Extended my best wishes to Varun Hari Praveen, a talented 17-year-old karting driver from Chennai, as he starts his journey to represent India in the prestigious #FIAKartingAcademy Trophy 2025.
This global championship, with rounds in Portugal, Italy, and Denmark, is a significant milestone in Varun's #motorsport career. We are immensely proud of his achievements and wish him continued success in international motorsports.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
இந்திய திரையுலகின் ஆற்றல்மிகு அடையாளம். 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடிய ‘பாடும் நிலா’.
மறைந்த பின்னணி பாடகர் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாரின் பெயரை, அவர் வாழ்ந்த நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு சூட்ட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தார் - ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை நிறைவேற்றும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், காம்தார் நகர் முதன்மை சாலைக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை’ என்று பெயர் சூட்ட உத்தரவிட்டார்கள்.
அதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில்,
'எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை'க்கான வழிகாட்டி பலகையை இன்று நுங்கம்பாக்கத்தில் இன்று திறந்து வைத்தோம். எஸ்.பி.பி.சாரின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்து, அவரின் குடும்பத்தாருக்கு நினைவுப் பரிசினை வழங்கினோம்.
காற்றில் கானமாக வாழ்ந்து கொண்டிருக்கும் #SPB சாரின் புகழ் ஓங்கட்டும்!
@KN_NEHRU@PKSekarbabu@Subramanian_ma@PriyarajanDMK@MMageshkumaar@nchitrarasu
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசின் திட்டங்கள், மாற்றுத்திறனாளி சகோதர - சகோதரிகளின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களின் வாழ்க்கைச் சூழலையும் மேம்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, 2021-இல் கழக அரசு அமைந்த ஓரிரு மாதங்களிலேயே, மாற்றுத்திறனாளிகள், மெரினா கடற்கரைக்குச் சென்று கடல் அலையில் கால் நனைக்கும் வண்ணம், பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டது.
இதற்கு கிடைத்த பாராட்டையும், வரவேற்பையும் மனதிற்கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும், மாற்றுத்திறனாளிகள் கடல் வரை சென்று வரும் வண்ணம் சிறப்பு நடைபாதையை அமைத்திட உத்தரவிட்டார்கள்.
அதன்பேரில், @chennaicorp மூலம், ரூ.1.61 கோடி மதிப்பில் பெசன்ட் நகர் கடற்கரையில், அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை இன்று திறந்து வைத்தோம்.
மரப்பாதையின் வழியே கடல் அருகே சென்று அலையை ரசித்த மாற்றுத்திறனாளிகளின் மகிழ்ச்சியில் நாமும் மகிழ்ந்தோம். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்.
@KN_NEHRU@PKSekarbabu@Subramanian_ma@PriyarajanDMK@MMageshkumaar
#திருச்சி வந்தடைந்ததும், கடந்த ஆண்டு நான் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்த,
🔹பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்,
🔹நீதிக்கட்சியின் வைரத்தூண் ஏ.டி.பன்னீர்செல்வம்,
🔹ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரது மணிமண்டபங்களில் மரியாதை செலுத்தி, ஆய்வு மேற்கொண்டேன்.
மணிமண்டபங்களின் உட்புறப் பகுதிகளில் அவர்களது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்படங்களை / ஓவியங்களை வைத்திடவும், வெளியே உள்ள புதர்களை நீக்கி அங்கே பூச்செடிகளை நட்டு உரிய முறையில் பராமரித்திடவும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது:
“எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”
தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்!
நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது!
வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்!
#RememberingAnna
ஆண்டவன் பெயரால் அரசியல் செய்வோரிடையே, அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்!
சிறப்புறப் பணியாற்றிடும் மாண்புமிகு @PKSekarbabu மற்றும் @tnhrcedept-ஐ வாழ்த்துகிறேன்!
தன்னுடைய மொழி ஆளுமையால் இனமான உணர்வும் - அறிவும் ஊட்டிய முத்தமிழறிஞர் கலைஞரின் நூல்கள் #கலைஞர்கருவூலம் என உங்களுக்காக:
https://t.co/9PiPsbixhy
வாளும் கேடயமுமாகக் கலைஞரின் சிந்தனைகளைப் பயன்படுத்தி வெற்றி காண்போம்!
#கலைஞர்100@ptrmadurai
தமிழ்நாட்டின் பெருமையான மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் புதிதாக 72 அவசரகால ஊர்திகள், 31 அமரர் ஊர்திகள், 36 தாய்சேய் நல ஊர்திகள் முதலிய 147 இலவச ஊர்திகளின் சேவையைத் தொடங்கி வைத்தேன்!
#RejectUGCdraft – Our @dmk_studentwing, MPs, and members of the #INDIA bloc, including my dear brothers Thiru. @RahulGandhi and Thiru. @yadavakhilesh, deserve gratitude for amplifying students’ voices in the capital and defending the future of education.
The RSS-BJP’s agenda is clear: to erase diverse histories, traditions, and languages in order to impose a singular identity. As my brother @RahulGandhi rightly said, the UGC draft is not merely an educational move; it is an assault on Tamil Nadu’s rich heritage and the very essence of India’s federalism.
From #NEET to #CAA to the #3FarmLaws, the DMK has led every fight to uphold our Constitution and pluralism. Today, our voice in New Delhi will resonate across India.
@EzhilarasanCvmp
உழவர் பெருமக்களுக்காகவே வாழ்ந்த உத்தமரான அய்யா நாராயணசாமி நாயுடு அவர்களது நூற்றாண்டில் அவரது தியாகத்தையும் புகழையும் போற்றுவோம்!
அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில்,
🌾 துடியலூர் - கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி இரயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும்
🌾 அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும்
ஆகிய அறிவிப்புகளைச் செய்திருக்கிறேன்.
அய்யா நாராயணசாமி நாயுடு அவர்களின் கனவுகளை நிறைவேற்றத் தொடர்ந்து உழைப்போம்!
Tata Power Solar Ltd.,
🖋️ MoU Signed: 04-07-2022
🏗️ Foundation Laid: 20-10-2022
⚡ Inaugurated Today: 06-02-2025
👩🔧 Employment Opportunities: 4,000 (80% women)
A testament to our #DravidianModel - delivering results!
Let us march ahead towards distributed development and inclusive growth!