படியான கூட்டம் இருந்துட்டே இருக்கும். மகாராஜாவோட உத்தரவுப்படி அரண்மனையிலே வேலை செஞ்ச ஆட்கள் எல்லாம் சிவாஜிக்கு பாதுகாப்பா இருந்து ஸ்நானம் செய்ய ஏற்பாடு செஞ்சு கொடுத்தாங்க.
காலையிலே 8.15 மணிக்கு
கங்கையிலே கூட்டம் குறைவா இருந்த இடத்துலே சிவாஜியும் குடும்பத்தாரும் ஸ்நானம் செஞ்சாங்க.
சிவாஜி ஸ்நானம் பண்ணிட்டு இருக்கார். கங்கை நதியிலே அப்ப டூரிஸ்ட்டுக எல்லாம் படகுலே போய்ட்டு இருக்காங்க.
அந்த படகுலே இருந்த லோக்கல் போட்டோ கிராபர் இதை பாத்திருக்கார். டூரிஸ்ட்டுகளுக்காக படம் எடுக்கப் போனவர், உடனே காமிராவை எடுத்து சிவாஜி ஸ்நானம் செய்யறதை போட்டோ எடுத்துட்டார்.
அவர் எடுத்தது யாருக்கும் தெரியாது.
ஸ்நானம் எல்லாம் முடிஞ்ச பின்னாலே, சிவாஜி குடும்பத்துக்காக ஒரு விசேஷ பூஜை ஒண்ணு ஏற்பாடாகி இருந்துச்சு.
இந்த பூஜை காரியத்தை செஞ்சவர் சுவாமிமலை கிருஷ்ணமூர்த்தி ஐயர்.. அவரோட வீட்டுலே நடந்த சிறப்பு பூஜையிலே சிவாஜியும் குடும்பத்தாரும் கலந்துகிட்டாங்க. பூஜையெல்லாம்
முடிஞ்சபின்னாலே...
காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு சிவாஜி போனப்போ சிவாஜிக்கு தனி மரியாதை கொடுத்து வரவேற்பு கொடுத்தாங்க. அரை மணி நேரம் சிவாஜியை உக்கார வெச்சு கடவுளை பக்கத்துலே இருந்து தரிசனம் பண்ண வெச்சாங்க.
சிவலிங்கத்தின் மேலே கையை வெச்சு சிவாஜியும் குடும்பத்தாரும் தொட்டு கும்பிட்டாங்க. சிவாஜி தன்னோட கழுத்துலே போட்டிருந்த ஸ்படிக மாலையை சிவன் மேலே வெச்சு எடுத்து ஆசாரத்தோட போட்டுக்கிட்டார்.
பிறந்த பயனை எல்லாம் நான் அடைஞ்சுட்டேன்னு சிவாஜி ரொம்ப பூரிப்போட சொன்னார்.
இதெல்லாம் 1998 அக்டோபர் மாசம் காசியிலே நடந்த விஷயம்.
2001 ... சிவாஜி காலமான பின்னாலே அவரோட அஸ்தியை கங்கை நதியிலே கரைக்கறதுக்காக சிவாஜி மூத்த மகன்
ராம்குமார் போனார். 4 வருஷத்துக்கு முன்னாலே சிவாஜி காசிக்கு போனப்போ பூஜை பண்ணுன அதே சுவாமிமலை கிருஷ்ணமூர்த்தி ஐயர்தான் சிவாஜியோட இந்த அஸ்தி கரைப்பு காரியத்துக்கும் உதவி செஞ்சார்.
அஸ்தியை கரைச்சுட்டு கிருஷ்ணமூர்த்தி ஐயர் வீட்டுக்கு ராம்குமார் போனார். அந்த வீட்டுலே பூஜையறை பக்கத்துலே அந்த போட்டோவை பாத்ததும் ராம்குமாருக்கு இன்ப அதிர்ச்சியா இருந்துச்சு. அந்த போட்டோ வேற ஏதும் இல்லே. சிவாஜி கங்கா ஸ்நானம் செய்யற நாலு வருசத்துக்கு முன்னாலே காசிலே எடுத்த போட்டோதான் அது. சிவாஜி படத்துக்கு மாலை போட்டு வெச்சிருந்தார் ஐயர். அந்த போட்டோவை பாத்ததும் ராம்குமாருக்கு அழுகையே வந்துருச்சு.
அப்புறம் அந்த போட்டோவை ராம்குமார் தனக்கு வேணும்னு கேக்க, உடனே ஐயர் சிவாஜியை போட்டோ எடுத்த அந்த போட்டோகிராபரை வரவழைச்சு, அன்னைக்கு நைட் ராம்குமார் ஊருக்கு திரும்பறதுக்குள்ளே பெரிய அளவுலே ஒரு பிரிண்ட் போட்டுத் தரச் சொன்னார். அந்த படத்தை மிகப் பெரிய சைசுலே புளோஅப் போட்டோவா செஞ்சு அன்னைஇல்ல வீட்டு பூஜையறையிலும் சிவாஜி பிலிம்ஸ் ஆபீசிலும் மாட்டி வெச்சார்.
காசி போகணும்ங்கற சிவாஜியோட ஆசை ரொம்ப நாளா தள்ளி போய்ட்டு இருந்தததும் 1998 லே பனாரஸ் மகாராஜாவோட கெஸ்ட்டாகவே சிவாஜி போக நேரம் வந்ததும் அந்த சமயத்துலே எடுத்த இந்த போட்டோ சிவாஜிக்கும் அவங்க குடும்பத்துக்கும் தெரியாமே இருந்தது நாலு வருஷம்
@VenkaTweetesh@Johni_raja தலைவர்களை தப்பா பேசுறவங்க மேல தாராளமா நடவடிக்கை எடுங்க எல்லா உரிமையும் இருக்கு, ஆனா இது வரைக்கும் எதிர்கட்சிகாரங்க அப்படி பேசும்போது என்ன நடவடிக்கை எடுத்தாங்க? கூட்டணிய எதிர்க்கிறவங்க எல்லாம் DMK கிட்ட காசு வாங்கிட்டாங்கன்னா கூட்டணிய ஆதரிக்கிறவங்க ADMK கிட்ட காசு வாங்கினாங்களா?